வியாழன், செப்டம்பர் 29, 2005

இந்தியா டுடே

குஷ்புவின் பேட்டியும் வெளியாகியிருந்த செப். 28, 2005 தமிழ்-இந்தியா டுடேயில் இருந்து எனக்கு முக்கியமாகப் பட்ட சில பகுதிகள்:

(நேரத்தே வான் மடலிட்ட எனி இந்தியன்.காம் மற்றும் இந்தியா டுடே-க்கு நன்றிகள் பல!)

பிரபு சாவ்லா:
இந்திய சினிமாக்களில் செக்ஸ் புரட்சி நடக்கிறது. முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் தாராளம் கரைபுரண்டோடுகிறது. இதை ஒரு சமூக விஞ்ஞானி 'அந்நிய கலாச்சார நேரடி முதலீடு' என்கிறார்.



காவேரி பம்ஸாய்:

  • ஆணின் கற்பனை உலகில் பிகினி உடையில் குழந்தைத்தனத்துடன் வளையவரும் தேவதை. கார்ப்பரேட் உலகில் கோட் அணிந்து கம்பெனியை ஆளும் பெண் அதிபர். இந்த இரு பிம்பங்களுக்கிடையே எங்கோதான் நாளைய உலகின் லட்சியப் பெண் இருக்கிறாள்.

  • 55 % பெண்களுக்கு உச்சகட்டம் என்றால் என்ன என்று தெரியவில்லை.

  • 82 % தாங்கள் சுயஇன்பம் அனுபவிப்பதில்லை என்று சொன்னார்கள். அடுத்தவர்களின் சுகம்தான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்ட பெண்கள் முதல் முறையாகத் தங்கள் சுகத்திற்கு முக்கியத்துவம் தருவதால் வரும் ஆரம்பத் தடுமாற்றங்களாக இவை இருக்கக்கூடும்.

  • 60 % பெண்கள் விருப்பமில்லாமலேயே செக்ஸ் உறவு கொள்ள வேண்டியிருப்பதாகச் சொல்கிறார்க்ள்.

  • ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட சர்வேயில் ஆணின் செக்ஸ் அப்பீல் என்பது அவனது கட்டுமஸ்தான தேகத்தில்தான் இருக்கிறது என்று பாதிக்கு மேற்பட்டவர்கள் சொல்லியுள்ளனர். ஆனால், பெண்களில் பெரும்பாலானவர்கள் ஆணின் கண்கள்தான் செக்ஸ் அப்பீலுக்கு அளவுகோல் என்று சொல்கிறார்கள்.

  • ஒரு பெண்ணுக்கு கவர்ச்சி மார்பகம்தான் என்று ஆண்களில் 75 % சொல்கிறார்கள்

  • வெளிநாட்டில் வாழ்ந்தால் கூட இந்தியப் பெண்கள் மரபணுவிலேயே பரிசுத்தம், களங்கம் என்ற இரண்டு வார்த்தைகளும் கலந்திருப்பதால் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்துவதில் கூட ஒரு தயக்கம் இருக்கிறது.

  • 24 வயது பெங்களூர் சாஃப்ட்வேர் எஞ்சினியரான ஆஷா ரவி தனது பாய் ஃப்ரெண்டுகளுடன் பப்களுக்கும் ரெஸ்டாரண்டுகளுக்கும் போவது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெற்றோருக்குத் தெரிந்துவிடக்கூடாது.

  • விளக்கு அணைந்ததும் என்ன நடக்கிறது என்பது புதிய நிழலுலகமான இண்டெர்நெட் பிளாக்குகளில் (வலைப்பதிவுகள்) சில பெண்கள் மூலம் தெரியவருகிறது.



    கவிஞர் சுகிர்தாராணி:
    மோசடி அகராதியிலும் பிரதிபலிக்கப்படுகிறது. வர்ஜின் என்ற சொல்லின் பொருள் குறிப்பாக பெண்களின் கன்னித்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது.



    எஸ். காளிதாஸ்:

  • ஆணாதிக்க உலகம் மெச்சிக் கவிபாடிய ஜான்சி ராணி கூட வாளெடுத்து போர்க்களம் புகுந்தது தனது உரிமையை நிலைநாட்ட அல்ல. தனது வாரிசின் உரிமையை நிலைநாட்டத்தான்.

  • காத்திரமான புராண பிம்பங்கள் இந்தியாவில் உண்டு. பார்வதி ஜலக்கிரீடை செய்வதற்கு தன் கணவர் (சிவன்) வந்து இடையூறு செய்யாமலிருக்க தனது தோழிகளின் மேல் இருந்த மண்ணை வைத்து மகனாகவும் பாதுகாவலனாகவும் இருக்க ஒரு ஆணை (விநாயகர்) படைத்தாள்.

  • காளி சின்னமஸ்தா என்ற உருவெடுத்து தன் சக ஆண் வெறுமனே படுத்திருக்க, அவனருகே அமர்ந்து எல்லையில்லா பேரின்பம் துய்த்தபடியே தனது தலையையே வெட்டி தனது ரத்தத்தையே குடிக்கும் கதை உண்டு.



    சுஷ்மிதா சௌத்ரி:

  • ஹைதராபாதில் 49 % பேர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவருடன் வாழ்வதை சரி என்கிறார்கள். தேசத்திலேயே இங்குதான் அது அதிகம்.

  • அதே போல், நான்குக்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு இருந்ததாக சொல்பவர்களும் ஹைதராபாதில்தான் அதிகம். 11 % அப்படிச் சொல்கிறார்கள். தேசிய சராசரி 5 % தான்.

  • பெருநகர பெண்களுக்கு 19-21 வயதில் முதல் உறவு நிகழ்கிறது. சிறுநகரங்களில் அந்த வயது 15-18 ஆக இருக்கிறது.

  • ஆணுறை மிக அவசியம் என்று நினைக்கும் பெண்களின் சதவீதம் ஜெய்ப்பூர், லூதியானா, ஹைதராபாத் போன்ற இடங்களில் மிகக் குறைவாக இருக்கிறது. எயிட்சிற்கும் பால்வினை நோய்களுக்கும் பயமில்லை அல்லது தெரியாது என்று சொல்லும் பெண்களின் சதவீதமும் இங்குதான் அதிகம்.



    திலீப் பாப்:

  • பெரும்பாலான ஆண்கள் (54 %) திருமணமாகும்வரை பெண்கள் கன்னித்தன்மையைக் காப்பாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதே சமயம் பெரும்பாலான ஆண்கள் (51 %) ஆண்கள் திருமணமாகும்வரை பிரம்மச்சரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக சர்வே செய்யப்பட்டவர்களில் 66 % ஆண்கள், இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண்ணை திருமணம் செய்யமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.

  • ஒரு இரவு மட்டும் உறவு கொள்வது, தற்செயலாக உறவு கொள்வது என்பவை இங்கு இல்லை. பெண்ணுடன் உறவு கொள்வதற்கு அவளுடன் காதல் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் கூறுகிறார்கள்.

  • தலைவலி இருப்பதாக சொல்லி செக்ஸில் இருந்து தப்பிப்பதில் ஆண்களைவிட பெண்கள் அதிகம். தோழியை திருப்திப்படுத்த மட்டுமே 67 % சதவீத ஆண்கள் செக்ஸில் ஈடுபடுகிறார்கள். பெண்ணின் செக்ஸ் ஆளுமைக்கு இது நல்ல அறிகுறி.

  • இன்றைய இந்திய ஆண்மகன் தனது செக்ஸ் அடையாளம் பற்றி மிகவும் குழப்பமுடையனாக இருக்கிறான் என்பது நிரூபணமாகியிருக்கிறது. பழமையான மரபுகளில் நாட்டம், பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமை, செக்ஸ் பற்றிய அடிப்படை அறிவின்மை மற்றும் நாட்டமினமை ஆகியவற்றுக்கிடையே இந்திய ஆண் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.

  • சல்ஸ்மான் தனது புதிய நாவலான 'தி ஃப்யூச்சர் ஆஃப் மென்' என்ற புத்தகத்தில் நான்கு நாடுகளில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிடுகிறார். ஆண்களின் செக்ஸ் ஆர்வத்திற்குப் பதிலாக இப்போது தொழில்நுட்பம் வந்திருப்பதாக அவர் கூறுகிறார். எம்.பி.3க்கள், பிளாக் பெர்ரி செல்ஃபோன், லேப்டாப்கள் போன்றவை ஆணின் ஆசைக்குப் பரிகாரம் செய்வதாக அவர் சொல்கிறார். செக்ஸ் என்பது 'எந்திரத்தனமான' ஒன்றாக மாறிவிட்டது என்கிறார் அவர்.


    பெண்களிடம் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

    1. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    அது தவறு - 24 %
    கருத்தரிக்க வாய்ப்பில்லை என்பதால் அதில் தவறில்லை - 17 %
    அது உடலுறவு அல்ல என்பதால் அதில் தவறில்லை - 15 %


    2. ஆணுறை பயன்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    கட்டாயம் - 51 %
    உபயோகிப்பதில்லை - 9 %
    இன்பத்தைத் தடுக்கிறது - 12 %


    3. நீங்கள் கீழ்கண்டவற்றில் எதைப் பற்றியாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?

    உங்கள் துணையுடன் பல உடலுறவு நிலைகளில் - 28 %
    மற்றவர்கள் செக்ஸ் உறவுகொள்வதை பார்ப்பது - 11 %
    உங்களுடையவர் தவிர மற்றவர்களுடன் செக்ஸ் உறவு கொள்வதை - 5 %
    பலருடன் சேர்ந்து செக்ஸ் - 3 %
    இவை எதுவுமே இல்லை - 32 %


    4. பிடித்த ஆண்கள் உடை?

    ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் - 46 %
    பேண்ட் ஷர்ட் - 19 %
    குர்தா பைஜாமா - 12 %
    ஷார்ட்ஸ் டி ஷர்ட்ஸ் - 12 %
    ஸ்வெட்டர் - ஸ்வெட் பேண்ட் - 5 %
    வேஷ்டி குர்தா - 2 %



    ஆண் சர்வே:

    1. ஆண்கள் திருமணமாகும் வரை பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    ஆம் - 44 %
    இல்லை - 51 %



    2. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    வாய்வழி செக்ஸ் சரியானது இல்லை - 33 %
    உடலுறவாக கருதப்படாததால் வாய்வழி செக்ஸ் சரிதான் - 26 %
    பெண்கள் கர்ப்பமாக மாட்டார்கள் என்பதால் வாய்வழி செக்ஸ் சரிதான் - 21 %



    சர்வே எடுக்கப்பட்ட விதம்:

    இந்தியா டுடே - ஏ சி நீல்சன் - ஓ ஆர் ஜி மார்க் செக்ஸ் சர்வே இந்திய நகர்ப்புறத்து மணமாகாத பெண்களின் பாலியல் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டது.

  • இன்றைய பெண் தனது பாலியல் தன்மை பற்றி என்ன நினைக்கிறார்?
  • அவரது பாலியல் கற்பனைகள் என்ன?
  • அவற்றில் எவற்றையெல்லாம் முயன்று பார்த்திருக்கிறார்?
  • தனது துணையுடன் அவர் கொண்டுள்ள நெருக்கம், பகிர்தலின் அளவு என்ன?
    இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த சர்வேயின் நோக்கம்.

    இந்த சர்வேக்காக 11 நகரங்களில் (தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத், பட்னா, லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூர்) உள்ள 18-30 வயதிற்குட்பட்ட மணமாகாத அதிக வருவாய் உள்ள 2,035 பெண்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

  • இதில் 62 % பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடையவர்கள்.
  • மூன்றில் ஒரு பங்கினர் வேலைக்குப் போகிறவர்கள்.
  • 54 % மாணவிகள்.

    அதே நகர்களில் 517 ஆண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. அதே வயதுடைய பெண்களிடமிருந்து இந்த ஆண்களின் கருத்து எப்படி மாறுபட்டதாக இருக்கிறது என்று அறிவதே இதன் நோக்கம். தெருமுனையில் நின்றபடி தகுதியான பெண்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிற்பாடு அழைத்து கேள்வித்தாள்கள் தரப்பட்டன. ஆண்களிடம் தெருமுனையிலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.

    அனைவரிடமும் கேள்வித்தாள்களைத் தந்து அவர்களையே நிரப்பச் சொல்லப்பட்டது. பிறகு அவர்களது பெயர் வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு பெட்டியில் விடைகளைப் போடச் சொல்லப்பட்டது.

  • புதன், செப்டம்பர் 28, 2005

    Commander in Chief

    கனவுகள் + கற்பனைகள்

    எந்தப் பக்கமும் சாயாமல் எழுதினால் சவசவ என்றிருக்கும். ஏ.பி.சி.யின் புதியத் தொலைக்காட்சி தொடர் கமாண்டர் - இன் - சீஃப், பொலிடிகலி கரெக்டாக வழுக்குகிறது.

    Commander in Chief by ABC TVஅமெரிக்க ஜனாதிபதிக்கு திடீர் மாரடைப்பு. உயிருக்குப் போராடி இறக்கிறார். குடியரசு கட்சி, சுதந்திரா கட்சி என்று இரண்டிலும் சார்பு நிலை இல்லாத துணை ஜனாதிபதி. மகளிருக்கும் நடுநிலைவாதிகளுக்கும் குறியீடான கொலு பொம்மை பதவி. ஜனாதிபதியின் திடீர் மரணத்துக்குப் பின், சபாநாயகர், அமைச்சரவை என பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே பதவியேற்கிறார்.

    முன்னாள் முதல் மனைவியும் இந்நாள் நியு யார்க் செனேட்டரும் ஆன ஹில்லாரி கிளிண்டனும், புஷ்ஷின் அமைச்சரவையில் #1 ஆகா இருக்கும் கொண்டலீஸா ரைஸும் நிழலாடுகிறார்கள். கதாநாயகி பெண்ணாக இருப்பதைத் தவிர வேறு ஒற்றுமைகள் தென்படவில்லை.

    வில்லன் எவ்வளவு வலுவாக இருக்கிறாரோ, ஹீரோவுக்கு மரியாதை அவ்வளவு எகிறும். சபாநாயகராக டொனால்ட் சூதர்லாண்ட். புதிய ஜனாதிபதியின் கன்னிப்பேச்சுக்கு நடுவே, டெலி-ப்ராம்ப்டரை அணைப்பதாகட்டும், அதிகாரத்தை அடையத் துடிக்காதவருக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தத் தெரியாது ("People who don't want power have no idea how to use it") என்று அறிவுரை சொல்வதிலாகட்டும், 'சபாஷ்... சரியான போட்டி!' சொல்ல வைக்கிறார்.

    ஆறு வருடமாக 'வெஸ்ட் விங்' சக்கை போடுகிறது. வக்கீல்களைக் குறித்த தொலைக்காட்சித் தொடர், நிஜ நாடக நிகழ்வுகள், மருத்துவர்கள், என்று களம் சார்ந்த கதைகள், வெற்றியடைந்தால், உடனடியாக அலை அலையாக அனைத்துத் தொலைகாட்சிகளும் பிரதிபலிப்பார்கள். ஆனால், 'வெஸ்ட் விங்'கை யாருமே காப்பியடிக்கவில்லை.

    சட்டசபையும், ஜனாதிபதியின் அலுவலகமும் எவ்வாறு இயங்குகிறது; மசோதாக்கள் எவ்வாறு சட்டமாகக் கையெழுத்தாகிறது; உள்கட்சி அரசியலில் எவ்வாறி நீந்துவது; செனேட்டர்களுடன் எப்படி பேரம் பேசுவது; அதிகார மையங்கள் எங்ஙனம் ஜனாதிபதியை அசைக்கிறது; தேர்தலில் ஜெயிப்பது எப்படி; என்று டெமோட்ரடிக் கட்சியின் ஆதர்ச தலைவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை கனவுகளோடு முன்வைத்தது. ஜார்ஜ் புஷ் போன்ற குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ், சுதந்திர கட்சி ஜனாதிபதி மட்டும் நம்மை ஆண்டு கொண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கனவுலகுக்கு கொண்டு செல்கிறது.

    கமாண்டர் - இன் - சீஃப் எது செய்தாலும் வெஸ்ட் விங் இதே விஷயத்தை சிறப்பாக முன்பே செய்துவிட்டதே என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. அதனால், ஜனாதிபதியின் குடும்பம் முன்னிறுத்தப்படுகிறது. பெண் சகஜமாக செய்யும் வேலைகளை செய்வதற்கு ஆண் எவ்வாறு நெளிகிறான் என்று காட்டுகிறார்கள். நாலு வயதுக் குழந்தை, ஜனாதிபதி அம்மாவின் மேல் ஜூஸை சிந்துகிறது. The Contender படத்தில் வந்தது போல் சேற்றைத் தெளிக்கும் அரசியல் அரங்கேற்றங்கள் இருக்கின்றது.

    பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதை மேலாண்மையின் முக்கியமான தலைமைப் பண்பாகக் கருதுவார்கள். அமைச்சரவை சகாக்காள் தங்களின் எதிர்ப்பை ராஜினாமாவாகத் தொடங்கும்போதே, உடனடியாக அனைவரையும் சந்தித்து, கண்ணோடு கண் நோக்கி ஒப்புதல் பெறுகிறார். எடுத்தெறிந்து பேசாமல் பட்டவர்த்தனமான கத்திகளை நெஞ்சுக்கு வீசுகிறார்.

    Michigan Governorமணவாழ்வுக்கு அப்பாற்பட்ட உறவுகொண்டதாக நைஜீரியாவில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தடாலடியாகப் படைகளை அனுப்பி, அமெரிக்காவின் மனித உரிமையை பிரஸ்தாபித்து, இராணுவ மிடுக்கை பறைசாற்றி, புதிய தலைவரை நிலைநாட்ட இந்த உதிரி சம்பவம் உதவியிருக்கிறது. ஆனால், இந்த மாதிரி அதிரடிகளை நிகழ்த்துவது நிஜத்தில் தற்போதைய 'எடுத்தேன் கவிழ்த்தேன்' ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கூட சாத்தியமில்லை!

    கமாண்டர் - இன் - சீஃப் குழப்பமாக ஆரம்பித்திருக்கிறது. அரசியல் செய்வதில் 'வெஸ்ட் விங்'காகவும், ஆண்களின் கஷ்டங்களை முன்வைப்பதில் 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸா'கவும், நல்லவரா கெட்டவரா வகை செய்வதில் 'நாயகன்' போன்ற கதாநாயகக் கும்பிடுகளையும் ஒருசேரக் கொடுக்கிறது.

    அரசியல்வாதியும் மனுசந்தான் என்று சொன்ன 'வெஸ்ட் விங்'காகவும், பெண்ணின் வருத்தங்களுக்கெல்லாம் குடும்பத்தலைவன் மட்டுமே காரணமல்ல என்று அடித்தளத்தில் முன்வைத்த 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸா'கவும், நியாயமாகப் படுவதெல்லாம் நல்லமுறையில் அடைவதல்ல என்பதை 'நாயகன்' ஆகவும் முன்வைத்தால் கனவுகள் + கற்பனைகள் <> தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் ரியாலிடி டிவியாக உருமாறும்.

    ஹில்லரியையும் கொண்டலீஸாவையும் விட Jennifer Granholm, மிச்சிகனின் கவர்னர் ஜனாதிபதியாகத் தகுதியானவர் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். கனடாவில் பிறந்தவர் என்பதைத் தவிர எல்லா விதத்திலும் கமாண்டர் இன் சீஃப் ஆகும் வாய்ப்பு நிறைந்தவர்.

    |

    ப்ரியசகி

    சுரேஷ் கண்ணனின் பரிந்துரையை சிரமேற்கொண்டு 'ப்ரியசகி' பார்க்க நேரிட்டது.

    உரல் துணுக்குகள்:

    1. இந்த படத்திற்காக மாதவன் பேசிய 75 லட்சம் சம்பளத்தில் பாக்கியுள்ள இரண்டு லட்சம் கொடுத்தால்தான் டப்பிங் பேச வருவேன் என்று சொல்லி மாட்டிக் கொண்டார்.

    2. மரத்தடி.காம்-இல் Medical Termination of Pregnancy Act Vs Right to life கட்டுரை நீதிபதியின் தீர்ப்பை அலசுகிறது.


    கண்டதை சொல்வது:

    நடுத்தர வர்க்க குடும்பத்தின் குணநலன்கள் இயல்பாக வெளிப்பட்டிருந்தது.

    தம்பியின் அறைக்குள் கதவைத் தட்டாமல் நுழைந்து பேச்சை ஆரம்பிப்பார் ரமேஷ் கன்னா. ஒரே சோப்பை குடும்பத்தின் கடைக்குட்டியில் இருந்து கொள்ளுப்பாட்டி வரை பயன்படுத்தும். முட்டி தெரியும் நைட்டியை அணிந்தால், கூச்சத்தில் நெளியும். புது மனைவி விடிகாலை பத்து மணிக்கு எழுந்து கொள்வாள். கோடாலி முடிச்சுப் போட்டுக் கொண்டு சமையலறையில் குதிக்காமல், காபி ஆர்டர் போடுவாள். சினிமாவுக்கு செல்வதென்றால் குடும்பமே கிளம்பும். மொத்த வீட்டிற்கும் ஒரு டிவி மட்டும்தான் இருக்கும்.

    பிறந்த நாளை கணவன் மறப்பான். எல்லா சின்ன, பெரிய, தட்டுமுட்டு, தடா பிரச்சினைகளுக்கும் இல்லத்தரசி பணிந்து போவதை deafault-ஆக கருதுவான். மனைவிக்கு ரம்மியமானப் பொருட்களைக் கூட நாத்தனாருக்கு விட்டுக் கொடுக்க பணிப்பான்.

    சுருக்கமாக, காரண காரியங்களை எடுத்துவைக்காமல் குடும்பத்துக்கு அனுசரித்துப் போக எண்ணுவது மிடில் கிளாஸின் தலையாய assumption. குணாதிசயங்களில் மட்டுமே நடுத்தர வர்க்கமாக இருக்கிறது சகி (சந்தான கிருஷ்ணனின்) குடும்பம்.

    விளக்கை அணைப்பதற்கு ரிமோட். இரண்டு மூன்று கார்கள். வீட்டுக்குள் சிவாஜி காலத்து அலங்காரப் படிக்கட்டு. இளவலுக்கு மட்டுமே நாற்பதாயிரம் ரூபாய் மாத வருவாய். நாலு லட்ச ரூபாய்க்கு குறைவில்லாத சாங்கினி மோதிரப் பரிசளிப்பு. கார்த்திகை இல்லாதபோதும் கார்த்திகைத் திருநாளாக ஆயில் விற்கிற விலையில் ஆயிரம் விளக்குகளை ஏற்றுதல்.

    இயல்பாக செல்லும் படத்தில் விவாகரத்தின் ரத்தை வலிந்து புகுத்தி முடித்திருக்கிறார்கள். சேர்ந்து வாழ வேண்டிய வருடத்திற்குப் பின், தனிக் குடித்தனத்திற்கு கதாநாயகன் ஆதரவு கொடுப்பதாக முடித்திருந்தால் பாந்தமாக இருந்திருக்கும்.

    படத்தில் கற்றுக் கொண்ட முக்கிய பாடம்: சதாவிற்கு innie.


    | |

    ஆயுத மணம்

    அமெரிக்காவை அரசியல்ரீதியாக எதிர்க்கும் நாடுகள், வர்த்தகரீதியாக ஆபத்பாந்தவனாக, ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தொடர்ந்த ஆதரவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

    US Weapons Foreign Flavor (c) NY Times

    நன்றி: அமெரிக்க ஆயுதங்களின் உலகளாவிய மணம் - New York Times

    திங்கள், செப்டம்பர் 26, 2005

    விருத்தாந்தம்

    Photobucket's Growth (c) Wall Street Journalடைம்ஸ்: தொலைபேசியில் நடத்திய கணிப்பின்படி, வளர்ந்த நாடுகளில் வன்முறைக்குள்ளாவதில் அதிக வாய்ப்புள்ள நாடாக 'ஸ்காட்லாண்ட்' இருக்கிறது.

    க்ளோப்: புத்தக மன்றத்தை தூசு தட்டி ஓப்ரா வின்ஃப்ரே மீண்டும் துவங்கினார்.

    க்ளோப்: ஆண்டொன்று போனால், வயதொன்று போவதோடு வாழ்வதற்கான விலையும் எகிறுகிறது. புதிய பேஸ்மேக்கரின் வருகையினால் மட்டுமே, காப்பீட்டாளர்களுக்கு, வருடத்துக்கு ஒன்றரை மில்லியன் டாலர் செலவு அதிகரிக்கிறது.

    கார்டியன்: சதியா... விதியா? மெக்ஸிகோவின் காவல்துறை மந்திரி ராமன் மார்டின் ஹுவெர்ட்டா விபத்தில் இறந்தார்.

    Everything Is Illuminated: படம் நல்லாயிருக்கு போல! ஜோனதன் சஃப்ரான் ஃபாயரின் நாவல் படித்தது உண்டா?

    Corpse Bride: யாரைத்தான் மணப்பதோ பேதை நெஞ்சம்? அம்மம்மா... மயானத்தில் யாவும் பிணம்.

    க்ளோப்: 'A Treasure's Trove' என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட $54,000 புதையலைக் துப்பு துலக்கிய கதை.

    டைம்ஸ் ஆஃப் இந்தியா & மனோரமா:: சோனியா... சோனியா... திரைப்படம் எடுக்கலாமா சோனியா?

    Monica Belluci as Sonia Gandhiசி என் என்: பிட் அடித்தது இறந்த காலம்; காபி/பேஸ்ட் செய்வது நிகழ்காலம்; காதால் கேட்டு ஒட்டுவது வருங்காலம்! திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்?

    வால் ஸ்ட்ரீட்: அதிகம் அறிந்திருப்பதால் அறிவாளி ஆக முடியுமா? குறைவாக தெரிந்து வைத்திருப்பதே பயன் தருமா?



    |

    புதன், செப்டம்பர் 21, 2005

    இளையபெருமாள்

    தலித் தலைவர் இளையபெருமாள் காலமானார்

    முதுபெரும் தலித் தலைவர் இளையபெருமாள் செப்டம்பர் 9 அன்று காலமானார். அவருக்கு வயது 82. ஜூன் 26, 1924-இல் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவிலில் பிறந்தார். அவர் தலித் மக்களுக்காக ஆற்றிய தொண்டிற்காகவும், குறிப்பிட்ட சில பகுதிகளிலாவது அவர்களுக்கிருந்த இழிநிலையினை ஒழித்ததற்காகவும் அவர் நன்றியுடன் நினைவுகூறப்படுவார் என்று சுட்டிக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.

    பள்ளியில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக வேறொரு பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், 'பறையர்களின் பானை' என்று எழுதியிருக்கும் குடத்தைத் தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும்போது பள்ளி முதல்வரிடம் மாட்டிக் கொண்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால், மாணவர்களுக்கு இருந்து இரு டம்ளர் முறை நீக்கப்பட்டது.

    இந்திய ராணுவத்தில் 1945-ல் சேர்ந்தார். 1946-ல் இராணுவத்தை விட்டு காட்டுமன்னார்கோவில் திரும்பினார்.

    பண்ணையாரிடம் வேலைக்கு இருந்த தலித், உடல்நிலை பாதிப்பினால் இரு நாள் வேலைக்கு செல்லவில்லை. வேலைக்கு வராததால் அவரை படுகாயமுறுபடி சித்திரவதை செய்து அடித்திருந்தான் மிராசு. காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிகைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கான தலித்துகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். உள்ளூர் பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதத்தை குறியீடாகப் பெற்றுத் தரும்வரை ஓயவில்லை.

    நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளிகளுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், இடைநிலை சாதியினர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்ட்ஙகள் நடத்தியிருக்கிறார். உசுப்பிவிடப்பட்ட மேல்ஜாதி ஹிந்துக்களால் போலிக் குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறை வாசம் கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பின் அவரின் சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

    1969ல் இந்திரா காந்தி அரசால் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வுக்குழுவிற்கு தலைமைதாங்கி அகில இந்திய அளவில் தலித் மக்களின் நிலை குறித்து சிறப்பானதொரு அறிக்கையினை ('Untouchability: Economic and Educational Development of Scheduled Castes') சமர்ப்பித்தார்.

    தலித் மக்கள் நிலை மேம்பட வேண்டுமானால், மற்றச் சாதியினரால் கொடுமைப்படுத்தப்படும் இடங்களில் அவர்களுக்கென்ற தனி குடியிருப்பு பகுதிகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், அப்பகுதிகள் பொருளாதார ரீதியாக மேம்பட மத்திய மாநில அரசுகள் தனியே நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான சில ஆலோசனைகளை இளையபெருமாள் குழு முன்வைத்திருந்தது.

    ஆனால், 1977ல் அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரையை அமலாக்க முன்வந்த அரசுகள், இன்றுவரை இளையபெருமாளின் பரிந்துரைகளை பரிசீலிக்கவில்லை.

    மதுபானக் கடைகளை திமுக அரசு 1970-ல் திறந்தது. காங்கிரஸும் மதுவிலக்குக் கொள்கையை திமுக-விடம் வலியுறுத்தாதால், கட்சியை விட்டு விலகினார். காமராஜரின் அழைப்பில் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். முதன்முறையாக 1952-ல் சிதம்பரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1979-இல் பதவியேற்றார்.

    காஙகிரசில் தலைவராக ஆகியும் கூட தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, முககியமாக தலித் நிலைமை குறித்து அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை என்ற வருத்தத்தில் கட்சியைவிட்டு வெளியேறி இந்திய மனித உரிமைக் கட்சியை துவக்கினார்.

    இளையபெருமாளுடன் இராணுவத்தில் பணிபுரிந்த வடமலை என்பவர் 1946-இல் மீசை வளர்த்ததற்காக, மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். மூன்று நாட்களுக்கு வடமலை மேல் நடத்தப்பட்ட கொடுமை நீடித்தது. ஊருக்குள் நுழையும் தலித்துகள் மீசை வைக்கக் கூடாது; செருப்பு அணியக்கூடாது; புதிய ஆடைகள் கட்டிக் கொள்ளக்கூடாது என்னும் சட்டம் அப்பொழுது வன்னியரால் அமலில் இருந்தது. தலித் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்பதையும் அறிந்த இளையபெருமாள் புளியாங்குடி போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பிள்ளையார்தாங்கல் என்னும் புதிய கிராமத்தில் தலித்துகளைக் குடியேற வைத்தார். வன்னியர்களிடமிருந்து நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுத் தந்தார்.

    ஒரு கட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசை இனி எந்த இழி தொழிலுக்கும் தலித்துக்களை வன்னியர்கள் பயன்படுத்தமாட்டார்கள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வைத்தார். ஆனல் அந்தக் கூட்டணி நீடிக்கவில்லை.ஒப்பந்தமும் பெரிய அளவில் அமலாகவில்லை.

    நந்தனார் மேல்நிலைப்பள்ளியை, பெண்கள் கல்லூரியாக மேம்படுத்த நினைத்ததும் இன்னும் நிறைவேறவில்லை.

    வெகுகாலத்திற்கு முன்னரே மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு முக்கிய அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துக்கொண்டு தலித் மக்கள் நிலையை மேம்படுத்தும் முயற்சியல் இளையபெருமாள் போன்றோர் தோல்வியுற்றதாலேயே இன்று தனி அடையாள, மோதல் அரசியலுக்கு தலித்துக்கள் மத்தயில் ஆதரவு இருகிறது என்று கூறுகிறார்கள் நோக்கர்கள்.

    ஆதாரம்/தகவல்: பிபிசி தமிழ் | The Pioneer > Agenda - Dalit diary / Ravi Kumar

    செவ்வாய், செப்டம்பர் 20, 2005

    சிவநாயகம்

    'ஸ்ரீலங்கா - வரலாற்று சாட்சியம்'

    siva nayagam

    1. புத்தக விமர்சனங்கள், குறிப்புகள்

    2. நடேசன் சத்யேந்திராவின் வாசக அனுபவம்

    3. ப்ரையன் செனிவரத்னே

    4. பொருளடக்கம் (மற்றும் புத்தகம் வாங்க)

    5. eelamstore.com - புத்தகம் வாங்க


    நன்றி: பராசக்தி சுந்தரலிங்கம் : என் மனவெளியில்! - கரிகாலன்
    புகைப்படம்: ஒரு பேப்பர்


    குறிப்பு: சுப்ரமனியம் சிவநாயகம் குறித்து கூகிளித்த போது இருபதாம் நூற்றாண்டின் தலை நிமிர்ந்த தமிழர்கள் பட்டியல் கிடைத்தது. அறியாத பலரைத் தெரிந்து கொள்ள முடிந்தது!

    திங்கள், செப்டம்பர் 19, 2005

    இரு சந்திப்பு

    பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு மாலை

    ஆஸ்தான இலக்கிய சந்திப்புகள் நிகழும் ட்ரைவ்-இன்னில்தான் பி.ஏ.கிருஷ்ணனை முதல் முறை சந்தித்தேன். அப்பொழுது நான் 'புலி நகக் கொன்றை'யை கேள்வி மட்டுமே பட்டிருந்தேன். இரா. முருகன், 'நேசமுடன்' வெங்கடேஷ், ஐகரஸ் பிரகாஷ் ஆகியோர் வழிநடத்த, நான் கொஞ்சமாய் வாய் பார்த்து, நிறைய அசட்டுக் கேள்விகளைக் கேட்டு, இனிமையாக சென்ற உரையாடல். அஸ்ஸாம் அனுபவங்கள், சத்யஜித்ரே திரைப்படங்கள், உலக இலக்கியம் என்று பல விஷயங்களை எளிமையாக எடுத்து வைத்தவிதம், என்னுடைய விமானத்தை கிட்டத்தட்ட தவறவிட வைத்தது.

    மீண்டும் பி.ஏ.கிருஷ்ணனை பாஸ்டனில் சந்திக்கும் வாய்ப்பு ஆகஸ்ட் இருபத்தெட்டு வாய்த்தது. கூடவே மாதவன், ராஜேஷ் சந்திரா, நவன், நம்பி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த முறை 'புலி நகக் கொன்றை'யை முழுதாகவும், அவரே எழுதிய அதன் ஆங்கில மூலம் 'டைகர் க்ளா ட்ரீ'யை கொஞ்சம் படிக்கவும் முடிந்திருந்தது.

    நாவல் என்பது முழுமையான வாழ்க்கையை சொன்னாலும், முழுமையடையாத எண்ணத் தேக்கத்தை எவ்வாறு வாசகனிடம் ஏற்படுத்த வேண்டும், தமிழ் சிறுகதைகளின் உலகளாவிய தரம், திரைப்படங்களின் சீரழிவும் சலனத்தை ஏற்படுத்தும் அரிய சினிமாக்களும், ஆங்கிலக் கவிதையுலகமும் தமிழ் களமும், இலக்கியத்தின் பயன், புத்தகங்களுக்கும் வாசகனுக்கும் இருக்கவேண்டிய உறவு, மார்க்ஸ¤ம் கம்யூனிஸமும் லெனினும் என்று சமூக அக்கறையுடன் அலுக்காத வகையில் உரையாடினார். திணறடிக்காமல், எங்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த பிஏ கிருஷ்ணனுக்கு எங்களின் நன்றி.

    சுந்தர ராமசாமி க. நா. சு.வை நினைவு கூறும்போது எழுதியமாதிரி, பிஏ கிருஷ்ணன் அன்று குறுகிய நேரத்தில் ஏகமாகச் சொன்ன ஆசிரியர்களுடைய பெயர்களை எல்லாம் அவரை வழியனுப்பியபின் நினைவுகூர முடியாமல் போனதில் எனக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்படுகிறது. அவர் சொன்ன விஷயங்களை அவரே எடுத்துக் கொண்டு போய்விட்ட மாதிரி இருந்தது.





    சுந்தர ராமசாமியுடன் ஒரு சந்திப்பு

    'திண்ணை' கோபால் ராஜாராமின் வீட்டில் இன்று (செப்டம்பர் 18, ஞாயிறு) சுந்தர ராமசாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    நெடிய தேகம். பார்த்தவுடன் மயக்கும் வசீகரம். வாஞ்சையானப் புன்னகை. நட்புடன் இறுகத்தழுவி இறுக்கத்தை உடனடியாக நீக்குகிறார். வயது வித்தியாசத்தையும் அனுபவ அறிவையும் எழுத்து சாதிப்புகளையும் மறக்கடிக்கும் எளிமை. வெள்ளை தாடி ஐம்பத்தைந்து வருட வாசக தன்வயமாக்கலை காட்டுகிறது. கருத்துக்களை முன் வைப்பதில் கண்ணியம் கலந்த காத்திரம். பதில்களைக் கோர்வையாக விவரிப்பதில் அவரைப் படிப்பதையொத்த அனுபவம். இளைஞனின் ஆர்வத்துடன் புதிய எழுத்தாளர்களையும் மறந்து போன புத்தகங்களையும் கவனிக்கப்படாத படைப்புகளையும் கண்கள் விரிய விவரிக்கிறார். தான் பேசுவதை விட மற்றவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்து விவாதத்தையும் மதிப்பீடுகளையும் செழுமையாக்குகிறார்.

    யேல் பல்கலைக்கழகத்தின் தமிழ் அடையாளமான அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டு தனித் தமிழ், மணிப்பிரவாள நடை, க்ரியா அகராதி தயாரித்த அனுபவங்கள், வையாபுரிப் பிள்ளை, தேவநேயப் பாவாணர் என்று பல கருத்துக்களையும் விவாதங்களையும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டு மிகுந்த பலனை அளிக்கும் எதிர்வினைகளை முன்னிறுத்தினார்.

    எழுத்தாளர்களையும் பெரியோர்களையும் சந்தித்த அனுபவத்தை சுராவின் புத்தகத்தைக் குறித்த குறிப்புடன் முடிக்கிறேன்:

    "இன்று வரையிலும் புத்தகங்கள் வியப்பாகவே இருக்கின்றன. வெட்டித் துண்டாடப்பட்ட காகிதங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் எறும்புச் சாரிகள். காகிதங்களை இணைக்கச் சில தையல்கள். அதற்கு மேல் ஒரு சட்டை. இலேசாகவோ அல்லது கட்டியாகவோ. அந்த இணைப்பிலிருந்து ஒரு பெரும் வியப்பு எப்படித் தோன்ற முடியும்? புத்தகங்களைப் பார்க்கும்போது ஏன் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது? புத்தம் புதிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கடைக்குள் நுழையும்போது ஏன் நாடித் துடிப்பு வேகம் கொள்கிறது? ஏன் ஒரு பேராசை மனத்தில் விம்முகிறது? பெண்களின் அழகுகள் சகஜமான பின்பும்கூடப் புத்தகங்களின் அழகுகள் ஏன் சகஜமாக மறுக்கின்றன? புத்தகங்கள் கோடிக்கணக்கில் உற்பத்தியான பின்பும் எப்படி அவை புதுமையும் புதிரையும் வனப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன?

    புத்தகங்கள் (எழுத்தாளர்களும்தான்) அளிக்கும் வியப்பு விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்றுதான் நினைக்கிறேன்."


    (ஆளுமைகள், மதிப்பீடுகள்/பக்.383)

    கோபால் ராஜாராமின் விருந்தோம்பலும், செவிக்கு உணவோடு சுவையான அறுசுவை பதார்த்தங்களுடன் கூடிய உணவும், விடைபெறுவதற்கு முன் தேர்ந்தெடுத்து கொடுத்த சில புத்தகங்களும் சந்திப்பின் உவகையை திக்குமுக்காட வைத்தது.




    Sundara Ramasamy Annamalai Meet with PKS Rajaram Thukaram Sundar Paari

    காலச்சுவடு நேர்காணல் :: இ. அண்ணாமலை (1938) உலக அளவில் மதிக்கப்படும் மொழியியல் அறிஞர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பிஎச். டி. பட்டம் பெற்றவர். மைசூரிலுள்ள இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (Central Institute of Indian Languages - CIIL) பேராசிரியராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர். அமெரிக்கா, ஆஸ்திரேýயா, ஜப்பான், நெதர்லாந்து முதலான நாடுகளின் உயராய்வு மையங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். எதிர்வரும் கல்வியாண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக அமர்ந்து, தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கிவைக்க உள்ளார். "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி', "தற்கால மரபுத்தொடர் அகராதி', "மொழிநடைக் கையேடு' ஆகியவற்றின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இவர் எழுதிய நூல்கள்: Adjectival Clauses in Tamil; Managing Multilingualism in India; (ed.) Language Movements in India



    நன்றி: தமிழோவியம்

    தெரிப்பு

    சுந்தர ராமசாமி --> பா ராகவன் --> கத்ரீனா --> பெப்ஸி உமா --> ஜான் ஜி ராபர்ட்ஸ்

    சுராவின் சந்திப்பை முன்னிட்டு, ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தின நாள் ரிவிஷன் கொடுக்கும் +2 மாணவன் போல், ஆளுமைகள், மதிப்பீடுகள், ஜேஜே, காகங்கள் என்று கலந்துகட்டிப் புரட்டும்போது ஒத்துக்கொள்ளத்தக்க கருத்து பல கிடைத்தது. சுரா சொல்வார்...

    இந்தியாவுக்குள் அகதிகளாய் வரும் சீனர்களால் ஆபத்து என்று எல்லா எழுத்தாளர்களும் குமுறிக் கொண்டிருந்தால், சீனர்களின் வருகை எவ்வாறு நன்மை பயக்கும்; குறைவான சம்பளத்தில் உழைப்பவர்களின் அவசியம்; எவ்விதம் அவர்கள் உள்நுழைவதால் பொருளாதாரம் சமனடைகிறது என்றெல்லாம் எழுதத் தோன்றும்.

    கொஞ்ச நாள் கழித்து சீனர்களின் வருகை எவ்வாறு பாரதத்தை வீறுநடை போட வைக்கிறது என்று மட்டுமே பார்வை மங்கினால், உடனே அப்பொழுது புதிய கலாசாரத்தின் வருகை எவ்வாறு இந்தியாவை சீரழிக்கும்; உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பறிப்பு; வோட்டுரிமை மாற்றங்கள் என்று எழுதுவேன் என்னும் அர்த்தத்தில் விளக்கியிருந்தார்.

    அட.... நான் சுரா மாதிரி யோசித்திருக்கிறேனே என்று வியப்பு ஏற்பட்டது. சிந்திக்க மட்டுமே செய்திருக்கிறேன். அவரைப் போன்ற ஒளிவு மறைவற்ற அகப்பார்வையை தெளிவான முறையில் முன்வைத்ததுண்டா என்பதையும் சிந்திக்கிறேன்.

    பா ராகவனின் கத்ரீனா குறித்த கட்டுரையும் ஒருவித சார்புநிலையைப் படம் பிடித்து வைக்கிறது. தமிழகத்தில் சுனாமியின் போதும் மும்பை முற்றுகையின் போதும் தலையிடாத அரசியலை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கத்ரீனாவை முன்வைத்து குடியரசு கட்சியும் சுதந்திர கட்சியும் தங்கள் அர்ப்பணிப்பையும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளையும் நவம்பரில் வரப்போகும் இடைத்தேர்தல் அரசியலை அரங்கேற்றியது.

    ஐயாயிரம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அனாதரவாக ஐ-10 நெடுஞ்சாலையில் பார்த்ததாக ஜெஸ்ஸி ஜாக்ஸன் வருத்தப்படுகிறார். அடிமைக் கப்பலை போல தோற்றம் அளித்ததாகத் தொடர்ந்து டிவியில் பல பேட்டி கொடுத்து வந்தார். உதவிக்காகத் தொடர்பு கொண்ட தேவாலயங்களில் 'அவர்கள் கறுப்பா? வெள்ளையா?' என்று விசாரித்ததாக வருத்தப்பட்டார்.

    ஹஃபிங்டன் போஸ்ட்டை சேர்ந்த ராண்டால் ராபின்சன் அடுத்த நிலைக்கு சென்றார். 'கத்ரீனாவில் பாதிக்கப்பட்ட கறுப்பர்கள் பிணந்தின்னிகளாகிப் போனார்கள். அமெரிக்காவின் இனப் பாகுபாடில் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறோம். அமெரிக்கா என்பது மிகப்பெரிய பம்மாத்து' என்று எழுதினார். நேரில் சென்று பார்த்த மாதிரி விவரித்ததனால், நேரடியாகப் பார்க்க முடியாதவர்களின் கடுமையான விமர்சனத்தினால் 'இறந்தவர்களை உண்டு வாழ்கிறார்கள்' என்பதற்கு மட்டும் மறுப்பு விட்டார்.

    தொலக்காட்சியில் நேரடி ஒளிபரப்பான நிகழ்ச்சியின் நடுவே மைக் மையர்ஸுடன் தோன்றிய கான்யே வெஸ்ட், 'ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கறுப்பர்களைப் பற்றி கவலையில்லை. நம்மை குறிவைத்து சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்' என்று பொரிந்து தள்ளினார்.

    மைக் லூகோவிச் கார்டூன், கட்சித் தலைவர் ஹோவர்ட் டீனின் பேச்சுக்கள், பார்பரா லீ நேர்காணல்கள், டெட் ரால் கேலி சித்திரம் என்று தொடர்ந்து அடுக்கலாம். பா ராகவனும் விகடனில் எழுதினார்.

    என்ன.... பெப்ஸி உமா தொலைபேசியது போல் வெகுஜன மீடியத்தில் எழுதிவிட்டார்.

    தொலைபேசியில் வழக்கம் போல் 'நாலைந்து ஸ்பான்ஸர் மாறினாலும், நீங்க எப்படி இவ்வளவு இளமையாக இருக்கீங்க ?', 'வீட்டில் பையன் போன் பேசி விளையாடறானா ?' என்பது போன்ற சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், ஆங்கிலம் மட்டுமே உசாவும் நமீதாவை விட, தமிழில் சம்சரிக்கும் (முன்னாள் பெப்சி) உங்கள் சாய்ஸ், 'உமா'வை நோக்கி பிரமாஸ்திரத்தை ஏவினார் எல்லே அம்மணி.

    'உங்களின் மனதை சூர்யா, அஜீத், விஜய், விக்ரம், ஆர்யா, சிம்பு, தனுஷ், ரவி போன்ற இளம் ஹீரோக்களில் யார் கவர்ந்திருக்கிறார்கள்?'

    விவகாரமான கேள்வி. சரியான பதில் 'என் ஆருயிர் கணவன்'.

    சமாளித்துக் கொண்ட உமா பதிலளித்தார். 'எனக்கு விப்ரோ ப்ரேம்ஜி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, சபீர் பாடியாதான் மனங்கவர்ந்தவர்கள். அஃப்கோர்ஸ், என் கணவனை சொல்லியே ஆக வேண்டும்!' என்று முடித்துக் கொண்டார்

    பொலிடிகலி இன்கரெக்ட் பதில்.

    புக் மீமீயில் அஞ்சு புத்தகம் சொல்லுங்க என்றவுடன் ஐம்பது புத்தகங்கள் சொன்ன கதையாக, அதிகப்பிரசங்கி பதில். அறிவு உள்ளவர்கள்தான் அழகு உள்ளவர்களா? பணம் படைத்தவர்கள்தான் மனங்கவர்பவர்களா? நிறுவன முதலைகள்தான் முதல் தரமா? என்று எதுகை மோனையோடு கேள்வி கேட்க அருமையான வாய்ப்பு.

    பா ராகவன் மாட்டிக் கொண்டார். பெப்ஸி உமா (இப்போதைக்கு) தப்பித்து விட்டார்.

    எப்பொழுதும் வலைப்பதிவர்கள் வாயில் விழுந்து புரளாமல் இருக்க செனேடர்களிடம் அகப்பட்ட ஜான் ஜி ராபர்ட்ஸ் போல் பதில் சொல்லவேண்டும்:

    Senator Charles E. Schumer, Democrat of New York, sarcastically derided the "absurd" nature of Roberts's responses. He wisecracked that if asked, Roberts probably would not even name a movie he liked. "I ask you if you like 'Casablanca,' " Schumer said. "You respond by saying, 'Lots of people like "Casablanca." ' You tell me, 'It's widely settled that ''Casablanca" is one of the great movies.' "


    இது ஒருவழிப்பாதை.

    ராபர்ட்ஸை ஷுமர்கள் போட்டுத் தாக்கலாம். செனேட்டர்களை குறித்து ராபர்ட்ஸ் இந்த மாதிரி எள்ளிக் கொண்டிருந்தால், அடுத்த அமெரிக்க ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாது!

    வெள்ளி, செப்டம்பர் 16, 2005

    மைக்ரோசாஃப்ட் நுட்பியல்

    1. புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள புத்தம்புதிய விஸ்டா (விண்டோஸின் அடுத்த தலைமுறைப் பதிப்பு) மூலம் உருவான நுட்பம்: Microsoft Codename Max

    2. இணையத்திற்காக வடிவமைக்க வேண்டுமா? வலையோவியர் ஆக வேண்டுமா? புகைப்படத்தை மேம்படுத்த வேண்டுமா? Microsoft Expression


    நன்றி: MSDN Events :: ப்ரொ. டெவ். 05

    வியாழன், செப்டம்பர் 15, 2005

    அம்பலமான கூட்டு சதி



    சமீப காலமாக புகைப்படங்கள் எடுப்பவர்களின் தொல்லை அதிகரித்து வருவதாக வாத்து வளர்ச்சி கழகக் கண்மணி குற்றஞ்சாட்டியுள்ளார். கேனன் கேணையன், சோனி சோனியா, ஃப்யூஜி பூஜ்ஜியம், கோடக் கோடங்கி, கோனிகா கோணங்கி, மினோல்டா டகால்ட்டா, ஒலிம்பஸ் ஒல்லி, பெண்டக்ஸ் ஸ்பாண்டக்ஸ் ஆகிய தலைவர்கள் சுற்றறிக்கை ஒன்றைக் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்கள்.

    அவர்களின் கண்டன அறிக்கையில் இருந்து முக்கிய பகுதிகள்:

  • வாத்துக்களை ஃப்ளாஷ் கொண்டு புகைப்படம் எடுப்பதால் வாத்துக்கள் கண்பார்வை இழக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்

  • ஃபிலிம் சுருள்கள் நதியில் விழுந்து, அல்லது பழைய ரீல்கள் தண்ணீரை மாசுபடுத்தும்

  • சித்திரங்கள் வரைந்து எங்களின் அழகை முழுமையாக உள்வாங்குவதை புகைப்படங்கள் நசுக்குகிறது

  • வாத்துக்களின் மணவாழ்வு தாண்டிய பந்தங்களை இந்த நிழற்படங்கள் அம்பலமாக்குவதால், இல்லற வாழ்க்கைக்கு பாதகமாக விளங்குகிறது.

  • வாத்துகளைப் புகைப்படம் எடுப்பதற்கு நெடுநேரம் போஸ் கொடுத்து கால்வலியும் சுளுக்கும் ஏற்பட்டு, கைரோபாக்டருக்கு செலவும் அதிகரித்து, காப்புரிமை எகிறுகிறது.

  • வாத்துக்களைப் படம் எடுக்கும்போது குறுக்கே செல்கிறோமோ, அல்லது இயற்கைக்கு இடையூறாக வாத்துக்கள் குறுக்கிட்டதா என்னும் சஞ்சலத்தால் மனப்பிழற்வுண்டாகிறது.

    எனவே, வலைப்படக்காரர்கள் வாத்துக்களை கரிசனத்துடனும் தக்க பரிவுடனும் நடத்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய கூண்டை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  • செவ்வாய், செப்டம்பர் 13, 2005

    கயா

    Dubey murder: Main accused flees jail - என்.டி.டிவி: சத்யேந்திர துபே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மந்து குமார் சிறையிலிருந்து தப்பித்துவிட்டார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது தப்பித்திருக்கிறார். அவருக்கு பதிலாக, மந்து குமாரின் தாய் கீதா தேவியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

    * Corruption in the Golden Quadrilateral

    * டி.ஆர்.பாலுவுக்கு ஒரு மின்னஞ்சல்

    * சத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...

    * இதற்கொரு முடிவில்லையா ?

    திங்கள், செப்டம்பர் 12, 2005

    Memento

    மெமண்ட்டோ

    மெமண்ட்டோ-வை ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். படாதவர்கள் கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப்பில் மதி கந்தசாமியின் அறிமுகத்தைப் படித்து விடவும்.

    பிறந்த நாள், நினைவு நாள் அன்று ஏரிக்கரையிலோ மலைவழிப்பாதையிலோ உட்கார்ந்து கொண்டு கடந்த காலத்தை, சென்ற வருடத்தை நினைத்துப்பார்ப்பேன்.

    போன வருடம், இந்த நாளில் என்ன நினைத்தோம்? எவ்வளவு முடித்தோம்? ஏன் அதற்காக குறிக்கோள் வைத்தேன்? திருப்தியளித்ததா? அடுத்த வருடம் என்னவாக இருக்க வேண்டும்? ஏன்? ஐந்து வருடம் கழித்து... என்று சிதறலாய் இயற்கையை வெற்றுப்பார்வை பார்த்துக் கொண்டே, மகளுடன் விளையாடியபடியே அசை போடுவது பிடிக்கும்.

    எதிர் காலம் தெரிந்திருந்தால், கடந்த காலத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது, அப்படியே விட்டிருப்பதும் சுவாரசியமே எனவும் எண்ணலாம். மெமண்ட்டோ இது போல அலைகளை எழுப்பும் படம். எதற்காக ஓடுகிறோம்? எதை ஆதாரமாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோம்?

    புத்தகத்தைப் படிப்பது சுகம். உண்மைகளை எடுத்து வைக்கும். சரித்திர நிகழ்வுகளை தற்காலப் புரிதல்களுடன் விளக்கும். திடுக்கிடும் திருப்பங்களுடன் செல்லும். இயல்பான வாழ்க்கையை படம் பிடிக்கும். அறிவுபூர்வமாக விவாதிக்கும். உணர்ச்சிபூர்வமாக விவரிக்கும்.

    வாழ்க்கையும் புத்தகங்களைப் போல வெரைட்டியானவை. முடிவு தெரிந்த வரலாற்றுப் புத்தகம். இறப்பு நிச்சயம் என்று தெரிந்த வாழ்க்கை. இறந்த காலக் கொடுமைகளை மறந்தால்தான் நிகழ்காலம் இனிக்கும். கடந்த தினங்களின் கசப்பை காலப்போக்கில் மனிதர்கள் மறந்துவிடுவார்கள்.

    மெமண்ட்டோவில் ஹீரோவுக்கு ஞாபகசக்தி சில மணித்துளிகள்தான். கூகிள், புகைப்படங்கள், நினைவு நாள் என்று ஞாபகப்படுத்திக் கொள்வது போல் அவனுக்கும் உபகரணங்கள் இருக்கிறது. அதன் அடிப்படையில் அனுமானங்களை அமைத்துக் கொள்கிறேன். செய்தித்தாள், நண்பர்களின் கூற்று, அக்கம்பக்க பேச்சு என்று எனது முடிவுகள் அமைகிறது. எனக்கு பத்து வருடத்தில் மறந்து போகும் சங்கதிகள், ஹீரோவுக்கு பத்து நிமிடத்தில் மறக்கின்றன.

    எது மெய்? எப்படி பொய்? நாம் கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாலும், என் பிம்பம் பிரதிபலிக்கிறது. என்னுடைய செயல்கள் தண்டக்கருமாந்திரமாகப் போகாமல் இருப்பதை மனம் விரும்புகிறது. முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால் சந்தோஷம் வருமே. வலைப்பதிவை கூகிள் தேடல் பட்டியலில் கண்டடைந்தால் மனம் பொங்குமே. அது போல. மூளைக்கு எட்டினால்தான் கருமத்தில் கண்ணாக இறங்கமுடிகிறது.

    மெமண்ட்டோ நாயகனுக்கும் குறிக்கோள் தேவை. உடனடி மறதி இருந்தாலும், வாழும் வாழ்வினால் பயன் தேவை. நல்லதோ, கெட்டதோ; சரியோ, தவறோ; பிரயாணம் முக்கியம். லட்சியங்களை அடைந்துவிட்டால் அடுத்த பயணங்களும், அடைதல்களும் வேண்டும். அவனும் என்னைப் போல் தெளிவாகக் குழம்பியவன் தான்.

    படத்தைக் குறித்து ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், நாயகியைக் குறித்த நாயகனின் வசனம் பொருத்தமாக இருக்கும்:

    "உன் நினைவை அழிக்க, நினைவில் வைக்க முடியவில்லை". (I can't remember to forget you.)


    மேலும் முழுமையான திரைப்பார்வைக்கும் அலசலுக்கும் சலொண் பக்கம் எட்டிப்பார்க்கவும்.

    வெள்ளி, செப்டம்பர் 09, 2005

    1000 தாமரை மொத்துகளே



    வதந்திகள் உடலுக்கு நல்லது என சொல்லவும் சிலர் இருக்கிறார்கள். தீநடத்தையை மூட்டை கட்டவும், நட்பை வளர்க்கவும், செய்திகளை சுற்றறிக்கை அனுப்பவும் கிசுகிசுக்கள் பயன்படுகிறது என்கிறார்கள்.

    ப்ளாகர் அக்கவுண்ட் ஆரம்பித்து இரண்டாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆயிரம் பதிவுகளை எட்டிப் பிடித்தாச்சு. கிட்டத்தட்ட நூறாயிரம் தடவை பதிவுகள் பார்க்கப்பட்டிருக்கிறது. நானாக எழுதியது நூறாவது தேறும் (தேறுகிறதோ இல்லையோ... நிச்சயம் 'இருக்கும்' :-)

    ஒரு வாரம் விடுமுறை விட்டு எழுதியதில் எவ்வளவு fallacy, sophism, ஜல்லி, ஜட்கா, கிசுகிசு என்று எண்ணிப் பார்த்தேன். நேரம் போதவில்லை. இது சரிப்படாது என்று 'பழைய குருடி; சுவற்றுக் கீரையை வழிச்சுப் போடு' என்னும் கதையாய் திரும்பி வந்துவிட்டேன்.

    எழுதுவது, படிப்பது, பகிர்ந்து கொள்வது, ஒப்பேற்றுவது எல்லாமே மஜாவாகத்தான் இருக்கிறது. 'அரிப்பெடுத்தவன் கை' என்று பாரா சொல்வதை 'வலைப்பதிந்தவன் கீபோர்ட் போல' என்று மாற்றிக் கொள்ளலாம்.

    103 போட உதவியவர்கள் கிட்டத்தட்ட 102வது இருப்பார்கள்.

  • சுரதா பொங்குதமிழ் உருமாற்றி, ஈ-கலப்பை என்று கணினியில் தமிழை முன்னெடுத்து செல்பவர்கள்.
  • இணையத்து இணக்கங்களை வளர்த்த தினம் ஒரு கவிதை
  • தட்டி கொட்டி ஊக்கப்படுத்திய ராயர் காபி கிளப்
  • தோளில் கைபோட்டு எழுதும் ஆசையைத் தூண்டிய புத்தகப்புழு
  • கல்லூரி நட்பையொத்த மரத்தடி
  • ஆட்டோகிராப் அனுப்பினாலும் அன்புடன் வெளியிடும் திண்ணை
  • வாரயிறுதியானால் ஏதாவது எழுதவேண்டுமே என்று எண்ண வைக்கும் தமிழோவியம்
  • பல முயற்சிகளிலும் உறுதுணையாக திசைகள்
  • தினகரன், தினமலர், தினமணி என்று இலவசமாக தமிழகத்தை உலகெங்கும் தினமும் தரும் நாளேடுகள்
  • வெப் உலகம், தட்ஸ்தமிழ், உலகத்தமிழ், அம்பலம், ஆறாம்திணை, சிஃபி, பதிவுகள், தமிழ்.நெட் போன்ற அள்ள அள்ள சங்கதிகள் கொட்டி கிடக்கும் தளங்கள்
  • அலம்பல், அலட்டல் என்று பாகுபடுத்தாமல் 'என் கடன் சேவையே' என்று இடம் கொடுத்த ப்ளாகர்
  • எனக்கு சுட்டி கொடுத்து அகங்காரைத்தை வளர்த்த சக வலைப்பதிவர்கள்
  • வெங்கட், நா கண்ணன், சந்திரவதனா, நவன், காசி, மதி, பத்ரி என நீளும் தமிழ் வலைப்பதிவு முன்னோடிகள்
  • மன்ற மையத் தலைப்புகள்
  • நியு யார்க் டைம்ஸ், கார்டியன், ஹிந்து, ப்ராவ்தா போன்ற கருத்தேடுகள்
  • கல்யாணசுந்தரம், மதுரை திட்டம், அகத்தியம், தமிழ் உலகம் போன்ற கிடங்குகள்
  • தமிழ்சினிமா.காம், ரஜினி ஃபேன்ஸ், போன்ற பொழுதுபோக்கு தலங்கள்
  • லேஸிகீக், டீகட, மைக்ரோபெர்சுவேஷன், சிவக்ரசி, டேவ் பேரி, போயிங் போயிங், அமர்தீப் சிங் போன்ற வலைப்பதிவர்கள்
  • ஸ்லேட், தி வீக், இந்தியா டுடே, அவுட்லுக் போன்றவர்களின் இணையப் பதிப்புகள்
  • என்னை வாழவைக்கும் விகடன், குமுதம், கல்கி, நக்கீரன்
  • மூளை இருப்பதாக நினைக்க வைக்க கூகிள், யாஹூ கோர்வைகள்
  • அவ்வப்போது படித்து, கருத்து சொல்லாமல், சிரித்துவிட்டுப் போகும் மனைவி
  • 'நீ கம்ப்யூட்டரில் என்ன பண்ணுறே' என்று சீரியஸாக வினவும் மகள்

    லிஸ்ட் போட்டாலே மறப்பது சகஜம். (தமிழ்மணம், வலைப்பூ போல) குறிப்பிடாமல் விட்டவர்கள் மேல் உரிமை அதிகம்.

    அனைவருக்கும் நன்றி!!!

    விடாது .... :-))





    தொட்டுக்க ஒரு நியுஸ் :: பெண்களை கேலி - கிண்டல் செய்து பாடல், வாலி - பா.விஜய் உள்பட சினிமா கவிஞர்கள் மீது திடீர் வழக்கு!

  • H1BEES

    கே டிவி போட்டதன் பயனாய் நான் விரும்பும் நிகழ்ச்சிகளில் 'கல்லூரி கலாட்டா' குறிப்பிடத்தக்கது.

    சிலகாலம் முன்பு வரை 'தில்லானா தில்லானா'வில் மேஜர் சுந்தர்ராஜனின் மகனால் அடக்கியாளப்பட்டு குழப்பமாய் தொக்குத்தவர், இந்த நிகழ்ச்சியில் இயல்பாக compere செய்கிறார். இழந்த கல்லூரி நாள்களுக்கு மீண்டும் ஃப்ளாஷ்பேக் போடவும் உதவுகிறது. புதிய திறமைகளைக் கண்டு வியக்கவும் முடிகிறது.

    நேற்று சாய்ராம் கல்லூரிக்கு சென்றிருந்தார். கணினி மாணவர்கள் கிண்டலடித்தார்கள். விசில் மூலமாகவே ஏ.ஆர் ரெஹ்மானையும் எம்.எஸ்.வி.யையும் கொண்டு வந்தார். கவிதை சொன்னார். இனிமையான குரலில் சினிமா மெலடிகள் பாடினார். பிளேடு இல்லாமல் பிளேடை வைத்து பிளேடு போட்டார். கூத்து கட்டினார். பேட்டி கொடுத்தார். மனம் திறந்தார்.

    வழக்கம் போல் சுவாரசியமாகச் சென்றது.

    கடைசியாக டிரம்ஸ், கிடார், புல்லாங்குழல் என்று மெல்லிசையாக ஒலித்தார்கள். இது போன்ற கூட்டமைப்பு கல்லூரிக்குப் பின் அமைவதில்லை. வேலை, பணம், குடும்பம் என்று உழல்வதும், உழல்வதில் இருந்து மாற்றுக்கு இலக்கியம், நட்பு, கேளிக்கை, தொண்டு என்று இருப்பதும் பழக்கமாகிப் போகிறது.

    விசில் அடித்து மெட்டு காட்டுபவர், பாடல் எழுதுபவர், அறுவை ஜோக் கடிப்பவர், பல்குரல் மன்னர், எழுத்தாளர் என கல்லூரி ஓய்வுகளில் விரும்பியதைத் தொடர நினைத்தால் தொடரலாம். ஆனால், வாஷிங்டனில் கிடார், பெங்களூரில் பாடகி, சியாட்டிலில் டிரம்ஸ், துபாயில் பாடகர் என்று உலகமயமாக்கப்பட்ட பிறகு இசை ஆர்வம் மங்கிப் போகும்.

    பொழுதுபோக்கை சிரத்தையாகத் ஈடுபாட்டுடன் தொடர்வதில் ஸ்ரீகாந்த் மின்னுகிறார். தொடர்ச்சியாக தனிப்பாடல்கள், பாப், பாரதி, ஆன்மிகம் என்று கலந்துகட்டி தந்து வந்தவர் இப்பொழுது முழுத் தொகுப்பாக முதல் ஆல்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

    இலவசமாகக் கொடுத்திருக்கும் எம்.பி3யைக் கேட்டால் ஆறு பாடல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

    1. ஸ்ட்ரெயிட் அவுட் ஆஃப் காலேஜ்
    2. தேடித் தேடி தென்றல் வீசும்
    3. வரவு எட்டணா
    4. திக்குத் தெரியாத காட்டில்
    5. கண்ணாலே அம்பு விட்டு
    6. எஞ்சினியரிங் மார்க்கு

    ஒரிரண்டு தடவை கேட்டதில் ரீமிக்ஸ் கொஞ்சம்; புரிகிற வரிகள் கொண்ட ஆங்கிலப்பாடல்; தேஸி இந்தி கொஞ்சம்; தமிழ்ப்பட பாடல்களுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைந்த குத்துப் பாட்டும் இருக்கிறது.

    திருவாசகம், எனி இந்தியன், காமதேனு, காந்தளகம் என்று இணைய முயற்சிகள் மின்னும் காலம் இது. சினிமாவின் பின் மட்டுமே போகிற பாடல் உலகத்திற்குக் குறிப்பிடத்தக்க வரவு. வாழ்த்துக்கள்!!!

    இணையத்தில் வாங்க விரும்புவோர் தமிழோவியத்தில் வாங்கலாம்


    மறுப்புக்கூற்று: இந்த ஆல்பத்தின் தயாரிப்பிலோ, விற்பனையிலோ எனக்கு தொடர்போ லாபமோ கிடையாது :-)

    வியாழன், செப்டம்பர் 08, 2005

    பழைய குருடி

    மனிதவளக் குறியீடு [Human Development Index (HDI)]


    நன்றி: டெலிகிராஃப்



    நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்





    உலகின் திருப்தியளிக்கும் விரும்பத்தக்க சுற்றுலா இடங்கள் பட்டியல் (கருத்துக் கணிப்பு)
    டைம்ஸ் ஆஃப் இந்தியா ::
    1. நியுசிலாண்ட்
    2. தாய்லாண்ட் (சுனாமி/பாலி-க்குப் பிறகும்!?)
    3. ஆஸ்திரேலியா
    4. இத்தாலி
    5. இந்தியா
    6. பிரான்ஸ்
    7. அமெரிக்க்கா


    * இயற்கையழகு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு #1: நியுசிலாண்ட்
    * உணவு ரசிகர்களுக்கு #1: இத்தாலி, பிரான்ஸ் (பிட்ஸா/திராட்சை ரசம்?)
    * பலவகை பயணிகளுக்கு: அமெரிக்கா
    * செலவழிக்கும் பணத்துக்கு அதிக மகிழ்ச்சிக்கு: இலங்கை

    நகரங்கள்
    1. நியு யார்க்
    2. சிட்னி
    3. ரோம்

    புதன், செப்டம்பர் 07, 2005

    லூஸியானா - 1927

    ராண்டி நியுமானின் கவிதை பாஸ்டன் க்ளோபில் படிக்கக் கிடைத்தது. தற்போதைய காத்ரீனா சோகம் போலவே 1927-இல் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களை அலைக்கழித்திருக்கிறது. ஆறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அரசியல் சூறாவளிக்கு வித்திட்ட புயல். அதுவரை குடியரசு கட்சி கோலோச்சிய தெற்குப் பகுதிகளில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சுதந்திர கட்சிக்கு மாற்றிட வைத்தது.

    சரித்திரம் மீண்டும் நிகழுமா?


    நன்றி : ராண்டி நியுமான்

    இங்கு காற்று
    மாறி வீசத் தொடங்கிவிட்டது
    வடக்கிலிருந்து கிடுகிடுத்த மேகம்
    உத்தரத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது

    ஆறடிச்சுவராய் நீரோடும் நகரவீதிகள்
    பகல் பொழுதும் பொங்குகிறது
    பாதிச்சாமத்திலும் பொங்குகிறது

    சிலர் கடற்பெருக்கோடு போயினர்
    சிலர் கடைத்தேறினர்

    நதியின் துந்துமியாட்டம்
    புலத்தை நிர்மூலமாக்கிட
    ஆறடிச்சுவராய் நீரோடும் நகரவீதிகள்

    லூஸியானா, லூஸியானா
    உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்
    உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்

    சனாதிபதி வந்தார் பொட்டி வண்டியிலே
    கையில் நோட்டோடு
    பொடுகு இரட்டைநாடி ஆளும் வந்தார்

    சனாதிபதி சொல்வார்
    'குறுகிய குண்டா
    கூச்சமாக இல்லையா
    பித்தன் பொறுக்கித்தின்னியின்
    நிலத்தை
    நதிப் போக்கடித்திருக்கிறதே'

    லூஸியானா, லூஸியானா
    உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்
    உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்

    -பாலாஜி
    பாஸ்டன்

    செவ்வாய், செப்டம்பர் 06, 2005

    கெட்ட வே(லை)ளை

    நகைச்சுவை எழுத்தாளர் தேவன் நாளை வந்திருந்தார். அவருக்கு பிறந்தநாள் செப்டம்பர் எட்டு. (ஜூனூன் வசனங்கள் இப்போது சீரியல் norm).

    'ஹேப்பி பர்த்டே' என்று வாழ்த்து எழுதத் துவங்கினேன்.

    'ஏண்டா அபிஷ்டு! தனித் தமிழ் தண்ணியாய் ஓடும் வலையில் ஹேப்பியா பர்த்டேயா.... எல்லாருமா சேர்ந்து 'தேவனு'க்கு தார் பூசுவோம் என்று கிளம்ப வைக்கப் போகிறாயா? என்னுடைய பர்த்டேவை சாட் பேர்த்டே ஆக்கப் போகிறாயா?' என்று கடிந்து கொண்டார்.

    தமிழ்நாடே பாப்ரி, கச்சோரி, தஹி என்று வித விதமாய் சாட் சாப்பிடுகிறது. இணையமே எம்.எஸ்.என், யாஹு, எயிம், நேற்று பாப்-அப் ஆன ஜி-டாக் என்று சாட்டுகிறது. சாட் பிறந்தநாளாய் ஆனால் என்ன என்று நினைத்தேன்.

    அமுதசுரபி போட்டி முடிவுகள் வந்தது. விநாயகர் ஹேப்பி பர்த்டே கொழுக்கட்டைகள் போல் நூற்றியெட்டுக்கு மேல் கருத்துப் பூரணம் நிறைந்த வெள்ளை மாவு நகைச்சுவை மூடிய பதார்த்தங்கள் இருந்திருக்கிறது. ஆனால், தரம், மணம், குணம், குங்குமம், ஹார்லிக்ஸ், டீ ரோஸஸ், த்ரீ ஷாட் லாகிரி சல்பேட்டா எதுவும் நிறைந்திருக்காமல் உதட்டைப் பிதுக்க வைத்திருக்கிறது.

    கெட்ட வேளை...

    ஒழுங்காக என்னைப் போன்ற புத்திமான்களும் அறிவுஜீவிகளும் நகைச்சுவை தக்காளி ரசம் வழிய வழியப் பொங்கும் சிகாமணிகளும் ஒரிஜினல் எக்ஸ்போர்ட் க்வாலிடி தரத்தில் காமெடி கொடுக்கும் எழுத்தாளப் பெருந்தகைகளும் கலந்து கொண்டிருந்தால் பத்துக்கு மேற்பட்டோர் சிறப்பாக எழுதியிருப்பதால் எல்லாருக்கும் மூன்று லட்சம் காசுகள் கொடுத்திருக்க வேண்டியிருக்கும்.

    கெட்ட வேளை... நடக்கவில்லை.

    தேவன் இறந்ததே கெட்ட வேளை. இப்போது நானும் போட்டிக்காக சிரிக்கவில்லை.

    ஏன் இந்த மாதிரி ஆகிப் போனது என்பதை நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும். இப்பொழுதுதான் நகைச்சுவைக்கு நடுவில் கருத்துக் கூறும் தருணம். இது கெட்ட தருணத்துக்கான தருணம்.

    எல்லோருக்கும் இப்போது மேற்கத்திய மூளைச் சலவை நடக்கிறது. 'சந்திரமுகி'யில் கதாகிழவன் பாடுவது போல் 'துணி தோய்க்கும் தோழன்தான் இல்லையேல் வெளுக்குமா அழுக்கு?' என்பது கெட்ட பிரயோகம்.

    சஹாராவில் ஒன்றுக்குப் போனால் வாஷிங் மெஷின் கொடுப்பார்கள்.

    நான் சஹாரா படத்தை சொல்லவில்லை. பெனலோப் க்ரூய்ஸ் கண்ணாடி கழட்டுவதைப் பார்த்தாலே எவருக்கும் ஒன்றுக்கு உள்ளடங்கி ஜீவசமாதி ஆகி வாயில் ஜொள்ளாக வெளியேறிப் போய்விடுமே...

    சஹாரா பாலைவனத்தையும் சொல்லவில்லை. அப்புறம் கூகிள் எர்த்தை முட(டு)க்கி, தேடித் தெளியும் போது நமது கணினி தொங்கி நூடில்ஸாகி இருக்கும்.

    சஹாரா ஒன் எனப்படும் தொலைக்காட்சியில் பினாகா (இது முக்கியம்; பழசுகளுக்கு க்ளோஸ்-அப் தெரிய வாய்ப்பில்லை; கோபால் பற்பசை சீரியஸ் கட்டுரைகளுக்கும், பினாகா காமெடி கட்டுரைக்கும் அவசியம்; டெமொக்ரட்டுக்கு புஷ் எவ்வளவு அவசியமோ, புஷ்ஷுக்கு அல்-க்வெய்தா எவ்வளவு அவசியமோ... அம்புட்டு).

    எந்த கெட்ட வேளையில் இருந்தேன்?

    'பூத்' படத்தின் ஆவியின் பெயரைச் சொன்னால் உங்களுக்கு பினாகா ... சாரி... தூய தமிழ் தாரீயக்காரர்களுக்காக மன்னிக்க... சலவை முடுக்கான் வந்து சேரும்.

    நகைச்சுவையில் ஆர்ட் புஷ்வல்ட், பிஜி வோட்ஹவுஸ் (ரெண்டு மூணு மேற்கத்தியப் பெயர்கள் எப்போதுமே சொல்லுவது வெற்றிக்காயை மடிக்கணினியில் மின்னஞ்சலும்) மேற்கத்திய சலவை. சலவைக்கு உள்ளூர் லாண்டிரிக்காரனைப் பயன்படுத்தாமல் அவனுடைய அழியா இன்ஷியல் குறிப்புகளை அங்கலாய்த்து அப்படியே கெல்வினேட்டர் பெங்குயின்கள் (அங்கிலத்தில் தமிழைத் தட்டச்சும் உலகத்தில் கேட்டிருந்தால் பெங்குயினுக்கு தமிழ்ப்பதம் கிடைத்திருக்கும்... டுடூ: பெங்குயினுக்கு தமிழ் என்ன? பென் என்றால் பேனா, அப்படியே தமிழ் வந்தால் நங்கை, மங்கை; குயின் என்றால் ஒருவித மார்பக கச்சை (கச்சை சரித்திர நகைச்சுவை கட்டுரைகளில் க்ளிக் ஆகும்) அல்லது மஹாராணி) வெளியூர்க்காரனுக்கு கை கட்டி சேவகம் செய்கிறதே என்று வருத்தப்பட்டல் கட்டுரை ரெடி....

    Develop செய்கிற நேரத்தில் பாரிஸ் டவர் மேல போயிட்டு டெலிவரி பண்ணுகிற நேரத்துக்கு வந்தால், அவுட்சோர்ஸ்தான் செய்ய வேண்டும் என்பது போல், கட்டுரையை எழுதிக் கொடுக்கக் கூட சகாய விலையில் இந்தியர்கள் கிடைப்பார்களா என்று 'சேது' பாலா போல விளம்பரம் செய்யவும் ஆசையாகத்தான் இருக்கிறது.

    இன்னொரு போட்டி வராமலா போய்விடப் போகிறது! க்ரெய்க்லிஸ்ட்டா, ஈபே-யா என்பதில்தான் குழப்பம்.

    ஆனால், பொலிடிகலி கரெக்ட் ஆக இருக்க நினைத்து அய்யரு கதையில் பட்சி, வேதா என்றோ, அப்துல்லா குடும்பத்தில் பாலாஜி, அண்ணாமலை என்றோ கதாபாத்திரங்கள் உலவ விடாமல் எடிட் செய்ய அமெரிக்க ப்ராஜெக்ட் மேனஜர்கள் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கும்.

    அடுத்த முறையாவது கெட்ட வேளை நீடிக்காமல் தேவனுக்கு ஹேப்பி பர்த்டேயாக அனைத்து பரிசும் பெறுபவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

    -பாலாஜி
    பாஸ்டன்

    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு