வியாழன், மார்ச் 04, 2004

நிலாச்சாரல் - நட்சத்ரன்

அகிரா குரோசாவாவின் திரைப்படைப்பியக்கம் : நட்சத்ரன் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சிற்றிதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். சுபமங்களா, கணையாழி, சதங்கை, சுந்தரசுகன், குமுதம் ஆகிய இதழ்களிலும், அம்பலம், நிலாச்சாரல், ஆறாம்திணை, திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் கவிதைகள் வெளியாகியுள்ளன. தூக்கணாங்குருவிக்கூடு என்ற நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

"நல்ல திரைப்படம் பற்றிய எழுத்து தமிழில் மிகவும் குறைவு. எனவேதான் நான் திரைப்படக்கட்டுரைகளை பெருமளவில் எழுதத் தீர்மானித்துள்ளேன். அதற்கு முதல்படியாகவே திரைப்பட மேதை அகிரா குரோசாவா பற்றிய இக்கட்டுரை.

முதன் முதலில் அவர் உலகப்புகழ்பெறக் காரணமான படம் ‘ரஷோமான்’(தலைவாயில்) ஆகும். இது உலகெங்கிலும் உள்ள திரைக்கலைஞர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தது.

இகிரு(1952), செவன் சாமுராய்(1954), குலோநோசு( ரத்த சிம்மாசனம்-1957), செந்தாடி(1965), கனவுகள்(1987), கஸ்ட் ராப்ஸடி(1990) போன்ற மகத்தான திரைப்படங்களைப் படைத்து, உலகத் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற குரோசாவாவுக்கு, அவரது வாழ்நாள் பணிக்காக 1991-ல் சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. "

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு