திங்கள், மார்ச் 15, 2004

அங்கும் இங்கும்

இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வதில் கருணாநிதியும் ஜெஜெவும்தான் தேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆதாரமற்ற குற்றசாசாட்டுகளை வைப்பதில் தமிழருக்கு எந்த விதத்திலும் ஜான் கெர்ரியும் சளைத்தவரல்லர். அபாண்டமாகப் பழி போடுவதை விட நேரடியாக பச்சை பச்சையாகத் திட்டுவதே மேலா?

அப்படியானால், வெஸ்ட் விங், 24, சிக்ஸ் ஃபீட் அண்டர் போன்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்குப் பிடித்த கெட்ட வார்த்தைகளைப் பார்க்கலாம். (இந்த மாதிரி சுட்டி கொடுப்பதற்காக எந்தத் தகாத வார்த்தையை உபயோகித்தீர்கள்?)

இந்த மாதிரி உரல்கள் ஏன் கொடுத்தாய் என்று கேட்டால் ரிபப்ளிகன் பொன்மொழிகள் பலவற்றுள் மாதிரிக்கு ஒன்றை மொழிபெயர்த்தால் தன்னிலை மறுப்புக்கு உதவும்:
நான் தளபதி - யாருக்கும் விளக்கம் தரத் தேவையில்லை; ஏன் செஞ்சேன், எதற்காக சொன்னேன் என்று எல்லாம் விளக்க வேண்டாம். ஜனாதிபதியாக இருப்பதன் பலன் இதுதான். மற்றவர்கள், தான் செய்வதற்கு நியாயம் கற்பிக்க அவசியம் இருக்கலாம்; நான் யாருக்கும் விளக்கம் சொல்ல கடமைப்பட்டவன் போல் தோன்றவில்லை. - ஜார்ஜ் புஷ் (நவ. 19, 2002)

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கமல் சந்திப்பார் என்று தெரிகிறது என்னும் செய்தியை நிலா முற்றம் சொல்கிறது. இந்தச் செய்தி உத்தரவாதமானதுதானா என்று கூகிளில் தேடலாம் என்றால் நம்பாதே என்று அறைகூவுகிறது எனக்கு வந்த ஒரு மடல். அமெரிக்கரின் வசம் இருக்கும் கூகிளும் ஃப்ரெஞ்சுக்கு எதிராகத்தான் பக்கங்களை வரவழைத்துத் தருகிறது போல.

ஆனால், வதந்திகளை நம்பக் கூடாது. புக்கர் பரிசை நூலிழையில் தவறவிட்ட மோனிகா அலி ஆரஞ்சு பரிசையாவது வெல்லலாம் என ஆருடம் நிலவுகிறது. தாய்பே டைம்ஸ் கூடப் புகழும் ரூபா பாஜ்வா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜும்பா லஹரி, காம்பிளியின் கதை சொல்லும் சிமாமந்தா என்று சரியான போட்டி நிலவுகிறது.

பிகு: இல்லிஸ்ட்ரேடட் வீக்லியில் வாராவாரம் 'Separated at Birth' என்ற பகுதியின் நினைவாக ரெஹ்மான்/மாதவன் படம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு