திங்கள், டிசம்பர் 05, 2005

முக்கியமில்லாத செய்திகள்

Dinamalar.com: ராஜாஜியின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜாஜி நினைவு விருது தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது.

ராஜாஜியின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுத் தொண்டில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு முதன் முறையாக 'ராஜாஜி நினைவு விருது' ராஜாஜி பவுண்டேஷன் சார்பில் வழங்கப்படவுள்ளது. இதற்கான விழா வரும் 10ம் தேதி கிண்டியில் உள்ள ராஜாஜி நினைவு மண்டபத்தில் நடக்கிறது.

மத்திய நகர்புற வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்., செயலர் ஜெய்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடி வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த இரண்டாண்டு தொடர் கல்விக்கான உதவித் தொகையும் விழாவில் வழங்கப்படுகிறது.

இத்தகவலை ராஜாஜி பவுண்டேஷன் அறங்காவலரும் ராஜாஜியின் கொள்ளு பேரனுமான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

வலை நிருபர்: ராஜாஜியின் பேரன் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பி காங்கிரஸில் சேர்ந்தார். வருகின்ற சட்டசபை தேர்தலில் மைலாப்பூரில் நிற்பதற்கு ஆதரவு திரட்டுகிறார்.



(c) The Creating Passionate Users


| |

1 கருத்துகள்:

Ithukkup perthaan Kulluga 'BUTTER' Virudhu enbathu. MLA seat venumna oru virudhu kodu. Rajaji's aavi is definitely going to commit suicide. Expect Gandhi Peace and ahimsa award for Veerappan and World Tree Movement award for Maram Vettiar on the same lines.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு