புதன், ஜூலை 19, 2006

Lets bash Thamizmanam (Again :-)



தமிழ்மணத்தில் சூடு குறைந்து விட்டது.

சிதம்பரத்துக்கு செல்லும் பேருந்தில் தமிழ் இடம் பெறுகிறதா என்பது முதல் வட இந்திய கங்கையைத் தலையில் சிவன் வைத்துக் கொண்டிருப்பதற்கான காரணம் வரை ஒரு பக்கம் அலசல் நடைபெறுகிறது.

கால் மாறி ஐந்து சபைகளாக, காரைக்கால் அம்மையாராக பிகேப்ளாக்ஸ் முதல் அன்னியலோகம் வரை காலால் நடந்து, பல பதிவுகளிலும் நடனம் தரிசிக்கும் காலத்தில், நடிகர் திலகத்திற்கு சிலை வைக்கும் வாஸ்துவும் கவிதைகளும் Discovery அமைதியாய் தரையிறங்கியது போல் ஓரமாய் பயணங்களைத் தொடர்கிறது.

நேற்றைய தினகரன் விளம்பரத்தில் கடற்கரையில் கற்புக்கு (தந்தை பெரியார்?), கவிதைக்கு (வீரமாமுனிவர்), உழைப்புக்கு (கண்ணகி), உண்மைக்கு (பாரதிதாசன்?), எளிமைக்கு (பாரதியார்?), குறளுக்கு (ஔவையார்?), ஒரு சிலை இருக்கிறது என்கிறார்கள். தமிழக கலைக் குடும்பத்தினர் (நான் சத்தியமாக உறுப்பினன் அல்ல) நடிப்புக்காக ஜெயலலிதா சிலை வைக்க சொல்லி இருக்கலாம்.

ஒருங்குறியையும் தமிழ் எழுத்துருக்களையும் இன்ன பிற எண்ணற்ற இணையப் பயன்பாடுகளையும் அதிகரித்த உமர், திருநங்கை என்றவுடன் நினைவுக்கு வரும் icon லிவிங் ஸ்மைல் வித்யா, 'கள்ளன் பெரிசா... காப்பான் பெருசா?' என்பது போல் தொடர்ந்து தமிழ்மண குறிச்சொற்களில் இடம் பிடிக்கும் 'பார்ப்பன நாய்கள்' என்று சூடு தணிந்து கோடை குளிரில் வாடுபவர்களுக்காக...

கிண்டி விட்டு சூடேற்றி குளிர் காய கேள்வி கேட்கிறான் இவண்! inblogs.netதமிழ்மணம் ஏன் பிகேப்ளாக்ஸை ஆதரிக்க வேண்டும்???

மும்பை ரயிலில் குண்டுவெடித்த அமைப்புகளை ஆதரிக்கும், லஷ்கர் இ-தொய்பா போன்ற சக்திகளுக்கு நிதி திரட்ட உதவும், கார்கில் ஆக்கிரமிப்பு முதல் காஷ்மீரில் பேச்சுவார்த்தைக்கு சப்பைக்கட்டு போடும் பாகிஸ்தான் தளத்திற்க்குத்தான் தமிழ்மணம் ஆதரவுக் கரம் நீட்டுமா? அப்படியும் வலைப்பதிவுகளை படித்துத்தான் தீர வேண்டுமா?

'ஆம்' என்றால் சரி... படிங்க. பின்னூட்டமும் இட்டுடுங்க :-)

மற்றவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நல்ல விஷயம் ஒன்றை சொல்லி விட்டு ஓடிடறேன்:

'உள்குத்து'', சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறது, ''போலிப் பின்னூட்டம்' போன்றவற்றை சில நொடிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, வம்ஸி மூத்தாவுக்கு ஒரு 'ஓ!' போடக்கூடாதா? வலைவாசிகள் என்ற முறையில் அது நம் கடமை இல்லையா?




| |

4 கருத்துகள்:

வம்சிக்கு ஒரு 'ஓ',
உமருக்கு 'ம்' (மெளனம்)
வித்யாவுக்கு 'ஓஹோ'
தமிழ்மணத்துக்கு 'ஏய்'
கலைக்குடும்பத்துக்கு 'சூ'
தீக்சிதர்களுக்கு 'சிவ சிவா'
உங்களுக்கு 'ஹ ஹ ஹா'

வம்சிக்கு Anaganaga Oka Roju
உமருக்கு 'நிறைகுடம் நீர்தளும்பல் இல்'.
வித்யாவுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்மணத்துக்கு 'கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்'
தீக்சிதர்களுக்கு 'சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்'
உங்களுக்கு '__/\__

முகமூடி, விட்டது சிகப்பு, வஜ்ரா ஆகியோர் கலந்து செய்த தோசை மாதிரி ஒரு பதிவை போட்டு இருக்கிறீர்கள். யூ ஆர் மல்டிபுல் பர்சனாலிட்டி........:)))))

கோவி... நான் தான் அவர்கள் என்று சொல்லாத வரைக்கும் :-)))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு