புதிய பார்வை
புதிய பார்வையில் வெளியான திருமாவளவனின் உரையாடலில் இருந்து சில பகுதிகள்: Tamiloviam
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள திராவிடக் கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் எந்த நிலையிலும் மேலே வரமுடியாத அளவுக்கு இறுக்கமான சூழ்நிலையே இருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்பட்ட அளவுக்கு மற்ற கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டதில்லை.
பசுவை வதைத்தால் தடுக்கச் சங்கமிருக்கிறது. ஆனால் மனிதனை மிருகத்தை விடக் கேவலமாகக் கொடுமைப் படுத்தினால் அதைக் கேட்க யாரிருக்கிறார்கள்? கவிஞர் இன்குலாப் சொன்ன மாதிரி "பறையனாக வாழ்ந்து பார்த்தால்தான் பார்ப்பனியத்தின் கொடுமையை உணரமுடியும்."
திராவிடக் கட்சிகள் பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பன எதிர்ப்பு என்பதில் உறுதியாக நின்று தாழ்த்தப்பட்டவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, சாதி ஒழிப்பிலோ, இந்துத்துவ எதிர்ப்பிலோ அவர்கள் எந்த முனைப்பையும் காட்டவில்லை.
திராவிட இயக்க வரலாற்றை எழுதுபவர்கள் யாராவது இரட்டைமலை சீனிவாசனைப் பற்றியோ, அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றியோ, தந்தை சிவராஜ் பற்றியோ, அவர்களின் பங்களிப்புப் பற்றியோ ஏன் எழுதவில்லை? ஏன் மூடி மறைக்கிறார்கள்? அம்பேத்கார் பௌத்த மதத்திற்கு மாறவேண்டும் என்கிற கருத்தியலுக்கு வந்ததற்குக் காரணமே அயோத்திதாசப் பண்டிதர்தான்.
- புதிய பார்வை/நவ. 15, 2004
ஐயா!! இது வரை மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கியம் அல்ல.
இவர் என்ன செய்தார், செய்ய போகிறார் என்பது தான் முக்கியம்.
சொன்னது… 3/06/2005 03:33:00 பிற்பகல்
அந்தப் பேட்டியில் இவரின் செயல்திட்டங்களையும் தொட்டுச் சென்றிருந்தார். அடுத்த இதழிலும் பேட்டி தொடர்ந்திருக்கிறது. இவரும் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
சொன்னது… 3/07/2005 06:18:00 முற்பகல்
கருத்துரையிடுக