திங்கள், ஏப்ரல் 18, 2005

டயலாக் டென்

ரொம்ப மண்டையைக் குடையாமால் கூகிளைக் குழப்பாமல் யோசித்ததில் மனதில் தங்கிப் போன பத்து சினிமா வசனங்கள்:

1. ...'என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?'...

2. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை

3. அவன் ஹேர்ஸ்டைலை பார்த்தியா? ஏ. ஆர். ரெஹ்மானையும் ஆதித்யனையும் மிக்ஸ் பண்ணி வளர்த்திருக்கான். இன்னொரு ஆங்கிளில் இருந்து பார்த்தா 'அவதாரம்' நாஸர் மாதிரியே இருக்கான்.

4. சபாஷ்! சரியான போட்டி.

5. உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா!

6. தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை - மன்னிப்பு.

7. தீவிரவாதியெல்லாம் என்ன மாதிரி அசிங்கமா இருக்க மாட்டான் சார். அழகா... உங்கள மாதிரி இருப்பான்.

8. எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!

9. ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்...

10. நீ மலையா? இருக்கலாம்... ஆனா, மலை உடைஞ்சா மண்ணுதான்.


நிறையப் படம் மனதில் ஓடினாலும், வசனம் வரமாட்டேங்குது. உங்களுக்கு நினைவுக்கு வந்த உரையாடல் என்ன ;-)

21 கருத்துகள்:

1. வீரபாண்டிய கட்டபொம்மன்
2. நாயகன்
4. வஞ்சிக்கோட்டை வாலிபன்
5. கொஞ்சும் சலங்கை
6. ரமணா
8. பாட்ஷா
9. பராசக்தி

ஓ... சாரி, நீங்களும் உங்க namesake மாதிரி, கண்டுபிடிங்க பாக்கலாம்னு போட்டி ஏதோ ஆரம்பிச்சிட்டீங்கன்னு நெனைச்சு, படம் பேரை எல்லாம் அடுக்கிட்டேன் :-)

3. காதலா காதலா?

படம் பெயரை கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா... எல்லாமே ரொம்ப சுளுவா இருக்கும் என்றுதான் தலைப்பை விட்டிருந்தேன் :-P

(மூன்று: கா.கா. அல்ல! சிகையலங்காரத்தைக் கருத்தில் கொள்ளவும்; விவேக் அடிக்கும் கருத்து என்பது இன்னொரு துப்பு.)

//உங்களுக்கு நினைவுக்கு வந்த உரையாடல் என்ன//

"நான் அடிச்சா... நீ செத்துருவ" - நாயகன் ;-)

The very famous one is "Naan oru thadava sonna 100 thadava sonna mathiri". I am not sure how didn't it strike you.
Thanks Venkat M

3.யுனிவர்சிட்டி

அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா.

ரஜினிக்கு என்று தனியாக டாப் 10 டயலாக் போடலாம் ;-)

1. சொன்னதைச் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன்.

2. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!

3. நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை விட, உன்னை யாரு காதலிக்கிறாங்களோ அவங்களைக் காதலி.

4. ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா? ஒரு சாக்லேட்டு வேணுமா? இரண்டு சாக்லேட்டு வேணுமா?

5. எப்போ வருவேன்... எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.

மாண்டீ,

எழுத ஆரம்பித்தவுடன் நினைவில் ஓடியதெல்லாம் வெறும் மணி ரத்னமும் மனோகராவும்தான். தட்டித் தடவி மற்ற பகுதிகளையும் எட்டிப் பார்த்தேன்.

* அவங்கள நிறுத்த சொல்லு... நான் நிறுத்தறேன்.

* நீங்க நல்லவரா? கெட்டவரா?

* நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்ப செத்தா ரொம்ப சந்தோஷமா சாவேன்.

* உங்களைப் பார்த்தா எனக்கு அழுதுருவேன் போலத் தோணுது.

* மேரா பேட்டா... ஆப்கா(தும்ஹாரா?) பேட்டா...

//நினைவுக்கு வந்த உரையாடல் என்ன ;-)//
உள்ளே போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.... (பாட்சா)
சறுக்கிடியேடா சிங்காரம், (கா.கா.)
ரெத்த பூமிடா இது (வின்னர்)
சண்டைல கிளியாத சட்டை எங்க இருக்கு (வின்னர்)
குடிக்க கஞ்சியும், துடைக்கப் பஞ்சும் குடுடி சாந்தா (ரத்தக்கண்ணீர்)

இது எப்பிடியிருக்கு? ஹ ஹ ஹ

>>இது எப்பிடியிருக்கு?

இதை எப்படி மறந்து போனேன்!! பத்த வச்சுட்டி(ங்களே)யே (பரட்டை) கறுப்பி.

அமாவாச உள்ளத சொல்றேனுங்க

பாட்சா ஒரு தடவை சொன்ன 100 தடவை சொன்ன மாதிரி

(இத்த எப்படி மறந்தீங்க தலீவா!)

இத மறந்துட்டீங்களே.... " இந்த வாளப்பளம்தாண்ணே..அந்த வாளப்பளம்"

இது சினிமா தாண்டியது, ஆனால் சினிமா சம்பந்தப்பட்டது ....1) என் இனிய தமிழ் மக்களே 2) நிலாவை பூமிக்கு வரச்சொல்லித்தான் காலகாலமாக காதலர்கள் கடிதம் போட்டுக் கொண்டிருந்தார்கள்...

"பீம்பாய், பீம்பாய், அந்த லாக்கர்ல இருக்கற................... அவினாஷி நாய் மூஞ்சில் விசிறியடி"

"மலேடா... அண்ணாமலே..."

"குயிலு, குயிலு, குருவியை சுட்டாங்க குயிலு"

"பிரபாகாரா .... வா "

"I am a bad man"

"வேணாம். விட்டுறு. அழுதுறுவேன்"

"ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் முடிக்கறான்"

"த்தொடா, வேதம் சாத்தான் ஒதுது"

வடிவேலுவுக்கும் தனி லிஸ்ட் போடலாம்: (மேலுள்ள மக்கள் சொன்னது போக)

ஆகா.... வந்துட்டான்யா வந்துட்டான்யா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... (ஒரு மாதிரி மூஞ்சை வச்சிக்கிட்டு அழும் வடிவேலு)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா... இப்பவே கண்ணை கட்டுதே...

சிங்ங்ங்.. இன் த ஸாங்க்... ஐயம் சொய்ங்ங்ங் இன் த ஸாங்க் (மனதை திருடிவிட்டாய்)

(கவுண்டமணி) ஹே ஹே... ஹே..(சிரிப்பு) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

(செந்தில்) அண்ணே... அண்ணே...

(விக்ரம்) தப்பு பண்ணினா அந்த ஆண்டவனுக்கு பிடிக்காது, அசிங்கமா பேசினா இந்த அருளுக்கு பிடிக்காது.

(திருப்பாச்சி விஜய்) ஏய்... நீ என்ன பருப்பா?

பாலு பட்டாசு பாலு, சகடை சனியன் சகடை. (திருப்பாச்சியில் வரும் கழிச்சடைகள்)

(நெப்போலியன்)கல்யாணமா இருந்தாலும் கருமாதியா இருந்தாலும் எனக்கு தாண்டா மாலை (எஜமான் படத்தில்)

(சிவாஜி) கிளி.... கூட்டை விட்டு பறந்து போயிருச்சி

இன்னும் நிறைய இருக்குது தலீவா...

http://rozavasanth.blogspot.com/2004/10/blog-post_29.html

Veeram'na Enna'nnu Theriyumaa?
Bayam illaatha maari nadikkarathu!

-- Classic piece of dialogue.

அபிராமி அபிராமி (குணா கமல்)

வெற்றிவேல் வால்டர் வெற்றிவேல்

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் (எக்காலத்திலும் ஜேம்ஸ்பாண்ட்)

லோக்கல் ஆளு... ஆள் ஓவர் தமிழ்நாடு கலக்கல் ஆளு (சுள்ளான்)

செண்பகமே... செண்பகமே... (ராமராஜன்)

எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...(அக்னிநட்சத்திரம் ஜனகராஜ்)

சார்ர்ர்ர் லட்டுடுடுடுடுடுடுடுடுடுடு... (பிரபுவும் ரேவதியும் நடித்த ஏதோ ஒரு படம். படம் பேரு மறந்துரிச்சி)

நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுது...

அப்பன் சாபம் வெப்பன் மாதிரி தாக்குதே (ரன் விவேக்)

(யார் அதிக டயலாக்கை பின்னூட்டம் விடுறாங்களோ அவங்களுக்கு பரிசு ஏதாச்சும் உண்டா??? :-))

ரோஸா, நாராயண், ஸீரோ, பாலு மணிமாறன்... நன்றிகள்.


>>அமாவாச உள்ளத சொல்றேனுங்க

என்ன படம் என்று தெரியவில்லை!

அல்வாசிட்டி விஜய்... அட்றா சக்கை... அட்றா அட்றா....

சைலன்ஸ் சைலன்ஸ்!!!! யுவர் ஓணர் (அடிக்காதீங்கப்பா) ஹஹஹ

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு