செவ்வாய், நவம்பர் 07, 2006

American Polls: Corruption is top issue & Some Ballot Measures

அமெரிக்காவில் இன்று தேர்தல்.

வாக்காளர்களின் முடிவை எதிர் நோக்கும் சில கேள்விகள்:

1. South Dakota - Abortion law controversy: சவுத் டக்கோட்டாவில் கருகலைப்பு சட்டவிரோதமானது. இந்த வருடம் மார்ச் ஆறாம் தேதி தாயின் உயிருக்கு பேராபத்து இருந்தால் ஒழிய, மற்ற அனைவரும் குழந்தை பெற்றே தீர வேண்டும் என்னும் மசோதாவை கவர்னர் கையெழுத்திட்டார். வன்புணர்வு, பதின்ம வயதினர் போன்றோருக்குக் கூட சட்டத்தில் இருந்து விலக்கு கிடையாது.

மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? பெண்களுக்கு முடிவு எடுக்கும் உரிமை கொடுப்பார்களா? மாட்டார்களா?


2. Same-sex marriage: பல மாகாணங்களில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். தற்பாலாருக்குள் திருமணத்தை அனுமதிக்கலாமா? கூடாதா?

கணவனுக்கு காப்பீடு இருந்தால், குடும்பத்துக்கும் அதே காப்பீட்டைக் கொண்டு, மருத்துவ செலவை சமாளிக்கலாம். தற்பாலார் சேர்ந்து வாழ்ந்தால், ஒருவரின் காப்பீடு, குடும்பத்துக்குப் பொருந்துமா? அல்லது இருவருமே தனித்து வாழ்பவர்கள் போல் கருத வேண்டுமா?

கல்யாணம் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும்தானா?


3. English-only movement: அரிசோனாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். மெக்ஸிகோ போன்ற பிற நாடுகளில் இருந்து கடைநிலை ஊழியராக வேலை பார்ப்பவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இதை நிறுத்திவிட்டு, இனி அமெரிக்காவின் தேசிய மொழி ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டுமா? அல்லது அரசாங்கம் தொடர்ந்து இரட்டை மொழியில் பாடங்களை சொல்லித் தர வேண்டுமா?


4. National Association for the Advancement of Colored People: மிச்சிகன் மாகாணம். மிச்சிகன் பல்கலை போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கொடுக்கலாமா? தவிர்க்கலாமா?

வெகு சமீபம் வரை இனம், மொழி, நிறம், குடியுரிமை, போன்ற பல வகைகளைக் கொண்டு, அனைத்து தரப்பினருக்கும் இடம் பிடிக்க வசதியாக சிலருக்கு முன்னுரிமை வழங்கி வந்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் வழக்கம், உச்சநீதிமன்ற ஆணையினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்தப் பழக்கம் தொடர வேண்டுமா? அல்லது கல்லூரி நுழைவில் எந்தவித ஒதுக்கீட்டுக்கும் இடம் கிடையாதா?


5. Legal issues of cannabis: போதைப் பொருள் வைத்திருப்பது குற்றமா? அல்லது உட்கொள்வது குற்றமா? எவ்வளவு எடுத்துக் கொண்டால் சட்டப்படி தவறு?


6. digg - Arizona proposes making election ballots 1 MILLION DOLLAR lottery tickets: தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க வெள்ளி கிடைக்கலாம். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை லாட்டரி குலுக்கல் நடைபெறும்.

கடந்த தேர்தலில், அரிசோனாவில் இரண்டு மில்லியன் வாக்காளர்கள் கடமையை செய்திருக்கிறார்கள். தனியார் நன்கொடை மூலம் கிடைக்கும் ஒரு மில்லியன் இவர்களில் ஒருவருக்கு சென்றடையும்.

இப்படி பணம் கொடுப்பதன் மூலம் மக்கள் பங்களிப்பு அதிகரிக்கலாம். சரியா? தவறா?


7. Stem cell controversy: மருந்து கண்டுபிடிக்காத நோய்களை குணப்படுத்த ஸ்டெம் செல்கள் தேவை. எயிட்ஸ், புற்றுநோய், அல்செய்மர்ஸ், போன்ற எண்ணற்ற குறைபாடுகளுக்கு சரியான சிகிச்சையை ஆராய, பரிசோதனை செய்ய, கண்டறிய, ஸ்டெம் செல் இன்றியமையாதது.

கருத்தரித்தவுடனேயே உயிர் என்று கருதுபவர்களுக்கு, ஸ்டெம் செல் கூட சிறுவராக தென்படுகிறது. மேலும், cloningகுக்கும் பயன்படும் என்னும் பயமும் இருக்கிறது.

புதிய அறிவியல் விடைகளுக்காக ஸ்டெம் செல்லைக் கொடுக்கலாமா? அல்லது தடை செய்து விடலாமா?




| | |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு