புதன், டிசம்பர் 06, 2006

Boston Bloggers Meet - Dec 16th: Invite

அமெரிக்காவின் வடகிழக்கில் வலைப்பதிவர் சந்திப்பு போடலாம் என்று எண்ணம்.

தேன் துளி பத்மா அரவிந்த், பாஸ்டன் பக்கம் வருகிறார்.

மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர் நியூ ஜெர்சியில் இருந்து வரப்போகிறார்.

அக்கம்பக்கத்தில் இருக்கும் வெயிலில் மழை ஜி, வெட்டிப்பயல் பாலாஜி, பாடும் நிலா பாலு! சுந்தர் போன்ற பல பதிவர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

பாஸ்டன் சந்திப்பு என்றாலே தங்கள் கருத்துக்கள் மூலம் சுவையும் காத்திரமும் மகிழ்வையும் கூட்டும் Navan’s weblog நவன், பார்வை மெய்யப்பன், வேல்முருகன் போன்ற நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நீங்கள் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பக்கம் வசிப்பவரா?

வாஷிங்டன் டிசி-யில் இருந்து எட்டு மணி நேரம்தான்.
நியு யார்க்கில் இருந்து நான்கு மணி நேரம்.
மாஸசூஸட்ஸ் மற்றும் நியு ஹாம்ப்ஷைர் வாசிகளுக்கு எட்டிப் பிடிக்கும் தூரம்.

இடம்: பாஸ்டன்
நாள்: டிசம்பர் 16, சனிக்கிழமை
நேரம்: மதியம் ஆரம்பித்து...

தொடர்புக்கு: bsubra@yahoo.com அல்லது bsubra@gmail.com

வாக்குறுதிகள்:
1. புகைப்படங்கள் எடுக்கப்படாது.
2. எடுத்தாலும் இட்லி-வடைக்கு அனுப்பப்பட மாட்டாது.
3. தாங்கள் வாசகராக இருந்தாலும், அவ்வண்ணமே கலந்து கொள்ளலாம். வலைப்பதிவு தொடங்குமாறு நிர்ப்பந்திக்க மாட்டோம்.
4. என் பதிவில் நான் நடந்து கொள்ளும் விதத்தை விட, நேரில் நல்ல மாதிரியாகப் பழகுவேன் ; )

வேண்டுகோள்:
1. தனி மடலிடவும். எனது முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற பிற தகவல்களைப் பகிர்கிறேன்.
2. அவசியம் கலந்து கொள்ளவும்.

62 கருத்துகள்:

பாலா

சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

பாலா

சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

இட்லி வடையை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு தாழ்த்திவிட்டீர்கள்..(

இட்லிவடை தான் எனக்கு இன்றும் என்றும் காலை உணவு

எனிவே உங்கள் மீட்டிங்கில் இட்லி வடை பரிமாறி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்

Bala, akkurumbu...

all the best for the blogger meet!

@ உதய்

பயணச்சீட்டு முன்பதிவு செஞ்சிட்டீங்களா? சிகாகோ குளிரை விட பாஸ்டனில் காற்றும் பனியும் குறைச்சல்தான். தைரியமாக வரவும் : ))

@ சிவா

வாழ்த்துக்கு நன்றியும் வணக்கமும்.

@ கால்கரி சிவா

---இட்லி வடையை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு தாழ்த்திவிட்டீர்கள்..---

ரஜினி, சத்யராஜ் போன்றவர்கள் வில்லனாக நடித்து ஹீரோவாக மாறினவர்கள்.
பிரகாஷ்ராஜ், மணிவண்ணன் போன்றோர் தங்கள் கதாபாத்திரங்களுக்காகப் புகழப்படுபவர்கள்.

வில்லன் என்றால் குறைச்சலா ; ))

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசிக்கும் எலிகள் நடுவில் வில்லத்தனமாக யோசித்து ஹீரோவாக மாறுபவர் அய்யா அவர் : )

---இட்லிவடை தான் எனக்கு இன்றும் என்றும் காலை உணவு---

கொடுத்து வச்சவங்க...
வடை - எண்ணெய் பதார்த்தம்: சுய மறுப்பு கொள்கையின் கீழ் அடிவாங்கியது
இட்லி - தொட்டுக்க தக்காளி, பருப்பு, வெங்காய, தேங்காய் சட்னி, கொத்சு, சாம்பார், என்று சக பரிவாரத்துக்குத்தான் மரியாதை அதிகம் என்பதால் இதுவும் ரத்தாகிறது.


---உங்கள் மீட்டிங்கில் இட்லி வடை பரிமாறி---

அரசியல், கிண்டல், கேலி, கருத்துக் கணிப்பு இல்லாத சந்திப்பா... நிச்சயம் இட்லி-வடையின் உள்ளடக்கம் பரிமாறப்படும் ; )

சரி.. வலைப்பதிவர் சந்திப்புல என்னவெல்லாம் பேசிக்குவாங்கனு இருக்குற பழைய பதிவெல்லாம் படிக்கனும் :-)

இந்த மாதம் வலைப்பதிவர் சந்திப்பு மாதம்னு அறிவிச்சிடலாமா? ;)

KRS, நியூ ஜெர்ஸி, நியூயார்க்கிலிருந்து வருபவர்களை அள்ளி கொண்டு வரவும் ;)

கலக்குங்க!

டி.சி. வரை ஒரு வாய்ப்பிருக்கிறது.
வந்தால் சந்திப்பிற்கும் வர முயல்கிறேன்.

@ வி.பி.

---வலைப்பதிவர் சந்திப்புல என்னவெல்லாம் பேசிக்குவாங்கனு இருக்குற பழைய பதிவெல்லாம்---

அடப்பாவீ ; )
அப்ப பேசினதுதான் இப்பவும் பேசிக்குறோம் என்னும் உள்குத்தா : P


---இந்த மாதம் வலைப்பதிவர் சந்திப்பு மாதம்னு---

குளிர்காலக் கூட்டத் தொடர்


---நியூ ஜெர்ஸி, நியூயார்க்கிலிருந்து வருபவர்களை---

First come first served. துண்டு போட்டு ரிசர்வ பண்ணிக்கலாம் : )

@எஸ்.கே.

---டி.சி. வரை ஒரு வாய்ப்பிருக்கிறது.---

அவசியம்...
பாஸ்டன் பழமையான ஊர் (அமெரிக்காவைப் பொருத்தவரை); சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம்
வாங்க...

காரி ஓட்ட ப்ரியப்படவில்லை என்றாலோ, விமானப்பயணம் ஒத்துவராது என்றாலோ, மிக எளிமையான பேருந்துப் பயணத்தில் வந்து விடலாம். வருகிற வழியில் மூன்று படமும் இலவசமாகப் பார்த்து விடலாம்.

முயற்சி செய்யுங்களேன்!

வாழ்த்துக்கள். பதிவுலக ஜாம்பவான்களின் சந்திப்பாய் தெரிகிறது. சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

//அமெரிக்காவின் வடகிழக்கில் வலைப்பதிவர் சந்திப்பு போடலாம் என்று எண்ணம்.//

என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு??
எம்புட்டு பேரு வரப்போராய்ங்க! வலைப்பதிவர் மாநாடுன்னு போடுங்க பாலா.

@சிறில்

---பதிவுலக ஜாம்பவான்களின்---

பார்த்தீங்களா.. நான் கொஞ்சம் சதை புஷ்டியாக இருப்பது, உங்க கண்ணை உறுத்துகிறது : P

நன்றி அலெக்ஸ்!

@ஜி

---வலைப்பதிவர் மாநாடுன்னு---

அட... மாநாடு என்றால் லாரிகளில் ஆள் பிடித்து, காசு கொடுத்து கூடும் கூட்டம்.
இது மனங்களின் சந்திப்பு நிகழ, கருத்துப் பெற கூடும் கூட்டம் ; ))

//அடப்பாவீ ; )
அப்ப பேசினதுதான் இப்பவும் பேசிக்குறோம் என்னும் உள்குத்தா : P//
பொதுவா என்ன என்ன பேசனும்னு தயாராகிட்டா அப்பறம் நம்ம தம்பி மாதிரி சும்மாச்சுக்கும் நானும் கைய கட்டிட்டு நின்னன்னு எழுத தேவையில்லை ;)

//குளிர்காலக் கூட்டத் தொடர்//
நல்லா சொன்னீங்க.. பின்னி பெடல் எடுக்குது...

//பதிவுலக ஜாம்பவான்களின் சந்திப்பாய் தெரிகிறது.//
இந்த மாதிரி யாரும் சொல்லிடக்கூடாதுனுதான் நாங்க எல்லாம் போறோம் ;)

பாபா,

பேசும் பொழுது லிங்குகள் எப்படித் தருவீர்கள்? உங்கள் முதுகில் தட்டினால் அந்த பதிவாளர் பேசுவாரா? :-D

'நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க'

இந்தக் கணக்குலே பார்த்தா 'பாஸ்டனில் டீ பார்ட்டி'க்கு நிறைய பேர் வராங்க,
அதாலெ இதை மாநாடு என்றே அறிவிச்சுறலாம்:-)

வாழ்த்துக்கள்.

இட்டிலியை விட்டுத் தள்ளுங்க. வடைதான் நமக்கு முக்கியம். வடை தின்னும்போது
தயவுசெய்து 'என்னை' நினைக்க வேண்டாம்

@ வி.பி.

---பொதுவா என்ன என்ன பேசனும்னு தயாராகிட்டா ---

அனுபவத்தில் சொல்கிறேன்... ; )
அதற்காகத்தான் கையில் காபியோ, போண்டாவோ, டார்டில்லா வறுவலோ வைத்திருக்க வேண்டும்.

'இதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?' என்று கேட்கும்போது, வாயில் திணித்துவிட்டால், பிரச்சினை தீர்ந்தது.

//அட... மாநாடு என்றால் லாரிகளில் ஆள் பிடித்து, காசு கொடுத்து கூடும் கூட்டம்.
இது மனங்களின் சந்திப்பு நிகழ, கருத்துப் பெற கூடும் கூட்டம் ; )) //

தல டையலாக் மாதிரி இருக்குது!

@ கொத்ஸ்

---பேசும் பொழுது லிங்குகள் எப்படித் தருவீர்கள்---

: )))

தட்டச்சுப்பிழையாக லிங்கங்கள் எப்படி வரவைப்பீர் என்று கேட்காமல் விட்டீரே ; )


---முதுகில் தட்டினால் அந்த பதிவாளர் பேசுவாரா---

நான் வாயைத் திறந்தாலே, 'இதைக் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்றால்...' என்று ஆரம்பித்துவிட்டால் தீர்ந்தது : )

@ துளசி

உங்களுக்கும் விடுமுறைதானே... வந்து சேருங்க :)

வாழ்த்துக்கு நன்றிகள்

My wishes for a nice bloggers meet. Enjoy!

//வாஷிங்டன் டிசி-யில் இருந்து எட்டு மணி நேரம்தான்.//
We will get our chance ;-)

@ஜி

---தல டையலாக் மாதிரி இருக்குது!---

ஆசையா கேட்கறீங்க...

1. வெயிலில் மழை பெய்யலாம்
அமாவாசையில் மழை பெய்யலாம்
ஆனால், மேகம் இல்லாம் மழை பெய்யாது.
ஜி இல்லாம வலைப்பதிவு சோபிக்காது.

2. வெட்டி முறிச்சா சுட்டிப்பயல்
வெட்டி ஒட்டினா வெட்டி.காம் பயல்
வெட்டியாக அறிவுரை பேசாதவர் இந்த வெட்டிப்பயல்

அடிக்க வருவதற்கு முன் S

பாஸ்டன் டீ பார்ட்டிக்கு வாழ்த்துகள். வாக்குறுதிகள் அருமை. :-))

@ கா.ரா.

வாய்யா...
சிறப்பான குளிரும் கலர்ஃபுல் கல்லூரிகளும் உம்மை வரவேற்கும்.

---We will get our chance---

; )
கிழக்குக் கடற்கரைக்கு டிசி-தானே நடு செண்டர் : )

பாபா,,

all the best

//
2. வெட்டி முறிச்சா சுட்டிப்பயல்
வெட்டி ஒட்டினா வெட்டி.காம் பயல்
வெட்டியாக அறிவுரை பேசாதவர் இந்த வெட்டிப்பயல்//

ஆஹா...
நம்மல பத்தி இவ்வளவு நல்லா சொன்ன பாபாவுக்கு ஒரு ஜே!!!

நம்ம அறிவுரை சொன்னா எவன் கேக்கறான்.. நானே கேக்கமாட்டேன் ;)

@ நிர்மல்

__/\__

@ குமரன்

---வாக்குறுதிகள் அருமை. ---

நிறைவேற்றிடலாம் : )

@வி.பி.

---பாபாவுக்கு ஒரு ஜே!!!
நம்ம அறிவுரை சொன்னா எவன் ---

ஆங்கிலத்தில் I-க்கு அப்புறம் J
தமிழ்நாட்டில் K-க்கு அப்புறம் J
ஏதோ ஒண்ணு...
பஸ்ஸு வந்தா சரி!

[முந்தைய கால பல்லவன்கள் J, JJ, அல்லது K, KK அடைமொழி கொண்டிருக்கும்]

//வெட்டிப்பயல் said...
இந்த மாதம் வலைப்பதிவர் சந்திப்பு மாதம்னு அறிவிச்சிடலாமா? ;)//

அதை விட இந்த ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு ஆண்டு என்றே அறிவித்து விடலாம் :-))

//துளசி கோபால் said...
வடை தின்னும்போது
தயவுசெய்து 'என்னை' நினைக்க வேண்டாம்//

டீச்சர், அப்படியே ஆகட்டும்!
உங்களை நினைக்கக் கூடாது என்று நினைத்துக் கொள்கிறேன்!

//KRS, நியூ ஜெர்ஸி, நியூயார்க்கிலிருந்து வருபவர்களை அள்ளி கொண்டு வரவும் ;)//

மினி வேனில் பதிவர் பட்டாளம் வந்தால் என் பாக்கியம் :-))
அது என்ன அள்ளிக் கொண்டு?
உள்ளத்தை அள்ளிக் கொண்டா??:-))

// SK said...
கலக்குங்க!
டி.சி. வரை ஒரு வாய்ப்பிருக்கிறது.
வந்தால் சந்திப்பிற்கும் வர முயல்கிறேன்//

SK ஐயா, கண்டிப்பாக முயலுங்கள்!
NY/NJ என்றால் சொல்லுங்கள்! அடியேன் ரத சாரதியாக வந்து விடுகிறேன்!

//வாக்குறுதிகள்:
1. புகைப்படங்கள் எடுக்கப்படாது//

பாபா, என்ன நீங்க கடைசியிலே இப்படிப் பண்ணீட்டீங்க! போட்டா புடிச்சி அடுத்த மாநாட்டுக்கு போஸ்டர், அதுக்கடுத்ததுக்கு கட் அவுட் ன்னு அமர்க்களப்படுத்துவீஙகன்னு பாத்தா.....:-)))

//3. தாங்கள் வாசகராக இருந்தாலும், அவ்வண்ணமே கலந்து கொள்ளலாம். வலைப்பதிவு தொடங்குமாறு நிர்ப்பந்திக்க மாட்டோம்//

இதை வீட்டில் சொல்லி உடன் வர அழைத்தால் என்ன கிடைக்கும்? கண்டுபுடிங்க!:-))

பத்மா, வெயிலில் மழைஜி, சுந்தர், பாலாஜி, நவன், மெய்யப்பன், வேல்முருகன், பாபா மற்றும் அனைவருக்கும் நன்றி! அனைவரையும் சந்தித்து அளவளாவல் (அரட்டை அடித்தல்) மிக்க மகிழ்ச்சியே!

//Boston Bala said...
1. வெயிலில் மழை பெய்யலாம்
அமாவாசையில் மழை பெய்யலாம்
ஆனால், மேகம் இல்லாம் மழை பெய்யாது.
ஜி இல்லாம வலைப்பதிவு சோபிக்காது.
//

ஏனுங்க! 'தல மாதிரி'ன்னு ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன். அது பொறுக்கலயா?
உக்காந்து யோசிப்பீங்களோ?

கலக்கல்...சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்..

பாஸ்டன் டீ பார்ட்டி இனியதொரு அனுபவத்தைத் தர வாழ்த்துகள்.

பாபா,
மாநாடு நடக்கும் அந்த ஒரு மணிநேரமோ, பத்து மணிநேரமோ, வரும் பதிவுகளுக்கெல்லாம் ஸ்னாப் ஜட்ஜ் செய்ய ப்ராக்ஸி ஏற்பாடு செய்தாச்சா? :)))

கொத்ஸ், லிங்க்கா, பாபா லாப்டாப்பை எடுத்து வச்சி ஒவ்வொரு பதிவா திறந்து படிச்சிக் காட்டிடப் போறார் :-D

இன்னா நைனா நம்மள கண்டுக்காம உட்டுப் போட்டியே? அப்போ கதைச்சதெல்லாம் கானலோ? உபி.சகோவையும் இப்பிடி உட்டுப்போட்டீயளெண்டால் இது தகுமோ? :-)

கலக்குங்கோ... அப்பிடியே சைடுல கவனமாப் பாத்துக்குங்க... குசும்பன் திடீர்னு வந்துட்டா? ;-))))

B.B,
ஒன்றுகூடல் இனிதே நடந்தேற வாழ்த்துக்கள். வரும் வார இறுதியில் நான் நியூயோர்க்கில் தான் இருப்பேன். நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்[நேரம் கிடைத்தால்] . எதற்கும் நான் உங்களுக்குத் தனிமடல் அனுப்புகிறேன்.

நன்றி.

@கே ஆர் எஸ்

---புகைப்படங்கள் எடுக்கப்படாது---

புகைப்படம்தானே கிடையாது? ஒளிப்பதிவு செய்து விடலாம் ; )

@வெற்றி

---வரும் வார இறுதியில் நான் நியூயோர்க்கில் தான் இருப்பேன்.---

அவசியம் வாங்க! நியூ ஜெர்சியில் இருந்து வரும் ரவியுடன் வரலாம். பேச்சுத்துணையும் ஆச்சு!
அல்லது பதினைந்தே டாலரில் பேருந்தையும் பிடிக்கலாம்.
தொலைபேசி போன்ற விவரங்களுக்கு தனிமடலிடுங்களேன்

@குசும்பா

---நம்மள கண்டுக்காம உட்டுப் போட்டியே---

நீங்க எங்கன இருக்கீக என்பது சிதம்பர ரகசியமாச்சே?!
குசும்பர் வருகிறார் என்றார், உங்களைக் காண ரசிக கே(ா)டிகள் அணி திரள்வார்களே...
அனௌன்ஸ் செஞ்சிடலாமா???

@பொன்ஸ்

---லாப்டாப்பை எடுத்து வச்சி ஒவ்வொரு பதிவா திறந்து படிச்சிக் காட்டிடப்---

ஒலிப்பதிவு (ஆடியோ blog) கேட்டுவிட்டே பலரும் மிரண்டு போயிருக்கும் நேரத்தில், மாநாட்டுத் தலைவர்களை இப்படி அச்சுறுத்தலாமா : P

@சுதர்சன் ஜி

---பாஸ்டன் டீ பார்ட்டி இனியதொரு---

தேநீர் கேரளக்கரைக்கே சொந்தம் என்று முல்லைப் பெரியாறு உருவாகாமல் இருக்க வாழ்த்து சொன்னதற்கு நன்றி : )

@செந்தழலாரே

---சந்திப்பு சிறப்பாக நடைபெற---

நன்றி : )
தங்கள் தடாலடி அறிவிப்பு மனக்கிலேசம் கொடுக்கிறது : (

@ஜி

---உக்காந்து யோசிப்பீங்களோ?---

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவித கொட்டுது...
அதை எழுத நினைக்கையில் வார்த்த முட்டுது ; )

இந்த மாபெரும் வலைப்பதிவர் மாநாட்டுக்கு கடைசி தொண்டனான அரைபிளேடும் ஒரு சிறு துளியாக கலந்து கொள்ள ரெடி. :)))))

பாபா
நீங்கள் அனுப்பிய டிக்கட் இன்னும் கைக்கு வந்து சேராததால் அங்கு வந்து மீட்டில் கலந்து கொள்ள இயலவில்லை.

நல்லவேளை வரவேற்பு வளைவு ஒண்ணும் வைக்கவில்லையே

மாநாடு சிறக்க இங்கிருந்தே வாழ்த்தினை தெரிவிக்கிறேன்:-)

அரை சதம் போட வைத்த மதுமிதாவிற்கு சிறப்பு வணக்கங்கள் & நன்றி!

பிளேடு சார்... நீங்க ஜெர்ஸி காளையாக இருந்தால் ஆயர்குலத்தை மேய்த்து மயக்கும் கண்ணபிரானோடு இணைந்து வரலாம்.

(முகவரிக்கு தனிமடலிடுங்களேன்...)

வலைப்பதிவர் சனியன் என்பவரும் வரப்போகிறார்.

//பாபா
நீங்கள் அனுப்பிய டிக்கட் இன்னும் கைக்கு வந்து சேராததால் அங்கு வந்து மீட்டில் கலந்து கொள்ள இயலவில்லை.//
இந்த வசதி எல்லாம் வேற இருக்கா சொல்லவே இல்ல :)).. கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சந்திப்பு இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் !

@சந்தோஷ்

---இந்த வசதி எல்லாம் வேற இருக்கா சொல்லவே இல்ல---

தமிழ்ப்பதிவுகளின் முதல் டிராவல் ஏஜண்ட் ; ))

@மணியன்

ஒரு எட்டு வந்துட்டுப் போறது... : )

பாபா
சந்திப்பு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்! :)

பாபா,
இறுதியாக யார் யார் வருகிறார்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டு விடுங்களேன்...

மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்...

நியூ ஜெர்ஸியிலிருந்து நமது கண்ணபிரான் ரவி சங்கர் வருகிறார். அங்கிருப்பவர்கள் அவருடன் தாராளமாக வரலாம். பிரயாணம் அருமையாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன் :-)

வெட்டிப்பயல்: பாஸ்டன் சந்திப்பு - பாபாவின் பார்வையில்: "சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்"

அரை பிளேடு: பாஸ்டன் வலைபதிவர் சந்திப்பில் அரைபிளேடு

உங்கள் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு