August 2006 Blog Contest - Uravugal
பொன்னான வாக்கை அளிக்க: ஆகஸ்ட் வலைப்பதிவுப் போட்டி
சென்ற மாதப் போட்டி முடிவுகளில் இருந்து, இந்த மாதப் பங்களிப்பாளர்களில் சிலருக்கு கிடைத்துள்ள வாக்குகளை பார்க்கலாம்.
ThenKoodu.Com :: ஜூலை வலைப்பதிவுப் போட்டி
- இளா :: 30
- பினாத்தல் சுரேஷ் :: 22
- கானா - அபுல் கலாம் ஆசாத் :: 22
- பினாத்தல் சுரேஷ் :: 21
- ஹாஜியார் - அபுல் கலாம் ஆசாத் :: 20
- லக்கிலுக் :: 17
- குந்தவை வந்தியத்தேவன் :: 17
- கோவி கண்ணன் :: 16
- SK :: 15
- ஜெஸிலா :: 14
- கப்பி பய :: 13
- ஜி கௌதம் :: 12
- 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் :: 11
- சனியன் :: 7
- எம் எஸ் வி முத்து :: 7
- செந்தில் கே :: 7
- மதுரா :: 7
- நிர்மல் :: 6
- வைக் :: 6
ThenKoodu.Com :: ஜூன் வலைப்பதிவுப் போட்டி
- கொங்கு ராசா :: 25
- குந்தவை வந்தியத்தேவன் :: 13
- ஆசாத் :: 13
- உமா கதிர் :: 13
- எஸ்கே :: 12
- கோவி கண்ணன் :: 10
- ஹரன்பிரசன்னா :: 9
- லக்கிலுக் :: 8
சுரேஷ் (பினாத்தல்), சிறில் அலெக்ஸ், குந்தவை வந்தியத்தேவன், கொங்கு ராசா, இளா ஆகியோர் முதல் நான்கு இடங்களை ஏற்கனவே பிடித்தவர்கள். இவர்கள் இம்முறையும் பங்கு பெற்றிருக்கிறார்கள். இந்த ஐவருக்கு வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.
என்னுடைய பார்வையில் 2.5க்கு மேல் எடுத்த ஆக்கங்கள்:
- நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் - ஹரன்பிரசன்னா - (சிறுகதை) :: 3.5 / 4
- ஒரு நண்பனின் நிஜம் இது! - ஜி.கௌதம் - (சொந்தக்கதை) :: 3.5 / 4
- குரல்வலை : வலைகுரல் : தொலைவு - MSV Muthu - (சிறுகதை) :: 3.5 / 4
- லாவண்யா VS வைகுந்தன் - மாதுமை - (சிறுகதை) :: 3.25 / 4
- ராசபார்வை... : என்ன உறவு ? - 'கொங்கு' ராசா - (சொந்தக்கதை) :: 3.25 / 4
- உறவுகள் - ராசுக்குட்டி - (புதுக்கவிதை) :: 3.25 / 4
- பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ் - (சிறுகதை) :: 3.25 / 4
- சாயல் ஜெயந்தி சங்கர் - (சிறுகதை) :: 3 / 4
- அஞ்சல் நெஞ்சுல (கானா) - அபுல் கலாம் ஆசாத் - (ஒலிக்கவிதை) :: 3 / 4
- உறவும் பிரிவும் - ராசுக்குட்டி - (சிறுகதை) :: 3 / 4
- எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்கு - மதுரா - (சிறுகதை) :: 3 / 4
- எண்ணம்: திரைச்சீலை - அபுல் கலாம் ஆசாத் - (சிறுகதை) :: 2.75 / 4
- செப்புப்பட்டயம் :: தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன்தாஸ் (குந்தவை வந்தியத்தேவன்) - (சிறுகதை) :: 2.75 / 4
- தேடித்..தேடி..: மருந்து - Senthil Kumar - (சிறுகதை) :: 2.75 / 4
- ஜெண்டில்மேன் - சோம்பேறி பையன் - (சிறுகதை) :: 2.75 / 4
- தேன்: கெடா - சிறுகதை - சிறில் அலெக்ஸ் - (நாடகம்) :: 2.75 / 4
- பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் சிமுலேஷன் - (சிறுகதை) :: 2.5 / 4
- பொன்னியின் செல்லம்மா ...! - கோவி.கண்ணன் - (சிறுகதை) :: 2.5 / 4
- தம்பி: களத்து வீடு - : உமா கதிர் - (சிறுகதை) :: 2.5 / 4
- தேன்: உறவுகள் - சிறில் அலெக்ஸ் - (சிறுகதை) :: 2.5 / 4
இது தவிர நான் வாக்களிக்க விரும்புபவை:
- பொன்னியின் செல்வன் 'நியோ'வின் அம்மா குறித்த பதிவு - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
- 'உதவும் கரங்கள்' வித்யாசாகர் - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் - (பதிவு)
- எதிர்மறை நியாயங்கள் - நிர்மல் - (சிறுகதை) :: 1.5 / 4
- போட்டி தொடக்கத்திலேயே வெகு வேகமாய் ஆர்வமாய் ஆக்கங்களை அனுப்பியவர்
- இவர் எழுதியவற்றுள் பிடித்த கதை
- போட்டி தொடக்கத்திலேயே வெகு வேகமாய் ஆர்வமாய் ஆக்கங்களை அனுப்பியவர்
- தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள் - சிமுலேஷன் - (பட்டியல்) :: 2 / 4
- சினிமா சம்பந்தமாக ஒரு ஓட்டு கூட போடா விட்டால், தொலைக்காட்சி வெடித்து சிதறிவிடும் என்னும் சாபம் கொடுத்துக் கொள்வேன்
- சிதறல்கள்: உறவுகள் சுகம் - அனிதா பவன்குமார் - (புதுக்கவிதை) :: 2 / 4
- ஏதாவது ஒரு கவிதைக்காவது வாக்களிக்கலாம் என்று விரும்புவதால், வந்தவற்றுள் பிடித்த ஒன்று
- கொல்ட்டி - வெட்டிப்பயல் - (சிறுகதை) :: 2 / 4
- படிக்கும் போது கிளர்ச்சியாக மலரும் நினைவுகளை மீட்டியதற்காக
- ஏன் எனக்கு மட்டும் - ஜெயக்குமாரன் மயூரேசன் - (சிறுகதை) :: 2 / 4
- கிட்டத்தட்ட மேற்சொன்ன அதே காரணத்திற்காக
- அரிதாக கிடைக்கும் ஈழத்தமிழ் நடை
- கிட்டத்தட்ட மேற்சொன்ன அதே காரணத்திற்காக
- பொருனைக்கரையிலே: அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும் - மானு (yezhisai) - (சொந்தக்கதை) :: 1.5 / 4
- எதார்த்தமாக அண்டை வீட்டாருடன் அளவளாவுவது போன்ற பாசாங்கற்ற விவரிப்புகளில் பல பதிவுகள் இட்டு போட்டியை குஷிப்படுத்தியவர்
- எண்ணம்: உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) - (மரபுக்கவிதை) :: 2 / 4
- உறவில்லாத உறவு - ஜெஸிலா - (புதுக்கவிதை) :: 1.5 / 4
- உறவுகளும் ஒற்றுமைகளும் :: சிவமுருகன் - (புதுக்கவிதை) :: 2 / 4
கடைசியாக சில தேர்வுகள்:
- சிறந்த சிறுகதை -
- சொக்கலிங்கத்தின் மரணம் :: ஹரன்பிரசன்னா &
- சாயல் :: ஜெயந்தி சங்கர்
- சொக்கலிங்கத்தின் மரணம் :: ஹரன்பிரசன்னா &
- சிறந்த சொந்தக்கதை - என்ன உறவு :: 'கொங்கு' ராசா
- சிறந்த வலைப்பதிவு நனவோடை - ஒரு நண்பனின் நிஜம் இது :: ஜி.கௌதம்
- ஈழத்தமிழில் சிறந்த புனைவு - லாவண்யா VS வைகுந்தன் :: மாதுமை
- சிறந்த புதுக்கவிதை - உறவுகள் :: ராசுக்குட்டி
- சிறந்த வித்தியாசமான ஆக்கம் - அஞ்சல் நெஞ்சுல (கானா) :: அபுல் கலாம் ஆசாத்
- சிறந்த நகைச்சுவை கதை - ஜெண்டில்மேன் :: சோம்பேறி பையன்
- சிறந்த நாடகம் - கெடா :: சிறில் அலெக்ஸ்
பொன்னான வாக்கை அளிக்க: ஆகஸ்ட் வலைப்பதிவுப் போட்டி | போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த பதிவுகள்
Thenkoodu | Tamiloviam | Contest Reviews
பாபா
//எதிர்மறை நியாயங்கள் - நிர்மல் - (சிறுகதை) :: 1.5 / 4
போட்டி தொடக்கத்திலேயே வெகு வேகமாய் ஆர்வமாய் ஆக்கங்களை அனுப்பியவர்
இவர் எழுதியவற்றுள் பிடித்த கதை//
நீங்க ஆறுதல் ஒட்டெல்லாம் வேணாம் விமர்சகரே.
பிடிச்சா பிடிச்சிறுக்கு சொல்லுங்க. பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லிடுங்க. அதான் வேணும்.
பெயரில்லா சொன்னது… 8/22/2006 09:18:00 முற்பகல்
ஐயோ பாபா இதப் படிக்காமா நேத்தே போய் ஓட்டு போட்டுவிட்டேன்..
சில நல்ல பதிவுகளுக்கு ஒட்டுப் போட இயலவில்லையே என வருத்தம்...
:(
அருமையான தொகுப்பு. பலரும் இதைச் செய்வது நல்லது.
சொன்னது… 8/22/2006 09:43:00 முற்பகல்
நன்றி பாலா நம்ம பதிவுகளை கண்டுகிட்டதுக்கு!
உங்களுடைய ரசனைகளில் நிறைய நானும் ஒத்துப் போகிறேன்!
சொன்னது… 8/22/2006 09:55:00 முற்பகல்
//கொல்ட்டி - வெட்டிப்பயல் - (சிறுகதை) :: 2 / 4
படிக்கும் போது கிளர்ச்சியாக மலரும் நினைவுகளை மீட்டியதற்காக//
மிக்க நன்றி...
ஆமாம் அந்த மலரும் நினைவுகளை எங்களோட பகிர்ந்துக்க கூடாதா???
கப்பி,
எங்க இருக்க... இங்க பாரு ஒருத்தர் வசமா மாட்டிருக்காரு... வந்து பிடிச்சிக்கோ ;)
சொன்னது… 8/22/2006 10:06:00 முற்பகல்
நிர்மல்,
-----நீங்க ஆறுதல் ஒட்டெல்லாம் வேணாம் விமர்சகரே. -----
நேற்று மீண்டும் படித்த கதை ஒன்று....
There once was bunch of tiny frogs who arranged a running competition. The goal was to reach the top of a very high tower.
A big crowd had gathered around the tower to see the race and cheer on the contestants...
The race began...
Honestly: No one in crowd really believed that the tiny frogs would reach the top of the tower.
You heard statements such as:
"Oh, WAY too difficult!!
They will NEVER make it to the top."
or:
"Not a chance that they will succeed. The tower is too high!"
The tiny frogs began collapsing. One by one... Except for those who in a fresh tempo were climbing higher and higher...
The crowd continued to yell
"It is too difficult!!! No one will make it!"
More tiny frogs got tired and gave up... But ONE continued higher and higher and higher...
This one wouldn’t give up!
At the end everyone else had given up climbing the tower. Except for the one tiny frog who after a big effort was the only one who reached the top!
THEN all of the other tiny frogs naturally wanted to know how this one frog managed to do it?
A contestant asked the tiny frog how the one who succeeded had found the strength to reach the goal?
It turned out...
That the winner was DEAF!!!!
இந்த மாதிரி கதையெல்லாம் பின்னூட்ட வைக்குமளவு எழுதியதற்கு 'காசா... பணமா' :-))
வாக்குதானே... போட்டாச்சு.
சொன்னது… 8/22/2006 10:15:00 முற்பகல்
சிறில்,
----பலரும் இதைச் செய்வது நல்லது.----
வழிமொடிகிறேன்.
--------------
வருகைக்கு நன்றி ராசு.
சொன்னது… 8/22/2006 10:17:00 முற்பகல்
//*பொன்னியின் செல்லம்மா ...! - கோவி.கண்ணன்
(சிறுகதை) மதிப்பெண் - 2.5 / 4
என்னுடைய வாக்கு நிச்சயம் உண்டு. சீரான, பாதை விலகாத நடை. ஒன்றக்கூடிய சம்பவங்கள். மிதமான உரையாடல். முடிவில் பளிச். அதீத உணர்ச்சி சித்தரிப்புகளைத் தவிர்த்தல். நன்றாக வந்திருக்கிறது.//
ஐயா ... பா லா ஓட்டு எனக்கு நிச்சயம் உண்டு !
நன்றி பா லா !
:))))
சொன்னது… 8/22/2006 10:24:00 முற்பகல்
//சில நல்ல பதிவுகளுக்கு ஒட்டுப் போட இயலவில்லையே என வருத்தம்...
//
ஆளுக்கு ஒரு ஓட்டுதானே???
//பலரும் இதைச் செய்வது நல்லது.//
இந்த அளவுக்கு படிச்சி தெளிவா விமர்சணம் கொடுப்பது சாதாரண விஷயமா எனக்கு தெரியல...
இதுக்கு ஒரு சங்கம் அமைங்கப்பா ...
சொன்னது… 8/22/2006 10:25:00 முற்பகல்
இனிய பாலா,
நீங்கள் தந்திருக்கும் ஐந்து பட்டியலிலும் எனது ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஊக்கமளித்தமைக்கு நன்றிகள்.
வரிவரியா லிஸ்ட்டுவுடு பாலா
வலப்பதிவு போட்டி கும்ப மேளா
கெலிக்கலன்னா கவலயில்ல தோழா
கப்பு இன்னா பாலாவுக்கும் மேலா? :)
கப்பு - வெற்றிக்கோப்பை
அன்புடன்
ஆசாத்
சொன்னது… 8/22/2006 10:44:00 முற்பகல்
பாபா,
// இந்த மாதிரி கதையெல்லாம் பின்னூட்ட வைக்குமளவு எழுதியதற்கு 'காசா... பணமா' :-))
வாக்குதானே... போட்டாச்சு.
//
இங்க காசு பணமுங்கறது க்ரைட்டிரியா இல்ல பாபா. இது அங்கிகாரம். உழைக்கிறவனுக்கு ஊதியம்தான் முக்கியம். வேலை நல்லாருக்குனு காசு கொடுத்தாலா, வேலை சரியில்லை, காசில்லைனாவோ கடையை கட்டிட்டு போய்ட்டே இருக்கலாம். இந்தாப்பா வேலை செஞ்சதுக்கு பிச்சையா இதை வைச்சுக்கோனா வேற மாதிரி ஆகுது.
தவளை கதையை வேற உதாரணம் போட்டா இன்னும் மோசமாயிருக்கு.
உங்களுக்கு தோனினதை நீங்க சொல்லிட்டிங்க. எனக்கு பட்டதை நான் சொல்லிட்டேன்
பெயரில்லா சொன்னது… 8/22/2006 10:48:00 முற்பகல்
வெட்டி...
----ஆளுக்கு ஒரு ஓட்டுதானே???----
எத்தனை இடுகைகள் வெற்றி பெற தகுதியுடையது என்று நாம் நினைக்கிறோமோ, அத்தனைக்கும் வாக்களிக்க வகை செய்திருக்கிறார்கள்.
In other words, they are 'chcek boxes' and not 'radio buttons'
------------------
ஆசாத் & கோவி __/\__
சொன்னது… 8/22/2006 11:05:00 முற்பகல்
கலக்கல் பாலா..
ஒவ்வொரு கதையையும் படிச்சுட்டு அதுக்கு நீங்க எவ்ளோ மார்க் போட்டு இருக்கீங்கன்னு பார்ப்பதும், அந்த ஆக்கத்திற்கான என் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் சுவாரசியமாக இருந்தது...
//கப்பி,
எங்க இருக்க... இங்க பாரு ஒருத்தர் வசமா மாட்டிருக்காரு... வந்து பிடிச்சிக்கோ ;)
//
அது ஒன்னுமில்லை பாலா,
இது கதையல்ல,கொல்ட்டி இரண்டும் மகேந்திரனையும், வெட்டியையும் உசுப்பேத்தி விட்டதால் வந்தது..
அதே மாதிரி நீங்களும் உங்க மலரும் நினைவுகளை சொல்வீங்க தானே?? :)))
சொன்னது… 8/22/2006 11:09:00 முற்பகல்
வெட்டி & கப்பி...
----அந்த மலரும் நினைவுகளை எங்களோட பகிர்ந்துக்க கூடாதா???----
அட... சொல்லலாமே :-))
நினைவலைகளை போரடிக்காமல் விரும்பிப் படிக்க வைக்க தலை பத்து ஆலோசனைகள் அவ்வப்போது மீண்டும் படித்துக் கொள்வதால் எழுதுவதற்கு கைபோவதில்லை.
கொஞ்ச நாள் முன்னாடி நினைவுகளையும் கற்பனையையும் கலந்து எழுதியது: ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)
சொன்னது… 8/22/2006 11:22:00 முற்பகல்
ஆஹா... கேட்டதும் கொடுத்துட்டீங்க... _/\_
அருமையா இருந்துச்சு உங்க நினைவுகள்/ஆலோசனைகளும்.
சொன்னது… 8/22/2006 11:37:00 முற்பகல்
பாபா
ஓட்டெடுப்புக்கு முன்பான இந்த வஞ்சகச் செயலை வன்மையா கண்டிக்கிறோம்:-)))))
எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
எத்தனைகோடிகள் கை மாறினதென்று:-)
அப்பா!
இந்த ஓட்டுக்கே இந்த பாடென்றால் பாவம் அரசியல்வாதிகள் பாவம் தான்.
பத்திரிகைகாரர்களும் பாவம் தான்.
நம்ம மக்களைப்பத்தி சொல்லவே தேவையில்லை.
சொன்னது… 8/22/2006 11:43:00 முற்பகல்
மதுமிதா...
----எத்தனைகோடிகள் கை மாறினதென்று-----
கோடிகளா... நாங்க பில்லியன்களுக்கு மாறிட்டம் ;-)
----பத்திரிகைகாரர்களும் பாவம் தான்.----
அவர்கள் பாடு எப்போதும் ஜாலிதானே!?
----ஓட்டெடுப்புக்கு முன்பான இந்த வஞ்சகச் செயலை----
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு :-D
வலைஞர் வாக்கே வல்லவனுக்கு விருது :-)
சொன்னது… 8/22/2006 12:19:00 பிற்பகல்
கேட்டதும் சொல்லிட்டீங்க...நன்றி பாலா ;)
இரண்டுமே சூப்பர்..
சொன்னது… 8/22/2006 12:51:00 பிற்பகல்
பில்லியன்களா?????????
ஆ!!!!!
///நினைவலைகளை போரடிக்காமல் விரும்பிப் படிக்க வைக்க தலை பத்து ஆலோசனைகள்///
5/4
///ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை) ///
8/4
வல்லவன் பாபா வாழ்க!
ஜூலை, ஆகஸ்டு இரு மாதங்களிலும் அனைத்து படைப்புகளும் படிக்க விரும்பினேன். போன மாதம் இயலவில்லை. இளவஞ்சி அருமையாய் கொடுத்திருந்தார்.
இந்த மாதம் உங்கள் பக்கத்தை சிறில் கொடுத்ததை அடுத்து, இன்று கவிதைகளாக வாசித்து பதிலிட்டிருக்கிறேன் . பிறகு வெட்டிப்பயல் கொல்ட்டி கதை.
மீதி கதைகளுக்கும் பதிலிட விருப்பம்.
பார்க்கலாம்.
பத்திரிகைகாரங்க எத்தனை கைமாறியதென்று பதில் சொல்லணுமே
சொன்னது… 8/22/2006 01:12:00 பிற்பகல்
மதுமிதா,
இது என்ன தில்லு முல்லுல ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஐ.அ.க.சந்திரனுக்கு மார்க் போட்ட மாதிரி
//
5/4
8/4
// (100 க்கு மேல) போட்டிருக்கீங்க???
அப்படியே கொல்ட்டி நல்லா இருக்குனு இன்னும் ஒரு 3 பதிவுல சொல்லுங்க...
சொன்னது… 8/22/2006 01:29:00 பிற்பகல்
----ஜூலை, ஆகஸ்டு இரு மாதங்களிலும் அனைத்து படைப்புகளும் படிக்க விரும்பினேன். போன மாதம் இயலவில்லை----
என்னால் இரண்டு மாதத்திலுமே முடியவில்லை. இந்த மாதிரி உடனடியாக 'விரும்பினதையும் விரும்பாததையும்' சொன்னதை விட, மொத்தமாக எல்லாவற்றையும் படித்த பிறகு, கடைசியில் தொகுத்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
* அடிக்கடி பதிவு இட்டு பொறுமையை சோதித்திருக்க வேண்டாம்.
* அளவுகோல் இன்னும் சரியாக (ஒரே மனநிலையில்) செயல்பட்டிருக்கும்
* சில விமர்சனங்களை எழுதியவுடன் (Guilty) குற்ற மனப்பான்மை வந்திருக்காது
----இன்று கவிதைகளாக வாசித்து பதிலிட்டிருக்கிறேன் . ----
தங்களின் பதில்களை தொகுத்து, தங்களின் வலைப்பதிவில் 'கவிதைகளுக்கான மதுமிதாவின் பார்வை' போன்ற தலைப்பில் வெளியிட இயலுமா? ஒரே இடத்தில் கவிதை சார்ந்த அனைத்து மறுமொழியும் கிடைத்தால் என்னைப் போன்றவர்களுக்கு சௌகரியம் :-D)
முன்கூட்டிய நன்றி!
சொன்னது… 8/22/2006 01:37:00 பிற்பகல்
இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு ஓட்டுப்போட.
ஐய்யோ எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலையே.
நான் யாருக்குன்னு ஓட்டுப் போடுவேன்?
இன்னும் லட்டுக்குள்ளே மூக்குத்தி வேற வந்து சேரலை:-))))))
( அப்படி வந்துட்டா இதுக்காக மூக்குவேற குத்திக்கணுமா இந்த வயசில்?)
சொன்னது… 8/22/2006 02:07:00 பிற்பகல்
----இதுக்காக மூக்குவேற குத்திக்கணுமா இந்த வயசில்----
எல்லாரும் தோடு, மூக்குத்தி எல்லாம் 'அட்டாச்' செய்து 'பின்' போட்டுக் கொள்வதுதான் ஃபேஷனாமே...?
சொன்னது… 8/22/2006 03:58:00 பிற்பகல்
என்னவோ போங்க, நீங்க 'ஜெண்டில்மேன்' கதைக்கு 2.75 மார்க்கு கொடுத்து, சிறந்த நகைச்சுவைக் கதைன்னு வேற பட்டம் கொடுத்துருக்கீங்க... பின்னூட்டம் என்னவோ சிங்கிள் டிஜிட்ட தாண்டல :-))
***
எத்தனை ஓட்டு உழப்போவுதுன்னு தெரியல.. தல சுத்துது :-))
***
நானும் இன்னும் ஓட்டு போடல.. மத்த கதைகளையும் கொஞ்சம் படிச்சுட்டு ஓட்டு போடலான்னு இருக்கேன் :-))
***
நீங்க பாஸ்டன்ல இருக்கிறதால, அவ்ளோ தூரம் ஆட்டோ வராதுன்னு தைரியமா விமர்சிக்கிறீங்க.. இங்க பூனாவுல இருந்துக்கினு நானும் உங்கள மாதிரி விமர்சனம் போட்டேன்னா, ஆட்டோ இல்ல, லாரியே வரும் :-))
இப்பவே போலி சுத்தி சுத்தி அடிக்கிறாரு :-)
எதுனா தைரியம் சொன்னா, சொம்மா நானும் அடுத்த மாசம் ட்ரை பண்றேன் அண்ணாத்தே :-))
***
இவ்ளோ பொறுமையா எல்லாத்தயும் படிச்சி, கருத்து சொல்லி, பட்டமும் கொடுத்துருக்கீங்க.. அதனால பொன் வைக்கற இடத்துல பூ வைக்காட்டியும், புரொகிராம் வைக்கிறன்
for(i=1;i<=20;i++)
printf("நன்றி");
சொன்னது… 8/22/2006 11:31:00 பிற்பகல்
Thank you very much Bala for encouraging
சொன்னது… 8/23/2006 05:42:00 முற்பகல்
பரிசே கிடைக்காட்டியும் பரவாயில்ல..
நன்றி பாலா..
சொன்னது… 8/24/2006 03:36:00 முற்பகல்
ஒரே மலைப்பா இருக்கு!
உங்களால மட்டும் எப்படி இதெல்லாம் செய்ய நேரம் கிடைக்குது?
சொன்னது… 8/24/2006 05:03:00 முற்பகல்
வணக்கம் பாலா,
பெரும்பாலும் நான் உண்டு என் ஜி போஸ்ட் உண்டு என இருந்துவிட்டுப் போகிறவன் நான். இப்போதுதான் உங்கள் பதிவைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
//சிறந்த வலைப்பதிவு நனவோடை - ஒரு நண்பனின் நிஜம் இது :: ஜி.கௌதம்//
என்னை மட்டுமல்ல, எல்லோரையும்
எழுத உற்சாகப்படுத்தும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி!
சொன்னது… 9/18/2006 09:49:00 பிற்பகல்
கருத்துரையிடுக