திங்கள், ஆகஸ்ட் 14, 2006

What are the Top Tamil Blogs

படிக்கவேண்டிய, கவனிக்க வேண்டிய, தவறவிடக் கூடாத, பயனுள்ள, உருப்படியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, வெகுஜன ஊடகங்களுக்கு சரியான மாற்றாக, தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும், அதிகம் பேர் வருகை தரும், வாழ்க்கையைப் பதியும், மாற்று நீரோட்டங்களில் தெளியும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயங்கும், யதார்த்தமான, முகப்பூச்சுக்கள்ளற்ற வலைக்குறிப்புகள் எது?

மூச்சு வாங்குது...

ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒரு வலைப்பதிவு தேர்வு செய்யலாம். இருந்தாலும் பொத்தாம்பொதுவாக என்னுடைய எண்ணங்களை முன்வைக்கிறேன். மேலே அலசுவதற்கு முன்னால், டெக்னோரட்டி (படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்) உதவியுடன் தலை தமிழ்ப்பதிவுகளின் பட்டியல்: (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சுட்டி தந்தவர்களின் எண்ணிக்கை)


 1. thamizmaNam : தமிழ்மணம் (381)
 2. பத்ரியின் வலைப்பதிவுகள் (72)
 3. Dubukku- The Think Tank (63)
 4. Idly Vadai (58)
 5. துளசிதளம் (44)
 6. Dondus dos and donts (38)
 7. Prakash's Chronicle (38)
 8. E - T a m i l : ஈ - தமிழ் (38)
 9. முத்து (தமிழினி) பக்கங்கள் (37)
 10. குழலி பக்கங்கள் (35)

 11. தேசிகன் பக்கம் (35)
 12. மதி கந்தசாமி தமிழ் வலைப்பதிவு (32)
 13. தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :) (31)
 14. உருப்படாதது (29)
 15. முகமூடி (29)
 16. சசியின் டைரி (28)
 17. என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் (26)
 18. உலகின் புதிய கடவுள் (26)
 19. பொன்ஸ் பக்கங்கள் (25)
 20. மனம் ஒரு குரங்கு (20)

 21. வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு (20)
 22. பாலக்கரை பாலனின் பால்ய பார்வை (19)
 23. Rajni Ramki (17)
 24. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! (17)
 25. மகரந்தம் (16)
 26. மாயவரத்தானின் வலைப்பூ....Third Vision (16)
 27. பிச்சைப்பாத்திரம் (15)
 28. விடுபட்டவை (15)
 29. எண்ணம் :: ஆசாத் (15)
 30. உள்ளும் புறமும் (13)

 31. தமிழகத் தேர்தல் 2006 (13)
 32. இணைய குசும்பன் (12)
 33. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் (11)

குறிப்பு: விடுபட்டவர்களை வேண்டுமென்றே தவறவிடவில்லை. தங்களின் '??' blogs link here எண்ணை சொன்னால் மகிழ்வுடன் தெரிந்து கொள்வேன்.

ஆங்கில வலைப்பதிவுகளில் கிருபாவின் மண்டையை உருட்ட, தமிழில் அதே மாதிரி எண்ணிப் பார்க்கலாம் என்று ஆராய்ந்ததன் விளைவு.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நம்ப இயலாது என்பது போலவே, இந்த டெக்னோரட்டி அளவிடுதலிலும் குறைகள் உண்டு. பிகே சிவகுமார் போன்ற முக்கியமான பதிவுகள் 11 பேரிடம் இருந்து சுட்டி வாங்கி பின் தங்கிய பட்டியலில் இடம் பிடிக்கும். வம்பு தும்புக்கு போகாமல் நாட்டு நடப்பை அலசும் பதிவுகள் முன்னேறிய நிலையில் இருக்கும்.

இருந்தாலும், ஓரளவு வாசகர்களின் மனநிலையை படம் பிடிப்பதாக அமைந்திருக்கிறது. சில காலமாய் எழுதினாலும், என்னுடைய மனங்கவர்ந்த எண்ணங்களை எழுதுகிறேன் போன்ற சுவாரசியமான பகிர்வுகள் இந்த மாதிரி தரப்பட்டியல்களில் மெதுவாகத்தான் முன்னேறுகின்றன. துளசியின் பதிவுகள் #5-இல் இருப்பது - காலப்போக்கில், மா சிவகுமாரும் பரவலான கவனிப்பை அடைவார் என்று எண்ண வைக்கிறது.

ஆனால், பல வருடமாய் எழுதும் நுனிப்புல் இன்னும் இடம்பெறாதது ஆச்சரியம். பலரின் பதிவுகளில் தொடர்ச்சியாக பின்னுட்டங்களும், அனைத்து இணைய தாளிகைகளிலும் தன் எழுத்தை இடம் பிடிக்க செய்தும், டெக்னொரட்டியின் கருணைப் பார்வை கிட்டவில்லை. இதற்கு ஒரே காரணம், தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்து, டெக்னோராட்டியின் நிரலித் துண்டை தன்னுடைய வார்ப்புருவில் இணைக்காமல் இருப்பதுதான் என்று சொல்ல நினைக்கிறேன்.

அல்லது, இந்த கவனமின்மை டெக்னோரட்டியின் நுட்பக் குறைபாடு.

கடந்த ஆறு மாதங்களில் என்னை அதிகம் ஈர்த்த, நான் தொடர்ச்சியாக படிக்க நினைக்கும் தமிழ்ப் பதிவுகள்:


தொடர்புள்ள சுட்டிகள், ஆங்கில வலைப்பதிவுகள் குறித்த அலசல், கொஞ்சம் சரித்திரப்பாடங்கள்:
| | |

28 கருத்துகள்:

என்னோடது எங்க கானோம்? :(

டோண்டுவுக்கு இத்தனை இணைப்புகள் கிடைக்க காரணமாக இருந்தது அவரது Alter Ego தான்.டோண்டுவின் ஒவ்வொரு பதிவுக்கும் பதில் பதிவு போட்டு இணைப்பு தந்து டெக்னோராட்டியில் அவரது ராங்க்கை ஏற்றி விட்டிருக்கிறார்:))

மற்றபடி பிடித்த பதிவுகள் பட்டியலில் என் பதிவை குறிப்பிட்டதற்கு நன்றி.மேலும் சிறப்பாக எழுதவேண்டும் என்ற தூண்டுதலையும் ,உற்சாகத்தையும் அளித்தது உங்கள் பதிவு.நன்றி

Technorati Blog Info: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 11

Technorati Blog Info: கவிதைகள் !: 5

Technorati Blog Info: கதம்பம்: 7

என்னுடய பதிவுக்கு சுட்டி கொடுத்த 20ல் 7 சுட்டிகள் பாஸ்டன் பாலாவினுடயது!! :D

ஷங்கர்...

Technorati Search: sankarmanicka.blogspot.com - 45 links from 20 blogs என்று பட்டியலிடுகிறது:

அந்த இருபது பதிவுகள்:
1. Snap Judge
2. http://sankermanicka.blogspot.com/
3. http://muthuvintamil.blogspot.com/
4. http://theyn.blogspot.com/2006/07/blog-post_29.html
5. http://karuppupaiyan.blogspot.com/
6. http://dharumi.weblogs.us/2006/07/15/232
7. http://blogcommentsvigilance.blogspot.com/2006/07/blog-post_115287504012985547.html
8. http://manickasankar.wordpress.com/2006/07/11/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1
9. http://gilli.in/
10. http://dondu.blogspot.com/
11. http://vettri.blogspot.com/
12. http://etamil.blogspot.com/
13. http://www.desipundit.com/2006/06/21/inidandemocracy/
14. http://tamilitary.blogspot.com/
15. http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.html
16. http://vicky.in/dhandora/?p=136
17. http://mayavarathaan.blogspot.com/
18. http://bliss192.blogspot.com/
19. http://rajasugumaran.blogspot.com/2006/05/blog-post_05.html
20. ??? (டூப்ளிகேட்)

நன்றி வஜ்ரா...

----பிடித்த பதிவுகள் பட்டியலில் என் பதிவை குறிப்பிட்டதற்கு நன்றி.----

நேரத்தை செலவழித்து தெளிவாக எழுதுவது 'உங்க ஏரியா'
இரண்டு வார்த்தை பாராட்டுவது, ஸ்மைலி போட்டு பறப்பது 'எங்க ஏரியா' :-)

பாபா..
நம்மையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்றி.

செல்வன் சொல்வதுபோல இன்னும் நல்லா எழுதணும்னு தோணுது.

நன்றி.. நன்றி .. நன்றி.

:)

//என்னோடது எங்க கானோம்? :(//

ச்சு...ச்சு..ச்சு, இது யாரு நம்ம மகேந்திரன் அண்ணாச்சிங்களா?

//காகித எழுத்தாளர் ஆனதுக்காக அல்லது பெயர் வந்ததற்க்காக மகிழ்வது மீண்டும் ஒரு பத்திரிகை ஆசிரியர் சார்ந்த தனது எழுத்துக்களுக்கு ஒரு ஜனரஞ்சக அங்கீகாரம் தேடும் முயற்சியின் விளைவாகவே எனக்குத் தெரிகிறது.//

அது என்னங்ண்ணா அது? பத்திரிக்கையிலே பேர் வந்ததுக்கே, 'மக்களே, சந்தோஷமெல்லாம் படக்கூடாது. சுயம் இழந்து போகும்'ன்னு பெரிய பெரிய பின்நவீனத்துவ டக்கால்டி எல்லாம் வுட்டீங்க. இப்ப இங்க வந்து,ஒரு சாதரண டெக்னோரட்டி பரிந்துரையில

//என்னோடது எங்க கானோம்? :(//
ன்னு அழுவாச்சி எல்லாம் போடறீங்க.

எங்க, உங்க பாணியில இந்த 'ஜனரஞ்சக அங்கீகாரம் தேடும் முயற்சி'க்கு ஒரு சப்பைகட்டு கட்டுங்க, கேப்போம்.

//படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்)//

அப்படினா என்னானா?

//நேரத்தை செலவழித்து தெளிவாக எழுதுவது 'உங்க ஏரியா'
//
சரியா சொன்னிங்க :-)

ஓ!!

45ல் 7 உங்களுடயது என்று திருத்திக் கொள்கிறேன்..

பாலா,

நீங்க சொன்னதுபோல முதல்லே டெக்னோரா(ரோ)ட்டிப் பார்த்துக்கிட்டேவந்து 'ஹூம்'ன்னு
ஒரு பெருமூச்சு விட்டுக்கிட்டே உங்க பதிவை மேற்கொண்டு படிச்சால்............ அட.
நம்மளையும் ஆட்டத்துலே சேர்த்துருக்கீங்க.

நன்றி பாலா. இனி நான் மரியாதையாக் கொஞ்சம் ஆழமாச் சிந்திச்சுப் பதிவுகள் போடணுமோ?:-)

ஆனா, நம்ம வலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பான பதிவுகள்தான் எழுதறாங்க.
அதனால் அனைவரும் வெற்றிவரிசைகளில் இருக்கறதாகத்தான் நினைக்கிறேன்.

mine has 23 links from 16 blogs. donno the right scale for things.

ரொம்ப நன்றி பாபா!!!

இன்னும் நல்லா எழுதணும் அப்படிங்கறதை விட இப்போ பயந்தான் இருக்கு :-(

சிறில்... உங்களுடைய பைபிள் கதைகளில் பாதியிலேயே நிற்கிறதே!? வேறு தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா... ஆவலுடன் ... :-D)


அப்பாவித்தமிழன்...
இப்படி பத்த வைக்கறீங்களே... ;-)

//படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்)//
----அப்படினா என்னானா?----

வெட்டி & சந்தோஷ்...

அ) முதலில் Technorati: Home செல்லுங்கள்

ஆ) மேலே, ஜெஜெ அம்மாவுக்கு பிடித்த பச்சை கலரில் - 'தேடல்' பொட்டி இருக்கும். உங்களின் வலைப்பதிவு முகவரியை அதில் இடுங்கள். பக்கத்தில் உள்ள கோம்போ பாக்ஸில் 'in blog directory' என்பதைத் தேர்வு செய்யுங்கள்

இ) Search-ஐ சொடுக்குங்கள்

ஈ) விடை தெரியும்: Technorati Blog Info: வெட்டிப்பயல்: (8 links from 5 blogs)

உ) ஐந்து பதிவுகளில் இருந்து உங்களின் எட்டு இடுகைகளுக்கு சுட்டி தரபட்டிருப்பதாக டெக்னோரட்டி தன்னுடைய தேடலில் கண்டுபிடித்துள்ளது. இதில் ஐவர் தங்களுடைய பதிவுகளுக்கு சுட்டி காண்பிக்கிறார் என்பதை முக்கியமாக கருதி, அதன் அடிப்படையில் தர வரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் வெளிப்படையான குறைபாடுகள்:
1. ஒருவரே பல பதிவுகளைத் துவக்கி, அவற்றுக்கு இடையே சுட்டிகளைக் கொடுத்து தரப்பட்டியலில் முன்னேறலாம்.

2. ப்ளாக்ஸ்பாட், வோர்ட்ப்ரெஸ், லைவ்ஜர்னல் போன்ற புகழ்பெற்ற தளங்களில் கடை விரிக்காமல், சொந்த வீட்டில் குடிபுகுந்தவர்களின் (சுந்தரவடிவேல், டிஜே தமிழன் போன்றோர்) உள்நுழை சுட்டிகளில் தேக்கநிலை தெரிந்தால், கண்மூடித்தனமான டெக்னொரட்டி தரத்தின்படி குறைத்து மதிப்பிட படுவார்கள்.

3. quantity vs quality என்பது போல் 'ஒருவர் என்ன எழுதுகிறார்' என்பதுதானே முக்கியம் என்னும் பார்வையில் டெக்னோரட்டியின் தரப்பரிந்துரைகள் தர்மற்றது.

துளசி கோபால்....

-----நம்ம வலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பான பதிவுகள்தான் எழுதறாங்க.
அதனால் அனைவரும் வெற்றிவரிசைகளில் இருக்கறதாகத்தான் நினைக்கிறேன்----

கச்சிதமாக நான் சொல்ல எத்தனித்ததை சிக்கென்று சொல்லியிருக்கிறீர்கள். நன்றீஈஈஈ :-)


----இன்னும் நல்லா எழுதணும் அப்படிங்கறதை விட இப்போ பயந்தான் இருக்கு -----

எப்படி சவுண்ட் வுட்டுண்டு (சாரி.. எழுதிண்டு) இருந்தீங்களோ... அப்படியே கோழி பிடிங்க (அச்சச்சோ... தொட்ருங்க ;-))

//தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நம்ப இயலாது என்பது போலவே, //

பாலா பஞ்ச் !!! :))

அடடே ... ! நம்ப பதிவும் தொகுப்பில் இருக்கே !

நான் செய்த ஒரே சாதனை ... !தமிழ்மண முகப்பில் குறிச்சொற்கள் தொகுப்பில் 'கோவி.கண்ணன்' எப்போதும் தெரியும்படி பார்த்துக்கொண்டு வாரத்துக்கு 10 பதிவுகள் உருப்படியாக(?) கடந்த நான்கு மாதங்களாக எழுதியதுதான் !

:))))))

பாலா,

நூறு பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டாலும் உருப்படியான என்னுடைய உருப்படியான பதிவுகளை நான் உங்கள் snapjudje மூலமாகத்தான் தெரிந்துகொள்வேன்:))

நன்றி

பாபா,
பைபிள் கதைகள் வடிவத்தக் கொஞ்சம் மாத்தி எழுலாம்னு இருந்தேன். அதாவது ரெம்ப சின்னச் சின்ன சம்பவங்கள எழுதுறதுக்குப் பதில் கொஞ்சம் பெருசா மோசஸ், யோபுன்னு எழுதலாம்.

ரெம்ப படித்து கொஞ்சமாய் எழுதவேண்டியுள்ளது.. :)

கட்டாயம் விரைவில் துவக்குவேன்.

எனக்குப் பிடித்தவைகளையே சொல்லி என்னையும் நிறைவு செய்ததற்கு நன்றி!

செல்வன், டோண்டுவைப் பற்றிய கருத்தைத் தவிர்த்திருக்கலாம்!

அப்பாவி தமிழா நான் சொன்னது வலைப் பதிவரின் சுதந்திரம் பற்றியும் வலைப்பதிவு புத்தகப் பதிவின் முன்னேற்றமே ஒழிய புத்தகம் என்பது கடந்த காலம் இல்லை எனினும் அதற்கு அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் இடத்தில் நான், நீங்கள், நாம் சந்தோசப் பட என்ன இருக்கிரது என்றுதான் ,,, நம் சுதந்திரத்தை டெக்னராட்டியோ அல்லது தமிழ்மணமோ பறிக்காத வரைதான் இதெல்லாம் இல்லாவிட்டால் வேறு இடம் தேடலாம் அவ்வளவுதான் இங்கே.... என்னால் பாலாவிடம் கேட்கவும் முடிகிறது அதை அவர் உடனே செய்தும் விட்டார், இதுதான் வலையில். சும்மா பின் நவீனம் , கட்டுடைத்தல் அப்டீன்னு எழுதறது எனக்கும் பிடிக்காது. சரியா? இன்னும் விளக்கம் வேனும்னா என்னோட இடத்தில பதிவு போட்றேன் அங்க நாம விவாதிக்கலாம் இங்க பாலாகிட்ட ஒரே லிங்கு மயம் எனக்கு லின்கே அவரோடதுதான் அதிகம் இருக்கு

பாலா, என்னுடைய வலைப்பூவையும் தொடர்ந்து படிக்க விரும்பியமைக்கு மிக்க நன்றி. உங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்ற முயல்கிறேன்.

எஸ்.கே,

Alter Ego என்பதை ஏதோ தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.Alter Ego என்றது போலியாரை.டோண்டுவின் ஒவ்வொரு பதிவுக்கும் போலியார் அவரது தளத்தில் இணைப்பு கொடுத்து எழுதுவார் இல்லையா?அதை தான் சொன்னேன்.

i am featured, hmm, surprising :) Thanks for the information thalai

“டோண்டுவுக்கு இத்தனை இணைப்புகள் கிடைக்க காரணமாக இருந்தது அவரது Alter Ego தான்”

alter ego என்று போலி டோண்டுவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கிண்டலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இல்லையாயின் alter ego என்பது முழுவதும் ஒத்த கருத்துள்ள மிகவும் நம்பிக்கைக்குறிய நண்பனை குறிக்கும். பலர் இதனை நேர் எதிர் குணத்தினை கொண்டவரை குறிப்பதாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. இதைப் போலவே trouble shooter என்ற ஆங்கில வார்த்தையினை பிரச்னையினை ஏற்ப்படுத்துபவர் என்ற அர்த்ததில் பயன்படுத்தியதை நான் ஒரு முறை NDTV யிலும், மறுமுறை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பேச்சிலும் கண்டிருக்கிறேன்!

கோவி,
-----தமிழ்மண முகப்பில் குறிச்சொற்கள் தொகுப்பில் 'கோவி.கண்ணன்' எப்போதும் தெரியும்படி பார்த்துக்கொண்டு வாரத்துக்கு 10 பதிவுகள் உருப்படியாக(?) கடந்த நான்கு மாதங்களாக எழுதியதுதான்----

கன்ஃபெஷன் பெட்டியா... மறுமொழிப் பெட்டியா ;-))

உங்க அலுவலில் விசாரிக்கணும் :-P)


முத்து, சிறில், எஸ்கே, மகேந்திரன், ஜிரா, வருகைக்கு __/\__நாராயண்,

----am featured, hmm, surprising :) ----

உலகம் சுற்றும் வாலிபனாக இருந்தால் பதிவு போடுவதற்கு எங்கே நேரம் ;-)) உருப்படாததையும் கொஞ்சம் கவனிச்சுக்குங்க ஐயா :-)


செல்வன் & வக்கீல் ஐயா,

blessing in disguise என்பது போல், இன்ன பிறர் தாக்கி கொடுக்கும் சுட்டிகள் கூட 'தேடுபொறி'களால் எவ்வாறு ++வாக எடுக்கப் படுகின்றன என்பதை விளக்கியதற்கு நன்றிங்கோ.

Annathe, cache larundhu ellam link kuduthu kalakureenga :) Danks.

Jus' noticed. Thanks Bala for including me in the list :)

// கடந்த ஆறு மாதங்களில் என்னை அதிகம் ஈர்த்த, நான் தொடர்ச்சியாக படிக்க நினைக்கும் தமிழ்ப் பதிவு

(வலையுலக) வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி !!!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு