Tuesday, February 10, 2009

கட்சி ஆரம்பிப்போம்

இது தேர்தல் காலம்.



தேர்தலை முன்னிட்டு தோன்றி இருக்கும் சிறப்பு வலைப்பதிவு: தேர்தல் - 2009


அது வோர்ட்ப்ரெஸ் கட்சி என்றால், ப்ளாகரிலும் கூட்டுப் பதிவு உதயமாகி உள்ளது: தேர்தலின் திசைகள்


அப்படியே தலை 10, சிறந்த பத்து, டாப் டென் பட்டியலுக்காகவே நான் 10 Hot பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.

உங்களின் பரிந்துரை, பதிவுகள், லிஸ்ட் எல்லாவற்றையும் தொகுத்து சேமித்து வைக்கும் எண்ணம். சமீபத்திய சூடான இடுகைகள்:

இரண்டு அ-திரட்டி

1. இ வால் போஸ்டர் | eWallPoster

2. தமிழின் முக்கிய பதிவர்களின் இடுகைகளுக்கான குறுஞ்செய்திரட்டி: Twitter / tamils

Friday, January 16, 2009

2008 - தமிழ் சினிமா தேர்தல்: உங்க வாக்கு யாருக்கு?



தொடர்புள்ள பதிவு:

1. All-in-one Hub Awards 2009 Polls

2. What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema

3. Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review

Thursday, January 08, 2009

'பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்

எழுத்தாளர் மருதன் 'பாஸ்போர்ட்' தொடரை ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். அவரின் வலைப்பதிவு | ட்விட்டர் | கிழக்கு பதிப்பக வெளியீடாக இதுவரை வந்துள்ள புத்தகப் பட்டியல்.

இந்த மாதிரி நூல் நிறைய எழுதிய நுட்பர், மறுமொழியை நிராகரித்து விடுவார் என்பது முதல் அதிர்ச்சி. அப்படி என்ன அபாண்டமாக அரற்றி இருக்கிறோம் என்பது இன்னொரு மருட்சி.

சென்ற முறை 'ஒபாமா, அமெரிக்கா பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ' சொன்னதற்கு சிம்பிளாக நாலு வார்த்தை சொல்லி இருந்தேன். அது யாதெனப்படில்:

---ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார்---

நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் வெளியிடும் புத்தகம் எல்லாவற்றுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது போல் அமெரிக்க படை சார்பாக அங்கு சென்றவர், இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.

அவரா போர் தொடுத்தார்?

சென்ற அனுபவம் கொடுத்த படிப்பினையில் இந்த முறை பதிவாக இட்டேன்: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்

இந்த முறையும் சில பல மறுமொழிகளை நிராகரித்து இருக்கிறார்.
நான் குருவி மாதிரி. படிக்க: பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

இந்த மாதிரி கீச்கீச்களை ஏன் நிறுத்தினார் என்று இப்போது ஆலோசனை நேரம்:

பாதிப் பேர் கூகிள் ரீடரிலும், மீதப் பேர் படிக்காமல் தலைப்பை மட்டும் தமிழ்மணத்தில் கவனிக்கும் இந்தக் காலத்தில், சைலன்ட்டாக காமென்ட்டை போட்டு விடலாம்.

ஆனால், ஞாநியைப் போல், சாரு நிவேதிதாவைப் போல் இணையப் புரட்சியாளராக ஆவது எங்ஙனம்?

இந்த மாதிரி மறுமொழியை மடக்கி அனுப்பினால் நாலு பேர் பேசுவார்களே!

Wednesday, December 03, 2008

2008ல் உங்களைக் கவர்ந்த இந்தியர்

விட்டுப்போனவர்களை, சேர்க்க வேண்டியவர்களை பரிந்துரைத்தால், தேர்தலில் நிற்க வைத்து விடலாம்.



  • அன்புமணி - புகை பிடிக்காதோருக்கும் புற்றுநோய் தருபவர்களை கட்டுக்குள் கொணர்ந்தவர்.
  • அபினவ் பிந்த்ரா - நான்கு வருடத்திற்கொருமுறை ஒலிம்பிக்ஸ் வருகிறதே என்று குதூகலிக்கும் மொக்கைப் பதிவர்களுக்கு நாமம் போட்டவர்.
  • விஸ்வநாதன் ஆனந்த் - சதுரங்க ஆட்டம் என்றால் உலகிற்கு முதலில் நினைவுக்கு வருபவர்.
  • கே பத்னாபையா - பேச்சுவார்த்தையில் இன்னும் நம்பிக்கை துளிர்க்க வைப்பவர்
  • ராஜேந்திர கே பச்சௌரி - ஆல் கோர் ஜனாதிபதிக்கு நின்றார்; இவர் நோபல் பரிசு மட்டும் வாங்கினார்.
  • ரேணுகா சௌத்ரி - வடக்கில் பிறந்திருந்தால் பிரதம மந்திரியாகி இருக்க கூடியவர்.
  • ப சிதம்பரம் - உள்துறையாயிட்டாரே! பொருளாதாரமும் அமெரிக்கா அளவு சரியாமல் காப்பாற்றியவர்.
  • லாலு பிரசாத் யாதவ் - இருவுள் பொக்கீடு வரும்போது வானளாவ புகழ் எய்தியவர்.
  • மாயாவதி - நடுவணசை காப்பாற்ற வைத்தவர்.
  • சோம்நாத் சாட்டர்ஜி - கட்சியை விட நாடாளுமன்றம் பெரிது என்றவர்.
  • அர்விந்த் அடிக - இந்தியாவைத் தூற்றி புத்தகம் எழுதி புகழ்பெறுபவர்களில் புதியவர்.
  • கமல்ஹாசன் - எல்லாம் இன்ப மயமாக ரசிகர்களை மயக்குபவர்
  • ஓவியர் ஆதிமூலம் - காந்தியும் கோட்டோவியமாக தூரிகையில் நிலைத்திருப்பவர்
  • மம்தா பேனர்ஜி - டாடா காட்டியவர்
  • என் எஸ் ஜி ஜே பி தத்தா - இன்னும் உயிரோடிருக்கிறார்
  • ஜி மாதவன் நாயர் - அடுத்ததாக சந்திரனில் இந்தியரை இறக்கி விடுபவர்.
  • கிரண் பேடி - டெல்லி காவல் ஆணையர் ஆக்கப்படாவிட்டாலும் சேவையில் ஈடுபடுபவர்.
  • ஹேம்ந்த் கர்கரே - ஹிந்துத் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை அம்பலமாக்கியதாலோ என்னவோ? சாகடிக்கப்பட்டவர்.
  • கிருஷ்ணம்மாள் சங்கரலிங்கம் - இந்தியா இன்னொரு நிலக்கிழாரிய பாகிஸ்தானாக ஆகாமல் இருக்க -- வயதான காலத்தில் அக்கடா என்றில்லாமல்; களப்பணியில் சோர்வுறாமால் தொண்டு செய்பவர்.

Monday, December 01, 2008

நியுயார்க் பிள்ளையார் கோவிலில் மேயர் ப்ளூம்பர்க் அஞ்சலி

NY-Flushing-Temple-Worship-Mumbai-Service

Tuesday, September 30, 2008

அமெரிக்க மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல்

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் டெய்ட்டன் நகரில் உள்ள மசூதியில் இரம்சானை கொண்டாடும் பொருட்டு முன்னூறு பேர் குழுமியிருந்தனர்.

பெற்றோர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக குழந்தைகளுக்கான காப்பகமும் மசூதிக்குள்ளேயே இருந்தது. அந்தக் காப்பகத்துக்குள் அடையாளம் தெரியாத இருவர் நச்சுப்பொருள் நிறைந்த மருந்தை அடித்தனர்.

தொழுகையில் இருந்த பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த முதியவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டனர்.

ஒரு குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அங்கேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

'இது போன்ற ஒன்று இதுவரை நடந்ததேயில்லை. மிகவும் கலக்கமாக இருக்கிறது' என்று டெய்டன் நகர இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர் தாரிக் (Tarek Sabagh) குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு: Terrorists attack Ohio mosque - City of Brass

Wednesday, September 10, 2008

வடக்கு வாசல் - டாக்டர் அப்துல் கலாம்: வலையக விழா

நாள்: 14 செப் 2008
நேரம்: மாலை 6:30
இடம்: புது தில்லி


 
 

Monday, July 21, 2008

ரவி ஸ்ரீனிவாசிற்கு மனம் திறந்த மடல்

ரவி ஸ்ரீனிவாஸ் கேட்கக் கூடாத கேள்விகள் -:) கேட்டிருக்கிறார்.

பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா?
அரசியல்வாதி போல் இதற்கு பதில் சொல்வது நடைமுறை. சிம்புவின் தொல்லைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நயனின் கலைச்சேவை பாதிக்கப்பட்டது என்றால் அது சினிமா சந்தைமுறை. ரவி போன்றவர்கள் ட்விட்டரில் இருந்துகொண்டே இது போன்ற சதிகளை உருவாக்கினர் என்று கட்டுடைத்தல் இணைய எதிர் மரியாதை முறை. இது போன்ற குட்டிகளாகப் போட்டுத்தாக்கும் டைனோக்களை கண்டுகொள்ளாத ரவிக்கு கண்டனம் முறையாகும்.

2. இணைய மற்றும் கணினி addictionனுக்கு பாஸ்டனில் நல்ல சிகிச்சை கிடைக்கிறதா ?
நாங்க எல்லாம் அமெரிக்கா மாதிரி. ஆரம்பத்தில் டாட் காம் பங்குகளாக ராயர்காபி க்ளப்பில் பழியாய்க் கிடப்போம். ஈ-பேயும் அமேசானும் விழ ஆரம்பித்தால் வீடு மார்க்கெட் என்னும் ப்ளாகர், வோர்ட்பிரெஸ், ப்ளாக்ஸ்பாட் பின்னாடி பேயாய் திரிவோம். கொஞ்ச நாள் கழித்து அந்த மோகமும் போய் எண்ணெய் பித்து தலைக்கேறினால், ட்விட்டர் கணக்கை கூட்டுவோம்.



முதல்ல அமெரிக்கா திருந்தறதுக்கே இன்னும் நீங்க உங்க பதிவில் வழிசொல்லியபாடில்லை. அப்புறம்தானே என்னோட பித்துக்கு வைத்தியம் சித்திக்கும்.



நானூறு பதிவுகள். பெரும்பாலானவை அச்செடுத்து படிக்க கோரியவை. வாழ்த்துகள்.

என் எழுத்து, வலைப்பதிவின் உள்ளடக்கம், வடிவம் இன்ன பிற தொடர்புடையவை குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள்?
எழுத்து: கருத்து சொல்லுமளவு எனக்கு விஷயஞானம் போதாது. தாங்கள் தரும் சுட்டிகளைப் படித்து பயன்பெறுகிறேன்.



வலைப்பதிவின் உள்ளடக்கம்: 'மேய்ச்சலில்' தருவது போல் வெறுமனே உரல்களை மட்டும் இட்டு செல்லவேண்டாம். கென் வில்பர் குறித்த பழைய கட்டுரையிலும் கூட மிரட்டாத அறிமுகம் தருவது போன்ற நடை என்னைக் கவர்கிறது. இலகுவாக வாசிக்க வைக்கிறது.



குறிச்சொற்கள்: தற்போதைக்கு ஓரளவே பயன்படுத்துகிறீர்கள். இன்னும் தாராளமாக உபயோகிக்கவும். ஆங்கில வார்த்தைகளும் இடவும்.



வார்ப்புரு: பயனுள்ள widgetகள் சிலவற்றை சேர்க்கலாம்:

  1. Google Search (Search Box)

  2. Labels (Show all the labels of posts in your blog)

  3. Subscription Links (Let your readers easily subscribe to your blog with popular feed readers)

  4. உங்களின் ட்விட்டர் குறிப்புகள் (add Twitter to your site)

இவற்றை இணைப்பதற்கு http://draft.blogger.com/home என்னும் முகவரியில் உள்நுழையவும்.



நன்றி.



படம்My Satirical Self - New York Times

Tuesday, July 08, 2008

A Concise Introduction to Twitter.com and Why you should join there?

அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா?

 

இந்தியாவில் சற்றேறக்குறைய பத்து மில்லியன் வலை இணைப்புகள் இருக்கின்றன.



செல்பேசி சந்தாதாரர்கள் எவ்வளவு? நிறைய என்பது உங்களை சுற்றிப் பார்த்தாலே தெரியும். எண்ணிக்கை எம்புட்டு என்று எண்ணிப் பார்த்தால் 250 மில்லியனைத் தாண்டி ஏவுகணைப் பாய்ச்சலில் ஏறுகிறது.



மாதந்தோறும் கிட்டத்தட்ட பத்து மில்லியன் புதிய இணைப்புகளை செல்பேசிகள் சேர்த்துக் கொள்கின்றன.



வலைப்பதிவுகள் என்பது பத்து மில்லியன் வாசகர்களை எதிர்நோக்குகிறது. குறுந்தகவல் என்பது மாசாமாசம் ஆஸ்திரேலியாவை தோற்றுவிக்கும் இந்திய மக்கள்தொகையை ஒத்து செல்பேசிகளை குறிவைக்கிறது.



'மன்னன்' ரஜினி மாதிரி கேள்வி கேட்டால்... 10 மில்லி போதுமா? 250 மில்லியன் வேண்டுமா?!



வலைப்பதிவுகளுக்கு ப்ளாகர்.காம், வோர்ட்பிரெஸ்.காம் இருக்கிறது. குறுஞ்செய்திகளை எப்படி அனுப்புவது?



டிவிட்டர்.காம் உபயோகிக்கலாம்.

(ட்விட்டருக்கு மாற்றாக ஃப்ரெண்ட் ஃபீட் வலையகத்தை சிலர் பரிந்துரைக்கிறார்கள். அது தற்போதைக்கு பயனில்லை என்னும் என் கருத்தை பிரதிபலிக்கும் கட்டுரைகளுள் ஒன்று: FriendFeed explodes onto the scene, but it is still an information fire hose)

முக்காலியாக வலைப்பதிவுகள், அரட்டை, மின்னஞ்சல் கொண்டு பயணித்த இணையம் குறுந்தகவல் மூலம் நான்காவது தூணை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறது.



செல்பேசி கொன்டு குறுந்தகவல் அனுப்பினால் நிறைய பணம் விரயமாகுமே? அதுதான் இல்லை.



வழக்கமாக இணையத்தில் மேய்வது போன்றே ட்விட்டர்.காம் சென்று பலருக்கும் செய்தி அனுப்பலாம்.



வாசகரின் செல்பேசிக்கே செய்திகள் சென்றடவைதால், தொலைபேசி போன்ற உடனடித்தன்மை இங்கே கிடைக்கிறது. அலுவலில் மும்முரமாக மூழ்கி இருந்தாலும், அரை விநாடியே செலவழித்து குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, வேலையைத் தொடரலாம். மீட்டிங்கில் இருந்தால் கூட பதில் அனுப்பலாம்.



இதெல்லாம் நான் இப்பொழுதே நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கின்றேனே! அப்புறம் எதற்கு தனியாக ட்விட்டர்?


  • 'கலைஞருக்கு நோபல் ஏன் கிடைக்க வேண்டும்?' என்று பிரச்சாரத்தை ஓசையின்றி முடுக்கி விடலாம்.

  • மாணவர்களுடன் உரையாட, தற்கால தலைமுறையின் பாஷையில் ஆசிரியர் உறவாடலாம்.

  • பத்து நண்பர்களுக்கு 'விஸ்டா நிறுவ உதவி தேவை' என்று மின்மடலிடுவதை விட, ட்விட்டரில் கோரினால், கை மேல் பலன் நிச்சயம்.

  • 'சுப்பிரமணியபுரம்' குறித்து விஷயமே இல்லாமல் பதினேழு வரி எழுதுவதற்கு பதில், நச்சென்று விமர்சனம் கொடுக்கலாம்.


சுருக்கமாக, தெரிந்த நண்பர்களுடன் உரையாடுவதை பொதுவில் தெரிவிக்கவும், தெரியாத உறவுகளுடன் தொடர்புகளை உருவாக்கவும், தொடர்பில்லாத விஷயங்களில் தெளிவான கருத்துக்களைப் பெறவும் பயன்படுகிறது.



ஏன் ட்விட்டர் என்பதை விளங்கிக் கொண்டாடியாச்சு. இதெல்லாம் எப்படி செய்வது: ட்விட்டர் குறித்த எளிய அறிமுகம்.



மேலே உள்ள சுட்டியை க்ளிக்காதவர்களுக்கான அறிமுகம்:


  1. ட்விட்டர்.காம் சென்று புதிய கணக்கைத் தொடங்கவும்

  2. நணபர்களை அழைக்கவும். (என்னைப் போன்றோரின் சோத்தங்கை பக்கத்தில் பல புகழ் பெற்ற பதிவர்கள், ட்விட்டரர்கள் இருப்பார்கள்; அவர்களையும் இணைக்கலாம்.)

  3. 140 எழுத்துக்களுள் நீங்கள் செய்து கொண்டிருப்பதை முழங்கவும்


அவ்வளவுதான்.



ட்விட்டரினால் ஆய பயன் பற்பல.


  • சாதாரணமாக நீங்கள் பேசத் தயங்கும் பெருசுகளுடனும் சரி; நீண்ட காலமாக தொடர்பு விட்டுப்போன பால்யகால சிநேகிதிக்கும் சரி; பேச்சைத் துவக்க நெருக்கமான அன்னியோன்யம் கொடுக்கும் சூழல்.

  • வணிக நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கின்றன (Hurry up, the customer has a complaint - The Boston Globe)

  • ஃபெட்னா விழா நடக்கிறது. பலராலும் மேடை நிகழ்வை கவனிக்கத்தான் நேரம் சரியாக இருக்கும். கிடைக்கும் ஓரிரு இடைவேளையில் பதிவாக அல்லாமல், குறுந்தகவலாகப் பகிரலாம்.

  • 'கத்தாழக் கண்ணால' பாடலுக்கு நடனமாடியவர் யார் போன்ற கேள்விகளுக்கு கூகிள் தேடி தாவு தீராமல் விடையறியலாம்.

  • 'தினம் ஒரு திருக்குறள்' என்று சங்க இலக்கியம் தொடங்கி அன்றாட இலக்கிய சர்ச்சை என்று வகைவகையாக தினசரி தொகுக்கலாம்

  • இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பக்கம் முதல் விக்கிப்பீடியா பக்கத்தை தொகுக்கும் பணி வரை எதற்கு வேண்டுமானாலும் செல்லமாக திட்டி, தட்டி கொட்டி வேலை வாங்க, ஊக்குவிக்கலாம்.




திரட்டி என்றாலே ஏதாவது சட்ட திட்டம் இருக்குமே? இங்கு உள்ள நடைமுறை என்ன? Twitter Etiquette | Global Geek News Blog



இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் சுயமாகவே நிர்ப்பந்தித்துக் கொள்வதேயன்றி, இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்று ட்விட்டர் வலியுறுத்துவதில்லை. ட்விட்டரில் இருப்பவர்களும் 'ஃபாலோ' பட்டனை அமுக்கி, தங்கள் கோபத்தை/விருப்பத்தை தெரிவித்து சென்றுவிடுவார்கள்.



இவ்வளவு தூரம் படித்திருந்து, வலையில் எதெது எதற்கு என்று குழம்பிப் போயிருந்தால்...



பதிவு: விவரமானவை; வித்து; கோர்வையான உள்ளடக்கம். (உங்கள் இடுகையை சுட்டிக் காட்ட வைக்க வேண்டும்.)



குரல் பதிவு: தமிழ் படிக்கத் தெரியாதோரையும் சென்றடையும்; வேறு வேலை செய்துகொண்டே கூட கேட்கலாம். (நேர்காணல், எழுதத் தெரியாதவரின் குரல், இசையோடு கூடியது)



கூட்டுப்பதிவு: ஒத்த லட்சியம் கொண்டவர்களின் பதிவுப் பயணம். (விழா, நிறுவனம், கட்சி, நுட்பம்)



வலைத்திரட்டி: புதிய பதிவர்களுக்கு அடையாள அட்டை; தமிழ்மணம் போன்ற இடங்களில் விளம்பரம்.



தெரிவுத்திரட்டி: விடுபட்டதற்கான அறிமுக அட்டை; கில்லி போன்ற வலையகங்களில் வாசிக்க மறந்ததற்கான புத்தகக்குறி.



மனிதத்திரட்டி: நம்பகமான குறிச்சொல் கொண்டது; மாற்று போன்ற சேவைகளினால் வலையில் இருந்து பகிர்பவை.



விக்கி: புத்துருவாக்கம்; சகாக்களின் திருத்தத்துடன் நம்பகத்தன்மை.



மனித விக்கி: தேடல்களுக்கு எளிமையான முன்னுரை விடை; மஹாலோ போன்ற இடங்களில் பெரும்பான்மையினரால் கோரப்படும் தலைப்புகளுக்கு புகழ்பெற்றவர்களால் புகட்டப்படும் முடிவுகள்.



அரட்டை: சோர்வு மறக்கடிக்கும்; விவாத களத்துக்குரிய லட்சணங்களுடன், வெற்றி/தோல்வி சாரமற்ற காரம்.



மின்னஞ்சல்: பத்து வரிக்கு மிகுந்தால் கவனமின்மை தரும்; எரிதமாகிப் போகும் அபாயம் உண்டு; தன்னந்தனியே பேச வேண்டியது.



கோப்பு: அச்சிடுவதற்கு வசதி; ஸ்க்ரிப்ட் போன்ற தளங்களில் ஏற்கனவே உள்ளூர் கணினியில் உறங்குவதை உலகுக்கு வெளிப்படுத்தலாம்.



குறுஞ்செய்தி/குறுந்தகவல்: உரையாடல் துவக்கம்; பதிவில் தனித்துவம் மிளிரும் என்றால், ட்விட்டரில் பொதுக்குணம் தூக்கல்; சுட்டிகள் புழக்கம் குறைச்சல்; முக்கியமாக 'யார் வந்தார்கள்? எத்தனை வருகையாளர்? எப்படி வந்து சேர்ந்தார்கள்?' என்று அலசும் புள்ளிவிவர ஸ்டாடிஸ்டிக்ஸ் லேது.



நினைப்பதை, விரும்புவதை, வெறுப்பதை, நம்புவதை, விழைவதை எண்ணியவாறே பதிந்து வைக்க, பதிந்ததை பலகோடி மக்களுக்கும் பரப்ப ட்விட்டருக்கு வாங்க!



மேலும் ட்விட்டர் குறித்து அறிய: எளிய அறிமுகம்.



கருத்துப்படம்: gapingvoid: "cartoons drawn on the back of business cards": why i deleted my twitter account

Monday, July 07, 2008

ட்விட்டர் தேர்தல் - கருத்துக்கணிப்பு

பழைய இடுகைகள்