Contest லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Contest லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 19, 2007

(செய்திக்) கட்டுரைப் போட்டி

'சற்றுமுன்' போட்டி குறித்து தெரிந்திருக்கும்.

வசதிக்காக சுட்டி இங்கே: சற்றுமுன்...: 1000 போட்டி அறிவிப்பு

(போட்டி குறித்த அசல் அறிவிப்பு இங்கே கிடைக்கும்: சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு)

போட்டி முடிய இன்னும் பத்து நாள்தான் இருக்கிறது. உங்கள் படைப்புகளை அனுப்பியாகி விட்டதா?

(புத்தகப்) பரிசுகள்: -
1. ரூ . 2500/-
2. ரூ . 1750/-
3. ரூ . 1000/-

இது தவிர

  • ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் 10 பரிசுகள்
    போட்டிக்கான வகைகள்
    1. அரசியல்
    2. சமூகம்
    3. அறிவியல் /நுட்பம்
    4. விளையாட்டு
    5. பொருளாதாரம்/வணிகம்

  • வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு பரிசு

  • போட்டியில் பங்கேற்கும் முதல் 50 பேருக்கு சிறப்பு பரிசு


எழுதுங்க... :)

புதன், பிப்ரவரி 28, 2007

Google vs Yahoo: TamilTalk Contest Results

போட்டி இங்கே: விடை தேடும் வினா?: அதிரடி பரிசுப் போட்டி - 3


புகழ்பெற்ற இணைய தளங்களான
கூகுள், யாகூ
இரண்டில் எது சிறந்தது? ஏன்?



நடுவராக நான்.

முதலில் என்னைப் பற்றி...

இரண்டு தளங்களின் பயனர். Google Blogoscoped வலைப்பதிவை, காலை எழுந்தவுடன் 'சாந்தாகாரம் புஜகசயனம்' போல் பாவிப்பவன். யாஹூ மெயில் ஒருங்குறியைக் கவிதையாக்கினாலும், ஃபுட்போர்டில் தொற்றிக் கொண்டாவது, வைத்துக் கொண்டிருப்பவன். யாஹூவின் டெல்.இசி.யஸ் சேவையின் காதலன். Flickr-இல் காசு கொடுத்து, நல்ல பட்டாவாக வாங்க விழைபவன்.


என்னை ஒப்பிடச் சொன்னால்...

சிந்தாநதி சொல்வது மாதிரி எனக்கும் 'yahoo geocities மற்றும் google pages பத்தி' எண்ணமே எழவில்லை. யாஹூ என்றால் குழப்பம். கூகிள் என்றால் "Don't be evil." ஜல்லி.

கூகிளிடம் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு துறையாக நுழைகிறார்கள். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஆட்டம் காண்கிறது. புகழ் பெற்ற யூட்யுப் கபளீகரம் ஆகிறது. நியு யார்க் டைம்ஸில், பக்கங்களை மொத்த விலையில் வாங்கி ஆட்சென்ஸ் மூலமாக, சில்லறையில் விற்கும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது. ஷங்கரும் ரஜினியும் சேர்ந்தால் பட்டாசு பறப்பது போல் பளபளா.

யாஹூ என்ன செய்கிறது என்பது திறைமறைவில் நடக்காவிட்டாலும், செல்வராகவன் படம் போல் அமைதியாய் தயாராகிறது.

இயக்குநர் ஷங்கர் மெய்மறக்க வைப்பார். வெளிநாட்டு நுட்பங்களைக் கொண்டு வருவார். செல்வராகவன் படம் மூன்று, நான்கு வாட்டிப் பார்க்க வேண்டும். வெளி மினுமினுப்பு இருக்காது. தரை டிக்கெட் முதல் திரை சுப்புடு வரை எல்லாருக்கும் ஏதோ ஒன்று இருக்கும். நிச்சயம் ஏமாற்றமாட்டார்.

கூகுள் மின்னஞ்சல், பிகாஸா படங்கள் எல்லாம் பிரும்மாண்டமாய கோடி கிகாபைட் கொடுத்தாலும், ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையான யாஹூவிற்கு நிகர் ஆகாது.


பட்டிமன்ற நடுவராக இருந்தால்...

Windows Liveதான் சிறந்தது என்று என் உரையை முடித்துக் கொள்கிறேன்.


வெற்றி பெற்றவர் யார்?

1. பொன்ஸ்


  1. + தேடுதல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில், "கூகிள் செய்"
  2. + ஒரே ஜன்னலில் பலருடன் பேசும் கான்பரன்ஸ் வசதியின்மை, சாட் அறைகள் இல்லாமை
  3. + வெறும் .doc, .rtf, .xls வகை கோப்புகளை மட்டுமே
  4. + மடலைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே, நிமிடங்களுக்கு ஒருமுறை சேமித்துக் கொண்டே இருக்கும்.
  5. + அகலப் பட்டை தொடர்பிலேயே, பீட்டாவைக் காண மிகச் சிரமமாக இருக்கவும்
(5 points)


2. சென்ஷி

  1. + googleங்கறது பணக்கார வீட்டு கல்யாணம் மாதிரி.. invitation கொடுத்தாத்தான் உள்ளே கூப்டும். ஆனா நம்ம yahoo mail சமபந்தி போஜனம்க்கா..

  2. + யாஹூவுல எந்த வேல பாத்தாலும் அது அலர்ட் கொடுக்கும். இது கூகிள்ல்ல டூல்பார் இருந்தா மட்டும் சாத்தியம்.

  3. + கூகிள்ல தேடினதை எப்படி அழிக்குறதுன்னு
    (3 points)


இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைப்பது போல், யாஹூவிற்கு குரல் கொடுத்த சென்ஷிக்கு கொடுக்க எண்ணம். ஆனால், முதல் பதினைந்து ஓவரில் 200+ அடிப்பது போன்ற பொன்ஸின் விளாசல் முன்னால், எவர் நிற்க முடியும்!

என் தேர்வு பொன்ஸ்.

வாழ்த்துக்கள் & நன்றி!

வெள்ளி, பிப்ரவரி 09, 2007

Tomato Potato Onion

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டிக்காக இந்த மாதிரி படம் எடுத்தால் நிராகரிக்கப்படும். அனைத்து ஆக்கங்களிலும் 'வேறு ஐட்டமும் படத்தில் இருக்கவே கூடாது.'

1. employed in canning (ha)


2. organic veg delivery 28.09.06


3. Friday night dinner


4. Tomatoes, Onions and Potatoes, Cochin


5. Salade niçoise


6. Orsett Show 2005



அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

பழைய இடுகைகள் முகப்பு