Google vs Yahoo: TamilTalk Contest Results
போட்டி இங்கே: விடை தேடும் வினா?: அதிரடி பரிசுப் போட்டி - 3
புகழ்பெற்ற இணைய தளங்களான
கூகுள், யாகூ
இரண்டில் எது சிறந்தது? ஏன்?
நடுவராக நான்.
முதலில் என்னைப் பற்றி...
இரண்டு தளங்களின் பயனர். Google Blogoscoped வலைப்பதிவை, காலை எழுந்தவுடன் 'சாந்தாகாரம் புஜகசயனம்' போல் பாவிப்பவன். யாஹூ மெயில் ஒருங்குறியைக் கவிதையாக்கினாலும், ஃபுட்போர்டில் தொற்றிக் கொண்டாவது, வைத்துக் கொண்டிருப்பவன். யாஹூவின் டெல்.இசி.யஸ் சேவையின் காதலன். Flickr-இல் காசு கொடுத்து, நல்ல பட்டாவாக வாங்க விழைபவன்.
என்னை ஒப்பிடச் சொன்னால்...
சிந்தாநதி சொல்வது மாதிரி எனக்கும் 'yahoo geocities மற்றும் google pages பத்தி' எண்ணமே எழவில்லை. யாஹூ என்றால் குழப்பம். கூகிள் என்றால் "Don't be evil." ஜல்லி.
கூகிளிடம் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு துறையாக நுழைகிறார்கள். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஆட்டம் காண்கிறது. புகழ் பெற்ற யூட்யுப் கபளீகரம் ஆகிறது. நியு யார்க் டைம்ஸில், பக்கங்களை மொத்த விலையில் வாங்கி ஆட்சென்ஸ் மூலமாக, சில்லறையில் விற்கும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது. ஷங்கரும் ரஜினியும் சேர்ந்தால் பட்டாசு பறப்பது போல் பளபளா.
யாஹூ என்ன செய்கிறது என்பது திறைமறைவில் நடக்காவிட்டாலும், செல்வராகவன் படம் போல் அமைதியாய் தயாராகிறது.
இயக்குநர் ஷங்கர் மெய்மறக்க வைப்பார். வெளிநாட்டு நுட்பங்களைக் கொண்டு வருவார். செல்வராகவன் படம் மூன்று, நான்கு வாட்டிப் பார்க்க வேண்டும். வெளி மினுமினுப்பு இருக்காது. தரை டிக்கெட் முதல் திரை சுப்புடு வரை எல்லாருக்கும் ஏதோ ஒன்று இருக்கும். நிச்சயம் ஏமாற்றமாட்டார்.
கூகுள் மின்னஞ்சல், பிகாஸா படங்கள் எல்லாம் பிரும்மாண்டமாய கோடி கிகாபைட் கொடுத்தாலும், ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையான யாஹூவிற்கு நிகர் ஆகாது.
பட்டிமன்ற நடுவராக இருந்தால்...
Windows Liveதான் சிறந்தது என்று என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
வெற்றி பெற்றவர் யார்?
1. பொன்ஸ்
- + தேடுதல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில், "கூகிள் செய்"
- + ஒரே ஜன்னலில் பலருடன் பேசும் கான்பரன்ஸ் வசதியின்மை, சாட் அறைகள் இல்லாமை
- + வெறும் .doc, .rtf, .xls வகை கோப்புகளை மட்டுமே
- + மடலைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே, நிமிடங்களுக்கு ஒருமுறை சேமித்துக் கொண்டே இருக்கும்.
- + அகலப் பட்டை தொடர்பிலேயே, பீட்டாவைக் காண மிகச் சிரமமாக இருக்கவும்
2. சென்ஷி
- + googleங்கறது பணக்கார வீட்டு கல்யாணம் மாதிரி.. invitation கொடுத்தாத்தான் உள்ளே கூப்டும். ஆனா நம்ம yahoo mail சமபந்தி போஜனம்க்கா..
- + யாஹூவுல எந்த வேல பாத்தாலும் அது அலர்ட் கொடுக்கும். இது கூகிள்ல்ல டூல்பார் இருந்தா மட்டும் சாத்தியம்.
- + கூகிள்ல தேடினதை எப்படி அழிக்குறதுன்னு
(3 points)
இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைப்பது போல், யாஹூவிற்கு குரல் கொடுத்த சென்ஷிக்கு கொடுக்க எண்ணம். ஆனால், முதல் பதினைந்து ஓவரில் 200+ அடிப்பது போன்ற பொன்ஸின் விளாசல் முன்னால், எவர் நிற்க முடியும்!
என் தேர்வு பொன்ஸ்.
வாழ்த்துக்கள் & நன்றி!
உங்களை நடுவராகத் தேர்ந்தெடுத்த சிந்தாநதி வாழ்க... :))
தமிழ்டாக் பதிவைப் பார்த்ததும் பாய்ந்து போய் கூகிளுக்குக் கொடிபிடித்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால், அடுத்த நாள் ஒரே பயம்..
நீங்க வந்து "கூகிள் மெயிலுக்கு இயற்கையில் மணம் இல்லை, எல்லாமே யாஹூவுக்கு அப்புறம் தான் வந்தது"ன்னு பேசினால், நக்கீரன் முன்னால் தருமி மாதிரி நான் பம்ம வேண்டியது தான்னு ஒரே டென்சன்.. நல்ல வேளையா உங்களை நடுவரா போட்டு என்னைப் பெருமூச்சு விட வச்சிட்டாரு சிந்தாநதி :))))
பொன்ஸ்~~Poorna சொன்னது… 2/28/2007 09:41:00 PM
தெரிஞ்ச விஷயம்தான்...
பொன்ஸ் அக்காவுக்கு முன்னாடி நம்ம வாதம் எடுபடுமாங்கற்தே சந்தேகமாயிருந்தது. 3 பாய்ண்ட்ஸ் கிடைச்சதே குருட்டு அதிர்ஷ்டம்..
வாழ்த்துக்கள் பொன்ஸ் அக்கா :))
சென்ஷி
சென்ஷி சொன்னது… 2/28/2007 09:47:00 PM
பாபா,
நீங்க நயன் தாரா நீலப்படத்தைப் பார்க்க அவசரமா ஓடி வந்த மாதிரி வராம இப்பதான் நிதானமா இப்படி ஒரு போட்டி இருக்குறதையே பார்த்தேன்.
யாஹூ மெயிலெல்லாம் பார்த்தே பல வருஷமாச்சப்போய். கூகுளாண்டவரே கதின்னு மாறிட்டேன்.
ஆனைத்தலைவி நான் சொல்ல நெனச்சதையும் சொல்லாம விட்டதையும் சரியாச் சொல்லிட்டாரு
நம்ம சென்ஷி அண்ணாச்சி மட்டும் அப்பப்போ குரல் கொடுக்காம இருந்திருந்தா யாஹீ ஒரேயடியா நாறிப்போயிருக்கும் போலல்லா இருக்கு?
அது சரி. சந்தடி சாக்குல என்னமோ எம் எஸ் 'என' மெசெஞ்சர்னு கேட்டிருந்தீங்க? வேணும்னா 'உன்' மெசெஞ்சரா வ்ச்சுக்கிட்டு கட்டி அழுங்க. காரியத்தைப் பத்திப்பேசும்போது கருமத்தப் பத்தி ஏன் பேசுதிய? :-)
சாத்தான்குளத்தான்
பெயரில்லா சொன்னது… 2/28/2007 10:58:00 PM
//முதல் பதினைந்து ஓவரில் 200+ அடிப்பது போன்ற பொன்ஸின் விளாசல் முன்னால், எவர் நிற்க முடியும்!//
சரியா சொன்ன தல
Gurusamy Thangavel சொன்னது… 2/28/2007 11:03:00 PM
//பாபா,
நீங்க நயன் தாரா நீலப்படத்தைப் பார்க்க அவசரமா ஓடி வந்த மாதிரி வராம இப்பதான் நிதானமா இப்படி ஒரு போட்டி இருக்குறதையே பார்த்தேன்.//
:)))))))))))))))))))))))
senshe
சென்ஷி சொன்னது… 3/01/2007 04:18:00 AM
@பொன்ஸ்
---கூகிள் மெயிலுக்கு இயற்கையில் மணம் இல்லை---
எல்லாப் புகழும் சபீருக்கே ;)
Boston Bala சொன்னது… 3/02/2007 02:41:00 PM
@சென்ஷி
நீங்க ராம் ஜெத்மலானி போல... தோற்கிற கட்சியாக இருந்தாலும், ஜெயிக்க வைக்குமளவு வாதங்கள் அருமையாக இருந்தது.
Boston Bala சொன்னது… 3/02/2007 02:42:00 PM
@ஆசிஃப்
---நயன் தாரா நீலப்படத்தைப் பார்க்க அவசரம---
சிந்தாநதியை கவனிக்க சொல்கிறேன். தலைப்பை வண்ணமயமாக வைப்பாரா?
---கூகுளாண்டவரே கதின்னு மாறிட்டேன்.---
இந்த மாதிரி ஒன்றே சரணம் என்று இருக்காதீங்க... பங்குச்சந்தை வீழ்ந்தால், காசு கொடுத்தால்தான் அஞ்சல் என்று வழிப்பறி செய்யத் தொடங்க வசதி செய்து கொடுக்கறீங்க ;)
---காரியத்தைப் பத்திப்பேசும்போது கருமத்தப் பத்தி ---
அந்த மாதிரி (தண்டமான) நிரலி இருப்பதால்தானே, கூகிள் பெருமை மேலும் பேசப்படுகிறது :P
Boston Bala சொன்னது… 3/02/2007 02:45:00 PM
@தங்கவேல் __/\__
Boston Bala சொன்னது… 3/02/2007 02:45:00 PM
கருத்துரையிடுக