செவ்வாய், பிப்ரவரி 27, 2007

30+

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30 என்கிறார்கள்.

பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா? சென்னைக் கச்சேரியைப் பின் தொடர்ந்து...

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் நிரலி, பல சமயம் மக்கர் செய்யும். கோபமாய் கத்தும் வாடிக்கையாளரிடம் workaround (Top 20 programmers excuses) சொல்லியேப் பழக்கப்பட்டவன். அப்படி எல்லைகளை தகர்த்தெறிந்து பறப்பது செர்ஜி பூப்காக்களின் வேலை என்பதற்கேற்ப, சில ஆலோசனைகள்.

  1. ஒரு நாளைக்கு ஒரு பின்னூட்டம் மட்டுமே அனுமதிக்கவும். ஃபெப்ரவரி மாதம் என்றால், மார்ச் மாதத்தில் கூட உங்களின் பதிவு முகப்பில் இருக்கும்.

  2. அப்படி முப்பதைத் தாண்டியவுடன், 'இது 31-ஆவது மறுமொழி' என்று புதிய பதிவில் புதிய கணக்கைத் ஆரம்பிக்கவும்.

  3. பத்தைத் தொடும் தருணத்தில், ஒன்பதாவது துலச்சலை தொகுத்து வெளியிட்டு விடவும். (எப்படி: Blogger - how to edit comments | Edit Comments). இதன் மூலம் கிட்டத்தட்ட 90 பின்னூட்டங்கள் வரை முப்பதுக்குள் குண்டுசட்டியாக்கி குதிரையோட்டலாம்.

  4. உங்களுக்கு இன்னாரின் பதிவுகள் பிடிக்காதா? அவர் பதிவை இட்டவுடன் முற்றுகையிடுங்கள். முப்பது பேர்களில், முப்பது பின்னூட்டங்கள் இடுங்கள். ஆளின் பதிவு அம்பேல். (அவர் வெளியிடாவிட்டால், 'பதிவரின் கயமைத்தனம்' என்னும் தலைப்பில் தனிப்பதிவு இடுங்கள்).

  5. முப்பதுக்கு முன் போய் கருத்து சொன்னால், 'எல்லாரும் படித்து விடுவார்கள்'. ஆனால், எருமை மாடு அமிழ்ந்து கிடக்கும் குட்டை மாதிரி பின்னூட்டங்கள் தேங்கிய பிறகு போய் பதில் போட்டால், 'not to publish' என்று வரும் தனி மடலுக்கு பதிலாக, தைரியமாய் சொந்தப் பெயரிலேயே எழுதிவிட்டு வரலாம்.

  6. co.mments மாதிரி சேவையளிக்கும் நிரலிகளுடன் தமிழ்மணம் டீல் போட்டுவிட்டது என்று பதிவெழுதலாம்.

  7. முதல் முப்பதே சோதாதானே... அப்புறம் எதற்கு முப்பத்தொன்று? : Weblog comments (suck (usually)).

  8. பத்து புள்ளிகள் தராவிட்டால், பதிவு நிறைவுறாது என்னும் திட்டத்துக்கு கால்கோள் இட்டு விடாதீர்கள். எனவே...

  9. Pearls Before Swine:



  10. Lio:


    கொசுறு:




சந்தோஷ் சொல்வது போல் 'பதிவர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒண்ணும் செய்ய முடியாது' என்பதற்கேற்ப பின்னூட்டவாசிகள், இந்த 'முப்பதுக்குள் மட்டும்' தடையை, ஆப்பர்ச்சூனிடியாக மாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.


முந்தைய பதிவு: பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்: பிசாசு மொழி

19 கருத்துகள்:

:) சூப்பர் போஸ்ட்

அடடா.. அங்கேயும் போகவிடாம இங்கேயும் போகவிடாம.. என்னதிது.

பாவம் தமிழ்மணம் மக்கள். எத்தன வேலதான் செய்வாங்க?

அடுத்த 'தமிழ்மணம் விற்பனைக்கு' அறிவிப்பு சீக்கிரமே வந்திடும்போல இருக்குது...

:))

@ராம் __/\__

இதுக்கொரு சர்வே போடலாம் போலருக்கே.

:)

// ஒரு நாளைக்கு ஒரு பின்னூட்டம் மட்டுமே அனுமதிக்கவும். ஃபெப்ரவரி மாதம் என்றால், மார்ச் மாதத்தில் கூட உங்களின் பதிவு முகப்பில் இருக்கும்.

# அப்படி முப்பதைத் தாண்டியவுடன், 'இது 31-ஆவது மறுமொழி' என்று புதிய பதிவில் புதிய கணக்கைத் ஆரம்பிக்கவும்//

என்ன பாபா நீங்களே இப்படி குறுக்கு வழியை சொல்லி தரீங்க இது சரியில்லை. திருந்தவிட மாட்டங்கப்பா :))..

@சிறில்

---அங்கேயும் போகவிடாம இங்கேயும் போகவிடாம..---

சினிமாவைப் பார்த்து எல்லாரும் சீரழிஞ்சு சிகரெட் பிடிச்சுத் (The Seoul Times - Link between Tobacco Use and Films) தள்ளுகிறார்கள் என்று பா.ம.க. வலியுறுத்தினாலும், சின்ன வயதிலேயே ரஜினி ரசிகனான நான் வெண்குழல் ஊதாமல் இருப்பதைப் போல் எல்லாரும் நலம் பெற, எல்லாம் வல்ல இறைவரை (இருக்காரா?) வேண்டுகிறேன்.

//எப்படி: Blogger - how to edit comments | Edit Comments//

இதத்தான் பாபா நான் நேத்துல இருந்து ஆராய்ச்சிப் பண்ணிக்கிட்டு இருக்கேன். இது பழைய ப்ளாக்கர் கணக்குல மட்டும்தான் பயன்படுமாம். புது ப்ளாக்கர்ல இதெல்லாத்தையும் தள்ளுபடி பண்ணிட்டாங்க :(((

சர்வேசன்

---இதுக்கொரு சர்வே போடலாம் போலருக்கே.---

கருத்துக்காக என்னுடைய கேள்விகள்:

அ) பின்னூட்டங்கள் எங்கு 'ப்ரேகிங் பாயிண்ட்'டை தொடுகிறது?

1. 30
2. 30 கிலோபைட்
3. முப்பது பின்னூட்டங்களில் முப்பது வார்த்தையைத் தாண்டாத பொழுது
4. பின்னூட்டங்களில் 'கயமை', 'நன்றி', __/\__, 'தூள்' ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றால்


ஆ) பின்னூட்ட ஏற்றத்தாழ்வை நீக்க என்ன செய்யலாம்?

1. ஒருவழிச் சாலைகள் போல், ஒன்-வே பதிவுகள் இடலாம்
2. சோசலிசச் சிந்தனையாக, நிறைய பின்னூட்டம் பெறுவோர், இல்லாதாருக்கு வழங்கலாம்
3. முதலாளித்துவத்தின் வழியில், குறைந்த பின்னூட்டு பெறுவோர், நாளடைவில் மறுமொழிக்கு உகந்த தலைப்பாக தேர்ந்தெடுக்கத் தூண்டலாம்
4. 'அடுத்தாத்து அம்புஜத்தை' கவனியாமல், எட்டாக்கனி என ஈசாப் நீதிக்கதை படிக்கலாம்


இ) பின்னூட்டங்களின் பங்கு

1. ஊக்கத் தொகை
2. நான்காவது எஸ்டேட்
3. முப்பதுக்கு பிறகு வேஸ்ட்
4. படிப்பவர்களின் டேஸ்ட்

சந்தோஷ்

---குறுக்கு வழியை சொல்லி தரீங்க இது சரியில்லை. திருந்தவிட மாட்டங்கப்பா---

மது, மாது, சூதுக்கு அடிமையான மாதிரி திருத்தங்களை சொல்றீங்களே :P

ஜி

---பழைய ப்ளாக்கர் கணக்குல மட்டும்தான்---

இந்த பயன் இருக்கும்போதே கொஞ்சம் இடறியது. நான் என்ன சொன்னேன் என்பதை, இன்னொருத்தருக்கு மாற்றி எழுதும் உரிமை இருப்பது அபாயம் :)

உங்க கேள்விகள பாக்கரதுக்கு முன்னாடியே சர்வே போட்டுட்டேனே. :) பாப்போம் என்ன சொல்றாங்கன்னு.

என்னுடைய பதில்கள்
அ - 3
ஆ - 4
இ - 1

நீங்க சொன்ன வழிகளுக்கு மேல சில வழிகளும் இருக்கு. பதிவா போடவா இல்லை தொழில் ரகசியமா வெச்சுக்கவான்னு யோசிக்கிறேன். :))

பாபா, பின்னூட்டத்தை எடிட் செய்ய நீங்கள் தந்த உரல் பழைய பிளாக்கருத்தான் வேலை செய்யும். புதிய பிளாக்கருக்கு மாறி விட்டால் வேலை செய்யாதென்றே நினைக்கிறேன். நீங்கள் முயன்று பார்த்தீர்களா?

சர்வேசன்

பதிலும் சொல்லிட்டிங்களா...

கணிப்புக்கான உங்க கேள்வி, இன்னும் பரவலாக, மார்க்கெடிங் ரிசர்சுக்கு பயன்படுமாறு இருக்கிறது.

இ.கொ

---பதிவா போடவா இல்லை தொழில் ரகசியமா---

இந்த மாதிரி முக்கியமான சமாசாரம் எல்லாம் அவிழ்த்து விட வேண்டாமா? அப்பொழுதுதானே, என் போன்றவர்களும் அறிந்து பயன்பெறுவார்கள்...

சொல்லுங்க அய்யா :D

இ.கொ

---எடிட் செய்ய நீங்கள் தந்த உரல்---

இப்பொழுதுதான் முழுக்கப் படித்தேன். புதிய ப்ளாகரில் பருப்பு வேகாது என்றிருக்கிறார்கள்.

பின்னூட்டங்களுக்கான செய்தியோடை முகவரியே தருகிறார்களே! இன்னும் ஏன் பழைய நுட்பத்தின் படி, பதிவுக்குள் தேட வேண்டும்?

ஆஹா.. எடுத்துக் கொடுத்துட்டீங்க அம்புட்டு வழியையும்.. இனி அதுக்கு என்ன எல்லாம் சட்டம் வரப் போகுதோ... ம்ஹும் பிரெயின் பிரெயின் ரெயின் ரெயின்..

@தேவ்

---எடுத்துக் கொடுத்துட்டீங்க அம்புட்டு வழியையும்.---

இன்னும் சூட்சுமங்கள் கொடுப்பதாக 'ஐடியா மன்னர்' இ.கொ. வாக்களித்திருக்கிறாரே...

தமிழ்மணம் அறிவிப்புகள் » தமிழ்மணம் மறுமொழி திரட்டுதல்: மேம்படுநிலை

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு