என்ன எழுதுவது என்று தெரியாவிட்டால்
என்னுடைய பதிவின் அடைமொழி வாசகங்களை மாற்றலாம்.
சமீபத்தில் 'டெவில் வியர்ஸ் ப்ராடா' பார்க்கக் கிடைத்தது. தமிழுக்கு நடிப்புச் சுரங்கம் என்றால் சிம்ரன். ஹாலிவுட்டின் தங்கத் தலைவி மெரில் ஸ்ட்ரீப் நடித்த படம். சிம்ரன் போலவே என்றும் பதினாறு. பால்யகால நண்பர்கள் படித்தால், ஸ்ரீதேவியை நெருங்குவதற்கு எவரும் இல்லை என்று சண்டைக்கு வருவார்கள். விசாகப்பட்டினத்திற்கு லொகேஷன் பார்த்து வருபவர்கள், அமர் சிங்காக ஜெயப்பிரதாவிடம் சரண்டையலாம்.
Prada போன்ற காசுக்கு கேடுபிடித்ததை கவனித்தால் ஆபாசம் என்று ஜெஸிலா படம் போடலாம். ஆனால், மெரில் ஸ்ட்ரீப், ஸ்ட்ரீப்டீஸ் எல்லாம் ஆடாமல் வாழ்ந்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களில் எனக்கொரு குறை உண்டு. இது டென்சல் வாஷிங்டன் படம்; இது ஜூலியா ராபர்ட்ஸ் கதை. இப்படி செக்குமாடு சுற்றுவதில்லை. மன்சூரியன் அஃபேரில் வில்லி. அடுத்த ப்ரெய்ரி படம், இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
குறிப்பிட்ட படத்தில் பல நல்ல சொற்றொடர்கள். ஐ.எம்.டி.பி.காம் போல் தமிழில் வரும் பன்ச் வசனங்களைக் கோர்த்து, விக்கிப்பிடியாவில் இணைத்து வைத்தால், வருங்கால சந்ததிக்கு அரிய பொக்கிஷம். 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்பது கூட பாரதி படத்தில் விஷ்க் சத்தத்துடன் வைத்திருக்கலாம். பெரியாருக்கு என்ன செய்கிறாரோ!
மீண்டும் 'டெ.வி.பி' வருகிறேன். அதில் உருவிய புகழ்பெற்ற மேற்கோளை
'India is my home country; America is my hometown.'
மாற்றி ஸ்னாப்ஜட்ஜுக்கு போட்டிருக்கிறேன்.
சமயத்தில் இரண்டாக மாட்டும்.
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவானும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
சைவத்தைப் பரப்பும் சாக்கில் ஔவையார், 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' பாடியிருக்கிறார். சொப்ரானோஸ் பார்த்த போது இரண்டாவது கருத்து மொழி அகப்பட்டது.
அதாகப்பட்டது
“No man, for any considerable period, can wear one face to himself and another to the multitude, without finally getting bewildered as to which one is true.”
இதைத் தூக்கி Nothing Newல் போட்டு வைத்தேன்.
இந்த மாதிரி பதிவெழுதினால் விளங்குகிறதா? கொஞ்ச நேரம் கழித்து படித்து பார்த்தால், காவியத்தை உருவாக்கிய படைப்பாளிக்கு விளங்குமா?
When a man asks for your opinion, it is to endorse his mistake!

