Books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 12, 2012

Boston and New England Readers Meet with S Ramakrishnan

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.

அவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/?page_id=63

இடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு

நாள்: வியாழன், ஜூலை 12, 2012

நேரம்: ஆறு மணி மாலை

முகவரி7 Summer Street  Chelmsford, MA 01824
தொடர்புக்கு: bsubra at gmail dot com

பாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.

சனி, ஜூன் 16, 2012

Meet the Authors event in California: Nanjil Nadan Visit and PA Krishnan Forum


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் .

இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்:

நாஞ்சில் நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு:

ஜூன் - 20 - மாலை 7 மணி முதல் 10 மணி வரை - இடம்: 38884 Stillwater Cmn, Fremont, CA

ஜூன் - 21 - மாலை 7 மணி முதல் 10 மணி வரை - இடம்: 4743 Mendocino Ter, Fremont, CA 94555

கம்ப ராமாயண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் strajan123@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.



ஜூன் 30 - பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி - எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் பி.ஏ.கிருஷ்ணன் படைப்புகள் குறித்த உரை, எழுத்தாளர்களின் ஏற்புரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இடம் பெறும்

இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம், ஸ்டீவன்ஸன் ப்ளவட் , பசியோ பாத்ரே சந்திப்பு, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
நேரம்: 2 மணி முதல் 5 மணி வரை


ஜூலை 1 ஞாயிறு காலை - எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி - சாக்ரமெண்டோ நகரம் - சரியான நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப் படும்




ஜூலை 5 - நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் - இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் - வியாழன் மாலை 7 மணி முதல் - 10 மணி வரை

நேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்களுக்கு
ராம்: 310-420-5465  -- losangelesram@gmail.com
மற்றும்  
ராஜேஷ் 626-848-2102  --- rajeshmadras@gmail.com ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்



அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இப்பகுதி வாழ் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: ராஜன்,             510-825-2971      ,strajan123@gmail.com

சனி, பிப்ரவரி 24, 2007

The abiding lessons of civil-rights-movement-era journalism


கறுப்பர்கள் எவ்வித நிலைக்கு உள்ளாகிறார்கள் என்று மற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமே உணர்ந்து, எழுதி வந்த காலம். ஆப்பிரிக்க அமெரிக்க சஞ்சிகையாளர்களால்தான் நேரடியாக களத்தில், தங்களுக்கு மட்டும் தெரியக்கூடியதை, பிற அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தக் கூடிய நிலை. அப்படி அரிதாக இருந்த வெகு சிலரில் ஒருவரான அலெக்ஸ் வில்சன், இங்கேத் தாக்கப்படுகிறார். மீண்டும் எழுந்திருக்கிறார். பின்னால் இருந்து வெறியோடு உதைக்கப்படும் புகைப்படம்.


புத்தகம்: The Race Beat: The Press, the Civil Rights Struggle, and the Awakening of a Nation: Books: Gene Roberts, Hank Klibanoff

நேர்காணல் & நன்றி: Pressing the issue - News - The Phoenix

முந்தைய பதிவுகள்: Forty Million Dollar Slaves | ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மாதம்

வெள்ளி, பிப்ரவரி 09, 2007

Forty Million Dollar Slaves

சென்ற வாரம். ஞாயிற்றுக்கிழமை. காலை செய்தித்தாள் புரட்டல். மிஷேலின் (Michelle Singletary) பத்தி 'மாலை மலர்' பிட் நோட்டிஸ் தலைப்புடன் சுண்டியிழுக்கிறது. (படிக்க: Athletes Black and Blind)

Color of Money புத்தகக்குழுவின் பரிந்துரையாக "Forty Million Dollar Slaves: The Rise, Fall, and Redemption of the Black Athlete"ஐ சொல்லியிருந்தார். அமெரிக்காவில் ஃபெப்ரவரி மாதம் கறுப்பர் இனவரலாறு மாதமாகக் கொண்டாடுகிறார்கள். (தொடர்பான பதிவு: இந்தியாவில் இனவெறி | உள்ளும் புறமும்)

அமெரிக்க விளையாட்டுகளில் கூடைப்பந்து மிகவும் பிடித்தம். விறுவிறுப்பு நிச்சயம். எண்ணற்ற கறுப்பின வீரர்களில், மைக்கேல் ஜோர்டான் தனித்து தெரிவார். மந்தகாசப் புன்னகை. கொஞ்ச நாள் சிகாகோக் கரையோர வாசம். இவையும் காரணமாக இருக்கும்.

நைக்கி காலணி விளம்பரங்களுக்காக நிறைய சம்பளம் பெறுகிறார். சிலருக்கு வயிற்றெரிச்சல். மிஷேலுக்கு இந்தப் பணத்தை தங்கள் இனத்துக்கு மறு முதலீடு செய்யவில்லையே என்னும் வருத்தம். வில்லியம் (William C. Rhoden) புத்தகமாகவே எழுதி விட்டார்.

கறுப்பினத்தை ஏழ்மையும் வேலயில்லாத் திண்டாட்டமும் பீடித்திருக்கிறது. அவர்களில் பணம் வந்த சிலருக்கோ பதவிசு இல்லை என்கிறார் ஆசிரியர்.

காசு மட்டும் தானம் வழங்கினால் போதுமா? மேற்சென்று, கொஞ்சம் நேரம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டாமா? வருஷத்துக்கு சில தடவை தங்கள் இனத்தவரை சந்தித்தால் போதாது. அவர்களின் சமூக சித்தாந்தத்துக்குக் கொடி பிடிக்க வேண்டும் என்கிறார் புத்தகத்தை எழுதியவர்.

விளையாட்டு வீரர்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஆதிக்க முதலாளிகளின் பிடியை விட்டு ஜோர்டான்கள் வெளிவரவேயில்லை. விசுவாசத்தை விட்டுக் கொடுக்காமல் நன்றியுடன் வாலாட்ட வைக்கிறார்கள்.

மைக்கேல் ஜார்டனுக்கு இருக்கும் மதிப்பை சரிவர பயன்படுத்தலாம்.

  • பதின்ம வயதுக்கு வந்தவுடன் சீர்திருத்தப் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுபவர்களுக்காக...
  • கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக...
  • டோப்பு விற்று பாழாய்ப் போகும் சிறார்களுக்காக...
  • சரியான வழிகாட்டி இல்லாமல் தறுதலையாய் சுற்றுபவர்களுக்காக...
  • கழுத்தில் காசுமாலை, கையில் தோட்டாவுடன் நாகரிகத்தைப் பின்பற்றுபவர்களுக்காக...
  • பள்ளிப் படிப்புக்கு தூண்டுகோல் இல்லாமல், குடும்ப அமைப்பிலும் பின்புலம் கிடைக்காதவர்களுக்காக...

அணியில் ஆடும்போது கைகோர்த்து வெற்றியை எட்டுகிறார்கள். மைதானத்தை விட்டு வந்தவுடன் விளையாட்டாக நினைத்து தங்கள் குழுவிற்காக குரல், காசு, கொடுக்கலாமே!

அசல் விமர்சனம்

திங்கள், பிப்ரவரி 05, 2007

The 48 Laws of Power


  1. Never Outshine the Master

  2. தலைவனின் தோள் மட்டுமே வளர்
    உங்களுக்கு மேல் இருப்பவர் அந்த இடத்திலேயே வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கவரும் நோக்கத்தோடு அதீதமாக செயல்பட்டால், 'பெரியவர்'களுக்கு வயிற்றைக் கலக்கும். மேலதிகாரிகளை புத்திசாலியாகக் காட்டி வைத்திருப்பதுதான் சாமர்த்தியம்.

  3. Never put too Much Trust in Friends, Learn how to use Enemies

  4. நண்பர்களை நம்பாதே. எதிரிகளை உபயோகிக்க அறி
    தோழர்கள் பொறாமை பிடித்தவர்கள். முதுகில் குத்திவிடும் ஆபத்தும் உண்டு. கொஞ்ச நாள் முன்னாடி பகைத்துக் கொண்டவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள். பழைய பகையை ஆற்றுப்படுத்தும் பயம் கொண்ட கடமை உணர்ச்சியுடன் செயல்படுவான். உனக்கு எதிரியே இல்லை என்றால், எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து யோசி.

  5. Conceal your Intentions

  6. நோக்கங்களை புதை
    ஆழ் எண்ணங்களை மறை. செயல்களின் பின்னிருக்கும் காரணங்களை வெளிக்காட்டாதே. நீ என்ன செய்யப் போகிறாய் என்று அவர்களுக்கு விளங்காவிட்டால், எப்படி உன்னுடன் சண்டைக்கு வரமுடியும்? முடிந்தவரை தவறான பாதையில் இட்டுச் சென்று, புகை மண்டலத்தில் இருத்தி வைத்திருந்தால், அவர்களுக்கு தெளிவு பிறப்பதற்குள், உன் காரியம் கடையேறியிருக்கும்.

  7. Always Say Less than Necessary

  8. சுருங்க சொல்
    புரியாத சொற்றொடர்களை கையாள். எல்லா இடத்திலும், ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டிருந்தால், உனக்குக் கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். வெட்டு ஒன்று; துண்டு இரண்டாக போட்டு உடைக்காமல், கழுவுகிற மீனில் நழுவும் பாணியில் எழுது. ஆதிக்கவாதிகள் வாயைத் திறந்தால், முத்து உதிர்வது போல் குறைவாகப் பேசுபவர்கள்.

  9. So Much Depends on Reputation - Guard it with your Life

  10. கீர்த்தியை கா
    ஆளுமையின் முக்கிய அங்கம் சமூகத்தில் நற்பெயர். நல்ல பெயர் எடுத்திருப்பதனாலேயே, பிறரை மிரட்டி அடக்கலாம். துளி கீறல் விழுந்தாலும், காற்றில் பறக்கும் பஞ்சு கூட பேப்பர் வெயிட்டாக கல்லெறிந்து ஏளனம் செய்துவிடும். சேறு அடிக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கவனித்து, அதற்கேற்ப காய்களை நகர்த்து. எதிரிகளுக்கு அபகீர்த்தி வருமாறு சேறு அடி. அடித்தபிறகு அவர்களின் மதிப்பு சந்தி சிரிப்பதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்.


மற்றவற்றையும் அறிய: The 48 Laws of Power | The 48 Laws of Power - Wikipedia

பழைய இடுகைகள் முகப்பு