வெள்ளி, பிப்ரவரி 09, 2007

Forty Million Dollar Slaves

சென்ற வாரம். ஞாயிற்றுக்கிழமை. காலை செய்தித்தாள் புரட்டல். மிஷேலின் (Michelle Singletary) பத்தி 'மாலை மலர்' பிட் நோட்டிஸ் தலைப்புடன் சுண்டியிழுக்கிறது. (படிக்க: Athletes Black and Blind)

Color of Money புத்தகக்குழுவின் பரிந்துரையாக "Forty Million Dollar Slaves: The Rise, Fall, and Redemption of the Black Athlete"ஐ சொல்லியிருந்தார். அமெரிக்காவில் ஃபெப்ரவரி மாதம் கறுப்பர் இனவரலாறு மாதமாகக் கொண்டாடுகிறார்கள். (தொடர்பான பதிவு: இந்தியாவில் இனவெறி | உள்ளும் புறமும்)

அமெரிக்க விளையாட்டுகளில் கூடைப்பந்து மிகவும் பிடித்தம். விறுவிறுப்பு நிச்சயம். எண்ணற்ற கறுப்பின வீரர்களில், மைக்கேல் ஜோர்டான் தனித்து தெரிவார். மந்தகாசப் புன்னகை. கொஞ்ச நாள் சிகாகோக் கரையோர வாசம். இவையும் காரணமாக இருக்கும்.

நைக்கி காலணி விளம்பரங்களுக்காக நிறைய சம்பளம் பெறுகிறார். சிலருக்கு வயிற்றெரிச்சல். மிஷேலுக்கு இந்தப் பணத்தை தங்கள் இனத்துக்கு மறு முதலீடு செய்யவில்லையே என்னும் வருத்தம். வில்லியம் (William C. Rhoden) புத்தகமாகவே எழுதி விட்டார்.

கறுப்பினத்தை ஏழ்மையும் வேலயில்லாத் திண்டாட்டமும் பீடித்திருக்கிறது. அவர்களில் பணம் வந்த சிலருக்கோ பதவிசு இல்லை என்கிறார் ஆசிரியர்.

காசு மட்டும் தானம் வழங்கினால் போதுமா? மேற்சென்று, கொஞ்சம் நேரம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டாமா? வருஷத்துக்கு சில தடவை தங்கள் இனத்தவரை சந்தித்தால் போதாது. அவர்களின் சமூக சித்தாந்தத்துக்குக் கொடி பிடிக்க வேண்டும் என்கிறார் புத்தகத்தை எழுதியவர்.

விளையாட்டு வீரர்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஆதிக்க முதலாளிகளின் பிடியை விட்டு ஜோர்டான்கள் வெளிவரவேயில்லை. விசுவாசத்தை விட்டுக் கொடுக்காமல் நன்றியுடன் வாலாட்ட வைக்கிறார்கள்.

மைக்கேல் ஜார்டனுக்கு இருக்கும் மதிப்பை சரிவர பயன்படுத்தலாம்.

  • பதின்ம வயதுக்கு வந்தவுடன் சீர்திருத்தப் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுபவர்களுக்காக...
  • கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக...
  • டோப்பு விற்று பாழாய்ப் போகும் சிறார்களுக்காக...
  • சரியான வழிகாட்டி இல்லாமல் தறுதலையாய் சுற்றுபவர்களுக்காக...
  • கழுத்தில் காசுமாலை, கையில் தோட்டாவுடன் நாகரிகத்தைப் பின்பற்றுபவர்களுக்காக...
  • பள்ளிப் படிப்புக்கு தூண்டுகோல் இல்லாமல், குடும்ப அமைப்பிலும் பின்புலம் கிடைக்காதவர்களுக்காக...

அணியில் ஆடும்போது கைகோர்த்து வெற்றியை எட்டுகிறார்கள். மைதானத்தை விட்டு வந்தவுடன் விளையாட்டாக நினைத்து தங்கள் குழுவிற்காக குரல், காசு, கொடுக்கலாமே!

அசல் விமர்சனம்

2 கருத்துகள்:

அவர்கள் விளம்பரம் இல்லாமல் உதவ கூடியவர்களாக இருக்கலாம் அல்லவா?

வாஷிங்டன் போஸ்ட் பத்தி எழுத்தாளர் அவதூறாக, சக ஆப்பிரிக்க அமெரிக்கரை, ஆராய்ந்து அறியாமல் மட்டம் தட்டுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு