விகடனில் வந்த குமுதம்
நன்றி: விகடன் (சந்தா கட்டாதவர்களின் வசதிக்கு: IdlyVadai - இட்லிவடை: வழ்த்துக்கள் பாஸ்டன் பாலா
'முதல்ல உங்க குழு சம்பந்தமான வலைப்பதிவு' என்று அவரும், 'இட்லி வடை கடைக்காரர் இவர்தான்' என்று விகடனும் சொல்வதை மறுக்க வேண்டும். நான் அவன் இல்லை.
விகடனில் வந்தது மகிழ்ச்சியான விஷயம். மறுக்க முடியாது. சந்தோஷமாக இருக்கிறது.
புதிதாக பதிவு எதுவும் போடாத நிலையில்; நாளொன்றுக்கு சதம் அடித்துக் கொண்டிருந்த நிலையில்; இன்று 500+ வருகையாளர்கள். பாதிக்கு மேற்பட்டோர் முதல்முறையாக வந்ததாக குக்கீ வைத்த புள்ளிவிவரம் அள்ளிவிடுகிறது.
ஆசையுடன் ஓடோடி வருபவர்களை தற்போதைய மோகமான ஸ்னாப் ஜட்ஜ்மென்ட் பதிவுக்கு வரவேற்கிறேன்.
விகடன் வாசகர்களைக் குழப்பும் எண்ணத்துடன் சில பழங்கதைகள்:
1. என்னைக் குறித்த அறிமுகம்
2. மேலும் மேலும் அறிமுகம்
பயோடேட்டா போடறேன்...
பெயர்: பாபா
வயது: திருநாவுக்கரசராக தோற்றம் காண்பித்தாலும் திருஞானசம்பந்தராக நினைத்துக் கொள்வது
நண்பர்கள்: ஆர்குட், லிங்க்ட் இன், ஃபேஸ்புக்களில் இருப்பதாக எண்ணுவது
திடீர் எதிரிகள்: இ-தமிழுக்கான சுட்டியை நீக்கிவிடுபவர்கள்
நீண்டகால எதிரிகள்: இ-தமிழில் இடது, வலதாக சுட்டியைப் பெற்றவர்கள்
வேலை/தொழில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
பழைய பொழுதுபோக்கு: கட்/காபி/பேஸ்ட்
புதிய பொழுதுபோக்கு: தான் சார்ந்த குழுப்பதிவுகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு - பிள்ளை பிடிப்பது
பிடித்த வேலை: பூங்காவுக்கு சொன்னதேதான்
பிடித்த இடம்: Blogger: ... - Moderate Comments
பிடித்த மொழி: தமிழ், இடுகையின் தலைப்புகளுக்கல்ல
மறந்தது: ராயர் காப்பி கிளப்
மறக்காதது: இ-தமிழை வலைப்பதிவுலகின் குமுதம் என்று பா ராகவன் அழைத்ததை
விரும்புவது: தனக்கு சர்வாதிகாரம்; மற்றவர்களுக்கு தணிக்கை
எரிச்சல்: My Allergy to Rising Sun & Two Leaves
சமீபத்திய சாதனை: 1500+ கட்டுரைகளை காப்பிரைட் கவலைப்படாமல் சேமித்தது
நீண்டகால சாதனை: மற்றவர் பலத்தில் பிழைத்திருப்பது
தினமலர் போல், இந்தியா டுடே போல் விகடனும் வலைப்பதிவை அறிமுகம் செய்வது பயனில்லாத விஷயம்.
இந்த மாதிரி 'வாரம் ஒரு வலையகம்' பரிந்துரைப்பதால் அந்த வாரத்துக்கு வேண்டுமானால் வாசகர் எண்ணிக்கை கூடலாம். அவர்கள் தமிழ்மணத்தின் நீண்ட கால சந்தாதாரராகவோ, செய்தியோடையை ப்ளாக்லைன்ஸில் போட்டுக் கொள்பவராகவோ மாற மாட்டார்.
ஒரு தரம் வருவார்கள்; மேலோட்டமாக பார்ப்பார்கள்; அதிகபட்சமாக ஈர்க்கப்பட்டால், ரொம்ப காலமாக கணினிப்பயனராக இருந்தால் டெல்.இசி.யஸ். இல்லையென்றால் புத்தகக்குறியில் பத்தோடு பதினொன்று. Fill it; shut it; forget it வர்க்கம்.
இதற்கு பதிலாக விகடனில் வெளியாகும் பல்வேறு பகுதிகளான உடல்நலம், உலக சினிமா, சமையற் குறிப்பு, சிறுகதை, கருத்துப் பத்தி போன்றவற்றில் வலைப்பதிவுகளில் ஏற்கனவே வெளியானதை அச்சு ஊடகத்துக்கு (ஏற்றவாறு எடிட் செய்து) கொண்டு செல்லும் வரை, இந்த மாதிரி வெற்றுப் பரிந்துரைகளால் பலனேதும் கிடைக்காது.
விகடன் மாதிரி பத்திரிகைகளில் இடம் பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கும்மி மொக்கைகள் (தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படி?) குறையும். தரமான திரை விமர்சனம் முதல் ஆதாரங்கள் கூடிய நறுக்+சுறுக் சிந்தனைகளை கட்டுரையாக்குவதும் infectious ஆக அனைத்துப் பதிவரையும் தொற்றிக் கொள்ளும்.
ஏன்?
'சென்னை 600028' பதிவை பார்த்தவுடன் படம் பார்க்கும் ஆசை வரும். அமெரிக்காவில் படம் வெளியாகாது. இந்தியக் கடைகளில் இதுபோன்ற நட்சத்திர அந்தஸ்து இல்லாதவற்றுக்கு இடம் கிடைக்காது. டவுன்லோட் செய்ய மனம் ஒப்பாது.
விகடன் வாசிப்பாளரும் இப்படித்தான். புத்தகத்தில் படிக்கிறார். வீட்டில் இருக்கும் இணையத்தை மற்றவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள். அலுவலில் விகடன் பிரதி கையோடு இருக்காது. அடுத்த வாரம் கற்றது தமிழுக்கு விமர்சனம் போட்டுவிட 'அப்படியா' என்பதுடன் படம் பார்த்த திருப்தி முடிந்துவிடும்.
அபார்ட்மென்ட்டுக்கு முன்பதிவு செய்து கொள்ளாத, சொந்த வீடு தாகம் கொண்ட அந்தக் காலத்தில் எல்லாப் பணமும் போட்டு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ப்ளான் ஒப்பந்தம் வாங்கி, அலைந்து திரிந்து செங்கல் லோடு போட்டு, பக்கத்துவீட்டுக்காரர்களின் பொறாமை கலந்த முகஞ்சுளிப்பை புறந்தள்ளி, பெருமிதத்தோடு நிலைப்படி பூஜை செய்வோம்.
தமிழ்நாட்டு தினசரிகளில் 'சற்றுமுன் கார்னர்', கல்கிக்கும் மாற்று தளத்தும் ஒப்பந்தம், குமுதத்தில் மூன்றரைப் பக்கங்களுக்கு கில்லியின் பரிந்துரைகள், போன்ற காலம் வருவதற்கு இந்த மாதிரி அறிமுகங்கள் 'நிலைப்படி பூஜை'.

