வெள்ளி, அக்டோபர் 19, 2007

விகடனில் வந்த குமுதம்



நன்றி: விகடன் (சந்தா கட்டாதவர்களின் வசதிக்கு: IdlyVadai - இட்லிவடை: ழ்த்துக்கள் பாஸ்டன் பாலா

'முதல்ல உங்க குழு சம்பந்தமான வலைப்பதிவு' என்று அவரும், 'இட்லி வடை கடைக்காரர் இவர்தான்' என்று விகடனும் சொல்வதை மறுக்க வேண்டும். நான் அவன் இல்லை.

விகடனில் வந்தது மகிழ்ச்சியான விஷயம். மறுக்க முடியாது. சந்தோஷமாக இருக்கிறது.

புதிதாக பதிவு எதுவும் போடாத நிலையில்; நாளொன்றுக்கு சதம் அடித்துக் கொண்டிருந்த நிலையில்; இன்று 500+ வருகையாளர்கள். பாதிக்கு மேற்பட்டோர் முதல்முறையாக வந்ததாக குக்கீ வைத்த புள்ளிவிவரம் அள்ளிவிடுகிறது.

ஆசையுடன் ஓடோடி வருபவர்களை தற்போதைய மோகமான ஸ்னாப் ஜட்ஜ்மென்ட் பதிவுக்கு வரவேற்கிறேன்.

விகடன் வாசகர்களைக் குழப்பும் எண்ணத்துடன் சில பழங்கதைகள்:

1. என்னைக் குறித்த அறிமுகம்

2. மேலும் மேலும் அறிமுகம்

பயோடேட்டா போடறேன்...

பெயர்: பாபா

வயது: திருநாவுக்கரசராக தோற்றம் காண்பித்தாலும் திருஞானசம்பந்தராக நினைத்துக் கொள்வது

நண்பர்கள்: ஆர்குட், லிங்க்ட் இன், ஃபேஸ்புக்களில் இருப்பதாக எண்ணுவது

திடீர் எதிரிகள்: இ-தமிழுக்கான சுட்டியை நீக்கிவிடுபவர்கள்

நீண்டகால எதிரிகள்: இ-தமிழில் இடது, வலதாக சுட்டியைப் பெற்றவர்கள்

வேலை/தொழில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை

பழைய பொழுதுபோக்கு: கட்/காபி/பேஸ்ட்

புதிய பொழுதுபோக்கு: தான் சார்ந்த குழுப்பதிவுகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு - பிள்ளை பிடிப்பது

பிடித்த வேலை: பூங்காவுக்கு சொன்னதேதான்

பிடித்த இடம்: Blogger: ... - Moderate Comments

பிடித்த மொழி: தமிழ், இடுகையின் தலைப்புகளுக்கல்ல

மறந்தது: ராயர் காப்பி கிளப்

மறக்காதது: இ-தமிழை வலைப்பதிவுலகின் குமுதம் என்று பா ராகவன் அழைத்ததை

விரும்புவது: தனக்கு சர்வாதிகாரம்; மற்றவர்களுக்கு தணிக்கை

எரிச்சல்: My Allergy to Rising Sun & Two Leaves

சமீபத்திய சாதனை: 1500+ கட்டுரைகளை காப்பிரைட் கவலைப்படாமல் சேமித்தது

நீண்டகால சாதனை: மற்றவர் பலத்தில் பிழைத்திருப்பது



தினமலர் போல், இந்தியா டுடே போல் விகடனும் வலைப்பதிவை அறிமுகம் செய்வது பயனில்லாத விஷயம்.

இந்த மாதிரி 'வாரம் ஒரு வலையகம்' பரிந்துரைப்பதால் அந்த வாரத்துக்கு வேண்டுமானால் வாசகர் எண்ணிக்கை கூடலாம். அவர்கள் தமிழ்மணத்தின் நீண்ட கால சந்தாதாரராகவோ, செய்தியோடையை ப்ளாக்லைன்ஸில் போட்டுக் கொள்பவராகவோ மாற மாட்டார்.

ஒரு தரம் வருவார்கள்; மேலோட்டமாக பார்ப்பார்கள்; அதிகபட்சமாக ஈர்க்கப்பட்டால், ரொம்ப காலமாக கணினிப்பயனராக இருந்தால் டெல்.இசி.யஸ். இல்லையென்றால் புத்தகக்குறியில் பத்தோடு பதினொன்று. Fill it; shut it; forget it வர்க்கம்.

இதற்கு பதிலாக விகடனில் வெளியாகும் பல்வேறு பகுதிகளான உடல்நலம், உலக சினிமா, சமையற் குறிப்பு, சிறுகதை, கருத்துப் பத்தி போன்றவற்றில் வலைப்பதிவுகளில் ஏற்கனவே வெளியானதை அச்சு ஊடகத்துக்கு (ஏற்றவாறு எடிட் செய்து) கொண்டு செல்லும் வரை, இந்த மாதிரி வெற்றுப் பரிந்துரைகளால் பலனேதும் கிடைக்காது.

விகடன் மாதிரி பத்திரிகைகளில் இடம் பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கும்மி மொக்கைகள் (தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படி?) குறையும். தரமான திரை விமர்சனம் முதல் ஆதாரங்கள் கூடிய நறுக்+சுறுக் சிந்தனைகளை கட்டுரையாக்குவதும் infectious ஆக அனைத்துப் பதிவரையும் தொற்றிக் கொள்ளும்.

ஏன்?

'சென்னை 600028' பதிவை பார்த்தவுடன் படம் பார்க்கும் ஆசை வரும். அமெரிக்காவில் படம் வெளியாகாது. இந்தியக் கடைகளில் இதுபோன்ற நட்சத்திர அந்தஸ்து இல்லாதவற்றுக்கு இடம் கிடைக்காது. டவுன்லோட் செய்ய மனம் ஒப்பாது.

விகடன் வாசிப்பாளரும் இப்படித்தான். புத்தகத்தில் படிக்கிறார். வீட்டில் இருக்கும் இணையத்தை மற்றவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள். அலுவலில் விகடன் பிரதி கையோடு இருக்காது. அடுத்த வாரம் கற்றது தமிழுக்கு விமர்சனம் போட்டுவிட 'அப்படியா' என்பதுடன் படம் பார்த்த திருப்தி முடிந்துவிடும்.

அபார்ட்மென்ட்டுக்கு முன்பதிவு செய்து கொள்ளாத, சொந்த வீடு தாகம் கொண்ட அந்தக் காலத்தில் எல்லாப் பணமும் போட்டு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ப்ளான் ஒப்பந்தம் வாங்கி, அலைந்து திரிந்து செங்கல் லோடு போட்டு, பக்கத்துவீட்டுக்காரர்களின் பொறாமை கலந்த முகஞ்சுளிப்பை புறந்தள்ளி, பெருமிதத்தோடு நிலைப்படி பூஜை செய்வோம்.

தமிழ்நாட்டு தினசரிகளில் 'சற்றுமுன் கார்னர்', கல்கிக்கும் மாற்று தளத்தும் ஒப்பந்தம், குமுதத்தில் மூன்றரைப் பக்கங்களுக்கு கில்லியின் பரிந்துரைகள், போன்ற காலம் வருவதற்கு இந்த மாதிரி அறிமுகங்கள் 'நிலைப்படி பூஜை'.

53 கருத்துகள்:

வாழ்த்துக்கள் பாலா !

வாழ்த்துக்கள் தல!

//தமிழ்நாட்டு தினசரிகளில் 'சற்றுமுன் கார்னர்', கல்கிக்கும் மாற்று தளத்தும் ஒப்பந்தம், குமுதத்தில் மூன்றரைப் பக்கங்களுக்கு கில்லியின் பரிந்துரைகள், போன்ற காலம் வருவதற்கு இந்த மாதிரி அறிமுகங்கள் 'நிலைப்படி பூஜை'.//

என் எண்ணமும் இதுவே. தற்போது செய்யப்படும் அறிமுகங்களால் வலைப்பூ பற்றி சாதாரண பொத ஜன வாசகர் கூட்டம் அதிகரிக்கபோவதில்லை. அதற்கு பதிலாக வலைப்பூவிலிருந்து நல்ல கருத்துள்ள பதிவுகளை அப்படியே இரண்டு பக்கத்திற்கு (சினிமா ஸ்டில்லுகு பதிலாக)போட்டால் சற்று பிரயோசனப்படலாம். :)

பாபா

கலக்குறீங்க, அடுத்தது கோடம்பாக்கத்தில் அரிதாரம் தான்னு பட்சி சொல்லுது ;)

வாழ்த்துக்கள் தல!!

//'இட்லி வடை கடைக்காரர் இவர்தான்' என்று விகடனும் சொல்வதை மறுக்க வேண்டும். நான் அவன் இல்லை.//

அப்ப கடேசில நான் தான் இட்லிவடையா? சொல்லவேயில்ல :-)

வாழ்த்துக்கள் பா.பா

வாழ்த்துக்கள் பாலா.

ஏன் இப்படிக்கூட நடக்கலாம்.
விகடன்ல இந்த வாரம்..
குமுதத்தில கடைசிப்பக்கம் இந்த செய்தி பாருங்க அப்படின்னு நாமசுட்டி கொடுக்கிற நாட்கள் வரலாம்:)))

விகடனில் வலைப்பதிவு பற்றிய குறிப்புகள் இடம்பெறுவதை வரவேற்கிறேன் நண்பரே.எம் போன்ற வாசகர்களுக்கு சிறந்த வலைத்தளங்களைத் தேடிச்சென்று வாசிப்பது சற்று இயலாத காரியம்.
விகடன் சிறந்ததை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் எமக்குச் சென்று பார்ப்பதும்,வாசிப்பதும் மிக இலகுவாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்...பயோ டேட்டா பகுதிக்குப் பிறகு என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. ஜெயமோகனின் பழைய திண்ணைக் கட்டுரை படித்தாற் போன்று இருந்தது :).

கோவி, நன்றி.

பதிலாக ஒரு கேள்வி:
ஆச்சரியக்குறிக்கும் வார்த்தைக்கும் இடைவெளி விட்டால் மைக்ரோசாஃப்ட் வோர்ட், 'இலக்கணப் பிழை' என்று சுட்டிக் காட்டும்.

அதே விதி தமிழுக்கும் பொருந்துமா? (இடைவெளி கிடையாது)
அல்லது பொருந்தாதா ? (இடைவெளி உண்டு)

இ.கொ., நன்றி.

பதிலாக ஒரு கேள்வி:
சமீபத்திய பதிவர் சந்திப்பு ஒன்றில் 'தல என்று விளிப்பது திராவிட கலாச்சாரம்' என்று பற்றிக் கொள்ளும் பதிவுத் தலைப்பு அலசப்பட்டது.

அப்படியா? (என்று விக்கிப்பசங்களிடம் கேட்டால் பதில் வருமா)

அனுசூயா,

---வலைப்பூவிலிருந்து நல்ல கருத்துள்ள பதிவுகளை அப்படியே இரண்டு பக்கத்திற்கு---

100 சதவிகிதம் ஒப்புக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் பாலாஜி.நேற்று பார்த்தபின் மடலிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவள் விகடனில் இணையத்து இளவரசிகள் என்று பொன்ஸ், லஷ்மி, செல்வநாயகி, தமிழ்நதி ஆகியோரின் குறிப்புகளும் சின்ன மேற்கோட்களும் வந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருந்தது.

பாபா, போனால் போகிறது என்று ஒரு வாழ்த்து சொல்லிடரேன் :-) ஆனால் பதிவு எதுவும் போடாமல் "சுட்டவைகளை" மட்டும்
எவ்வளவு நாள் தொடர உத்தேசம்?

கலக்கல்ஸ் ஆஃப் பாஸ்டன்... :)))

//பதிலாக ஒரு கேள்வி:
சமீபத்திய பதிவர் சந்திப்பு ஒன்றில் 'தல என்று விளிப்பது திராவிட கலாச்சாரம்' என்று பற்றிக் கொள்ளும் பதிவுத் தலைப்பு அலசப்பட்டது.//

வாழ்த்துக்கள் தல ;)

//இதற்கு பதிலாக விகடனில் வெளியாகும் பல்வேறு பகுதிகளான உடல்நலம், உலக சினிமா, சமையற் குறிப்பு, சிறுகதை, கருத்துப் பத்தி போன்றவற்றில் வலைப்பதிவுகளில் ஏற்கனவே வெளியானதை அச்சு ஊடகத்துக்கு (ஏற்றவாறு எடிட் செய்து) கொண்டு செல்லும் வரை, இந்த மாதிரி வெற்றுப் பரிந்துரைகளால் பலனேதும் கிடைக்காது.

விகடன் மாதிரி பத்திரிகைகளில் இடம் பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கும்மி மொக்கைகள் (தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படி?) குறையும். தரமான திரை விமர்சனம் முதல் ஆதாரங்கள் கூடிய நறுக்+சுறுக் சிந்தனைகளை கட்டுரையாக்குவதும் infectious ஆக அனைத்துப் பதிவரையும் தொற்றிக் கொள்ளும்.//

ரிப்பீட்டு...

//கோவி, நன்றி.

பதிலாக ஒரு கேள்வி:
ஆச்சரியக்குறிக்கும் வார்த்தைக்கும் இடைவெளி விட்டால் மைக்ரோசாஃப்ட் வோர்ட், 'இலக்கணப் பிழை' என்று சுட்டிக் காட்டும்.

அதே விதி தமிழுக்கும் பொருந்துமா? (இடைவெளி கிடையாது)
அல்லது பொருந்தாதா ? (இடைவெளி உண்டு)//

தமிழில் வியப்புக்குறி ஆங்கிலத்தைப் பார்த்து சேர்த்துக் கொண்டதே. எனவே உங்கள் கேள்விக்கான விடை என்னிடம் இல்லை.

நான் பொதுவாக இடுகைதலைப்பிலும் வியப்புக்குறி பயன்படுத்துவேன். முற்றுப்புள்ளியைவிட வியப்புக்குறியை நான் விரும்புகிறேன் என்பதைத் தவிர எந்த பொருளிலும் இல்லை !
:)

வாழ்த்து(க்)கள் பாலா

இந்த அறிவிப்பிலேயே ஏகாப்பட்ட குசும்புகள்.தல.நீங்க்க பெர்ருய ஆலு

கானா,

---அடுத்தது கோடம்பாக்கத்தில் அரிதாரம் தான்னு ---

நானே தயாரித்தால்தான் உண்டு. வலைப்பதிவதற்கே மகளிடமிருந்து(ம்) கிடைக்கும் குற்றவுணர்வு கலந்த கண்டிப்பு தாங்கவில்லை

கப்பி, __/\__

பிரகாஷ்,

---கடேசில நான் தான் இட்லிவடையா---

அப்ப முதல்ல யாரு

வினையூக்கி, :)

வல்லி,

---விகடன்ல இந்த வாரம்..
குமுதத்தில கடைசிப்பக்கம் ---

ஆங்கில ஊடகங்களை முந்திக் கொண்டு, இதிலாவது தமிழ் பத்திரிகைகள்/தினசரிகள் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பது என் அவா.

ரிஷான்,

---விகடன் சிறந்ததை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் ---

நன்றி

---பகுதிக்குப் பிறகு என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை.---

ரொம்ப சுத்தி வுட்டுட்டேனா... இருந்தாலும் ஜெமோ-வை உள்ளே இழுத்தது பாவம் :D

ஜி... வாங்க

---பதிவு எதுவும் போடாமல் "சுட்டவைகளை" மட்டும் எவ்வளவு நாள் தொடர உத்தேசம்---

வணிக சஞ்சிகைகள் யாராவது வழக்கு தொடுத்து, மாலன் புகழ் டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் பெயரிலி புகழ் தி ஹிந்து வரை எடிட்டோரியல் போடும் வரை :P

வெட்டிப்பயல்... வணக்கம்

கோவி,

---முற்றுப்புள்ளியைவிட வியப்புக்குறியை நான் விரும்புகிறேன்---

ரொம்ப ஆச்சரியப்படறீங்க

பத்மா!

தகவலுக்கு நன்றி. நிச்சயம் தவற விட்டிருப்பேன். இப்போது சுட்டாச்சு... சுட்டாச்சு...

இணையத்து இளவரசிகள் - அவள் விகடன்

துளசி... நன்றி

---வாழ்த்து(க்)கள்---

நீங்க மட்டும்தான் நடுநிலையா இரண்டு சாராரையும் ஆதரிக்கறீங்க (வாழ்த்துகள் & வாழ்த்துக்கள்)

என்னுடைய மனு: வாழ்த்து கட்சியையும் ஆதரிக்கணும் :))

வாழ்த்துக்கள் பாபா :)

BaBa,

Best Wishes!

வாழ்த்துக்கள் பாலா !
அப்படியே BBC, Times ன்னு போய்ருவீங்க...

சூப்பர் விமர்சனம் பாபா..

இங்கும் ஒரு வாழ்த்துக்கள்

/பதிலாக ஒரு கேள்வி:
சமீபத்திய பதிவர் சந்திப்பு ஒன்றில் 'தல என்று விளிப்பது திராவிட கலாச்சாரம்' என்று பற்றிக் கொள்ளும் பதிவுத் தலைப்பு அலசப்பட்டது.

அப்படியா? (என்று விக்கிப்பசங்களிடம் கேட்டால் பதில் வருமா)//

ஆமாம் - கலாச்சாரத்திற்கும் பதில் வரும் என்பதற்கும் :))

வாழ்த்துக்கள் பாலா.....

சேதுக்கரசி

தங்களின் உற்சாகம் & ஊக்கம் தொற்றிக் கொள்ள வைக்கிறது. நன்றிகள் பல

சிவா,

உங்களின் மறுமொழி பூஸ்ட்டும் பியரும் கலந்தடித்த கிறக்கம் கொடுக்குதுங்க :)

இளா

பிபிசி: - பிசாத்து பிச்சுமணி சிகாமணிகள்தானே சொல்றீங்க :D

நாகை சிவா...

உங்கள் வாழ்த்துகள் என்றுமே ஸ்பெசல் :)

ராதா... நன்றி!!

கொத்ஸ்... பதிலுக்கு பதிலெடுக்கும் கலாச்சாரம் :)

வாழ்த்துக்கள் பாலா !!

வாழ்த்துக்கள் பாலா !

வாவ்..
இப்பத்தான் பாக்குறேன். வாழ்த்துக்கள் தல. நீங்க சொல்லியிருக்கும் கருத்தோடு ஒத்துப்பொகிறேன். பத்திரிகைகள் பஹிவர்களை அறிமுகப்படுத்துவதோடு நில்லாமல் இங்கிருந்து எடுத்தாழ்வது சிறப்பாயிருக்கும்.

பதிவுலகம் இன்னும் சீர் பட இது உந்துதலாக இருக்கும்.

வாழ்த்துக்கள்.

மனமார்ந்த வாழ்த்துகள் பாபா:-)

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

வாழ்த்துக்கள் பாலா!

உங்கள் தளத்திற்கு வருகை முதல் தடவை. தகவலை கோர்க்கின்ற விதத்தில் வட அமெரிக்க பாதிப்பு இருக்கின்றது தெரிகின்றது. இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கின்றீர்கள் என்றால் உங்கள் பிள்ளை " அப்பாவிற்கு computer" தான் என்று சொல்வதில் தவறில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.

அட...இந்த மேட்டர் இத்தனை நாளாய் எப்படி கண்ணில் படாமல் இருந்தது??

மனமார்ந்த வாழ்த்துகள் பாபா:-)

//தினமலர் போல், இந்தியா டுடே போல் விகடனும் வலைப்பதிவை அறிமுகம் செய்வது பயனில்லாத விஷயம்.

இந்த மாதிரி 'வாரம் ஒரு வலையகம்' பரிந்துரைப்பதால் அந்த வாரத்துக்கு வேண்டுமானால் வாசகர் எண்ணிக்கை கூடலாம். அவர்கள் தமிழ்மணத்தின் நீண்ட கால சந்தாதாரராகவோ, செய்தியோடையை ப்ளாக்லைன்ஸில் போட்டுக் கொள்பவராகவோ மாற மாட்டார்.

ஒரு தரம் வருவார்கள்; மேலோட்டமாக பார்ப்பார்கள்; அதிகபட்சமாக ஈர்க்கப்பட்டால், ரொம்ப காலமாக கணினிப்பயனராக இருந்தால் டெல்.இசி.யஸ். இல்லையென்றால் புத்தகக்குறியில் பத்தோடு பதினொன்று. Fill it; shut it; forget it வர்க்கம்.

இதற்கு பதிலாக விகடனில் வெளியாகும் பல்வேறு பகுதிகளான உடல்நலம், உலக சினிமா, சமையற் குறிப்பு, சிறுகதை, கருத்துப் பத்தி போன்றவற்றில் வலைப்பதிவுகளில் ஏற்கனவே வெளியானதை அச்சு ஊடகத்துக்கு (ஏற்றவாறு எடிட் செய்து) கொண்டு செல்லும் வரை, இந்த மாதிரி வெற்றுப் பரிந்துரைகளால் பலனேதும் கிடைக்காது.

//

இது பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்(என்ன பண்றது? சோம்பேறித்தனம்!!!;-))).
ஆனால், நீங்கள் அப்படியே நான் எழுத நினைத்தை எழுதி விட்டீர்கள்!!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு