தமிழ்ச் செல்வனின் மரணம்
Dulce et Decorum Est
By
Wilfred Owen
Bent double, like old beggars under sacks,
Knock-kneed, coughing like hags, we cursed through sludge,
Till on the haunting flares we turned our backs
And towards our distant rest began to trudge.
Men marched asleep. Many had lost their boots
But limped on, blood-shod. All went lame; all blind;
Drunk with fatigue; deaf even to the hoots
Of gas-shells dropping softly behind.
Gas! GAS! Quick, boys!—An ecstasy of fumbling,
Fitting the clumsy helmets just in time;
But someone still was yelling out and stumbling
And flound’ring like a man in fire or lime . . .
Dim, through the misty panes and thick green light,
As under a green sea, I saw him drowning.
In all my dreams, before my helpless sight,
He plunges at me, guttering, choking, drowning.
If in some smothering dreams you too could pace
Behind the wagon that we flung him in,
And watch the white eyes writhing in his face,
His hanging face, like a devil’s sick of sin;
If you could hear, at every jolt, the blood
Come gargling from the froth-corrupted lungs,
Obscene as cancer, bitter as the cud
Of vile, incurable sores on innocent tongues,—
My friend, you would not tell with such high zest
To children ardent for some desperate glory,
The old Lie: Dulce et decorum est
Pro patria mori.*
*From the Roman poet Horace: “It is sweet and fitting to die for one’s country."
நன்றி - நெருப்பு இணையத்தளம்
மனித மரணங்களை வன்முறை மனநோயாளிகள்தான் விரும்புவார்கள். நாம் அனைத்து வகைப்பட்ட மனித மரணங்களையும் வெறுக்கிறோம்.
ஆனால் புலிகள் மனிதர்களின் மரணங்களை மூலதனமாக்குபவர்கள். அதை வைத்து பணம் பண்ணுபவர்கள். அதை வைத்து தமது அதிகாரத்தை ஸ்தாபிப்பவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையற்றவர்கள். மரணங்களை பூசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் மனிதர்களை வெறுத்து நடுகற்களை வழிபடுபவர்கள்.
சகோதர மாற்று தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொன்று விட்டு குதூகலித்தவர்கள்.
The assassination of former Indian Prime Minister Rajiv Gandhi, former Sri Lankan President Ranasinghe Premadasa, Opposition Leader Gamini Dissanayake, Dr. Neelan Thiruchelvan, former Foreign Minister Lakshman Kadirgamar and the assassination attempts on President Chandrika Bandaranaike Kumaratunga.பிரிகேடியர் சு.ப. இவர் எத்தனை பேரின் குரூர மரணங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் எவற்றுக்கெல்லாம் குதூகலித்தவர் என்பதை இன்னோரிடத்தில் விரிவாக ஆராய்வோம்.
தமிழ்ச்செல்வன் புலிகள் இயக்கத்தில் இருந்த மிதவாத தலைவரென சிலர் அவருக்கு முலாம் பூச முனைகிறார்கள். அவருடைய வசீகரமான முகத்தோற்றத்திற்கும் நஞ்சும் அயோக்கியத்தனமும் நிறைந்த அவருடைய மனதிற்குமிடையே பாரிய இடைவெளி நிலவியது என்பது பலருக்கு தெரியாத சங்கதி. அவர் ஒரு பாசிச இயக்கத்தின் அரசியல் பேச்சாளராக வெளிவேஷம் போட்டபடி உலா வந்தார் என்பதை பலரும் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.
ஒருவர் வெள்ளை உடையையும், முகத்தை மலர்வாகவும் வைத்திருந்தால் அவர்கள் சமாதானத் தூதுவர்கள் என்றில்லை. அயோக்கியர்களும் இத்தகைய வேடத்தை தாங்க முடியும்.
புலிகள் இயக்கம் சதிகளும், குழிபறிப்புக்களும் நிறைந்தவொரு இயக்கம் என்பதை நாம் மனதில் இருத்த வேண்டும். கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை படகு விபத்தில் படுகாயமடைந்தது ஒன்றும் தற்செயலான நிகழ்ச்சியல்ல. இதேவேளை பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் புலிகளின் வேறு தளபதிகளுக்கிடையே முரண்பாடுகள், காழ்ப்புணர்வுகள் இருந்து வந்ததும் பரகசியம்.
குழிபறிப்பு என்பது புலிகளின் வரலாறு முழுவதும் காணப்படும் சமாச்சாரம். 70 களின் பிற்பகுதியில் பக்கத்தில் பாயில் படுத்திருந்த சகாக்களை நள்ளிரவில் கொல்லைபுற வாழை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தவர் தேசிய தலைவர் பிரபாகரன். அது மாத்திரமல்லாமல் அவர் முன்னர் அங்கத்துவம் வகித்த டெலோ இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 80 களின் முற்பகுதியில் தீவிரமாக அரச படைகளால் தேடப்பட்ட போது அவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கையில் அவர்கள் பற்றிய தகவல்களை அளித்து அவர்கள் கைது செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்தவர்.
பிரதித்தலைவராக இருந்த மாத்தையா தனது பதவிக்கு சவாலாக எழுந்துவிடுவாரோ என அஞ்சி அவரை தீர்த்துக் கட்டியவா. யாழ்ப்பாணத்தில் புலிகள் நிகழ்த்திய தாக்குதலொன்றில் செல்லக்கிளியை பின்புறமிருந்து சுட்டவர்.
மன்னாரில் செல்வாக்குமிக்க புலி தளபதியான விக்டரை பின்புறமிருந்து சுட்டு படுகொலை செய்வதவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர். தேசியத் தலைவரின் இந்தக் கலையை, கைவண்ணங்களை புலிகளின் அடுத்த நிலை தலைவர்கள் கற்றிருக்கமாட்டார்கள் என்றில்லை.
தமது கீழ்மட்டத்திலுள்ள உறுப்பினர்களை தற்கொலையாளிகளாக மாற்றி அவர்கள் வெடித்து சிதறும் போது அவர்களின் இரத்தமும் அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தமும் சங்கமமாகும் போது குதூகலிப்பார்கள். அண்மையில் அனுராதபுரத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலிலும் தமது குதூகலிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த குதூகலங்களுக்கு இடையே குறிப்பிட்ட சில மரணங்கள் மட்டும் மிகைப்படுத்தப்பட்ட சோகத்துடன் நினைவு கூரப்படும்.
யாருடைய மரணமும் மனித நேயம் கொண்டவர்களுக்கு நாகரீகமான மனிதர்களுக்கு உவப்பானவையல்ல.தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகள் உற்றச் சுற்றத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒரு துயரம். இதேபோன்றதுதான் புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவுகளினதும், உற்ற சுற்றத்தாரினதும் துயரம்.
வஞ்சகமும், சூழ்ச்சிகளும் போலித்தனங்களும் முதலில் எமது சமூகத்தில் இல்லாதொழிய வேண்டும். சிலரது மரணங்களை ஈடு செய்ய முடியாதது என்பதும், பலரது மரணங்களை துச்சமாக எண்ணுவதுமான இழிநிலை எமது சமூகத்தில் ஒழிந்தாக வேண்டும்.
முழுவதும் படிக்க: புலிகளின் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனின் மரணம்
சு.ப. தமிழ்ச்செல்வன் குறித்த பதிவு, ஊடகத்தொகுப்பு
பாலா இந்த பதிவு காயப்பட்ட மனங்களை மேலும் காயப்படுத்தும்:(
சொன்னது… 11/04/2007 01:29:00 AM
பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சு டும் டும் டும்...
:(
சொன்னது… 11/04/2007 03:21:00 AM
---இந்த பதிவு காயப்பட்ட மனங்களை மேலும் காயப்படுத்தும்---
எல்லாரும் அஞ்சலி செலுத்தும்போது தோன்றிய சில கேள்விகளினாலேயே இந்தப் பதிவு. முழு விவரம்/பின்னணி அறிந்தவர்கள் சந்தேகம் தெளிவித்தால் நன்றியுடையவனாவேன்.
1. நாள்தோறும் ஈழப்போரினால் பலர் இறக்கிறார்கள். தமிழ்ச்செல்வனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அஞ்சலி & சிறப்பு கவனிப்பு? அவருக்குப் பின்னும் இறப்பவர்களுக்கு இதே அளவு வாழ்க்கை வரலாறு, களங்களில் பங்குகொண்ட விவரம், அர்ப்பணிப்பு தகவல்கள் எல்லாம் கிட்டுமா?
2. ஈராக் போரை எதிர்க்கும் சமயத்தில், ஈரான் மீது சண்டை கூடாது என்று புஷ்ஷை வலியுறுத்துபவர்கள், கண்டிப்பவர்கள், பிரபாகரனை மட்டும் விட்டுவிடுவது ஏன்? போரே கூடாதா அல்லது சில முற்றுகைகள் தவிர்க்க இயலாததால் ஒத்துக்கொள்ளப்படுமா?
3. அடக்குமுறைக்கு எதிராக மியான்மரில் புத்தபிக்குகளின் ஆர்ப்பாட்டம் நியாயம் என்றால், ஈழத்திலும் அதே அடக்குமுறைதானே? அல்லது இதற்கு exceptions வழங்க வேண்டுமா?
4. இவர் சமீபகாலங்களில் கூட போர்க்களத்தில் நேரடி தாக்குதல்களில் பங்குபெற்றிருக்கிறார். அப்பொழுது இறந்திருந்தால், இப்பொழுது காணப்படும் அனுதாபம் வழங்கப்படுமா? இவர் கொன்ற போர் வீரர்களுக்கு ஊடகங்கள் என்ன அளவு மரியாதை வழங்கவேண்டும்?
குழம்பியதால் வினவுகிறேன்.
சொன்னது… 11/04/2007 08:19:00 AM
---பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சு டும் டும் டும்..---
ரொம்ப நாளாகவே இப்படித்தான் இருக்கேன். இன்னும் திருந்தலை/தெளிவாகலை/ மெச்சூரிட்டி வரலை இன்ன பிற...
இந்தியாவும் வான்புலிகளும் « Snap Judgment
சொன்னது… 11/04/2007 08:21:00 AM
//தமிழ்ச்செல்வனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அஞ்சலி & சிறப்பு கவனிப்பு?//
இந்திய புலிகள் போரில் எத்தனை இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இன்றளவும் ரஜீவ் கொலை பற்றித் தானே குரல் வருகிறது.. ?
பெயரில்லா சொன்னது… 11/04/2007 08:53:00 AM
http://kaavalan.com/
பெயரில்லா சொன்னது… 11/04/2007 08:57:00 AM
பாலா.....
இதனை நீங்கள் நெருப்பு இணையத்தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறீர்கள். சரி நல்லது. எனக்கு தெரிய வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.
ஈழத்தமிழர் போராட்டம் பற்றியதான உங்கள் தெளிவு எத்தகையது?? உங்களுக்கு அதில் ஏதேனும் அனுபவம் உள்ளதா??
உங்கள் பதிலின்பின்னர் நிச்சயமாக உங்கள் கேள்விகளுக்கு என்னால் முடிந்தளவு பதிலளிப்பேன்.
சொன்னது… 11/04/2007 09:47:00 AM
இப்படித்தான் எங்கள் தமிழின போராட்டத்தை காலம் காலமாக கொச்சைப்படுத்துகிறீர்கள் சிங்கள ராணுவம் தமிழ் பெண்களை கற்பழிச்சப்ப உங்களை போன்றோர் வாய்மூடி கொண்டிருந்தீர்கள். இந்து பத்திரிக்கை போல நீங்க எல்லாம் மகிழ்ச்சியா இருக்கீங்க. தமிழகத்தில் தமிழின எதிரிகள் உங்களைப்போல பலர் எப்போதும் உலவுகிறார்கள்.காலம் ஒருநாள் உங்களுக்கு பதில்சொல்லும்.
சொன்னது… 11/04/2007 10:21:00 AM
பாலா,
ஈழ விடுதலைப் போராட்டத்தின் நிறைய கேள்விகளுக்கு விடை கிடையாது/கிடைக்காது.
ஆனால் இதில் உள்ள சில விசயங்கள் உண்மை என நினைக்கிறேன்.
எந்த ஒரு நாட்டின் ராணுவத்திலும் அல்லது போராளிகள் குழுவிலும் எல்லோருக்கும் ஒரே அளவிலான மரியாதை கிடைப்பதில்லை. அவர்களது பதவிக்கேற்றதாகவே மரியாதை அளிக்கப்படுகிறது. புலிகள் மட்டும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
பர்மாவின் பிரச்சினை இலங்கைப் பிரச்சினையில் இருந்து மிகவும் வேறுபட்டது. அங்கே ராணுவ ஆட்சியாளர்கள் தமது சொந்த மக்களையே கொடுமைப் படுத்துகின்றனர்.
பர்மாவின் ராணுவ ஆட்சியை இந்தியா மறைமுகமாக ஆதரிப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
ஒரு விடயம் மிகவும் உண்மை. சிங்கள அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்காமல் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கிறது என்பதுதான்.
சிங்கள் அரசாங்கம் ஒரு சிறுதுரும்பைக்கூட தமிழர்க்கு கிள்ளித்தரப் போவதில்லை.
ஆனால் வெறும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழர்க்கு ஒரு விடிவைத் தரப்போவதில்லை. பேச்சு வார்த்தை மூலமே அது சாத்தியம்.
(இந்தியா குழப்பியடிக்காத பட்சத்தில்)
புலிகள் தவறு செய்யாதவர்கள் என்று சொல்லவில்லை. சில சந்தர்ப்பங்களில் மிக மோசமாக தவறிழைத்திருக்கிறார்கள்.
அதன் விளைவை பின்னர் அனுபவித்திருக்கிறார்கள்/அனுபவிக்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் மாற்று இயக்கங்களையோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளையோ தமிழர்கள் நம்பமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது.
அவர்கள் எல்லோருமே தமது சொந்த லாபங்களுக்காக அரசின் அடிவருடிகளாகவே இருக்கிறார்கள்.
அதே சமயம் ஈழப்பிரச்சினையில் சம்பந்தப்படாத, இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் அதேயளவு கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதும் உண்மை.
சொன்னது… 11/04/2007 11:09:00 AM
பாலா,
தமிழ்செல்வனின் மரணத்தின் பிந்தைய சூழலை வழக்கமான தமிழ் வலைப்பதிவர்களின் பார்வையில் இருந்து மாறுபட்டு காட்டியுள்ளீர்கள்!(இது வரை வந்ததை வைத்து சொல்கிறேன்)
எனக்கென்று ஒரு கோணம் இருந்த போதும் , நான் வாசிப்பில் வித விதமான கருத்துக்களை வாசிக்க வேண்டும் என்றே விரும்புவேன், அவ்வகையில் உங்கள் இப்பதிவு வருகிறது, இது பூனைக்குட்டி, யானைக்குட்டி சமாச்சாரத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது என்பது எனது எண்ணம்!
நம் மக்களிடையே ஒரு பெரிய பிரச்சினை ஒரு விவாதத்திற்கு கூட மாறு பட்டு ஒரு சூழலைப்பார்க்க கூடாது என்று ரொம்ப செண்டிமென்டல் இடியட்ஸ் ஆகவே இருக்கிறார்கள்!
சொன்னது… 11/04/2007 11:38:00 AM
1. நாள்தோறும் ஈழப்போரினால் பலர் இறக்கிறார்கள். தமிழ்ச்செல்வனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அஞ்சலி & சிறப்பு கவனிப்பு? அவருக்குப் பின்னும் இறப்பவர்களுக்கு இதே அளவு வாழ்க்கை வரலாறு, களங்களில் பங்குகொண்ட விவரம், அர்ப்பணிப்பு தகவல்கள் எல்லாம் கிட்டுமா?
//////
நல்லது நண்பரே
தமிழ்செல்வன் முக்கியத்துவமில்லாதவராக நீங்கள் கேட்கின்ற அதே கேள்வியை ராஜிவ் கொலை தொடர்பாகவும் உங்களிடம் கேட்கின்றோம். ஏன் ராஜிவ் செத்தவுடன் சில வெறிபிடித்த நாய்க் கூட்டம் போல, கண்ணீர் வடித்துப் புலம்பினீர்கள். ராஜிவால் அநியாயமாகச் செத்த இந்தியப் படைகள் 1300 பேருக்கும் நீங்கள் கண்ணீர் வடிக்கவில்லை, அல்லது ஈழத்தில் இந்தியப்படைகளால் கண் மூடித்தனமாகக் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் தாங்கள் கண்ணீர் வடிக்கவில்லையே? ஏன் ராஜிவிற்கு மட்டும் முக்கியத்துவம். அதனால் புலிகளையும் தடை செய்தீர்கள்.
ராஜிவிடம் என்ன இருந்தது எண்டு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தீர்கள்.
உங்களின் முதுகில் உள்ள அழுக்கை நீக்கப் பாருங்கள். பிற்பாடு மற்றவர்களுக்குச் செய்யலாம்.
பெயரில்லா சொன்னது… 11/04/2007 12:01:00 PM
//‘ According to the information reaching us, we firmly state that Thamilchelvan was not killed in the air attack and without any doubt we confirm he was killed on the instruction of Pirabakaran…...’//
http://tamilaffairs.com/node/551
http://tamilaffairs.com/node/550
From an Old Friend.
பெயரில்லா சொன்னது… 11/04/2007 12:16:00 PM
//இது பூனைக்குட்டி, யானைக்குட்டி சமாச்சாரத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது என்பது எனது எண்ணம்!//
நிச்சயமா வவ்வால். அவரவர் தாக்கத்தேற்கேற்பவே பார்வைக்கோணங்கள். என்ன இரண்டுவிதமான தாக்கத்திற்கும் இருவேறு பொதுவான குணமிருப்பது இயற்கையாகவே அமைந்துவிட்ட ஒன்று.
சொன்னது… 11/04/2007 12:31:00 PM
(November, 04, Chennai, Sri Lanka Guardian) Normally, whenever the Sri Lankan Air Force (SLAF) makes an air strike on areas held by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), it makes an announcement immediately after its planes safely return to base and a claim regarding the successes achieved. The LTTE then makes a counter-claim refuting the version of the SLAF.
In the case of the death of S.P.Thamilchelvan, the head of the political wing of the LTTE, supposedly in an SLAF air strike on November 2,2007, this reportedly did not happen. The SLAF initially did not come out with any statement or claim.
It was the LTTE, which made the first announcement, about six hours after the alleged air strike and then the Sri Lankan Government went to town about it. There was apparently an air strike in the Kilinochi area at 6 AM on November 2,2007, but it was not a targeted air strike directed to killing Thamilchelvan.
It did not make any sense for the SLAF to kill him. The LTTE has two wings--- a conventional warfare wing and a terrorist wing centred around the Black Tigers and the Black Sea Tigers. Karuna, the leader of the Eastern Province, who deserted Prabhakaran in 2004 and Thamilchelvan belonged to the conventional wing and not to the terrorist wing.
Thamilchelvan was an acceptable face of the LTTE for the international community if it wanted to work towards an LTTE minus Prabhakaran and others involved in the assassination of Rajiv Gandhi just as it worked for a Palestine Liberation Organisation minus Yasser Arafat. In fact, I have myself been suggesting this formula for many years in order to re-start the peace process again.
Since the interrnational community liked Thamilchelvan and his pleasant ways of interacting with people, many of his interlocutors were working towards making him see reason and make the LTTE break with its reputation as a terrorist organisation.
If the Sri Lankan Government also wanted to work towards this scenario, it would not have targeted him. Instead, it would have tried to spare him. One had the impression that this was its policy till now.
Sri Lankan officials, including its Defence Secretary, have claimed that they had pinpoint information about Thamilchelvan's place of residence and hence were able to target him. In fact, many knew his place of residence since he was freely receiving his foreign interlocutors there. He felt that the Sri Lankan Government would not target him since he represented the internationally-acceptable face of the LTTE and there could not be a revival of the political process without his playing a role in it.
Many well-informed persons with their ears to the ground feel there is more than meets the eye in the case relating to Thamilchelvan's death. They do not rule out the possibility that the LTTE's intelligence wing had him and his close associates killed and then put the blame on the SLAF, thereby killing two birds with one stone---it eliminated a possible rival to Prabhakaran and aggravated the anger against the Sri Lankan authorities.
According to these sources, in their anxiety to overcome the embarrassment caused by the LTTE's recent successful raid in the Anuradhapura base, the Sri Lankan authorities, instead of waiting and watching in order to analyse why the LTTE took the initiative in making the announcement, walked into the trap and claimed credit for eliminating him, thereby unwittingly providing a deniability to the LTTE's intelligence wing.
(B. Raman is Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai. E-mail: seventyone2@gmail.com )
Courtesy: http://lankaguardian.blogspot.com/2007/11/mystery-behind-tamilchelvans-death.html
பெயரில்லா சொன்னது… 11/04/2007 01:52:00 PM
பகீ,
---ஈழத்தமிழர் போராட்டம் பற்றியதான உங்கள் தெளிவு எத்தகையது?? உங்களுக்கு அதில் ஏதேனும் அனுபவம் உள்ளதா??---
நேரடியாக சென்று பார்த்ததில்லை. புத்தகங்கள் (பெரும்பாலும் இந்திய வெளியீட்டாளர்களால், சில மேற்கத்திய பார்வைகள்) மட்டுமே அறிமுகம்.
நிச்சயமாக எனதுப் போதாமையை உணர்கிறேன்.
ஆனால், பிரபாகரன் மட்டுமே நட்சத்திரமாக இருக்கும் புலிகளினால் ஈழம் கிடைக்கும்; மக்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்னும் நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை.
சொன்னது… 11/04/2007 03:06:00 PM
இளங்கோ,
---எங்கள் தமிழின போராட்டத்தை காலம் காலமாக கொச்சைப்படுத்துகிறீர்கள் ---
இந்த எண்ணம் எனக்கு நிச்சயம் இல்லை.
உயிர்மை ஆகஸ்ட் 2007 இதழில் வெளியான இலைய அப்துல்லாஹ் கட்டுரையில் இருந்து சில பத்திகள்.
தலைப்பு: இலங்கை ஊடகவியலாளர் மீதான தாக்குதல்
....
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் யுத்த காலங்களில் செய்தித் தணிக்கை அமுல் செய்யப்பட்டது. ஆனால், மகிந்த ராஜபக்ச தணிக்கையை அமுல் செய்யாமல் அது சர்வதேசத்துக்கு கண்டனம் செய்ய ஏதுவாகி விடும் என்பதற்காக அவ்வாறில்லாமல் நேரடியான கொலை அச்சுறுத்தல், புலன் விசாரணை என்று துன்புறுத்துகிறார்கள்; இல்லாவிடில் படையினரைக் கொண்டு சோதனைச் சாவடியில் வைத்து அடித்து நொறுக்குகின்றனர்.
....
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை...
மாலை ஆறு மணியில் இருந்து காலை ஐந்து மணி வரையும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருக்கிறது. அங்கு இருக்கும் ஐந்து லட்சம் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு நிலவுகிறது. தொழில் இல்லை, எரிபொருள் இல்லை, ஏ9 பாதை மூடப்பட்டதன் பின்பு மக்கள் உயிர் வாழ்வதே பெரும் சிரமமாக இருக்கிறது. மக்களிடம் பணம் இல்லை.
இன்டெர்நெட், தொலைபேசிகள் வேலை செய்வதில்லை. அங்கு இருக்கும் ஊடகவியலாளர்கள் தினமும் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் வாழ்கிறார்கள். அங்கு சேகரிக்கும் செய்திகளை அச்சிடுவதற்கு கூட அரசு காகிதத்தை அனுப்ப மறுக்கிறது. சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடக அமைப்புகள் அரசு மீது தமது கண்டனங்களைத் தெரிவித்தபோதும் அரசு அது தொடர்பாக அலட்டிக்கொள்ளவில்லை.
என்னுடைய கேள்விகள்:
1. இதற்கெல்லாம் விடுதலைப்புலிகள் வைத்திருக்கும் strategy என்ன? தற்கொலைப்படை விமானத்தாக்குதல்கள் மூலம் யாழ்ப்பாணத்தையும் கையகப்படுத்துவதா? அல்லது தற்போதிருக்கும் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதா?
2. ஏன் கடந்த பேச்சுவார்த்தை (2003) சட்டென்று நிறுத்தப்பட்டு முறிவடைந்தது? இரு சாராரின் 'விட்டுக்கொடுக்கமுடியாத தேவைகள்' என்ன என்ன?
சொன்னது… 11/04/2007 03:25:00 PM
---ராணுவ ஆட்சியாளர்கள் தமது சொந்த மக்களையே கொடுமைப் படுத்துகின்றனர். ---
---வெறும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழர்க்கு ஒரு விடிவைத் தரப்போவதில்லை.---
---மாற்று இயக்கங்களையோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளையோ தமிழர்கள் நம்பமுடியாத ஒரு சூழ்நிலை---
நன்றி மாயாவி
சொன்னது… 11/04/2007 03:30:00 PM
இலைய அப்துல்லாஹ் கட்டுரையின் தொடர்ச்சி...
தற்போது சிங்கள ஊடகங்கள் இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கையை ஏதோ வீராதி வீரர்களின் ஒப்பற்ற செயலாகவும்; தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் புலிகளை அவர்களின் செயல்களை வீரதீரச் செயல்களாகவும் மாறி மாறி பரப்பிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், கஷ்டப்பட்டும், அகதிகளாகும், மக்களைப் பற்றி சிங்கள் ஊடகங்களோ ஆங்கில ஊடகங்களோ சரியான தகவல்களை வெளி உலகத்துக்கு தர மறுக்கின்றன.
கடத்தல், பட்டினிசாவு, அகதி நிலவரம் என்று தமிழர் தாயகம் சின்னாபின்னப்பட்டுப் போய் கிடக்கிறது. யுத்தம் மட்டுமே இருதரப்பாரின் யோசனையாக இருக்கிறது. அதற்கு மட்டும் தீனி போட்டு வளர்க்கின்றன ஊடகங்கள்.
இந்த ஊடகங்கள் மட்டும் மனிதருக்காக சிந்தித்தால் இந்த யுத்தத்தை நிறுத்திவிடலாம். செஞ்சோலை படுகொலையை ஒரு சிறு செய்தியாகக் கூட சிங்கள ஊடகங்கள் போடவில்லை. எங்கும் இனவாதமே மேலோங்கி இருக்கிறது.
(நன்றி: உயிர்மை, ஆக., 2007 - பக். 59-60)
சொன்னது… 11/04/2007 03:50:00 PM
//இதற்கெல்லாம் விடுதலைப்புலிகள் வைத்திருக்கும் strategy என்ன? தற்கொலைப்படை விமானத்தாக்குதல்கள் மூலம் யாழ்ப்பாணத்தையும் கையகப்படுத்துவதா? அல்லது தற்போதிருக்கும் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதா?
ஏன் கடந்த பேச்சுவார்த்தை (2003) சட்டென்று நிறுத்தப்பட்டு முறிவடைந்தது? இரு சாராரின் 'விட்டுக்கொடுக்கமுடியாத தேவைகள்' என்ன என்ன?//
மேலே கூறியுள்ள புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கிற பாஸ்டன் பாலாவா அதே பிரச்னையில் கீழ்க்கண்ட ‘அப்பாவி’த்தனமான கேள்விகளையும் கேட்கிறார்.
//நாள்தோறும் ஈழப்போரினால் பலர் இறக்கிறார்கள். தமிழ்ச்செல்வனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அஞ்சலி & சிறப்பு கவனிப்பு? அவருக்குப் பின்னும் இறப்பவர்களுக்கு இதே அளவு வாழ்க்கை வரலாறு, களங்களில் பங்குகொண்ட விவரம், அர்ப்பணிப்பு தகவல்கள் எல்லாம் கிட்டுமா?//
)-:
நன்றி – சொ. சங்கரபாண்டி
சொன்னது… 11/04/2007 03:50:00 PM
சங்கரபாண்டி,
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. அதுதான் நோக்கம் என்றால் விளக்கம் வேண்டாம்.
சொன்னது… 11/04/2007 03:53:00 PM
\\ஆனால், பிரபாகரன் மட்டுமே நட்சத்திரமாக இருக்கும் புலிகளினால் ஈழம் கிடைக்கும்; மக்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்னும் நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை.\\
பிரபாகரன் மட்டுமே நட்சத்திரமாக இருந்தாலதான் ஈழம் கிடைக்கும். நான் புலிகள் எப்பொழுதும் புனிதமானவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அவர்கள் இல்லாவிட்டால் ஈழத்தில் தமிழர்கள் இன்று உயிருடன் இருக்கமாட்டார்கள், இதுதான் உண்மை. முதலில் எங்களுக்கு தமிழிழத்தை தாருங்கள் மற்றதை அங்குள்ள மக்கள் பார்த்துக்கொள்வார்கள். சுதந்திரம் தர முன்னரே உங்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் புலிகள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்.
சொன்னது… 11/04/2007 03:53:00 PM
//சங்கரபாண்டி,
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. அதுதான் நோக்கம் என்றால் விளக்கம் வேண்டாம்.//
நீங்கள் கேட்டிருந்த சில கேள்விகளை புத்தி சாலித்தனமானவை என்று நான் சுட்டிக் காட்டியதன் காரணம் உங்களுக்குப் புரியவில்லையா? அந்தவிரு கேள்விகள் மூலம் நீங்கள் ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறீர்கள் என்று உணர்கிறேன். அப்படிப்பட்ட நீங்கள் “ஈழப்போரில் இறந்த மற்றவர்களைக் காட்டிலும் தமிழ்ச்செல்வனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்புக் கவனிப்பு” என்ற கேள்வியைக் கேட்பது குறித்த என்னுடைய ஆச்சரியத்தைத்தான் வெளிப்படுத்தினேன். அந்தக் கேள்வி அப்பாவித்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா. வேறு சிலர் இராஜீவுக்கு அளிக்கப் படும் முக்கியத்துவத்துடன் ஒப்பிட்டு வெளிப்படையாகவே இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், அதன் பின்னாவது உங்களது கேள்வியின் பின்னாலுள்ள அபத்தம் உங்களுக்குத் தோன்றவில்லையே என்றுதான் ஆச்சரியப்பட்டேன்.
“ரொம்ப நாளாகவே இப்படித்தான் இருக்கேன். இன்னும் திருந்தலை/தெளிவாகலை/ மெச்சூரிட்டி வரலை இன்ன பிற...” என்று வேறு நீங்கள் எழுதியதால்தான் எனக்குப் பின்னூட்டமிடத் தோன்றியது.
மற்றபடி உங்களது நிலைப்பாடு, கேள்விகள், மாற்றுப்பார்வை, உங்களது கருத்துரிமை எல்லாவற்றையும் மதிக்கிறேன். அவற்றைப் பற்றி எனக்கு முற்றிலும் மாற்றுக் கருத்து உண்டு என்றாலும் கூட.
நன்றி – சொ. சங்கரபாண்டி
சொன்னது… 11/04/2007 05:07:00 PM
//தமிழ்ச்செல்வனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அஞ்சலி & சிறப்பு கவனிப்பு?//
இந்திய புலிகள் போரில் எத்தனை இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இன்றளவும் ரஜீவ் கொலை பற்றித் தானே குரல் வருகிறது.. ?
//
பதில் எங்கே பாஸ்டன் பாலா அண்ணாச்சி?
"கண்டதை சொல்கிறேன்" -ன்னு கரீக்டா தான் சொல்லியிருக்கிறீர்.
சொன்னது… 11/04/2007 05:21:00 PM
ஜோ,
---பதில் எங்கே---
அனானியாக வினா எழுப்புவர்கள், சும்மா 'ஊர் ரென்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' டைப்.
சொன்னது… 11/04/2007 05:40:00 PM
பாபா, தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள நீங்கள் காட்டும் அபரிமிதமான சிரத்தைக்கும் ஆர்வத்துக்கும் தலைவணங்குகிறேன்.
//2. ஈராக் போரை எதிர்க்கும் சமயத்தில், ஈரான் மீது சண்டை கூடாது என்று புஷ்ஷை வலியுறுத்துபவர்கள், கண்டிப்பவர்கள், பிரபாகரனை மட்டும் விட்டுவிடுவது ஏன்? போரே கூடாதா அல்லது சில முற்றுகைகள் தவிர்க்க இயலாததால் ஒத்துக்கொள்ளப்படுமா?//
அப்துல்லா ஓகாலானை ஜெயிலுக்குள்ளேயே வைத்து நோகாமல் தட்டி ஒன்வே டிக்கெட் கொடுக்கச்சொல்லி மகா மூத்து ஆகா மாத்து இனி சாத்துக்கு அப்படியே ஒரு மனுப் போட்டுவிடுங்கள்.
சொன்னது… 11/04/2007 08:18:00 PM
மாயாவி said... 11/04/2007 11:09:00 AM
அதே சமயம் ஈழப்பிரச்சினையில் சம்பந்தப்படாத, இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் அதேயளவு கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதும் உண்மை.
--------
இது முற்றிலும் உண்மை. 83கலவரத்தில் அதிகமாக பாதிக்கபட்டது இந்திய வம்சாவழித் தமிழர்கள்தான். ஆனால் இந்திய வம்சாவழித் தமிழர்களை பற்றி யாரும்
கவலைப்படுவதில்லை.
சொன்னது… 11/04/2007 09:17:00 PM
//அனானியாக வினா எழுப்புவர்கள், சும்மா 'ஊர் ரென்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' டைப்.//
சரி ஐயா..
ஆனானியாக கேட்காமல் ஆளாகவே கேட்கின்றென்.
உங்களைப் போலத்தான் எனக்கும் ரஜீவ் கொலையில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என புரியவில்லை..
அந்த கொலைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் மற்ற சாதாரண இந்திய வீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. (அங்கே போரில் இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் நினைவுக் கல்லறைகளோ சின்னங்களோ இல்லை என அறிந்தேன் )
ஆனால் தமிழ்செல்வனுக்கு மட்டுமல்ல..
சகல போராளிகளுக்கும் தனித்தனியே நீங்கள் கேட்ட வரலாறு பேணப்படுகிறது. புலிகளின் ஊடகங்கள் புலிகள் சாரா ஊடகங்கள் என பலவற்றிலும் அவர்களது பதிவுகள் எழுதப்படுகின்றன.
வெள்ளி தோறும் வெளியிடப்படும் ஈழநாதம் பத்திரிகையில் வாரமொரு வீரச்சாவடைந்த போராளியின் நினைவுப் பதிவுகள் எழுதப்படுகின்றன. அது தவிர
விடுதலைப்புலிகள் பத்திரிகையில் ஒரு போராளியின் குருதிச்சுவடு என மாதந்தோறும் மறைந்த போராளி ஒருவரின் நினைவுகள் மீட்டப்படுகின்றன.
இப்போ எனக்கு பதில் சொல்லுங்கள் - இலங்கையில் செத்து மடிந்த இராணுவத்தினரின் செய்திகளை கேட்ட போதும் பின்னர் ரஜிவின் கொலையை கேட்டறிந்த போதும் நீங்கள் அடைந்த உணர்வுகள் ஒன்றானவையா..?
அதுபோல அனானி கேட்ட கேள்வியான ஏன் இன்றளவும் ரஜீவ் கொலை பற்றி மட்டும் குரல் வருகிறது..?
பெயரில்லா சொன்னது… 11/04/2007 09:30:00 PM
YOOOOOOOOO........
Come to SL and see ..........what happend to our tamil ppl...LTTE is our heroes..........
Summa eluthanum endrathuku elutha venam ......please.....
yesterday also 6 tamil innocent boys killed at vavuniya by Srilankan Army.......Write about these things in your blogspot........
பெயரில்லா சொன்னது… 11/04/2007 09:48:00 PM
மனிதாபிமானம், அடிப்படை மனித உரிமைகள் என்ற விதத்தில் இறந்த வீரர்களையும் அதே தட்டில் வைத்துப் பார்க்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் தலைவனை இழந்த படை தடுமாறும். தளபதியை இழப்பதும் படைக்கு பின்னடைவை உருவாக்கும். தமிழீழப் போராட்டத்துக்கு முகமாக, முகவரியாக இருந்த ஒருவரின் மறைவு அவர்களை அதிகம் பாதித்துள்ளது. அதிகப்படியான முக்கியத்துவத்துக்கு அதுவே காரணம்.
ராஜீவ் மரணம் குறித்த முக்கியத்துவமும் அதுவே.
பெயரில்லா சொன்னது… 11/04/2007 10:42:00 PM
//Alien said...
மாயாவி said... 11/04/2007 11:09:00 AM
அதே சமயம் ஈழப்பிரச்சினையில் சம்பந்தப்படாத, இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் அதேயளவு கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதும் உண்மை.
--------
இது முற்றிலும் உண்மை. 83கலவரத்தில் அதிகமாக பாதிக்கபட்டது இந்திய வம்சாவழித் தமிழர்கள்தான். ஆனால் இந்திய வம்சாவழித் தமிழர்களை பற்றி யாரும்
கவலைப்படுவதில்லை.
//
அய்யாக்களே.. தயவு செய்து உண்மையை திரித்து சைக்கிள் கேப்பில் பொய்யை உண்மையாக்க பார்க்காதீர்கள்.
உண்மையில், தோட்டத் தொழிளாலர் படும் அவலங்கள் வேறு விதமானவை. அவை ஈழத்தமிழர் பிரச்சினையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவற்றை இங்கு விட்டு விடுவோம்.
மற்ற கொழும்புவிலும், மலையகத்திலும் வசிக்கும் வம்சாவளி தமிழர்கள் சிங்களவர்களுடன் நட்புடனே வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள். அவ்வப்போது சச்சரவுகள் வருவது தவிர்க்க முடியாது (இந்தியாவின் இந்து-முஸ்லீம், தென் தமிழகத்தின் ஜாதி கலவரம் போல). ஆனால், இந்த நிலைமை மோசமானது ஈழபிரச்சினை ஆயுத யுத்தமாக மாறியதும்தான். ஒன்றும் செய்ய முடியாத சிங்கள மூடர்கள் இந்திய வம்சாவளியினரை தாக்கினர்.
ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் வேறானது. சிங்களர்களும் தமிழரில் ஈழவர் மற்றும் இந்தியர் என இரண்டு பிரிவு இருப்பதை உண்ர்ந்து விட்டதால், சச்சரவுகள் குறைவே. அது மட்டுமில்லாமல் தங்கள் அரசாங்கத்தின் சதிகளை புரிந்து கொள்ளாத சிங்கள வெகுஜனம், (இந்திய வம்சாவளி) தமிழர்கள் எம்முடன் நட்பாகவே இருக்கிறர்கள். ஆனால் புலிகள்தாம் ஆய்தமேந்தி நாட்டின் ஒற்றுமையை குலைக்கிறார்கள் என நினைப்பார்கள்.
என்னை கேட்டால் இரண்டு தரப்பும் ஒருவர் உணர்வுகளி ஒருவர் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் வெறுமனே குற்றச்சாட்டு அரசியல் நடத்துகிறார்கள். நன்றாக வாழ்ந்த இந்திய வம்சாவளி கூட்டம் இவர்கள் இடையே சிக்கி நொந்து கொண்டிருக்கிறது.
பெயரில்லா சொன்னது… 11/05/2007 07:40:00 AM
கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை
நீ எனது இருதைய மையப்பகுதியில் கைவைத்தால், நானும் வைப்பேன். அனுராதபுரத்திரத்திற்கு பதில் புலிகளின அரசியல் துறையைப் பலியெடுத்து அரசு தரப்பு
Click on the following link to read further:
http://www.thenee.com/html/archunan.html
- அர்ச்சுனன்
பெயரில்லா சொன்னது… 11/05/2007 11:18:00 AM
ஆறு,
---பிரபாகரன் மட்டுமே நட்சத்திரமாக இருந்தாலதான் ஈழம் கிடைக்கும்.---
பெர்வேஸ் முஷாரஃப் மட்டுமே பாகிஸ்தானை ரட்சிக்க முடியும் என்பது போல் இந்த வாதம். அவரால் இத்தனை நாளாக கிடைக்காத ஈழவிடுதலை இனிமேலா கிட்டப் போகிறது?
ஈழம் கிடைக்காமல் இருப்பதுதான் பிரபாகரனுக்கு லாபகரமானது. தனித்தலைவராக கொலு வீற்றிருக்கலாம். உலகச் சந்தையில் பேரம் பேசலாம்.
இவ்வளவு ஏன்... இலங்கைத் தலைவருக்கும் அவருக்கும் collusion கூட நடந்து கொண்டிருக்கலாம்.
சொன்னது… 11/05/2007 12:44:00 PM
சங்கரபாண்டி,
---வேறு சிலர் இராஜீவுக்கு அளிக்கப் படும் முக்கியத்துவத்துடன் ஒப்பிட்டு வெளிப்படையாகவே இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், அதன் பின்னாவது உங்களது கேள்வியின் பின்னாலுள்ள அபத்தம்---
பிரபாகரன் == ராஜீவ்
தமிழ்ச்செல்வன் ≠ தேசத்தின் முதன்மையான (அல்லது தேசியக் கட்சியின் பிரதான) தலைவர்
பிணவூர்தியில் இருந்து கீழே தள்ளப்பட்டு அதிமுகவின் ஜெ.ஜெ (அல்லது கொல்றாங்க கொல்லுறாங்க என்று திமுக கலைஞர்) அனுதாப வாக்கு வாங்குவது போல் தமிழ்ச்செல்வனை முன்னிறுத்தி, பரிதாபத்தை சம்பாதித்து, தற்கொலைகளுக்கு உடலும் அவற்றை அனுப்பும் விமானங்களுக்கு பணமும் கோரப்படுகிறது.
சொன்னது… 11/05/2007 12:55:00 PM
சன்னாசி,
---அப்படியே ஒரு மனுப் போட்டுவிடுங்கள்.---
அமெரிக்கா is always 'Right' :(
Nora Ephron: It's Hard to be a Democrat - Politics on The Huffington Post: "It's especially hard to remember that the real enemies are the Republicans, when the Democrats tend to break your heart and the Republicans are just the boys you'd never go out with anyway.
...
You've voted for the surge, you've voted to authorize a war against Iran, and you're about to vote in favor of an attorney general-designate who refuses to call waterboarding torture."
Frustration Builds for Democrats - WSJ.com: "Mr. Mukasey had run into trouble earlier in the week after he refused to define waterboarding as torture and was imprecise in answering questions about the White House's assertion of broad presidential powers. As a result, a handful of Democrats on the Senate Judiciary Committee said they would vote against the nominee, threatening to spoil what had previously been thought to be an easy confirmation.
Liberal groups were stirred to action by the uproar over waterboarding -- an interrogation technique that simulates drowning -- and by President Bush's public statements castigating Democrats for not giving Mr. Mukasey a speedy confirmation. Left-leaning groups and bloggers over the weekend renewed criticism that despite winning the House and Senate a year ago, Democrats were 'caving in' to the president."
சொன்னது… 11/05/2007 01:04:00 PM
//பிரபாகரன் == ராஜீவ்
தமிழ்ச்செல்வன் ≠ தேசத்தின் முதன்மையான (அல்லது தேசியக் கட்சியின் பிரதான) தலைவர்//
அடடே.. சமன்பாடெல்லாம் போட்டுக் கலக்கிறீங்களே.. பரவாயில்ல.. ரஜீவை பிரபாகரனோடெல்லாம் ஒப்பிடுறீங்க
நமக்கு தமிழ்செல்வன் மட்டுமல்ல.. ஒவ்வொரு போராளியின் உயிரும் உன்னதமான உயிர்தான்.
ரஜீவின் உயிரை விட நமக்கு திலீபனின் குமரப்பாவின் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்தான் மேலாகப் பட்டது. அதனாற்றான்...
தமிழ்செல்வன் முதன்மையான தலைவரா இல்லையா என்பதை அவரைத் தலைவனாக கருதும் மக்கள் தீர்மானிப்பது. அதாவது நாம். நமக்கு தமிழ்செல்வன் முதன்மைத் தலைவர்தான்.
தமிழ்செல்வனுக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் ஏன் என கேட்டுவிட்டு பதிலுக்கு நாம் ரஜிவின் முக்கியத்துவம் என்ன என கேட்டால் சமன்பாடு போட்டுக் காட்டுகிறீர்களா..
பெயரில்லா சொன்னது… 11/05/2007 01:25:00 PM
---தமிழ்செல்வனுக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் ஏன் என கேட்டுவிட்டு பதிலுக்கு நாம் ரஜிவின் முக்கியத்துவம் என்ன என கேட்டால் சமன்பாடு போட்டுக் காட்டுகிறீர்களா.---
இரண்டுமே deificationதான். கோவில் எழுப்பி, போப் பிரபாகரனால் beatification நடத்தி, புனிதப் போர் தொடுத்து...
ஆட்சியாளர்களுக்கு காரணம் கிடைக்கிறது. ஈழமக்களுக்கு?
சொன்னது… 11/05/2007 01:40:00 PM
sorry to type in English.... I typed a good answer to you in Tamil but lost everything by accident, and I don't have enough time to do that again.
\\ஆறு,
---பிரபாகரன் மட்டுமே நட்சத்திரமாக இருந்தாலதான் ஈழம் கிடைக்கும்.---
பெர்வேஸ் முஷாரஃப் மட்டுமே பாகிஸ்தானை ரட்சிக்க முடியும் என்பது போல் இந்த வாதம். அவரால் இத்தனை நாளாக கிடைக்காத ஈழவிடுதலை இனிமேலா கிட்டப் போகிறது?\\
Are you seriously going to compare Pakistan and Eelam? Pakistan is a free nation with its own constitution but Eelam on the other hand is still sacrificing lives to attain that freedom. Second, you cannot compare Pervez Musharraf a dictator to Pirapakaran a freedom fighter. The fight for Eelam didn’t start with Pirapakaran, it started soon after the independence but as a leader Pirapakaran brought us closer to that reality than his predecessors and there is no guarantee that his successor will accomplish the task so it is essential for us to achieve our goal within his time.
\\ஈழம் கிடைக்காமல் இருப்பதுதான் பிரபாகரனுக்கு லாபகரமானது. தனித்தலைவராக கொலு வீற்றிருக்கலாம். உலகச் சந்தையில் பேரம் பேசலாம்\\
Is this a joke? For the sake of the argument lets assume that he is a very selfish man. Do you think it’s in his best interest to prevent the formation of Eelam. He would have more power if we got our homeland within his time. He would be given the sole credit and he would be in power to get anything he wants. Reality is that, we had so many leaders in the past but they all strayed away from their absolute goal in order to advance their personal agenda. Recently Col.Karuna defected not because he didn’t like the way Eastern People are treated but he took money from our goal. Time will punish him by erasing Karuna’s achievement as great general of Tamil Tigers/ Eealm armed forces. Do you really thing Pirapakaran is going to follow the same path, Pirapakaran himself said many times that history is his teacher so I’m sure he knows what will happen if he strays away from his path. It’s sounds good to write all sort of conspiracy theories but we shouldn’t waste too much time on that.
\\இவ்வளவு ஏன்... இலங்கைத் தலைவருக்கும் அவருக்கும் collusion கூட நடந்து கொண்டிருக்கலாம்.\\
Again, this is a another conspiracy theory that is not valid.
again, sorry for typing in English.
aaru
சொன்னது… 11/05/2007 05:22:00 PM
இலங்கை விமானப்படை தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்
தமிழ்ச்செல்வன், நேற்று பலியானார். அவரது மறைவை ஒட்டி முதல்வர் கருணாநிதி இன்று
வெளியிட்ட இரங்கல் கவிதை:
*எப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எதிர்த்திடும் நெஞ்சம்!*
*
இளமை; இளமை; இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச் சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!
உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன்- உயிரனையான்-
உடன்பிறப்பனையான்;
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம்
தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்? * "'
en badhil kavidhai!
எங்கு சென்றாய் எனக் கேட்கும் தலைவா
அங்கு நீயின்னும் செல்லாததாலன்றோ
பொங்குதமிழ்க் கவி புனைந்து
விஞ்சு புகழ் பாடுகின்றாய்!
நாற்பது எம்ப்பீக்கள் உன்கையில்
நாநிலம் நடப்பதுமோ உன் தயவில்
என்ன செய்தாய் இதுவரையில்
தமிழீழம் கிடைப்பதற்கு
போக்குவரத்துத்துறை கிடைக்க
போர்க்கொடி நீ பிடித்தாய்
தனியறையில் மறைந்துகொண்டு
தனித்துவம் நீ பெற்றாய்!
தமிழீழம் பற்றியொரு
தனிக்குரல் கொடுத்ததுண்டா
இதுவரையில் சொல்லப்பா
சொல்லின் செல்வனே!
தமிழ்ச்செல்வன் போனாலென்ன
செல்வங்கள் பலவற்றை
விதித்துத்தான் சென்றிட்டான்
அதுபற்றிக் கவலை வேண்டா!
முகஸ்துதியாய் வார்த்தைகளை
கொட்டுவதை விடுத்திட்டு
தனியீழம் பற்றியொரு
மசோதாவைக் கொண்டுவந்து
அதுதோற்கினும் உன்புகழை
தமிழனுக்குக் குரல் கொடுத்த
தனிப்பெரும் தலைவனெனும்
பெயரினை நீ பெற்றிட்டால்
அதுவே நீ வாழ்ந்த
எண்பதாண்டுக்குப் பெருமை
இதை நீ உணரமாட்டாய்
உன் கவலை இதுவல்ல
எம்தமிழர் ஒவ்வொன்றாய்
செத்தாலும் உனக்கிங்கு
கவலையில்லை ஏனென்றால்
உன்கையில்தான் தமிழிருக்கே
பாடிடு இன்னொரு இரங்கல் கவிதை
மூடிடு உன் இதயக் கதவை
தொடர்ந்திடும் எம்தமிழர் போராட்டம்
விடிந்திடும் ஓர்நாள் தமிழீழம்
சொன்னது… 11/05/2007 05:22:00 PM
//அமெரிக்கா is always 'Right' :(//
அப்படியே அRRRRRRரியானா ஹஃஃபிங்டனின் அக்சென்ட்டுடன் படித்துப் பார்த்துக்கொள்கிRRRRRRRRறேன் பாபா, நன்றி. இந்தியாவில் (மட்டும்) தீவிர மத்திய வர்க்க வலதுசாரிப் புத்தியோடு இருக்கும் கோஷ்டிகள் அமெரிக்காவிற்கு வந்தால் நாம டெமாக்ரடிக் கக்ஷிக்குத்தான் வோட் போடணும் என்று ஸ்டீரியோடைப்பாக லிபரல் மணியாட்டுவது ஏன், அப்படி என்ன அமெரிக்காவில் வந்தால் மட்டும் supposedly liberal டெமாக்ரடிக் கட்சி மேல மெத்து மூலை தொபுக்குன்னு வந்துடுதுன்னு உங்கள் அரசியல் பார்வை அனுபவங்களை வைத்து ஒரு பதிவு/அலசல் போடுங்கள் பாபா.
சொன்னது… 11/05/2007 05:46:00 PM
ஆறு, வியெஸ்கே, __/\__
சொன்னது… 11/06/2007 08:31:00 PM
சன்னாசி,
---அமெரிக்காவிற்கு வந்தால் நாம டெமாக்ரடிக் கக்ஷிக்குத்தான் வோட் போடணும் என்று ஸ்டீரியோடைப்பாக லிபரல் மணியாட்டுவது ஏன், ---
ஏதோ சொல்றீங்கன்னு புரியுது... முழு அர்த்தமும் விளங்கலியே
சொன்னது… 11/06/2007 08:32:00 PM
//ஏதோ சொல்றீங்கன்னு புரியுது... முழு அர்த்தமும் விளங்கலியே//
ஓக்கே போபோ, விட்டுருங்க ;-)
சொன்னது… 11/08/2007 08:08:00 PM
இங்கே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்றவர்களுக்கு பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும் என்ற பழமொழியை நினைவு படுத்த விரும்புகிறேன்.நாகலாந்திலும் அசாமிலும் மணிப்பூரிலும் காஷ்மீரிலும் சொந்த மக்கள் பலியெடுக்கப்படுவதையே நியாயப்படுத்திப் பழகிவிட்ட பாபாஜிக்கு விடுதலைப்புலிகள் தற்கொலைக்கு உடல்கள் தேடுவது உறுத்தலாகப் படுகிறது
சொன்னது… 11/22/2007 10:53:00 PM
தொடர்ச்சி: ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை - �தமிழ்நாடு தமிழனின் பார்வை
சொன்னது… 11/23/2007 07:21:00 AM
ஈழநாதன்,
---நாகலாந்திலும் அசாமிலும் மணிப்பூரிலும் காஷ்மீரிலும் சொந்த மக்கள் பலியெடுக்கப்படுவதையே நியாயப்படுத்திப் பழகிவிட்ட---
இதையெல்லாம் நியாயப்படுத்தி எழுதிய பதிவுகளின் சுட்டி கிடைத்தால் சொல்லுங்களேன்...
---விடுதலைப்புலிகள் தற்கொலைக்கு உடல்கள் தேடுவது உறுத்தலாகப்---
இந்த செய்கை, உங்களுக்கு உறுத்தவில்லையா?
சொன்னது… 11/23/2007 07:23:00 AM
பாபாஜி இதையெல்லாம் கண்டித்து நீங்கள் எழுதிய பதிவுகள் எங்கேனும் இருப்பின் சுட்டி கொடுப்பீர்களா?உங்களுக்குத் தான் சுட்டியெல்லாம் விரல் நுனியில் இருக்குமே.
தமிழீழப் போராட்டத்திற்கு எனது ஆதரவு என்றுமே உண்டு போராட்டத்தின் பாதையில் பல விமர்சனங்கள் உண்டு அவற்றை அவ்வப்போது சொல்லியிருக்கிறேன்.யார் குற்றியானாலும் அரிசியானால் சரி என்ற பார்வை என்னிடம் இல்லை.கரும்புலிகள் பற்றி எழுதுவதற்கு எனக்குத் தகுதி கிடையாது.இதுவரைக்கும் எனது பதிவில் கிளாலிக் கடலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்(என் அப்பா உட்பட)கடற்படையினரிடமிருந்து உயிர் தப்புவதற்காக தன்னை அழித்துக் கொண்ட ஒரு கரும்புலியைப் பற்றி மட்டுமே எனது பதிவில் எழுதியிருக்கிறேன்.அதனால் சரி தவறு இரண்டையுமே விவாதிப்பதற்கு நான் தயாரில்லை.இதை நழுவல் போக்கு என்று நீங்கள் விமர்சித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.நீங்கள் paradise now போன்ற படங்களைப் பார்த்துவிட்டு கரும்புலிகள் மூளைச்சலவை செய்யப்படுவதாக எழுதுகிறீர்கள்.நான் இந்தியப்படையினரால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பழிவாங்குவதற்காய் தற்கொலைப்போராளியாகிப் போனதை நேரே அறிந்த பின் வாய் மூடி மௌனியாக இருப்பதே உத்தமம் என நினைக்கிறேன்.
சொன்னது… 11/24/2007 07:24:00 PM
ஈழநாதன்,
விரிவான பதிலுக்கு நன்றிகள்
சொன்னது… 11/24/2007 10:16:00 PM
பாபா நீங்கள் எப்படி அர்த்தப்படுத்தினீர்களோ தெரியாது அதனால் திரும்பவும் ஒருமுறை அழுத்தமாக
//---நாகலாந்திலும் அசாமிலும் மணிப்பூரிலும் காஷ்மீரிலும் சொந்த மக்கள் பலியெடுக்கப்படுவதையே நியாயப்படுத்திப் பழகிவிட்ட---
இதையெல்லாம் நியாயப்படுத்தி எழுதிய பதிவுகளின் சுட்டி கிடைத்தால் சொல்லுங்களேன்...//
பாபாஜி இதையெல்லாம் கண்டித்து நீங்கள் எழுதிய பதிவுகள் எங்கேனும் இருப்பின் சுட்டி கொடுப்பீர்களா?உங்களுக்குத் தான் சுட்டியெல்லாம் விரல் நுனியில் இருக்குமே.
சொன்னது… 11/24/2007 11:30:00 PM
//நான் இந்தியப்படையினரால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பழிவாங்குவதற்காய் தற்கொலைப்போராளியாகிப் போனதை நேரே அறிந்த பின் வாய் மூடி மௌனியாக இருப்பதே உத்தமம் என நினைக்கிறேன்.//
கரும்புலிகளைப் பற்றிய நல்லதொரு ஆவணப்படமொன்றை நார்வே நாட்டைச் சேர்ந்த Beate Arnestad என்ற பெண் இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். முடிந்தால் அவசியம் பார்க்கப்படவேண்டிய ஒன்று. விரைவில் டிவிடி வடிவில் வெளிவரவிருக்கிறது.
http://www.nfi.no/english/norwegianfilms/show.html?id=768
http://www.snitt.no/mdtt/index.htm
http://www.youtube.com/watch?v=MjTYV0bXS0Q
சொன்னது… 11/25/2007 06:05:00 AM
---இதையெல்லாம் கண்டித்து நீங்கள் எழுதிய பதிவுகள் எங்கேனும் இருப்பின் சுட்டி கொடுப்பீர்களா?---
அரசியல்வாதிதான் 'அப்பொ லெட்டர் போட்டீயா? எப்பொழுது கண்டனம் தெரிவித்தாய்?' என்று வாய்ஜாலக்காக அறிக்கைப் பொர் நடத்துவார்கள்.
உதட்டளவில் 'வருத்தங்கள்/சொல்லொண்ணா துயரத்தை கண்டிக்கிறேன்' என்று போஸ்டர் அடித்து, முற்போக்கு ஃபிலிம் ஓட்டுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
இந்தியாவில் நீங்கள் குறிப்பிடும் அராஜகங்களை படமெடுத்து வெளியிடவும், பதிவாக்கி பரப்பவும், செய்தித்தாள்களில் கட்டுரையாக்கவும் போதுமான அளவு பேச்சு சுதந்திரம் இருக்கிறது. அரசையோ, தலைவரையோ எவரும் புனிதப் பசுவாக்கி 'சொன்னால் குத்து; வாயைத் திறந்தால் வெட்டு' குற்றத்தை முன் வைத்தால் உமக்கு குற்றவுணர்ச்சி கொடுக்கப்படும்' போன்றவற்றுக்குள் முடங்கவில்லை :)
சும்மா, மேம்போக்காக சுடான் முதல் காஷ்மீர் வரை மனத்தளவில் இருப்பதை பெயரளவில் போட்டு வைத்ததில்லை.
சொன்னது… 11/25/2007 07:02:00 AM
புலிகள் இல்லை. பிரபாகரன் சர்வாதிகாரம் இல்லை. இப்போது இலங்கை முழுவதும் தமிழர்கள் விரும்பிய சுதந்திர ஜனநாயகம் தழைத்தோங்கி விட்டதா? ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான உரிமையை, மாநில சுயாட்சியை, சம உரிமையை வழங்கி விட்டார்களா? ஓப்பாரி மூலம் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிய விசயங்களுக்கான தீர்வு அடிப்படைத் தமிழர்களுக்கு கிடைத்து விட்டதா? ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நேரிடையாக கடைசி கட்ட பரபரப்புகளை காசாக்கிய கணவான்களின் சேவை மனப்பான்மை இன்று ஏன் அமைதியாக இருக்கிறது?
எங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற விடாமல் புலிகள் குரல்வளையை நெறித்துக் கொண்டுருந்தார்கள். உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டுருந்தோம்? என்று சொன்ன அத்தனை ஜனநாயகவாதிகளும் இப்போது ஒரே அணியில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை செய்கின்றார்களா? அவர்கள் அப்படி நிற்க முடியாததற்கு காரணங்கள் என்ன? ஒரு நூற்றாண்டு காலம் பெற்ற பாடங்கள் கூட ஏன் கற்றுக்கொடுக்கவில்லை?
இப்போது விரும்பிய ஜனநாயகம் கிடைத்து விட்டது. விரும்பிய வாழ்க்கையை எஞ்சியுள்ள தமிழர்களுக்கு அளிக்க முடியாமல் இன்னமும் ” தடுப்புக்குள்” வைத்திருக்கும் உங்கள் மக்கள் சேவையின் பலமும் பலவீனமும் இப்பொழுதாவது உங்களுக்கு புரிகிறதா தலையாட்டி சாமிகளே??????
புலிகள் புத்தர்கள் அல்ல. பெளத்த மதத்தை பின்பற்றுகிறோம் என்ற இலங்கை ஆட்சியாளர்களும் புனிதமானவர்கள் அல்ல. இப்போது பிரபாகரன் மறைந்து இருக்கிறார் அல்லது வீரமரணம் அடைந்து விட்டார் ஏதோ ஒன்று. புலிகளால் தான் வெகுஜன இலங்கை மக்களுக்கு இத்தனை துன்பங்கள் என்று இன்று உருவான “தைரியத்தை” வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டுருப்பவர்கள் ஒன்றை மட்டும் ஏன் எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுருக்கின்றேன்.
வணக்கம் பாலா
சங்கரபாண்டி போலவே உங்கள் மாற்றுக் கருத்துக்களை தொடர்ந்து படிப்பவன். மேலே உள்ளவை ஒரு வருட முடிவில் இரண்டு நாட்களுக்கு முன் எழுதியது. உண்மையிலேயே தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
பதில் தருவீர்களா?
texlords@gmail.com
http://texlords.wordpress.com
சொன்னது… 6/05/2010 05:09:00 AM
To be a upright human being is to be enduring a philanthropic of openness to the world, an skill to group aleatory things beyond your own pilot, that can take you to be shattered in unequivocally extreme circumstances on which you were not to blame. That says something remarkably outstanding thither the prerequisite of the ethical life: that it is based on a trust in the uncertain and on a willingness to be exposed; it's based on being more like a weed than like a treasure, something kind of tenuous, but whose acutely special beauty is inseparable from that fragility.
பெயரில்லா சொன்னது… 10/25/2010 05:42:00 AM
To be a noble charitable being is to be enduring a kind of openness to the mankind, an cleverness to group aleatory things beyond your own control, that can govern you to be shattered in hugely exceptionally circumstances on which you were not to blame. That says something remarkably impressive about the get of the honest autobiography: that it is based on a conviction in the up in the air and on a willingness to be exposed; it's based on being more like a spy than like a treasure, something somewhat dainty, but whose mere special attraction is inseparable from that fragility.
பெயரில்லா சொன்னது… 10/27/2010 01:05:00 AM
It is quite prominent to match proper caution of all your gems pieces so that they pattern for a lifetime. There are different approaches and ways to clean weird types of jewels be it gold, euphonious, pearls, diamond or marvel stones. Outlined below-stairs are the various ways by which you can walk off care of your accessories and keep them flickering and green always.
பெயரில்லா சொன்னது… 10/27/2010 07:15:00 AM
கருத்துரையிடுக