Tamil Blogs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Blogs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 21, 2008

ரவி ஸ்ரீனிவாசிற்கு மனம் திறந்த மடல்

ரவி ஸ்ரீனிவாஸ் கேட்கக் கூடாத கேள்விகள் -:) கேட்டிருக்கிறார்.

பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா?
அரசியல்வாதி போல் இதற்கு பதில் சொல்வது நடைமுறை. சிம்புவின் தொல்லைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நயனின் கலைச்சேவை பாதிக்கப்பட்டது என்றால் அது சினிமா சந்தைமுறை. ரவி போன்றவர்கள் ட்விட்டரில் இருந்துகொண்டே இது போன்ற சதிகளை உருவாக்கினர் என்று கட்டுடைத்தல் இணைய எதிர் மரியாதை முறை. இது போன்ற குட்டிகளாகப் போட்டுத்தாக்கும் டைனோக்களை கண்டுகொள்ளாத ரவிக்கு கண்டனம் முறையாகும்.

2. இணைய மற்றும் கணினி addictionனுக்கு பாஸ்டனில் நல்ல சிகிச்சை கிடைக்கிறதா ?
நாங்க எல்லாம் அமெரிக்கா மாதிரி. ஆரம்பத்தில் டாட் காம் பங்குகளாக ராயர்காபி க்ளப்பில் பழியாய்க் கிடப்போம். ஈ-பேயும் அமேசானும் விழ ஆரம்பித்தால் வீடு மார்க்கெட் என்னும் ப்ளாகர், வோர்ட்பிரெஸ், ப்ளாக்ஸ்பாட் பின்னாடி பேயாய் திரிவோம். கொஞ்ச நாள் கழித்து அந்த மோகமும் போய் எண்ணெய் பித்து தலைக்கேறினால், ட்விட்டர் கணக்கை கூட்டுவோம்.



முதல்ல அமெரிக்கா திருந்தறதுக்கே இன்னும் நீங்க உங்க பதிவில் வழிசொல்லியபாடில்லை. அப்புறம்தானே என்னோட பித்துக்கு வைத்தியம் சித்திக்கும்.



நானூறு பதிவுகள். பெரும்பாலானவை அச்செடுத்து படிக்க கோரியவை. வாழ்த்துகள்.

என் எழுத்து, வலைப்பதிவின் உள்ளடக்கம், வடிவம் இன்ன பிற தொடர்புடையவை குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள்?
எழுத்து: கருத்து சொல்லுமளவு எனக்கு விஷயஞானம் போதாது. தாங்கள் தரும் சுட்டிகளைப் படித்து பயன்பெறுகிறேன்.



வலைப்பதிவின் உள்ளடக்கம்: 'மேய்ச்சலில்' தருவது போல் வெறுமனே உரல்களை மட்டும் இட்டு செல்லவேண்டாம். கென் வில்பர் குறித்த பழைய கட்டுரையிலும் கூட மிரட்டாத அறிமுகம் தருவது போன்ற நடை என்னைக் கவர்கிறது. இலகுவாக வாசிக்க வைக்கிறது.



குறிச்சொற்கள்: தற்போதைக்கு ஓரளவே பயன்படுத்துகிறீர்கள். இன்னும் தாராளமாக உபயோகிக்கவும். ஆங்கில வார்த்தைகளும் இடவும்.



வார்ப்புரு: பயனுள்ள widgetகள் சிலவற்றை சேர்க்கலாம்:

  1. Google Search (Search Box)

  2. Labels (Show all the labels of posts in your blog)

  3. Subscription Links (Let your readers easily subscribe to your blog with popular feed readers)

  4. உங்களின் ட்விட்டர் குறிப்புகள் (add Twitter to your site)

இவற்றை இணைப்பதற்கு http://draft.blogger.com/home என்னும் முகவரியில் உள்நுழையவும்.



நன்றி.



படம்My Satirical Self - New York Times

செவ்வாய், ஜூலை 08, 2008

A Concise Introduction to Twitter.com and Why you should join there?

அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா?

 

இந்தியாவில் சற்றேறக்குறைய பத்து மில்லியன் வலை இணைப்புகள் இருக்கின்றன.



செல்பேசி சந்தாதாரர்கள் எவ்வளவு? நிறைய என்பது உங்களை சுற்றிப் பார்த்தாலே தெரியும். எண்ணிக்கை எம்புட்டு என்று எண்ணிப் பார்த்தால் 250 மில்லியனைத் தாண்டி ஏவுகணைப் பாய்ச்சலில் ஏறுகிறது.



மாதந்தோறும் கிட்டத்தட்ட பத்து மில்லியன் புதிய இணைப்புகளை செல்பேசிகள் சேர்த்துக் கொள்கின்றன.



வலைப்பதிவுகள் என்பது பத்து மில்லியன் வாசகர்களை எதிர்நோக்குகிறது. குறுந்தகவல் என்பது மாசாமாசம் ஆஸ்திரேலியாவை தோற்றுவிக்கும் இந்திய மக்கள்தொகையை ஒத்து செல்பேசிகளை குறிவைக்கிறது.



'மன்னன்' ரஜினி மாதிரி கேள்வி கேட்டால்... 10 மில்லி போதுமா? 250 மில்லியன் வேண்டுமா?!



வலைப்பதிவுகளுக்கு ப்ளாகர்.காம், வோர்ட்பிரெஸ்.காம் இருக்கிறது. குறுஞ்செய்திகளை எப்படி அனுப்புவது?



டிவிட்டர்.காம் உபயோகிக்கலாம்.

(ட்விட்டருக்கு மாற்றாக ஃப்ரெண்ட் ஃபீட் வலையகத்தை சிலர் பரிந்துரைக்கிறார்கள். அது தற்போதைக்கு பயனில்லை என்னும் என் கருத்தை பிரதிபலிக்கும் கட்டுரைகளுள் ஒன்று: FriendFeed explodes onto the scene, but it is still an information fire hose)

முக்காலியாக வலைப்பதிவுகள், அரட்டை, மின்னஞ்சல் கொண்டு பயணித்த இணையம் குறுந்தகவல் மூலம் நான்காவது தூணை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறது.



செல்பேசி கொன்டு குறுந்தகவல் அனுப்பினால் நிறைய பணம் விரயமாகுமே? அதுதான் இல்லை.



வழக்கமாக இணையத்தில் மேய்வது போன்றே ட்விட்டர்.காம் சென்று பலருக்கும் செய்தி அனுப்பலாம்.



வாசகரின் செல்பேசிக்கே செய்திகள் சென்றடவைதால், தொலைபேசி போன்ற உடனடித்தன்மை இங்கே கிடைக்கிறது. அலுவலில் மும்முரமாக மூழ்கி இருந்தாலும், அரை விநாடியே செலவழித்து குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, வேலையைத் தொடரலாம். மீட்டிங்கில் இருந்தால் கூட பதில் அனுப்பலாம்.



இதெல்லாம் நான் இப்பொழுதே நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கின்றேனே! அப்புறம் எதற்கு தனியாக ட்விட்டர்?


  • 'கலைஞருக்கு நோபல் ஏன் கிடைக்க வேண்டும்?' என்று பிரச்சாரத்தை ஓசையின்றி முடுக்கி விடலாம்.

  • மாணவர்களுடன் உரையாட, தற்கால தலைமுறையின் பாஷையில் ஆசிரியர் உறவாடலாம்.

  • பத்து நண்பர்களுக்கு 'விஸ்டா நிறுவ உதவி தேவை' என்று மின்மடலிடுவதை விட, ட்விட்டரில் கோரினால், கை மேல் பலன் நிச்சயம்.

  • 'சுப்பிரமணியபுரம்' குறித்து விஷயமே இல்லாமல் பதினேழு வரி எழுதுவதற்கு பதில், நச்சென்று விமர்சனம் கொடுக்கலாம்.


சுருக்கமாக, தெரிந்த நண்பர்களுடன் உரையாடுவதை பொதுவில் தெரிவிக்கவும், தெரியாத உறவுகளுடன் தொடர்புகளை உருவாக்கவும், தொடர்பில்லாத விஷயங்களில் தெளிவான கருத்துக்களைப் பெறவும் பயன்படுகிறது.



ஏன் ட்விட்டர் என்பதை விளங்கிக் கொண்டாடியாச்சு. இதெல்லாம் எப்படி செய்வது: ட்விட்டர் குறித்த எளிய அறிமுகம்.



மேலே உள்ள சுட்டியை க்ளிக்காதவர்களுக்கான அறிமுகம்:


  1. ட்விட்டர்.காம் சென்று புதிய கணக்கைத் தொடங்கவும்

  2. நணபர்களை அழைக்கவும். (என்னைப் போன்றோரின் சோத்தங்கை பக்கத்தில் பல புகழ் பெற்ற பதிவர்கள், ட்விட்டரர்கள் இருப்பார்கள்; அவர்களையும் இணைக்கலாம்.)

  3. 140 எழுத்துக்களுள் நீங்கள் செய்து கொண்டிருப்பதை முழங்கவும்


அவ்வளவுதான்.



ட்விட்டரினால் ஆய பயன் பற்பல.


  • சாதாரணமாக நீங்கள் பேசத் தயங்கும் பெருசுகளுடனும் சரி; நீண்ட காலமாக தொடர்பு விட்டுப்போன பால்யகால சிநேகிதிக்கும் சரி; பேச்சைத் துவக்க நெருக்கமான அன்னியோன்யம் கொடுக்கும் சூழல்.

  • வணிக நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கின்றன (Hurry up, the customer has a complaint - The Boston Globe)

  • ஃபெட்னா விழா நடக்கிறது. பலராலும் மேடை நிகழ்வை கவனிக்கத்தான் நேரம் சரியாக இருக்கும். கிடைக்கும் ஓரிரு இடைவேளையில் பதிவாக அல்லாமல், குறுந்தகவலாகப் பகிரலாம்.

  • 'கத்தாழக் கண்ணால' பாடலுக்கு நடனமாடியவர் யார் போன்ற கேள்விகளுக்கு கூகிள் தேடி தாவு தீராமல் விடையறியலாம்.

  • 'தினம் ஒரு திருக்குறள்' என்று சங்க இலக்கியம் தொடங்கி அன்றாட இலக்கிய சர்ச்சை என்று வகைவகையாக தினசரி தொகுக்கலாம்

  • இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பக்கம் முதல் விக்கிப்பீடியா பக்கத்தை தொகுக்கும் பணி வரை எதற்கு வேண்டுமானாலும் செல்லமாக திட்டி, தட்டி கொட்டி வேலை வாங்க, ஊக்குவிக்கலாம்.




திரட்டி என்றாலே ஏதாவது சட்ட திட்டம் இருக்குமே? இங்கு உள்ள நடைமுறை என்ன? Twitter Etiquette | Global Geek News Blog



இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் சுயமாகவே நிர்ப்பந்தித்துக் கொள்வதேயன்றி, இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்று ட்விட்டர் வலியுறுத்துவதில்லை. ட்விட்டரில் இருப்பவர்களும் 'ஃபாலோ' பட்டனை அமுக்கி, தங்கள் கோபத்தை/விருப்பத்தை தெரிவித்து சென்றுவிடுவார்கள்.



இவ்வளவு தூரம் படித்திருந்து, வலையில் எதெது எதற்கு என்று குழம்பிப் போயிருந்தால்...



பதிவு: விவரமானவை; வித்து; கோர்வையான உள்ளடக்கம். (உங்கள் இடுகையை சுட்டிக் காட்ட வைக்க வேண்டும்.)



குரல் பதிவு: தமிழ் படிக்கத் தெரியாதோரையும் சென்றடையும்; வேறு வேலை செய்துகொண்டே கூட கேட்கலாம். (நேர்காணல், எழுதத் தெரியாதவரின் குரல், இசையோடு கூடியது)



கூட்டுப்பதிவு: ஒத்த லட்சியம் கொண்டவர்களின் பதிவுப் பயணம். (விழா, நிறுவனம், கட்சி, நுட்பம்)



வலைத்திரட்டி: புதிய பதிவர்களுக்கு அடையாள அட்டை; தமிழ்மணம் போன்ற இடங்களில் விளம்பரம்.



தெரிவுத்திரட்டி: விடுபட்டதற்கான அறிமுக அட்டை; கில்லி போன்ற வலையகங்களில் வாசிக்க மறந்ததற்கான புத்தகக்குறி.



மனிதத்திரட்டி: நம்பகமான குறிச்சொல் கொண்டது; மாற்று போன்ற சேவைகளினால் வலையில் இருந்து பகிர்பவை.



விக்கி: புத்துருவாக்கம்; சகாக்களின் திருத்தத்துடன் நம்பகத்தன்மை.



மனித விக்கி: தேடல்களுக்கு எளிமையான முன்னுரை விடை; மஹாலோ போன்ற இடங்களில் பெரும்பான்மையினரால் கோரப்படும் தலைப்புகளுக்கு புகழ்பெற்றவர்களால் புகட்டப்படும் முடிவுகள்.



அரட்டை: சோர்வு மறக்கடிக்கும்; விவாத களத்துக்குரிய லட்சணங்களுடன், வெற்றி/தோல்வி சாரமற்ற காரம்.



மின்னஞ்சல்: பத்து வரிக்கு மிகுந்தால் கவனமின்மை தரும்; எரிதமாகிப் போகும் அபாயம் உண்டு; தன்னந்தனியே பேச வேண்டியது.



கோப்பு: அச்சிடுவதற்கு வசதி; ஸ்க்ரிப்ட் போன்ற தளங்களில் ஏற்கனவே உள்ளூர் கணினியில் உறங்குவதை உலகுக்கு வெளிப்படுத்தலாம்.



குறுஞ்செய்தி/குறுந்தகவல்: உரையாடல் துவக்கம்; பதிவில் தனித்துவம் மிளிரும் என்றால், ட்விட்டரில் பொதுக்குணம் தூக்கல்; சுட்டிகள் புழக்கம் குறைச்சல்; முக்கியமாக 'யார் வந்தார்கள்? எத்தனை வருகையாளர்? எப்படி வந்து சேர்ந்தார்கள்?' என்று அலசும் புள்ளிவிவர ஸ்டாடிஸ்டிக்ஸ் லேது.



நினைப்பதை, விரும்புவதை, வெறுப்பதை, நம்புவதை, விழைவதை எண்ணியவாறே பதிந்து வைக்க, பதிந்ததை பலகோடி மக்களுக்கும் பரப்ப ட்விட்டருக்கு வாங்க!



மேலும் ட்விட்டர் குறித்து அறிய: எளிய அறிமுகம்.



கருத்துப்படம்: gapingvoid: "cartoons drawn on the back of business cards": why i deleted my twitter account

வியாழன், ஜனவரி 03, 2008

எழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி? - டிப்ஸ்

சர்வேசன் போட்டிக்கு வந்த நச்னு சில கதைகளைப் படித்தபோது பா. ராகவன் முன்பு பகிர்ந்ததை மீள்பதிவாக இட்டால், சிலருக்கு உபயோகம் ஆகலாம் என்னும் உரிமைதுறப்பு பணிவன்போடு:

பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.


1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.

ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

(திண்ணை-யில் இருந்து: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 1 : ஆதவன் | 2 | 3)


13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.



எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:

நல்ல எழுத்துக்கு வேண்டியது - முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.

எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி", என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.

நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.

கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.

- சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' (சில பகுதிகள்)


Thinnai: "ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை :: சுந்தர ராமசாமி"

என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள்...எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் -
அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.


முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.



கடைசியாக விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கும் சர்வேசன் வாக்கெடுப்புக்கு விளம்பரம்: சிறந்த 'நச்'© கதை - இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்

சனி, நவம்பர் 17, 2007

தினமணிக் கதிரில் தமிழ் வலைப்பதிவர்கள் குறித்த அறிமுகம்

நன்றி: தினமணிக் கதிர் (அசலைப் படிக்க இங்கு சுட்டவும்)

சுட்டப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்!

வலைப் பூக்கள்: என்ன ஒரு தெனாவெட்டு?

பத்திரிகைகள், விதவிதமான பெயர்களில் தனியார் தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் என அனைத்து ஊடகங்கள் தோறும் செய்திகள் ஊர்வலம் வந்தாலும், இப்போது நகரத்து இளைஞர்களின் பெரும்பான்மையான விருப்பமாக இருப்பவை- 'பிளாக்'குகள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலைப்பூக்கள்தான்!

ஒவ்வொருவரும் தங்களின் வலைப்பூவில் அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களையும், கவிதை, கட்டுரை என படைப்புகளையும், நாட்டு நடப்பு குறித்த அவர்களின் கண்ணோட்டங்களையும், விமர்சனங்களையும் சுதந்திரமாக வெளியிடுகின்றனர். சில வலைப்பூக்களிலிருந்து சுவையான விஷயங்களை இங்கே தருகிறோம்...

தஞ்சாவூரு குசும்பு!: (நெனக்கிறதெல்லாம் எழுத ஆசதான்... முடியுங்களா? உக்காருங்க. மோர் சாப்புட்டுகிட்டே பேசுவோம்)



"போன வாரம், நம்ம பில்கிளிண்டன் மின்னியாபோலிஸ் வறார்னு நண்பன் சொன்னான். சரி, போய் பார்த்துட்டு, நலம் விசாரிச்சுட்டு அப்பிடியே நம்ம தங்கத் தலைவி ஹிலாரிக்கு (ஓட்டுப் போட நம்மாலே முடியாதுன்னாலும்) ஆதரவு தெரிவிக்க நினைச்சேன். அம்பது ரூவா குடுத்து டிக்கட்ட வாங்கிட்டு வேலையிடத்துலேர்ந்து சீக்கிரம் "எஸ்'ஸாயி போய் சேர்ந்தோம்.

இது என்ன கொடுமைடா சாமி, ஒரு முன்னாள் அதிபர் வராருங்கிற ஒரு இது கூட இல்லாமே, தெருவெல்லாம் அதது, அதது வேலையப் பாத்துகிட்டு இருக்கு. ஒரு தோரணம் இல்லே... கொடி இல்லே. ரோட்ட மறச்சு விதவிதமா வளைவுகள் இல்லே. அட அதாவது பரவாயில்ல, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமே இந்த போலிஸ்காரங்க, போக்குவரத்த நெறுத்தாம, என்ன ஒரு தெனாவெட்டு?

இதைவிட அவமானம் (தமிழர்களுக்கு- குறிப்பா தமிழகத் தலைவர்களுக்கு) என்னன்னா, ஒரு நாயி கூட கிளி கால்ல வுளுந்து ஆசி வாங்கமாட்றாங்க. என்ன ஒரு நெஞ்சழுத்தம்? எனக்கா... ரத்தமல்லாம் கொதிக்குது. தொண்ட கிழிய ஒரு சவுண்டு (தலைவா.. வாழ்கன்னு) வுடலாம்னு பாத்தா, அங்கே அங்கே நிக்கிற பாதுகாவல் அதிகாரிகங்களப் பாத்தாலே கொல நடுங்குது.

ஒரு வாழ்க கோசம் இல்லே, தெருவுக்கு தெரு மெரட்டி புடுங்குன காசுல வாங்குன வாளு, கேடயம், செங்கோலு, தங்க மால, தங்க அரனாகயிருன்னு ஒன்னும் கொடுக்கல. அட, 340-ஆவது வட்டச் செயலாளர் அணிவிக்கிற "பொன்னாடை' (பண்ணாடைங்களுக்கு, இது வேற!) கூட இல்ல.


thanjavuraan.blogspot.com




கடல்புறத்தான் கருத்துக்கள்: நடிகர் திலகத்தின் விருந்தோம்பல்



ஒருமுறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும்(மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர். அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு, நெஞ்சை விரித்து, கண்களில் தீப்பொறி பறக்க, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார்.

cdjm.blogspot.com



குசும்பு: அரபு நாடுகளில் வேலைக்கு வருவதற்கு முன் கவனிக்கவேண்டியவை விசாவும், சம்பளமும்.



விசாவில் வேலைபார்ப்பதின் நன்மைகள்: இரண்டு மாத காலத்தில் கம்பெனியின் நிஜமுகம் தெரிந்துவிடும். சம்பளம் ஒழுங்கா வருமா? வராதா? கம்பெனியின் எதிர்காலம் எப்படி, இல்லை மன்னாரன் கம்பெனியா? என்று கண்டுபிடித்துவிட்டு ஈசியாக வேறு வேலை தேடிக்கலாம்.

தீமை: லேபர் லா படி எந்த பலனையும் அடைய முடியாது. சம்பளம் தரவில்லை என்றால் கூட ஒன்னும் செய்யமுடியாது.


kusumbuonly.blogspot.com


சனி, ஜூன் 30, 2007

Questions for Idly-Vadai

இட்லி-வடை (IdlyVadai - இட்லிவடை) 1008 பதிவுகளைத் தொடப் போகிறார். அதை முன்னிட்டு பாற்குடம், கரகாட்டம், காது குத்து, நீர்ப்பந்தல், ஆன்மிக சொற்பொழிவு எல்லாம் செய்ய ஆசைப்படுகிறார்.

அந்தக் காலத்தில் சுப்ரமணிய சுவாமி, இராஜீவ் காந்தியை நோக்கி தினசரி இருபது கேள்விகள் கேட்பார். பதில் வரவில்லை என்றாலும், கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி உங்களையும் வினாத் தொடுக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

இவை என்னுடைய சந்தேகங்கள்:

1. யார் நீங்க? 'நீதானா அந்தக் கழுதை' என்று மோகன்தாஸ் முதல் முட்டம் சின்னப்பதாஸ் வரை மடல் விடு தூதுகிறார்கள். சொல்லிடுங்க.

2. சென்சேஷனல் செய்தி எங்கேயிருந்து பிடிக்கறீங்க? 'காசிமேடு ஆதி'யாக ஒரு ரூபாய் சொன்னீங்கன்னா, நாங்களும் முந்தித் தந்து கூகிள் ஆட் சில்லறையில் 'சிவாஜி' கல்லாப்பெட்டி நிரப்புவோம்.

3. உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் வேலை என்று ஏதாவது உண்டா? ஜர்னலிஸ்டாக இல்லை என்றால், முழுநேர செய்தியாளராக ஆகும் எண்ணம் உண்டா?

4. உங்களை இதுவரை எவ்வளவு பேர் கண்டுபிடுச்சிருக்காங்க? அதில் எம்புட்டு கரெக்டு?

5. நீங்க அரசியலுக்கு வருவீங்களா? வந்துட்டீங்களா?

6. ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினார் (அப்படியா?). சுஜாதா நிறுத்த வேண்டும் என்கிறார்கள் (யாரு!?). நீங்கள் வலைப்பதிவை நிறுத்திவிட வேண்டுமா?

7. டைம் மேனேஜ்மெண்ட் எப்படி செய்யறீங்க? கணவன், குழந்தைக்கெல்லாம் அவ்வப்போது ஹலோ சொல்வதுண்டா?

8. காபி/பேஸ்ட் போரடிக்கவில்லையா? சற்றுமுன், மிளகாய், தமிழ் நியுஸ் என்று கிளம்புகிறவர்களை போட்டியாக கருதுகிறீர்களா? வளர்ப்பு மகவுகளாக பார்த்து உச்சி மோந்து மகிழ்வுறுகிறீர்களா?

9. ஜனாதிபதியாக வர கலாம் மறுத்துவிட்டார். உங்க சாய்ஸ் யாரு? எவர் வந்தால் இட்லி-வடை சூடு பறக்கும்?

10. 'எனக்கு அந்த முக்கியஸ்தரை தெரியும்... இவருடன் நேற்று டீ சாப்பிட்டேன்' என்பதெல்லாம் 100% கப்ஸாவா? கனவா? சொப்பன ஆருடங்களா?

11. திரட்டியை விட்டு விலகுவது பயந்து முக்காடு போடுவதற்கு சமானம் அல்லவா? அதற்கு எழுதாமலே ஒதுங்கலாமே? ஏன் தமிழ்மணம் கருவிப்பட்டையை கழற்றினீர்கள்?

12. முன்னாடியெல்லாம் துக்ளக் கார்ட்டூன்கள் ரெகுலராக வருமே? இப்பொழுது ஏன் நின்று போச்சு? பின்னூட்ட பிரண்டிங் மனப்பிராந்தியா?

13. விசயகாந்த்துக்கும் இராமதாசுக்கும் ஆறு ஒற்றுமைகள் சொல்லுங்க.

14. அட்டன்பரோ :: காந்தி; சத்யராஜ் :: பெரியார்; மோகன்லால் :: எம்ஜியார்; (நிரப்புக)
அ) ரஜினி :: - ?
ஆ) விஜய் :: - ?

15. இட்லி-வடைக்கு நிகர் இ-வ.தான் என்றாலும். அமிதாப் இல்லாத அசோகாவுக்கு அஜீத் தேவலாம் என்பது போல் இ-வ அல்லாத பதிவுலகில் யாரை இட்டு நிரப்ப முடியும்:
அ) யோசிப்பவர் / ஆ) உண்மைத் தமிழன் / இ) காஞ்சி ஃபிலிம்ஸ் / ஈ) பாலச்சந்தர் கணேசன்?

16. 1007-இல் எட்டாவது சொந்தமாக எழுதியிருப்பீங்க. (எழுதியிருக்கீங்களா!?) அதில் பிடித்த முத்து?

17. கீழ்க்கண்ட சன் டிவி தொடர்களில் ஒன்றை உங்கள் பதிவோடு ஒப்பிடுக:
அ) அல்லி ராஜ்ஜியம்,
ஆ) அமுத மொழிகள்,
இ) குட்டீஸ் சாய்ஸ்,
ஈ) சென்ற வார உலகம்,
உ) தற்காப்பு கலை

18. சண்டை நமது குணம் என்பதற்கேற்ப இட்லி-வடைக்கு x யார்?

19. TOP 10 Movies போல் இட்லி-வடைக்காக ஸ்பெசல் திரைப்படம் போடுக.

20. தங்களின் அத்யந்த வாசகருக்கு ஒரு கேள்வி வரைக.

நீங்களும் கேட்டு வைக்கலாம். அரசு பதிலாக இல்லாவிட்டாலும், அமீனா வராவிட்டாலும் கூர்மவாவது வந்து சேரலாம்.

திங்கள், ஏப்ரல் 09, 2007

Blogger Meets - Announcement

விடுபட்டவை: ஏப்ரல் 22ல் பதிவர் சந்திப்பு!:

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - சென்னபட்டினம் & சிறில் அலெக்ஸ், தருமி, ஓசை செல்லா, துபாய் ராஜா, துபாய் லியோ சுரேஷ்.

அடியேனும் ஆஜர் :)

இடம்: நடேசன் பார்க், தி.நகர்.
நேரம்: 3.30 - 7.30
நாள்: ஏப்ரல், 22 - ஞாயிறு

முழு விவரங்கள்




இலவசம்: Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !:

இடம்: நியூ ஜெர்ஸி, அமெரிக்கா
நாள்: ஏப்ரல், 28 - சனி



இந்த முறை புது தில்லியிலும் சில வார நாள்களைக் கழிக்க திட்டம் உள்ளது. டெல்லி வட்டாரப் பதிவர்கள் சந்திக்க எண்ணம் இருந்தால் bsubra @ gmail.com அல்லது bsubra @ yahoo.com-இல் தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!

Tamil Robo - Guest Editor (Ad)

தமிழ் ரோபோவில் இந்த வாரம் 'விருந்தினர்' பணி.

ஒரு வார ஆசிரியராக இருக்க விருப்பமா ? idlyvadai@gmail.com ஒரு மெயில் தட்டுங்கள்! எந்த நிபந்தனையும் கிடையாது என்று பார்த்தவுடன்
, அறிவியல் தமிழ் பரப்ப விழைந்து, தமிழ் ரோபோவில் குழைந்தேன்.

இதுவரை இட்ட சில பதிவுகள்.



அடுத்த வாரம் யாரு???

செவ்வாய், மார்ச் 13, 2007

How will Balaji select 'Top Group Blogs'

Thursday, March 08, 2007

எந்த குழுப்பதிவு டாப் ?

நம்ம வலைப்பதிவில் எந்த கூட்டுப்பதிவு டாப் ?
1.
2.
3.
4.
5.
என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Posted by பாலாஜி at 3/08/2007 08:56:00 AM

Labels: வாக்கெடுப்பு



Monday, March 12, 2007

டாப் 5 கூட்டுப்பதிவாளர்கள் - முடிவுகள் !
பொழுதுபோகாதோர் தினம் ஸ்பெஷலாக குழாம் பதிவுகளில் டாப் 5 யார் என்று ஒரு வாக்குபதிவு வைத்திருந்தேன்.

முடிவு ... கிழே..



1. விக்கிபசங்க 20% வாக்குகள் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறார். ஓட்டு போட்ட பெரும்பாலோர் விக்கிபசங்களுக்கு ஓட்டு போட்டிருந்தார்கள். மிகவும் பாப்புலர் குழுப்பதிவு.

2. அடுத்த இடத்தில் இருப்பவர் இலக்கணம் கற்றுக் கொடுக்கும் குழு. 14% வாக்குகள் வாங்கியுள்ளார்கள்.

3. மூன்றாம் இடத்தில் மூன்று குழு பதிவாளர்கள் வ.வா.ச., சென்னப்பட்டணம், திராவிட தமிழர்கள் 11% வாக்குகள் வாங்கியுள்ளார்கள்.

4. 9% ஓட்டுகள் வாங்கி நான்காம் இடத்தில் சற்றுமுன் இருக்கிறது.

ஐந்தாம் இடத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் சக்தி, வலைப்பதிவர் உதவிப்பக்கம், சொல் ஒரு சொல், கண்ணன் பாட்டு. 6 % ஓட்டுகள் வாங்கியுள்ளார்கள்.

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பாலாஜியின் வாழ்த்துக்கள்.

Posted by பாலாஜி at 3/12/2007 11:13:00 AM

இந்தப் பதிவுக்கு உதவியதற்கு நன்றி: பொன்ஸ் பக்கங்கள்: கூட்டணி ஆண்டு 2006

செவ்வாய், பிப்ரவரி 27, 2007

30+

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30 என்கிறார்கள்.

பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா? சென்னைக் கச்சேரியைப் பின் தொடர்ந்து...

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் நிரலி, பல சமயம் மக்கர் செய்யும். கோபமாய் கத்தும் வாடிக்கையாளரிடம் workaround (Top 20 programmers excuses) சொல்லியேப் பழக்கப்பட்டவன். அப்படி எல்லைகளை தகர்த்தெறிந்து பறப்பது செர்ஜி பூப்காக்களின் வேலை என்பதற்கேற்ப, சில ஆலோசனைகள்.

  1. ஒரு நாளைக்கு ஒரு பின்னூட்டம் மட்டுமே அனுமதிக்கவும். ஃபெப்ரவரி மாதம் என்றால், மார்ச் மாதத்தில் கூட உங்களின் பதிவு முகப்பில் இருக்கும்.

  2. அப்படி முப்பதைத் தாண்டியவுடன், 'இது 31-ஆவது மறுமொழி' என்று புதிய பதிவில் புதிய கணக்கைத் ஆரம்பிக்கவும்.

  3. பத்தைத் தொடும் தருணத்தில், ஒன்பதாவது துலச்சலை தொகுத்து வெளியிட்டு விடவும். (எப்படி: Blogger - how to edit comments | Edit Comments). இதன் மூலம் கிட்டத்தட்ட 90 பின்னூட்டங்கள் வரை முப்பதுக்குள் குண்டுசட்டியாக்கி குதிரையோட்டலாம்.

  4. உங்களுக்கு இன்னாரின் பதிவுகள் பிடிக்காதா? அவர் பதிவை இட்டவுடன் முற்றுகையிடுங்கள். முப்பது பேர்களில், முப்பது பின்னூட்டங்கள் இடுங்கள். ஆளின் பதிவு அம்பேல். (அவர் வெளியிடாவிட்டால், 'பதிவரின் கயமைத்தனம்' என்னும் தலைப்பில் தனிப்பதிவு இடுங்கள்).

  5. முப்பதுக்கு முன் போய் கருத்து சொன்னால், 'எல்லாரும் படித்து விடுவார்கள்'. ஆனால், எருமை மாடு அமிழ்ந்து கிடக்கும் குட்டை மாதிரி பின்னூட்டங்கள் தேங்கிய பிறகு போய் பதில் போட்டால், 'not to publish' என்று வரும் தனி மடலுக்கு பதிலாக, தைரியமாய் சொந்தப் பெயரிலேயே எழுதிவிட்டு வரலாம்.

  6. co.mments மாதிரி சேவையளிக்கும் நிரலிகளுடன் தமிழ்மணம் டீல் போட்டுவிட்டது என்று பதிவெழுதலாம்.

  7. முதல் முப்பதே சோதாதானே... அப்புறம் எதற்கு முப்பத்தொன்று? : Weblog comments (suck (usually)).

  8. பத்து புள்ளிகள் தராவிட்டால், பதிவு நிறைவுறாது என்னும் திட்டத்துக்கு கால்கோள் இட்டு விடாதீர்கள். எனவே...

  9. Pearls Before Swine:



  10. Lio:


    கொசுறு:




சந்தோஷ் சொல்வது போல் 'பதிவர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒண்ணும் செய்ய முடியாது' என்பதற்கேற்ப பின்னூட்டவாசிகள், இந்த 'முப்பதுக்குள் மட்டும்' தடையை, ஆப்பர்ச்சூனிடியாக மாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.


முந்தைய பதிவு: பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்: பிசாசு மொழி

திங்கள், பிப்ரவரி 26, 2007

Tamil Blogs - Thamizmanam Tactics & Strategy

கணிமை: தமிழ்மணத்தை மேம்படுத்த சில நுட்ப ஆலோசனைகள் பதிவை பின் தொடர்ந்து...

1. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் - ஆங்கிலப் பட டிவிடிக்களில் 'நீக்கப்பட்ட காட்சிகள்' தொக்கிக் கொண்டு, இலவசமாக கூடவே வரும். படம் பார்ப்பதை விட, படத்தொகுப்பின் போது, கடாசிய இந்தக் காட்சிகளை பார்ப்பதில் சுவாரசியம் அதிகம். முதலில் வெறுமனே காட்சிகளை மட்டும் பார்ப்பேன். அது முடிந்தவுடன், 'இயக்குநரின் சொற்பொழிவோடு கூடிய' பின்னணியில் ரசிப்பேன்.

பின்னூட்டங்களும் அவ்வாறே. பதிவில் தொக்கி நிற்பதை பிறருக்கு விளம்பும்.

இன்னாருக்கு வரும் பின்னூட்டங்கள் 'அன்பே... நலமா' அல்லது 'சும்மா எண்ணிக்கை கூட்டிக் கொள்ள' வகையறா என்றால், நாளடைவில் அந்த வலைப்பதிவை நித்திராதேவி வரமறுக்கும், அரட்டை அடிக்க எவரும் மாட்டாத நேரத்தில் கூட (மறுமொழிக்காக) நான் க்ளிக்குவது கிடையாது. பத்ரிக்கு வரும் மறுமொழிகள், பதிவின் மேற்சென்று செறிவூட்டும் வகையறா என்பதையும் அன்றாட தமிழ்மண வாசகர் அறிவார்.



2. குறிச்சொற்கள்:

அ) check box தெரிவுகளாகத் தந்து மூன்று நான்கு குறிச்சொற்களை ஆகக் கூடுதலாக தேர்ந்தெடுப்பது (ரவிசங்கர்)
ஆ) குறிச்சொற்கள் என்பதை முழுக்கவே நீக்கிவிட்டு, பெரும்பான்மையான பதிவர்கள் பீட்டாவுக்கு மாறிவிட்டதால் பதிவில் கொடுக்கப்படும் குறிச்சொற்களையே திரட்ட வழி செய்யலாம்.(சுரேஷ்)

இவையிரண்டுமே முக்கியமான தேவையான மாற்றங்களைத் தரும்.

மேலும், digg.com போன்ற தளங்களில் இயக்கத்தில் உள்ளது போல், வலைப்பதிவு வல்லுநர்களைக் கொண்டு இந்த வசதியை மேம்படுத்தலாம். புதிய குறிச்சொற்களை, பதிவரின் விருப்பத்திற்கேற்ப சேர்க்கலாம்; குறைக்கலாம். ஆனால், தள நிர்வாகிகளின் கையில் இருப்பதால், தான்தோன்றித்தனமான பெயர்களுக்கு பதில், பொருத்தமானவை எடுபடும்.

ப்ளாகர் தவிர மற்ற வலைப்பதிவு நிரலிகள் அனைத்துமே (வோர்ட்பிரெஸ்.காம்) போல் 'வகைப்படுத்தல்' வசதியைக் கொடுக்கிறது. அவற்றையும் பொருத்தமாக உபயோகிக்க வேண்டும்.


3. வாசகர் பரிந்துரை -

வாக்குகள் எவரால் இடப்பட்டது என்று பெயரையும், வலைப்பதிவின் முகவரியையும் காட்டவேண்டும். மேலும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது கீழிறக்கப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் காணும் வசதி வேண்டும்.

நமது வாக்கு வெளிப்படையாகத் தெரியும் என்பது, வலைப்பதிவாளருக்கு பொறுப்பைத் தரும். விளிப்பிலியாக மறைந்திருந்து வாக்களிக்கும் வசதி இல்லாததால், கள்ள ஓட்டு எண்ணிக்கை குறையும். குழாமாக செய்ல்படுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு உண்மையா என்பதும் விளங்கும்.

இவர் இந்த விதமாய எண்ணுவது பிடித்திருப்பதால், இவரின் மற்ற வாக்குகளையும் அறிந்து, அங்கும் சென்று படிக்க விழைவோருக்கும் பய்னுள்ளதாய் அமையும்.

எடுத்துக்காட்டாக, இந்திய தேசியம் வலியுறுத்தும் வலைப்பதிவர், பிரிவினையைத் தூண்டும் பதிவை நிராகரிக்கலாம். அவர் மறுதலித்த மற்ற இடங்களையும் சுட்டுவதன் மூலம், அவருடைய வாக்குடன் ஒத்துப் போகும் என் போன்றோருக்கு எளிதில், பிடித்தமான இடுகைகளுக்கு வழிகாணலாம்.

---9/34 என்ற வாக்குக் கணக்கில் 9 பேர் வாக்களித்தனர் என்பதை விட 25 பேர் எதிர்த்துள்ளனர் என்பது முக்கியம்.---

ஒன்பது என்பது, எட்டை விடப் பெரிது.

காட்டாக, கடந்த தேர்தலில் திமுக-வுக்கு எதிரான ஓட்டு அதிகம் என்பதால், அவர்கள் ஆட்சியில் அமறக்கூடாது; திமுக அல்லாத கூட்டணிதான் அமரவேண்டும் என்று சொல்ல முடியாது. இன்னாரின் கருத்தை எட்டு பேர் விரும்பியுள்ளனர்; இன்னொருவரின் கட்டுரையை ஒன்பது பேர் பரிந்துரைக்கின்றனர். 9 > 8!


4. நிலையாகக் காட்ட ஒரு தனிப்பக்கம் -

பழைய தமிழ்மணத்தில் வரிசையாகப் படிக்க இயலும். பதிவின் தலைப்பு, இட்டவர் பெயர், கொஞ்சம் முன்னோட்டம் என்று தொடர் வண்டி போல் நீட்டமாக ஓடும். அதே போல், பகுதிவாரியாக தனிப்பக்கம் இடாமல், வெப்2.0 பயன்படுத்தி, ஒரே பக்கத்தில் தோற்றுவிக்கலாம். பாப்யூரல் (இன்னொரு காட்டு: Just Samachar - National News) போல் அஜாக்ஸ் கூட கொண்டு வரலாம்.

---அறிவு சார் துறைகளுக்கு முன்னுரிமை தரலாம்.---

பூங்காவின் தேர்வு (அல்லது) சார்பு நிலை போல் இதுவும் பிணக்குகளை ஊக்குவிக்கலாம்.



5. எரிதத் தடுப்பு -

மீண்டும் மட்டுறுத்தனர், தள நிர்வாகி போன்ற தணிக்கையாளர் போல் தென்படுகிறது.

ஆங்கிலத்தில் ஏற்கனவே இருக்கும் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தால் என்னைப் பொருத்தவரை எரிதம். 'அதுதான் படித்த விஷயமாச்சே... மீண்டும் எதற்கு புதிய மொந்தை' என்பேன். இன்னொருவருக்கு, அதுவே மொழியை வலுப்படுத்தும் செய்கையாக, ஆக்கபூர்வமானதாகத் தோன்றலாம்.

தமிழ்மணம் என்பது வலைப்பதிவு திரட்டி. வலைக்குழு அல்ல.

---அதிகபட்சம் ஐந்து இடுகைகள் மட்டுமே தமிழ்மணத்தில் காட்சிப்படுத்தப்படும்---

பதிவு சுதந்திரமான இடம்.

  • 'காலையில் ஒன்று, மாலையில் ஒன்று!'
  • 'நாமொருவர்' நமக்கெதற்கு ஐந்து?'
  • 'உங்கள் பதிவு ஐந்து கிலோபைட்டைத் தாண்டினால் திரட்டமாட்டோம்'
என்று கூகிள் சட்டதிட்டம் இடுவதில்லை.


6. முகப்புப் பக்கத் தர மேம்பாடு -

---பூங்கா இதழில் காட்சிப்படுத்தப்பட்ட இடுகைகளை எழுதியவர்களை ஓரளவுக்கு தரமாக எழுதக்கூடியவர்கள்---

மேலே #3-இல் சொன்னது போலவே பூங்காவும் தேர்வாளர்களை அடையாளப்படுத்த வேண்டும். எவர் தேர்ந்தெடுத்தால் ஒருவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அறிந்துகொள்ளவும், எவரின் தேர்ந்தெடுப்பு விருப்பமில்லாதது என்று புறந்தள்ளவும் இது ஏதுவாக இருக்கும்.


7. ---ஒரு திரட்டியாக எல்லா குப்பையையும் வாரிக் கொண்டு வர வேண்டுமா இல்லை சில குறைந்த பட்ச விதிகளுக்கு உட்பட்டு நல்ல படைப்புகளை காட்சிப்படுத்தும் இடமாகத் தமிழ்மணம் இருக்க வேண்டுமா---

இவ்விரண்டுமே ஒரே திரட்டியின் மூலமே சாத்தியம். தமிழ்மணத்தின் முகப்பு என்பது கூகிளின் திரட்டி (திரட்டி'ஜி') போல செயல்படலாம். கவனைத்தைக் கோரும் பதிவுகளைக் காட்டும் இடம் - கூகிளின் தேடல் முடிவுகள் பக்கம் போல் அல்லது ஆன்செர்ஸ்.காம் (Answers.com) போல் மாற்றாக விளங்கலாம்.


8. தமிழ்மணத்துக்கு வரும் பதிவர் அல்லாத வாசகருக்கு:

இவர்கள் அன்றாடம் தமிழ்மணத்திற்கு வருகை புரிவதில்லை. இப்படி பிரிக்கலாம்:


  1. தேடலில் எப்படியோ சுட்டி வந்து விழுந்தவர்கள்;
  2. நாளிதழ்/தாளிகைகளில், சன் டிவிக்களில் தமிழ்மணத்தின் உரலைக் கண்டவர்கள்;
  3. நண்பர் சொல்லி புரட்டி பார்க்க வந்தவர்கள்;
  4. யாஹூ டைரக்டரி போன்ற தொடுப்புகளில் சுட்டியவர்கள்;
  5. நேர விரயம் செய்ய abcd தட்டச்சியவர்கள்;


க்ரெய்க்லிஸ்டில் சில மாதம் முன்பு நிகழ்ந்ததை சொல்ல ஆசை.

'போக்கிரி' படத்தில் பிரகாஷ்ராஜ் குத்துவதற்கு முன்பு, சாட்டையடி வாங்கிக் கொண்டு, பாலுறவு கொள்ள வில்லன் விரும்புவார். அப்படிப்பட்ட, கட்டிப் போட்டு காதல் கொள்பவர்களை அழைப்பதாக ஒருத்தி விளம்பரம் கொடுத்தாள்.
'அழைத் தோழனாக இருக்கலாம். வாடகை: $...; உங்களுக்கு விருப்பமேற்படும்போதெல்லாம் என்னை அடித்து, துன்புறுத்தி, என்னையும் மகிழ்வித்து, நீங்களும் துய்க்கலாம்!'
விண்ணப்பங்கள் குவிந்தது. கடைசியில் 'ஏப்ரல் ஃபூல்' என்று சொல்லிவிட்டான். தன்னுடைய உளவியல் படிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி என்று ஏமாற்று விளம்பரத்தைத் தெரியப்படுத்தினான்.

தமிழ்ப்பதிவுகளைத் தேடி வருபவர்கள் இப்படிப்பட்ட விளம்பரங்களை நாடி வருபவர்கள் அல்ல. செய்தித்தாளில் இருக்கும் பதினாறு பக்கங்களை பத்து நிமிடங்களுக்குள் மேய்ந்து, பத்துக் குறிப்புகளை சுயமாகத் தேர்ந்தெடுத்து, படிக்க விரும்புபவர்கள்.



9. ---எந்த பதிவுகளை எப்படி எங்கு எவ்வளவு நேரம் காட்சிப்படுத்துவது என்ற உரிமை தமிழ்மணத்துக்கு உண்டு.---

ஆதி காலத்தில், இந்த கட்டுரைதான் Op-ed ஆக வரவேண்டும்; இதுதான் முகப்புப் பக்கத்தில் தலைப்பாக வேண்டும் என்று யாரோ நிர்ணயித்தார்கள். இன்றோ (Google tests personalized news feed service | CNET News.com அல்லது Micro Persuasion: What's on Your Google News?) உங்கள் சாய்ஸ் உலகம்.


10. ---என்ன குப்பை எழுதப்பட்டிருந்தாலும் வாரிக் கொண்டு வர கூகுள்---

கூகிளும் 'பக்கத்தின் தர'த்தை சொல்லும் பேஜ் ரேங்க் வைத்திருக்கிறது. தேடல் முடிவுகளை தானியங்கியாக விடாமல், வல்லுநர்களைக் கொண்டு ஏற்றி இறக்கி, கண்ணுக்குத் தெரியாத கடவுளாக செயல்படுகிறது.

கட்டாங்கடைசியாக, 'நல்ல கருத்துக்கள்; பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்' என்று சொல்லாவிட்டால், குய்யோ முய்யோ என்று சிறு பிள்ளைத் தனமானக் கதறலாகத் தோன்றலாம் என்பதால், தன்னடக்கத்துடன் 'எல்லாமே என்னுடைய ரெண்டனா :-)'


முந்தைய பதிவுகள்:

1. விருப்பப் பட்டியல் - 'தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்'

2. வலைப்பதிவு தேவைகள்

3. காலவரிசை

4. பயனர் அனுபவங்கள்

5. தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் கருத்துக்கணிப்பு - புதிய, பழைய வார்ப்புருக்கள்

வெள்ளி, பிப்ரவரி 23, 2007

பெனாத்தலார் என்னைத் தேற்றும் காட்சி



The Indibloggies கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்துவிட்டது.


மொத்த வாக்குகள்: 266

Best Indic Blog (Tamil)


  1. சுரேஷ் - 40


  2. செல்வநாயகி - 31


  3. செல்வன் - 28


  4. பாஸ்டன் பாலாஜி - 25


  5. டிசே தமிழன் - 21


  6. குரு - 18


  7. ராமநாதன் - 13


  8. கோவி கண்ணன் - 12


  9. மங்கை - 11


  10. ம சிவகுமார் - 10


  11. சன்னாசி - 9


  12. லக்கிலுக் - 9


  13. பொன்ஸ் - 8


  14. செந்தழல் ரவி - 8


  15. ஜெகத் - 7


  16. அசுரன் - 5


  17. இளவஞ்சி - 4


  18. பிரபு ராஜதுரை - 4


  19. சேவியர் - 3





நான் வாக்களித்தவர்களில் சிலர் வென்றும் இருக்கிறார்கள்:


தொடர்புடைய முந்தைய பதிவுகள்: ஈ - தமிழ்: Tamil Blogs - 2006 | இந்தியப் பதிவுகள் - 2005

தமிழுக்கென்று ப்ளாகர் ஐடி கொண்டு கணிப்பு நடத்திப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்று கலந்து burritoவாக குழப்பாமல், பிரித்து, தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும்.

சனி, பிப்ரவரி 03, 2007

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

  1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு
    குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.



  2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

    சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?


  3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    'மிஸ்... என்னை அடிச்சுட்டான் மிஸ்' என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் 'பாடம்' எல்லாம் கவனிக்க முடியும்?


  4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்
    படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.


  5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்
    சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.


  6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

    செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.


  7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

    மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

  8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை
    ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

    “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.


  9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்
    "மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன" என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு ஹேமமாலினி "அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்" என பதிலளித்திருந்தார்.

வியாழன், ஜனவரி 25, 2007

Google Page rank - Tamil News

அமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் 'ர' வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். 'அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ!?' என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.

நேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் 'வைட்டனர்' போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.

அவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: 'சுயதம்பட்டம்'.

தற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு 'அடங்காம ஆடினே தலை இருக்காது' என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR 'கொட்டு முரசே' என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.

ஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனைவரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.

வலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். 'நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.' என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து 'நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.' என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து 'நான் பதிவு எழுதினேனே! படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும்.' என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.

சுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு?

சுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.


நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.

சொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்

Prashanth - Grahalakshmi : Counseling to avoid Divorce - A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே
தோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் 'படம்' பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.

ஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.



உங்களின் பக்க மதிப்பை அறிய இங்கு செல்லவும்: Google Page Rank Checker - FREE PageRank Calculator

கூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank - Wikipedia

உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:

1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் சவாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.

2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.

3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. 'உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்' என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.


கடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:

இதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064

ஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810

நகலெடுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750

அவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233

இடுகுறிச் சொற்கள் (Tags): 5,316



| |

திங்கள், டிசம்பர் 18, 2006

Tamil Blogs - 2006

முந்தைய பரிந்துரைகள், பாராட்டுகள்:

ஜூலை 2005 பதிவு: அகப்பாடு பத்து

டிசம்பர் 2005 வலைப்பதிவுகள் - 2005

ஆகஸ்ட் 2006 : What are the Top Tamil Blogs

தொடக்கத்திலேயே இருவருக்கு நன்றியை சொல்லி விடுகிறேன்.

1. சும்மா டைம் பாஸ் மச்சி..... &
2. வெட்டிப்பயல்

ஒருவர் பின்னூட்டமாகவும், மற்றொருவர் தனியாகவும் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதுவதற்கு ஊக்குவித்தார்கள். இந்தப் பதிவுக்கு காரணகர்த்தாவாக இருந்த பாவத்தினால், இவர்களுக்கு, எந்தப் பட்டியலிலும் இடம் கிடையாது :-)

இந்த வருடத்தின் மிகச் சிறந்த பத்து பதிவுகளாக நான் இவற்றை சொல்கிறேன்:



இவர்கள் தவிர ஏழு நாள்களுக்கு ஒன்றாக எழுச்சியூட்டும் எழுவர்:


கடைசியாகத் தலைப்பை கடன் வாங்கி விருதுகள்:

  1. Best Humanities தமிழ் பதிவு - என்றால் என்ன - கார்திக்வேலு
  2. Best Entertainment தமிழ் பதிவு - கார்த்தியின் கனவுலகம்

  3. Best Science/Technology தமிழ் பதிவு - சுந்தரவடிவேல்
  4. Best தமிழ் பதிவு directory/service/clique/network - கில்லி - Gilli
  5. Best Topical தமிழ் பதிவு - ஊசி aka pin

  6. Best Designed தமிழ் பதிவு - பொன்ஸ் பக்கங்கள்
  7. Most Humorous தமிழ் பதிவு - பினாத்தல்கள்
  8. Best Travel தமிழ் பதிவு - தேசிகன் பக்கம்

  9. Best New தமிழ் பதிவு - rajavanaj
  10. Best Group/Community Blog - சென்னபட்டிணம்

  11. தமிழ் பதிவு of the year - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் | எண்ணங்களை எழுதுகிறேன்


நன்றி: The Indibloggies » Indibloggies 2006 ~ The Award Categories



| | | | | |

சனி, ஜனவரி 07, 2006

இந்தியப் பதிவுகள் - 2005

தேர்தலில் நான் வாக்களித்த விவரம்:

1. Indiblog of 2005 - Death Ends Fun

2. Best Topical IndiBlog of 2005 - The Acorn

3. Humanities Indiblog of 2005 - The Palm Leaf

4. Best Group Blog of 2005 - DesiPundit

5. Best IndiBlog directory/service/clique of 2005 - ThamizmaNam.com

6. IndiBloggies 2005 lifetime achiever - Lazy Geek: Guru Subramaniam

7. Best Indic (Tamil) Blog 2005 - ஹி... ஹி... வெக்கமாயிருக்கு :-))



பழைய இடுகைகள் முகப்பு