News Stories of Interest
கருத்தைக் கவர்ந்த செய்திகள்:
- பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு
குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.
- புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?
சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது? - அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
'மிஸ்... என்னை அடிச்சுட்டான் மிஸ்' என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் 'பாடம்' எல்லாம் கவனிக்க முடியும்? - 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்
படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.
- உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்
சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர். - ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்
செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு. - பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்
மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம். - கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை
ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.
“ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது. - வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்
"மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன" என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ஹேமமாலினி "அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்" என பதிலளித்திருந்தார்.
கருத்துரையிடுக