Photos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Photos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 01, 2008

நியுயார்க் பிள்ளையார் கோவிலில் மேயர் ப்ளூம்பர்க் அஞ்சலி

NY-Flushing-Temple-Worship-Mumbai-Service

செவ்வாய், ஜனவரி 01, 2008

A tag

Prabhu n Ferrari கூவி இருக்கிறார்.

அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.

இப்பொழுது நிழற்படம்:


இப்பொழுது 'ஏன்' என்று சொல்லும் சமயம்:
ஹரித்வாரில் புனித கங்கா தீரத்தில் எடுத்த படம். இந்த மாதிரி சுழித்தோடும் நதியில் நீந்தாமல், கேமிராவும் கையுமாக வலைப்பதிவுக்காக எம்.என்.சி. நோக்கோடு சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

"நாங்க "ஹரித்வார் முன்னேற்ற ஸ்தாபனத்தில்' இருந்து வந்திருக்கோம். ஐநூறு ரூபாய் கொடுங்க" என்று செல்லமாய் இருபத்தி நான்கு முறை மிரட்டுகிறார்கள். பள்ளி மாணவர்களின் துணிகர பாய்ச்சல் ஆங்காங்கே பொறாமை கலந்த பயம் கொடுக்கிறது. 'தீர்த்தக்கரை பாவியாகாதடா' என்று அம்மாவின் மிரட்டல் வேறு வித கிலேசங்களை எழுப்புகிறது.

கங்கையில் இல்லாத மீன்களுக்கு இரை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். 'இந்த மாதிரி இறைவதால் நீர் மாசுபடும்' என்று சுற்றுச்சூழ் ஆர்வலன் ஒருபக்கம் எட்டிப்பார்க்க; 'ஆவ்...ஆவ்' என்று அம்ரீஷ் பூரி போல் மீன்களுக்கு உணவிடலாமா என்று சுற்றுலாவாசி இன்னொரு பக்கம்; 'இரண்டு மூன்று வாங்கினால் இன்றைய பொழுதாவது அவளுக்கு ஓடுமே' என்னும் பச்சாதாபமோ பரிதாபமோ வெல்கிறது.

இப்பொழுது நாலு பேரை அழைக்கும் தருணம்:
1. நச் ஓசை செல்லா
2. இலவசம்
3. காற்றுவெளி மதுமிதா
4. உள்ளும் புறமும் வெங்கட்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

புதன், மார்ச் 07, 2007

CareerBuilder Age-o-Matic

தற்போது வலையை மேய்வது போல் இப்படி வேலை செய்து ஓடாய் தேய்கிறீர்களா?

மூன்று வயது புகைப்படத்தை வைத்து, 'தூது போவதாரடி' என்று பாடும் நாயகியைக் கண்டுபிடிக்கும் நுட்பம் தேவையா?

இங்கே செல்லுங்கள்: http://www.careerbuilder.com/age-o-matic/

சில வருடம் கழித்து, இப்படியே உழைத்துக் கொட்டிக் கொண்டிருந்தால், நான் இப்படி ஆகிவிடுவேன் என்கிறார்கள்.

வியாழன், பிப்ரவரி 15, 2007

Love Today - Ponte Milvio Bridge locks



நீங்கள் தமிழ்ப்படத்துக்கு கதை சொல்ல விரும்புகிறீர்களா?

இதுதாங்க கதை:

1. நம்ம ஹீரோவும் ஹீரோயினும் ரோம் நகரில் சந்திக்கிறார்கள்.
(இங்கு பொருத்தமான ஏற்றத்தாழ்வை நிரப்பிக்கவும்)

2. 'காதல் கைகூடாது' என்று மனதுக்கினியாள் அஸ்து போட, காதலின் அடையாளமாக மேம்பாலத்தில் பூட்டைப் போட்டு, சாவியை நதியில் தூக்கியெறிகிறார்கள்.
(காதல் நிறைவேறவில்லை; ஆனால், பூட்டைத் திறக்க முடியாததால் தங்கள் அன்பின் சின்னம் நிலைத்திருக்கும் என்னும் தாத்பர்யம்.)

3. அந்தப் பூட்டினால் பாலத்தின் அடித்தளமே ஆடுகிறது. சாவியைக் கொண்டு திறக்காமல் பூட்டை உடைத்தால், ரோமாபுரியே மூழ்கிவிடும். உடைக்காவிட்டால் காதல் வென்றுவிடும்!

என்னாச்சு என்பதுதான் க்ளைமேக்ஸ். நாயகன், நாயகி யார்?

the many padlocks around the Ponte Vecchio in Florence

சினிமாவுக்கு என்னங்க தலைப்பு வைக்கலாம்?

வெள்ளி, பிப்ரவரி 09, 2007

Tomato Potato Onion

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டிக்காக இந்த மாதிரி படம் எடுத்தால் நிராகரிக்கப்படும். அனைத்து ஆக்கங்களிலும் 'வேறு ஐட்டமும் படத்தில் இருக்கவே கூடாது.'

1. employed in canning (ha)


2. organic veg delivery 28.09.06


3. Friday night dinner


4. Tomatoes, Onions and Potatoes, Cochin


5. Salade niçoise


6. Orsett Show 2005



அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

பழைய இடுகைகள் முகப்பு