வியாழன், பிப்ரவரி 15, 2007

Love Today - Ponte Milvio Bridge locksநீங்கள் தமிழ்ப்படத்துக்கு கதை சொல்ல விரும்புகிறீர்களா?

இதுதாங்க கதை:

1. நம்ம ஹீரோவும் ஹீரோயினும் ரோம் நகரில் சந்திக்கிறார்கள்.
(இங்கு பொருத்தமான ஏற்றத்தாழ்வை நிரப்பிக்கவும்)

2. 'காதல் கைகூடாது' என்று மனதுக்கினியாள் அஸ்து போட, காதலின் அடையாளமாக மேம்பாலத்தில் பூட்டைப் போட்டு, சாவியை நதியில் தூக்கியெறிகிறார்கள்.
(காதல் நிறைவேறவில்லை; ஆனால், பூட்டைத் திறக்க முடியாததால் தங்கள் அன்பின் சின்னம் நிலைத்திருக்கும் என்னும் தாத்பர்யம்.)

3. அந்தப் பூட்டினால் பாலத்தின் அடித்தளமே ஆடுகிறது. சாவியைக் கொண்டு திறக்காமல் பூட்டை உடைத்தால், ரோமாபுரியே மூழ்கிவிடும். உடைக்காவிட்டால் காதல் வென்றுவிடும்!

என்னாச்சு என்பதுதான் க்ளைமேக்ஸ். நாயகன், நாயகி யார்?

the many padlocks around the Ponte Vecchio in Florence

சினிமாவுக்கு என்னங்க தலைப்பு வைக்கலாம்?

5 கருத்துகள்:

காதல் வெல்லும்
(Love Wins Always)

அறுபதுகளில்: காதல்நதி
எழுபதுகளில்: அன்பே... மூழ்காதே!
எண்பதுகளில்: பூட்டைத் தேடும் சாவிகள்
தொண்ணூறுகளில்: லோக்கி (Locked his Love)
இப்பொழுது... மில்வியோ பாலம்

Gautham ---> pootodu aNaipOdu
Vijaya T.R ---> thirakaati kadhal, illayEl saadhal
Bhimsingh --> Paalam mattum udaiyuma?

பாலம் மட்டும் உடையுமா... சூப்பர்!! :))

"பாலம் உடைந்தால் சொல்லி அனுப்பு."

50களில்: பூட்டிய கோட்டை
60களில்: பாலங்களில் அது வசந்தம்
70களில்: பூட்டுக்கள் திறக்கப்படலாம்
80களில்: ஒரு பூட்டு இரு சாவி
90களில்: காதல் பாலம் (Build Bridges)
இப்போது: பாலம்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு