வியாழன், பிப்ரவரி 15, 2007

Notable Books

சமீபத்தில் என்னைக் கவர்ந்த புத்தகங்கள்.

 1. Final Exam: A Surgeon's Reflections on Mortality: Pauline W. Chen: அனுதினமும் மரணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவரின் அனுபவங்கள், குறிப்புகள். சொந்தக் கதையின் ஓர் அத்தியாயத்தை நியு யார்க் டைம்ஸ் மூலம் படிக்கலாம்: Death Match


 2. Babyproofing Your Marriage: How to Laugh More, Argue Less, and Communicate Better as Your Family Grows: திருமணத்தில் கூட்டு குடும்பத்தில் வாழ்வதால் பாதி குழப்பம் நேரிடுகிறது என்றால், குழந்தை பிறப்பது இடை தடை ஓட்டப்பந்தயமாக்குகிறது. குடும்ப வாழ்க்கையின் கடமைகளை பகிர்ந்து கொள்ள, இல்லறத்தை கடமையாக மாற்றாமல் இருக்க துப்புகள்.

  அதிகாரபூர்வ வலையகத்தில் ஒளித்தொகுப்புகளும் கிடைக்கிறது: Babyproofing Your Marriage


 3. Breaking the Spell: Religion as a Natural Phenomenon: Daniel C. Dennett: 'நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
  லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்'
  என்பது ஆன்மிகமா? அறிவியலா?

  முக்கிய விமர்சனங்கள்: The God Genome - The New York Times Book Review | Religion from the Outside - The New York Review of Books | Reasons To Believe | Guardian Unlimited Books - Beyond belief


 4. The Little Book of Plagiarism: Richard A. Posner: ஷேக்ஸ்பியரே திருடியிருக்கார் என்று உங்கள் எழுத்துக்கு வக்காலத்து வேண்டுமா? மைக்ரோசாஃப்ட் வோர்டில் thesaurus பயன்படுத்தி கட்டுரையாக்குவதையும், எழுத்துக்கு எழுத்து Copyscape செய்பவர்களையும், காப்புரிமை குழப்பங்களையும் சுருங்க அறிய விரும்புபவர்களுக்கான கையேடு.


 5. Leave Me Alone, I'm Reading: Finding and Losing Myself in Books: பெண்ணிய எழுத்தாளர்கள் மாதிரி பெண்ணிய புத்தக விமர்சகரின் நன்விடை தோய்தல். தெரியாத இலக்கியங்களுக்கு அறிமுகமாகவும், படித்த புத்தகங்களின் மீள் பயணமாகவும் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் அழைத்து செல்லும் அறிமுகம்.

  புத்தகத்தில் இருந்து: NPR : Memoir of a Book Lover


 6. Citizen Moore: The Life and Times of an American Iconoclast: ஏற்கனவே ஃபாரென்ஹீட் 9/11 போன்ற் கலாச்சாரத் தாக்கங்களை பெருமளவில் கொடுத்த மைக்கேல் மூரிடம் இருந்து, Sicko, Great '04 Slacker Uprising என்று இரு முக்கிய ஆவணப்படங்கள் வரப்போகிறது. அவரின் மறுபக்கம். விமர்சனங்களை மட்டும் முன்வைப்பவரின் மேல் சில விமர்சனங்கள்.


 7. The Covenant with Black America: ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் தற்போதைய நிலை என்ன? எப்படி மாற்றம் கொண்டு வருவது? உடல்நலம், மேற்படிப்பு, சட்டம்-ஒழுங்கு, தொழில் நுட்ப பங்களிப்பு, என்று அனைத்துப் பரிமாணங்களிலும் ஆறாண்டுகளுக்கு மேலாக ஆய்ந்தவர்களின் செறிவான கட்டுரைத் தொகுப்பு.

  அதிகாரபூர்வ வலையகம்: CWBA | Home Page


 8. Animals in Translation: Using the Mysteries of Autism to Decode Animal Behavior: மதியிறுக்கத்துக்கு உள்ளானவர்கள் படித்துப் புரிந்து கொள்வதை விட பார்த்தே பல கோணங்களில் அலசி அறிபவர்கள். புத்தக ஆசிரியரின் மதியிறுக்கத்துக்கும், பிகாசோவுக்கும் மோனெக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கும் புறாவுக்கும் முடிச்சு போடும் ஆய்வுக் கட்டுரைகள். 'உங்களுக்குள்ள இருக்கிற மிருகம் தூங்கிட்டு இருக்கா?'


 9. Garlic and Sapphires: The Secret Life of a Critic in Disguise: Ruth Reichl: சாப்பாட்டு பிரியரா நீங்கள்? உணவருந்துவதை கலையாக ரசித்து, அல்வா முதல் தயிர் வடை வரை எல்லாவற்றுக்கும் சிறப்பான இடங்களைக் கண்டுபிடித்து, எங்கு கல்லூரி நண்பர்களுடன் பானம் பருகலாம், எவ்வாறு கடுப்பேற்றும் அலுவலக சகாவை சரிக்கட்டி சகாயமாக்க தூத்தம் குடிக்கலாம் என்று அலசுபவரா நீங்கள்? நியு யார்க் உணவகங்களில் கிழவராக சென்றால் என்ன மதிப்பு; கற்கால நாகரிகத்தினராக நுழைந்தால் எப்படி வரவேற்பு என்று ஜாலியாக விவரிக்கிறார்.


 10. Fish Face: David Doubilet: "மீன்கள் நிழற்படங்களுக்கு ஒத்துழைப்பதில்லை" என்று ஆரம்பிக்கிறார். 'ஃபைண்டிங் நீமோ'வில் வரும் கதாமந்தர்கள் போல் தினுசு தினுசான முகபாவங்களுடன் ஆயிரக்கணக்கான புகைப்படங்களின் அணிவகுப்பு.

5 கருத்துகள்:

பாபா

நல்ல பதிவு!

எப்படி நேரத்தை இவ்வளவு நேர்த்தியாக செலவிடுகிறீர்கள்.. ஆச்சர்யம்..

வாழ்த்துக்கள்!!

OpinionJournal - Taste: "There are worse crimes than burning books. One of them is not reading them." Where, I wonder, would he have ranked the act of leaving them behind?

Giving my books the kiss-off. BY TUNKU VARADARAJAN

---எப்படி நேரத்தை இவ்வளவு நேர்த்தியாக செலவிடுகிறீர்கள்..---

ஒரே சமயத்தில் நாய் வாய் வைப்பது போல் பலதையும் புரட்டவும். தினமும் போக வர மூன்று மணி நேரப் பயணம் கொஞ்சம் கை கொடுக்கும். நூலகத்தில், பதினைந்து நாளுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதும் உதவும்.

எதையுமே இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. அ-புனைவுகளில் இது சௌகரியம். நெடுங்கதை போல் தொடர்ச்சியாகப் படிக்காமல், எந்த அத்தியாயத்திலும் தொடங்கலாம்; பாதியில் நிறுத்திவிட்டு, வேறெங்கோ தாவலாம்.

Posner is a giant in legal scholarship.His output is phenomenal and is perhaps the
most prolific legal scholar today.
But think twice before citing him with approval or recommending his work(s) as some of his views are too controversial. He had written an article in The Atlantic on plagarism.I think this book is
an extended version of the points he raised there.

The book gives a readable & succinct introduction. But, didn't know about his background. It is a very small pocket sized book; should be an extension of the article, you are mentioning.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு