Happy Valentines Day
- அமெரிக்காவில் நிகழும் 11 சதவிகித கொலைகள், வாழ்க்கைத் துணைகளால் அரங்கேற்றப்படுகிறது
- 43 விழுக்காடு முதல் மணங்கள், பதினைந்து வருடங்களுக்குள் விவாகரத்தில் முடிவுறுகிறது.
- மணமுறிவு சம்பந்தமான வருடாந்திர செலவுகள்: $30 பில்லியன் (அமெரிக்காவில் மட்டும்)
- அமெரிக்காவில் பத்தில் ஒருவராவது திருமணத்தில் தோல்வி கண்டவர்.
காதலர் தின வாழ்த்து : )
செம காதலர் தின உள்குத்து
உட்கார்ந்து யோசிப்பீங்களோ ;-))
கானா பிரபா சொன்னது… 2/13/2007 02:35:00 PM
கானா பிரபா
இன்றைய நாளிதழில் இருந்ததை ஒட்டி (இன்னும் கொஞ்சம் வெட்டி) எழுதியது. எனக்கு காதல் என்றவுடன், தமிழ்ப்பட நாயகி திரும்பி நின்று சிரிப்பதுதான் நினைவுக்கு வந்தது. அமெரிக்க செய்தித்தாளுக்குத்தான், அதன் பின் தொடரும் அவஸ்தை தோன்றியிருக்கிறது ; )
Boston Bala சொன்னது… 2/13/2007 02:41:00 PM
இது காதலர் தின வாழ்த்தா? சாபமா?
:)
சிறில் அலெக்ஸ் சொன்னது… 2/13/2007 02:48:00 PM
:( Did not expect it from you
பத்மா அர்விந்த் சொன்னது… 2/13/2007 02:55:00 PM
பாலா,
காதல் என்பது ஜீவநதியா இருக்கனுங்கற அவசியம் இருக்கா என்ன?
காதல் கூடலாம். குறையலாம். தீர்ந்தும் போகலாம்.
தீர்ந்து போனதால் முன்பிருந்தது பொய்யாகி விடாது.
நிர்மல் சொன்னது… 2/13/2007 04:04:00 PM
//அமெரிக்காவில் நிகழும் 11 சதவிகித கொலைகள், வாழ்க்கைத் துணைகளால் அரங்கேற்றப்படுகிறது//
பாலா,அமெரிக்கா மட்டும் இல்லை, இந்தியாவிலும், domestic Violence is the prime threat for women...
மற்றபடி உங்க பதிவின் நோக்கம் புரிந்தது...:-))...
மங்கை சொன்னது… 2/13/2007 04:37:00 PM
A man is incomplete until he is married. After that, he is finished :)
மணிகண்டன் சொன்னது… 2/13/2007 04:58:00 PM
பாபா,
ஏன் ஏன் இந்த கொலை வெறி உங்களுக்க்கு :)).. உள்ள வெளியே சைடு நேர் அப்படின்னு ஏகப்பட்ட குத்து விட்டு இருக்கீங்க.
Santhosh சொன்னது… 2/13/2007 06:14:00 PM
இந்த மாதிரி ஒரு வாழ்த்தை நான் பார்த்ததே இல்லை... :))))
அன்பர்கள் தின வாழ்த்துக்கள்.
பெயரில்லா சொன்னது… 2/13/2007 06:21:00 PM
ம்ம்ம்... புரியுது.. புரியுது...
ஜி சொன்னது… 2/13/2007 06:26:00 PM
வானத்தில் பறக்கும் காதலர்களைத் தரைக்குக் கொண்டுவந்து சேர்த்துட்டீங்க :-D
சேதுக்கரசி சொன்னது… 2/13/2007 08:12:00 PM
அபாய சத்தம் போல் இருக்கிறது
சுந்தர் / Sundar சொன்னது… 2/13/2007 09:52:00 PM
@சிறில்
---காதலர் தின வாழ்த்தா? சாபமா?---
இந்த மாத்திரை புட்டிகளில் எச்சரிக்கை கொடுப்பாங்களே... 'ஆல்கஹாலுடன் அருந்தக் கூடாது!' என்பது போல்.
Boston Bala சொன்னது… 2/14/2007 11:59:00 AM
பத்மா
---Did not expect it from you---
ஏன்?
இந்தப் பதிவின் நோக்கங்களாக நான் நினைப்பவை:
* பதின்ம வயதில் பள்ளிப்படிப்பு கூட தாண்டாத நிலையில் தெய்வீகக் காதல் என்று நினைத்து, திருமணம்/குழந்தை என்று ஆகிவிடுபவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம்.
* பெண் பார்த்த அன்றே நிச்சயதார்த்தம் அரங்கேறும், 'கண்டதும் காதலுக்கு' கண்டிப்பாக இருக்கலாம்.
* டிஸ்கொதேவுக்கு ஆள் கிடைக்காத சோகத்தில் இருப்பவருக்கு, குறுஞ்செய்தி அனுப்ப உபயோகமாக இருக்கலாம்.
* சேர்ந்து வாழ்ந்து மணவாழ்வுக்கு ஒத்திகை பார்க்கும் மேற்கத்திய நாகரிகத்தை, நமது ஊருக்கும் அனுப்ப ஏதுவாக இருக்கலாம்.
* வெளிநாட்டினர் ஒழுங்கு மரியாதையாக, alimony தருவதை உணர்த்துவதற்காக இருக்கலாம்.
Boston Bala சொன்னது… 2/14/2007 12:09:00 PM
நிர்மல்
---தீர்ந்து போனதால் முன்பிருந்தது பொய்யாகி விடாது.---
கவித்துவமான சுருக். நன்றி!
Boston Bala சொன்னது… 2/14/2007 12:10:00 PM
மங்கை
---domestic Violence is the prime threat for women---
__/\__
Boston Bala சொன்னது… 2/14/2007 12:17:00 PM
மணி
---After that, he is finished ---
Suffering is not the key to success. Behind every successful woman, is Herself ; )
Boston Bala சொன்னது… 2/14/2007 12:23:00 PM
சந்தோஷ்
---ஏன் இந்த கொலை வெறி உங்களுக்க்கு---
உங்களுக்கு சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து : P
Boston Bala சொன்னது… 2/14/2007 12:24:00 PM
துர்கா
உங்களின் அரிச்சுவடி: சும்மா..... சூப்பர் போஸ்டர் : )))
Boston Bala சொன்னது… 2/14/2007 12:26:00 PM
பாலா
அமெரிக்க கலாசாரத்தை பொத்தாம் பொதுவில் தாக்குபவர் நடுவில் உண்மையான நிலையை நீங்கள் பலமுறை எழுதியதை பார்த்திருக்கிறேன். நீங்கள் இன்று கிண்டலாக அமெரிக்க கலாச்சாரம் சுஜாத எங்கொ எழுதியது போல காலையில் திருமணம் மாலையில் டைவர்ஸ் என்று எழுதியது போல கிண்டல் செய்வதாக புரிந்து கொண்டேன். பள்ளிக்காதலை நிறுத்த, டீன் வயது கருவுறுவதை தடுக்க நிறைய செய்கிறார்கள், இன்னும் செய்ய வேண்டும். விவாகரத்து சமுதாயத்தில் ஒப்புக்கொள்ளப்படுமானால் இந்தியாவிலும் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உண்டு. அப்போது தள்ளை வைத்த கதைஎல்லாம் காணாமல் போகும்.
வாலந்தன் தினம் இங்கே அன்பின் பகுதியாக சொல்லப்படுகிறது. இன்றூ உங்கள் பெண்ணே வகுப்பில் பலருக்கும் அட்டை தந்திருக்கலாம். அலிமொனியில் தப்பிக்க ஆயிரம் வழிகல் தேடும் ஆன்கலும் அதை பகற்கொள்ளையாக கருதும் பெண்களும் பற்றி பலவித கருத்துக்கள் பேசலாம். உங்கள் நோக்கம் அதுவானால் நல்லது. ஆனால் எதிர்ப்படும் கிண்டல் வேறெதையோ சொல்கிறது. மங்கையின் இந்தியா பற்றிய விவரத்திற்கும் கூடுதலாக தெரியும் கேலிதான் காரணமோ என்னவோ.
அன்பான அன்பிற்குரிய நன்னாள் வாழ்த்துக்கள்:) சஞ்சிதாவிற்கும்
பத்மா அர்விந்த் சொன்னது… 2/14/2007 12:27:00 PM
ஜி
உங்களுக்கும் சீக்கிரமே, பாசம் 'கயிறாக' மாற வாழ்த்துக்கள் ; )
Boston Bala சொன்னது… 2/14/2007 12:29:00 PM
மங்கை, உலகம் முழுதுமே வன்முறைக்கு காரணம் நெருங்கிய உறவினரே (ஆணானாலும் பெண்ணானலும்) அதிலும் வீட்டு வன்முறை மிக அதிகம்.
பத்மா அர்விந்த் சொன்னது… 2/14/2007 12:29:00 PM
சேதுக்கரசி
பாயிண்ட்ட பிடிச்சுட்டீங்க... நன்றீ...
Boston Bala சொன்னது… 2/14/2007 12:30:00 PM
சுந்தர்
---அபாய சத்தம் போல் இருக்கிறது---
எதுங்க... கெட்டிமேளமா ; )
Boston Bala சொன்னது… 2/14/2007 12:31:00 PM
பத்மா
---அமெரிக்க கலாசாரத்தை பொத்தாம் பொதுவில் தாக்குபவர் ---
விரிவான பதிலுக்கு நன்றி.
---இன்றூ உங்கள் பெண்ணே வகுப்பில் பலருக்கும் அட்டை தந்திருக்கலாம்---
சாதாரணமாக காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருக்க மாட்டாள். இன்று பள்ளி இல்லாதபோதும், சிரத்தையாக எழுந்து எனக்கும் வாழ்த்து சொல்லி, அட்டையை நீட்டி, அது பிரித்தவுடன் எழுப்பிய 'ஸ்டார் வார்ஸ்' ஒலியை நான் கேட்டு மகிழ்ந்ததை நினைத்து முகம் மலர்ந்தாள்.
---எதிர்ப்படும் கிண்டல் வேறெதையோ சொல்கிறது.---
ஹ்ம்ம்... சுய எள்ளல்?!
சீரியசாக இந்துத்வ அமைப்புகள் பொங்கியெழுவதை (இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல்) கண்டிக்கும் மனநிலையில் இல்லாததும் இவ்வகை பதிவுக்கு வித்திட்டு இருக்கலாம்.
Boston Bala சொன்னது… 2/14/2007 12:43:00 PM
//உங்களுக்கு சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து //
:))
நாமக்கல் சிபி சொன்னது… 2/14/2007 12:54:00 PM
@சிபி
உங்களுக்கும் ஒரு நகைக்கோள் (மேற்கோள் மாதிரிங்க : )
Love is an ocean of emotion entirely surrounded by expenses : )
Boston Bala சொன்னது… 2/15/2007 06:09:00 AM
அமெரிக்க அமைப்பிலிருந்து நாம் கற்கவேண்டிய ஒன்று - data collection and aggregation [புள்ளிவிவரங்கள்] for everything; Most people don't realize how vital that is for the betterment of the citizenry.
பெயரில்லா சொன்னது… 2/15/2007 11:15:00 PM
@ஆர்.ஆர்
---Most people don't realize how vital that is for the betterment of the citizenry.---
எதிராளிக்கு பயன்படுகிற மாதிரி புள்ளிவிவரங்களையும் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். அப்படியே ஒரு பொன்மொழி: Lies, bigger lies, Statistics
Boston Bala சொன்னது… 2/16/2007 04:05:00 PM
கருத்துரையிடுக