வெள்ளி, பிப்ரவரி 16, 2007

Faithful see Jesus in tree



அந்த மரத்தில் காய் கிடையாது.
கனிகளும் தருவதில்லை.
பட்ட மரம்.

பார்ப்பதற்கு சிலுவையில் அறையுண்ட இயேசுவின் திருவுருவை ஒத்து இருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கிரிஸ்டல் நகரத்திற்கு நம்பிக்கையாளர்கள் குவிகிறார்கள்.
இரவில் ஒளிரும் மரத்தில், கிறிஸ்துவை காண்கிறார்கள்.

படங்களை சுட்டினால், அசல் செய்திக்கு இட்டுச் செல்லும். ஒளித்தொகுப்பையும் பார்க்கலாம்.


9 கருத்துகள்:

பாபா

எப்படி இது மாதிரி செய்தி எல்லாம் தேடி பிடிக்கிறீங்க... Ha Ha Ha..

எல்லாரும் நல்லா இருந்தால் சரி!!

இங்கே சென்றிருக்கிறீர்களா... Ananova - www.ananova.com

(மூட)நம்பிக்கையில் சுழல்கிறது உலகம். அவரவர் கற்பனைக்கேற்ப. சிறுமியாய் இருந்த போது எங்க ஊர் நாகலிங்க மரத்தில் பால் வடிந்த கதை கேட்டிருக்கிறேன்.

இருபது வருடமாக அந்த மரத்தை தினசரி பார்த்து வந்தாலும், நான்கு நாள் முன்புதான் ஜீசஸாக அவருக்குத் தோன்றியிருக்கிறது. இந்தியாவில் இவரே சாமியாராக மாறியிருப்பார். இங்கே மாறவில்லை.

'பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா.....'

இதுபோல அவுங்களுக்கும் இருக்கும்.

"பச்சை மரத்துக்கே இந்த கதின்னா பட்டமரத்துக்கு?"

இது இயேசு சொன்னது..
யாரோ தப்பா புரிஞ்சுகிட்டிருக்காங்க.

நான் அடிக்கடி சொல்ற கண்ணதாசன் வரிகளச் சொல்லட்டுமா?

நம்பிக்கை வைத்து கல்லையும் பாத்தா தெய்வத்தின் சாட்சியம்மா

இதப்பாத்து நாலுபேர் திருந்துனானா சரி.

நாலுபேர் திருந்தினா எதுவுமே தப்பில்ல - வெட்டி நாயக்கர்

டெக்ஸாஸ் மாகாணத்தில் இந்தியர்கள் அதிகம் .

நம்ம மக்கள் யாரும் புருடா கிளப்பிட்டார்களா ?

//டெக்ஸாஸ் மாகாணத்தில் இந்தியர்கள் அதிகம்//

டெக்சாஸ் மாநிலத்தில் கத்தோலிக்கரும் அதிகம் :-) டெக்சாஸ் மாநிலம் அமெரிக்காவின் "Bible belt"-இல் ஒரு முக்கியப் பகுதி.

நம்பிக்கை இருக்கறவங்களுக்கு எங்கும் இருப்பான் கடவுள்...என்ன மாதிரி லூசு பசங்களுக்கு கடவுள் நேர்லயே வந்தா கூட கஷ்டம் தான் :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு