செவ்வாய், ஜனவரி 01, 2008

A tag

Prabhu n Ferrari கூவி இருக்கிறார்.

அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.

இப்பொழுது நிழற்படம்:


இப்பொழுது 'ஏன்' என்று சொல்லும் சமயம்:
ஹரித்வாரில் புனித கங்கா தீரத்தில் எடுத்த படம். இந்த மாதிரி சுழித்தோடும் நதியில் நீந்தாமல், கேமிராவும் கையுமாக வலைப்பதிவுக்காக எம்.என்.சி. நோக்கோடு சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

"நாங்க "ஹரித்வார் முன்னேற்ற ஸ்தாபனத்தில்' இருந்து வந்திருக்கோம். ஐநூறு ரூபாய் கொடுங்க" என்று செல்லமாய் இருபத்தி நான்கு முறை மிரட்டுகிறார்கள். பள்ளி மாணவர்களின் துணிகர பாய்ச்சல் ஆங்காங்கே பொறாமை கலந்த பயம் கொடுக்கிறது. 'தீர்த்தக்கரை பாவியாகாதடா' என்று அம்மாவின் மிரட்டல் வேறு வித கிலேசங்களை எழுப்புகிறது.

கங்கையில் இல்லாத மீன்களுக்கு இரை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். 'இந்த மாதிரி இறைவதால் நீர் மாசுபடும்' என்று சுற்றுச்சூழ் ஆர்வலன் ஒருபக்கம் எட்டிப்பார்க்க; 'ஆவ்...ஆவ்' என்று அம்ரீஷ் பூரி போல் மீன்களுக்கு உணவிடலாமா என்று சுற்றுலாவாசி இன்னொரு பக்கம்; 'இரண்டு மூன்று வாங்கினால் இன்றைய பொழுதாவது அவளுக்கு ஓடுமே' என்னும் பச்சாதாபமோ பரிதாபமோ வெல்கிறது.

இப்பொழுது நாலு பேரை அழைக்கும் தருணம்:
1. நச் ஓசை செல்லா
2. இலவசம்
3. காற்றுவெளி மதுமிதா
4. உள்ளும் புறமும் வெங்கட்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

11 கருத்துகள்:

இதென்ன புது கலாட்டா?! சரி ரெண்டு நாள் டைப் கொடுங்க.. சிக்சரே அடிச்சுடலாம்!

Very nice :) Thanks for taking the TAG. Happy New Year.

செல்லா...
டைப்படிக்க எல்லாரும் ரெண்டு நாள் கேட்பாங்க; நீங்க ரெண்டு நாள் டைப்பே கேக்கறீங்களே :)

சீக்கிரம் ஆவட்டும் :)) நன்றி

ஃபெராரி...
வாய்ப்புக்கு நன்றி :)

பாலாஜி- புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எழுதியாச்சு:
http://domesticatedonion.net/tamil/?p=716

அடுத்தவங்களுக்கும் கடுதாசி போட்டாச்சு. நன்றி!

உங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு என் நிழற்படப் பதிவை போட்டுவிட்டேன். அழைத்ததிற்கு நன்றி.

வெங்கட் & இ.கொ. நன்றிகள் பல!

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

தாமதமாகிவிட்டது பாபா

ஆனா சின்சியரா எடுத்த படம் எதுவும் இப்போ கைவசம் இல்லை

ஒரு வாரத்துக்குள்ளே வரப்பார்க்கிறேன் சரியா

பரவாயில்லை மதுமிதா... அவசியம் இடவேண்டும் :)

http://madhumithaa.blogspot.com/2008/06/blog-post.html

பொறுமைக்கு நன்றி பாபா:-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு