வெள்ளி, டிசம்பர் 28, 2007

Group A :: சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' - போட்டி: வாசக விமர்சனங்கள்

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!:: "சூப்பர் கதை வித் ய ட்விஸ்டும், நம் வட்டத்தில் பெருகும் ஆரோக்ய சூழலும்!" பதிவில்:

கதைகள் ஒவ்வொண்ணும், படிக்கவே விறு விறுன்னு இருக்கும். ஆரம்பிச்சதும், டாப் கியர்ல ஓடி, திடீர்னு க்ளைமாக்ஸ் பாத்தா, நம்ம நெனச்சே பாக்க முடியாத மாதிரி முடியும்.

இதுதான் முக்கியம் என்றாலும், நச் அம்சத்துக்கு ஒரு மதிப்பெண் (5); மற்ற அம்சங்களும் (5) சேர்த்து மொத்த மதிப்பெண் (10), என்று சீர் தூக்கி விமர்சிக்க எண்ணம்:

1) வினையூக்கி - பேய் வீடு

வினையூக்கியின் அழைப்பில் ஏற்கனவே படித்தது. மூன்றே கதாபாத்திரங்கள். கச்சிதமான உரையாடல்.

நச் - 1/5; மொத்தம் - 4 /10.


2) இராம்/Raam - செப்புத் தாழ்ப்பாள்

பாதி தட்டச்சிய ப்ளாகர் பதிவின் நடுவில் விண்டோஸ் தொங்குவது போல் எழுத்துப்பிழை ஒன்றிருந்தாலும் நெருடல். இங்கே நிறைய தடவை க்ராஷ் ஆகிறது. துவக்கத்தில் அவை தடைகள்.

பரந்து விரிந்த மலர்ந்த அழகுமலரென்றின் நடுநாயகமாக நின்று தன்னை சுற்றி அந்த மலரின் இதழ்களெனும் வெளிவட்டம் என்ற காதல் வளர்ந்ததை நினைத்து பார்க்கல்லான்.

என்று துவங்குவது, ரம்மியமான உரையாடல்களில் நகர்கிறது. அதன் பின் சடாரென்று நடை மாறி...
தினமும் அதேமாதிரியே கல்லூரி சென்று வந்தாள். ஒரு நாள் மாலை நேரத்தில் கல்லூரி முடிந்து நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது முத்துவின் தந்தை மருதய்யன் எதிர்ப்பட்டார்.

குறுநாவலுக்குரிய களம். அவசரகதியில் சிறுகதை ஆகியிருக்கிறது. முடிவும் ஒப்பவில்லை; நடுவில் நம்பமுடியவில்லை. இரண்டுமே நெடுங்கதை விவரிப்பில் சரி செய்திருக்க முடியும்.

நச் - 1/5; மொத்தம் - 5.5 /10.


3) வாக்காளன் - திருமணமாம் திருமணம்

இந்த திடுக்கிடும் கதைகளின் இறுதி ரொம்பவே சிரமமான வஸ்துவாக இருக்கிறது. கனவு, கற்பனை, ஃப்ளாஷ்பேக் என்று உட்டாலக்கடி ரொம்ப சுளுவாக முடிந்துவிடுகிறது. அந்த விதத்தில் ஏமாற்றம். ஆனால், முடிவை நோக்கிய எதிர்பார்ப்பு தூண்டும் நடை பிடித்திருந்தது.

நச் - 3/5; மொத்தம் - 5 /10.


4) TBCD - தனியே தன்னந்தனியே...நடப்பது..

பேய் விவரிப்புகளுக்குரிய எல்லா சாமுத்ரிகா லட்சணமும் வைத்து நச். முடிவு பன்ச்; கதைதான் காணோம்.

நச் - 3.5/5; மொத்தம் - 5.5 /10.


5) நிலா ரசிகன் - ஒரு நடிகையின் கதை....

அசத்தப் போவது யாரு மாதிரி சுறுசுறு விவரிப்பு. முடிவு தெரியாதபடிக்கு எடுத்து சென்றது கலக்கல். கதையெல்லாம் நமக்கெதுக்கு :)

நச் - 3.5/5; மொத்தம் - 5.25 /10.


6) மோகந்தாஸ் - கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்

முடிவு அனேகமாக இப்படித்தான் யூகிக்க முடிந்தாலும் செமத்தியான ஓட்டம். ஏடு பார்த்தல் முதல் ரஜினி பாபா வரை பாப் கல்ச்சர் அணுக்கம். கதையையும் வைத்துக்கொண்டு நச்சும் வைத்திருக்கிறார். எனினும், அழுத்தம் தராத ஓட்டம், சிறுகதை என்று மட்டும் படித்துப் பார்த்தால் சிரிப்புத் தோரணமாக மட்டுமே மனதில் நின்று போகிறது.

நச் - 3.5/5; மொத்தம் - 7 /10.


7) கார்த்திக் பிரபு - அப்போ நீ தூங்கியிருப்ப !!!- சிறுகதை

சின்னச் சின்ன தகவல்கள் உண்டு. இரயில் பயணங்கள் சுகமானது. கவிதை போன்ற உவமைகள்; ஆனால், மிரட்டாத உரைநடை. நடுவில் ஒரு பத்தி வெட்டி ஒட்டலில் ஒட்டிக் கொண்டு திரும்பவந்துவிட்டது. புகைப்படங்கள் அழகு சேர்க்கிறது. ஏமாற்றாத, புத்திசாலித்தனமாக சதாய்க்காத, சுவாரசியமான சிறுகதை.

நச் - 4/5; மொத்தம் - 8 /10.


8) கோவி கண்ணன் - நண்பனின் தங்கை...

இவர்கள் நட்பை விவரிக்க வேண்டுமென்றால் 'கண்ணதிரே தோன்றினால்' படத்தின் கரன், பிராசாந்த் இருவரின் பாத்திரங்களைத்தான் குறிப்பிட வேண்டும்.

இந்த மாதிரி சினிமா உவமைகள் எனக்கு ஒவ்வாமை தரும். இயற்கை, அனுபவம் என்று எத்தனையோ கண் முன்னே இருக்க, திரைப்பட எடுத்துக்காட்டுகளை தவிர்த்து எழுதுதல் எனக்கு பிடிக்கும். கதாபாத்திரங்கள் மனதில் தங்க முடியாத சின்னஞ்சிறு அறிமுகங்கள் இன்னொரு குறை.

நச் - 1.5/5; மொத்தம் - 4 /10.



9) வீ.எம் - அரசியல்வாதி

கதை 'ஆர்' (Restricted for 17+) ரகம். வழக்கம் போல் ஸ்க்ரால் செய்து முடிவை ஒரு நோக்கு நோக்கினாலும் செம ட்விஸ்ட் தந்திருக்கிறார். சம்பவங்களைக் கொண்டு கதாமாந்தர்களை மனதில் பதியவைத்தல்; பிறிதொரு தட்டி பார்க்கும்போது இந்தப் பதிவை மின்னலடிக்குமாறு வைக்கும் அழுத்தம் எல்லாம் பாராட்டுகளைக் கோரி நிற்கின்றன.

நச் - 4/5; மொத்தம் - 7.25 /10.


10) பாசமலர் - ஆசைக்கு ஏது வெட்கம்?

எழுத்தாளர் தொலைக்காட்சி நெடுந்தொடர் நிறைய பார்ப்பார் போலத் தெரிகிறது. சொல்லாட்சி எல்லாம் எண்பதுகளின் 'வாராந்தரி இராணி'யை நினைவூட்டுகிறது. முடிவு எனக்கு எதிர்பாராதது.

நச் - 3/5; மொத்தம் - 4.5 /10.


11) செல்வன் - பூனைக்கு மணி கட்டியவள்

இந்த இடுகையின் முடிவு ரொம்ப புகழ்பெற்றதனால், பரவலாக விவாதிக்கப்பட்டதை ஆங்காங்கே பார்த்திருந்தேன். இருந்தாலும் திடுக் திருப்பம்தான். கதை என்று ஒன்றும் இல்லை.

நச் - 3/5; மொத்தம் - 5.5 /10.


12) ஜெகதீசன் - தப்பா நினைக்க மாட்டயே?

தெளிவான ஓட்டம். முடிவு நான் எதிர்பார்க்காததால் மெல்லிய புன்னகை கொடுத்தது.

நச் - 3.25/5; மொத்தம் - 6 /10.


13) ramachandranusha(உஷா) - நானே நானா?

இப்பொழுது படிக்காமல் முன்பே படித்திருந்த கதை. அப்போது இட்ட கருத்து: :)) 'அனுபவம்/நிகழ்வுகள்' என்று போட்டிருந்ததால் ஆசையாகப் படித்தேன்... நம்பவே கூடாது :)

உஷாவிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்ததால் ஏமாற்றம் அடைகிறேன்.

நச் - 1/5; மொத்தம் - 3.5 /10.


14) இ.கா.வள்ளி - யாரோ அவள், என்னவள்?

இது எண்பதுகளில் (அல்லது இப்போது கூட?) வரும் 'தேவி' நடையில் செல்கிறது. முடிவெல்லாம் 'ஓ... ஜீஸஸ்' ரகம். (இந்தப் பதிவில் ரசிகன் பின்னூட்டங்கள் நெத்தியடி)

நச் - 1/5; மொத்தம் - 2 /10.


15) கிருஷ்ணா - பயணிகள் கவனிக்க . . .

'பொல்லாதவன்' படத்தில் 'எங்கேயும் எப்போதும்' மறுசுழற்சி என்றவுடன் அயர்ச்சி கலந்த அனுதாபம் எட்டிப்பார்த்தது. அதே போல் முதல் இடிப்பிலேயே இப்படித்தான் செல்லுமோ என்று அஞ்ச, அப்படியே நடக்க எதிலும் புதுமை இல்லை.

நச் - 1/5; மொத்தம் - 2 /10.


16) பிரதாப் குமார் சி - அப்பாயின்மென்ட் கிடைச்சிருச்சு....

பள்ளியில் தமிழ்த் தேர்வுக்கு விடை எழுதும்போது அதிக மதிப்பெண் பெற உத்தி என்று இதைச் சொல்வார்கள். திராவிடக் கட்சிகளில் அன்பழகன் என்று எழுதுவதை விட அன்பழகனார் என்று 'னார்' விகுதி சேர்த்து எல்லோரின் பெய்ரையும் குறிப்பிடு என்றார்கள். இங்கு பெரியார். இந்தக் கதையும் முடிவை வைத்துக் கொண்டு சம்பவத்தை விவரிக்கிறது. ஒற்றைப் பார்வை சமூக விமர்சனம்.

நச் - 3.25/5; மொத்தம் - 5.5 /10.


17) பெனாத்தல் சுரேஷ் - கடன் அட்டை

சுருக்கத்தை முன்பே இவரிடம் இருந்து கேட்டிருந்தேன். அப்போது அசுவாரசியமாய் 'இது தேறாத கேசு சுரேஷ்' என்றும் சொல்லியிருந்தேன். அதிலிருந்து மாறுபட்ட அதிர்ச்சி மதிப்பீடு (மட்டுமே) தரும் முடிவு. ஓட்டம் அருமை. முடிவு 'சிவாஜி'.

நச் - 2.5/5; மொத்தம் - 5 /10.


18) நக்கீரன் - வீட்டில்....? யாருமில்லை.

ஒரேயடியாக அனைத்து கதைகளையும் வாசித்தால் ஏற்படும் சோர்வா? அல்லது வாசகனை ஏமாற்றியதால் ஏற்படும் விரக்தியா. மதிப்பெண் அள்ளிவிட தட்டச்சு தடுத்தாட்கொள்கிறது.

நச் - 1/5; மொத்தம் - 2.5 /10.


19) ஹரன்பிரசன்னா - சனி

முன்பே படித்தது. அப்போது இட்ட பின்னூட்டம்: கதை, வடிவம், ஓட்டம் எல்லாமே சூப்பர்... (முடிவில் எதுவும் நச் இல்லையே!)

நச் - 1/5; மொத்தம் - 6 /10.

பிரசன்னாவின் பதிலை இங்கு இடுவது பொருத்தம்:
முடிவில் நச் என்பதைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகள் உலவுகின்றன என்று தெரிகிறது. முடிவில் ஒரு சிரிப்பு, எதிர்பாராத சின்ன ட்விஸ்ட் போதும். அதை மீறி பெரிய நச்செல்லாம் வெகு சில சமயம் அமையலாம். அதுவும் கூட ஒருசிலருக்கு நச்சாகவும் ஒரு சிலருக்கு ஏற்கனவே எதிர்பார்த்ததாகவும் அமையும். இதுபோன்ற 'நச்சென்றே முடியும்' என எதிர்பார்ப்போடு படிக்கப்படும் கதைகளுக்கு இந்த சவால் (சங்கடம்!) இன்னும் அதிகம். இதை மனதில் கொண்டு, கதைக்கு எந்த அளவு நச் போதுமோ அது இருக்கட்டும்.


அப்படி பார்த்தால் இந்த முதல் பிரிவில் என்னுடைய வாக்கு: கார்த்திக் பிரபு

29 கருத்துகள்:

:) Thanks.

but, i suggest, hiding the 'marks' until after the results are announced.
just a thought.
it might influence others :)

நல்ல அழகான விமர்சனங்கள். அடுத்த பதிவில் எனக்கு ஸ்பெஷல் மார்க் போட்டு தேத்தி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். :)

கரெக்ட்தான் சர்வேசன். அடுத்த விமர்சனங்களில் தவிர்த்து விடுகிறேன்.

இருந்தாலும் அது மட்டும்தானே எழுத (அதாவது போட) வருது :)))

கொத்தனார்... பேசிய சரக்கு இன்னும் வந்து சேரல... கையில வந்தவுடன் தகுந்த கவனிப்பு தரப்படும் :D

நல்ல விமர்சனம். பரீட்சை பேப்பர் திருத்திய அனுபவம் உண்டா. :)

பள்ளியில் தமிழ் இரண்டாம் தாளில் சிறுகதை வரைக என்று பத்து மதிப்பெண்ணுக்கு ஒரு கேள்வி இருக்கும். தமிழாசிரியர்கள் எப்போதும் எட்டுக்கு மேல் மதிப்பெண் தரமாட்டார்கள். :)

---பரீட்சை பேப்பர் திருத்திய அனுபவம் உண்டா---

பள்ளி மாணவர்களூம் நானும் சந்தோஷமா வாழ்க்கைய ஓட்டுறது உங்களுக்குப் பிடிக்கலையா :)

கார்த்திக்பிரபு கிட்ட நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல.

உங்களுக்கு நல்லா புரிஞ்சுடுச்சு போல எல்லாமே. நீங்களாச்சும் பதில சொல்லுங்க.

வாட் இஸ் த மாறல் ஆப் தெ ஸ்டோரி?

இது தான் அவரு கிட்ட கேட்ட கேள்வி:
//ஆனா, ட்ரெயின் ஆக்ஸிடண்ட்ல இறந்தது யாரு? மூணு பேருமா?//

:)

நீதி எல்லாம் கேக்கறீங்க. அந்தக் கதை புரியற மாதிரி வேற நடிச்சுட்டேன் ;))

இப்படியெல்லாம் இருக்கலாம் என்பதுதான் அந்த முடிவின் அழகு:

* பாரதி தூங்கவேயில்லை. அல்லது அரைத் தூக்கத்தில் இந்த விவரிப்பு ஏற்கனவே கேட்கப்படுகிறது. வாழ்க்கையே இந்த கண்மூடிய மோன நிலையில் இருக்கிறது. சில சமயம் திறந்து பார்ப்பதாக நினைக்கிறோம். சில சமயம் கண்டும் காணாமல்; சில சமயம் கண்டதைச் சொல்லாமல்...

* இந்த புதிர் முன்பே சொல்லப்படுவிட்டதால், தெரிந்த விடைதானே! அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் அசை போடும் சுகம். வரலாறு மீண்டும் திரும்பி வரும் போன்ற கருத்தாக்கம்.

* நீங்க சொன்ன நிரந்தர உறக்க முடிவு

எனக்கும் புரியல என்பதை இப்படி பாலிஷா சொல்லிப்புடுறேன்.

---தமிழாசிரியர்கள் எப்போதும் எட்டுக்கு மேல் மதிப்பெண் தரமாட்டார்கள---

அரைபிளேடு இப்ப திருப்தியா :)

---அரைபிளேடு இப்ப திருப்தியா --
:)

சொன்ன கதைக்கான மதிப்பெண்ணை சொன்னவர் எடுத்துக்கொள்கிறார்.

சொல்லாத கதைக்கான அல்லது சொல்லாததை புரிந்து கொண்டதற்கான மீதியை ஆசிரியர்/விமர்சகர் எடுத்துக் கொள்கிறார். :)

//Boston Bala said...

நீதி எல்லாம் கேக்கறீங்க. அந்தக் கதை புரியற மாதிரி வேற நடிச்சுட்டேன் ;))

இப்படியெல்லாம் இருக்கலாம் என்பதுதான் அந்த முடிவின் அழகு:

* பாரதி தூங்கவேயில்லை. அல்லது அரைத் தூக்கத்தில் இந்த விவரிப்பு ஏற்கனவே கேட்கப்படுகிறது. வாழ்க்கையே இந்த கண்மூடிய மோன நிலையில் இருக்கிறது. சில சமயம் திறந்து பார்ப்பதாக நினைக்கிறோம். சில சமயம் கண்டும் காணாமல்; சில சமயம் கண்டதைச் சொல்லாமல்...

* இந்த புதிர் முன்பே சொல்லப்படுவிட்டதால், தெரிந்த விடைதானே! அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் அசை போடும் சுகம். வரலாறு மீண்டும் திரும்பி வரும் போன்ற கருத்தாக்கம்.

* நீங்க சொன்ன நிரந்தர உறக்க முடிவு

எனக்கும் புரியல என்பதை இப்படி பாலிஷா சொல்லிப்புடுறேன்.//

பாபா,
நீங்க சொன்ன காரணமெல்லாம் கார்த்திக் பிரபுக்கு தெரியுமா???

பாலா,

அருமையாக அனைத்தையும் வாசித்து மதிப்பெண் இட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். அப்படியே group B, C எல்லாத்துத்தையும் ஒரு கவணி கவணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

//
எனக்கும் புரியல என்பதை இப்படி பாலிஷா சொல்லிப்புடுறேன்.

//

அப்படி வாங்க வழிக்கு :)
அவரு ஏதோ 'பெருசா' சொல்ல வரார்னு புரிஞ்சுது.

அவர் பதில் சொல்றாரான்னு பாக்கலாம்.

நம்ம பாட்டுக்கு ஏதாவது நெனச்சுட்டு, அவரு இன்னும் சுவாரஸ்யமா ஒரு 'நச்' வச்சிருந்து அத மிஸ் பண்ணிடக் கூடாதுங்கறதால சொல்றேன்.

:)

நன்றி பாஸ்டன் பாலா

"எப்பொழுது என்ன ஆரம்பிக்கிறது என்று கவனிக்காமல் விட்டுவிட்டு, பின் பாதிவேளைக்கப்புறம் என்ன நடக்கிறது என்று தெரிந்து 'follow up' செய்வதற்குள் பாதி முடிந்து போகிறது.

கொஞ்சம் கதைகளைப் படித்தேன். இத்தனை பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இப்பொழுது தான் தெரியவந்திருக்கிறது.

அனைத்தையும் ஓரிடத்தில் தொகுத்ததுத் தந்ததற்கு நன்றி. இல்லையென்றால், ஒன்றொன்றாகத் தேடி எங்கே படிப்பது!!!

போஸ்டன் பாலாவிற்கு - நன்றி.

பாபா ஸ்டைல் விமர்சனங்கள்.... :)

நன்றி நன்றி... :)

அரை பிளேடு ,

---சொன்ன கதைக்கான மதிப்பெண்ணை சொன்னவர் எடுத்துக்கொள்கிறார்.---

நானும் பன்ச் விட்டுக்கறேன்...

சொன்ன கதைக்கும் சொல்லாத கதைக்கும் ஒரு துளிதான் வித்தியாசம். சொன்ன கதை எழுத்தில் வருகிறது; சொல்லாத கதை எண்ணத்தில் வருவது.

வெட்டிப்பயல்,
---நீங்க சொன்ன காரணமெல்லாம் கார்த்திக் பிரபுக்கு தெரியுமா???---

எனக்கே சர்வேசன் கேட்டதுக்கு அப்புறம்தான் தெரியும் ;)

சதங்கா,

---அப்படியே group B, C எல்லாத்துத்தையும் ஒரு கவணி கவணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.---

வீட்டுப்பாடம் கொடுத்திருக்கீங்க; கிட்காட் தின்ன கசக்குமா :))

சர்வேசன்,
---அவர் பதில் சொல்றாரான்னு பாக்கலாம்.---

Better to remain silent and be thought a fool than to speak out and remove all doubt. அப்படின்னு எல்லாம் நினைக்க மாட்டார்னு நினைக்கிறேன் :D

வினையூக்கி
---நன்றி பாஸ்டன் பாலா---

"Critics are like eunuchs in a harem; they know how it's done, they've seen it done every day, but they're unable to do it themselves."
-- Brendan Francis Behan

நண்பன்,
---கொஞ்சம் கதைகளைப் படித்தேன். இத்தனை பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இப்பொழுது தான் தெரியவந்திருக்கிறது.---

வாக்கெடுப்பில் பங்கு கொள்ள:
Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!:: "சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு ஆரம்பம் - Group A"

மற்ற கதைகளைப் படிக்க:
Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!:: "சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு - Group B"

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!:: "சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு - Group C"

நன்றி நண்பன்.

ராம்,
சமீபத்தில் புரட்டிய புத்தகத்தில் இருந்து...
Writing for Journalists - Writing reviews

Pay no attention to what the critics say... Remember, a statue has never been set up in honor of a critic!
- Jean Sibelius

நேரம் எடுத்து கதைகளைப் படித்து (??!! ;) ) எழுதியமைக்கு நன்றி..
***^^^^***
விமர்சனம் குறித்து நீங்கள் போட்ட பொன்(?!) மொழிகளைப் படித்தப் பின் தோன்றியது..

கதாசிரியர்கள் விமர்சகர்களை/விமர்சனங்களை பெரிதுப்படுத்துவதில்லை..(நன்றாக சொன்னால் ஒழிய.. ;) )

ஆனால், வாக்குளிப்பவர்கள் கவனிக்கின்றார்கள்..

திரைப்படங்களுக்கு கூட ஆவி, குமுதம் என்ன சொல்லுகிறது என்று சொல்லிப் பார்பவர்கள் நிறைய பேர்.

***^^^^***

;)

TBCD...

---நேரம் எடுத்து கதைகளைப் படித்து (??!! ;) )

உங்களுக்கும் மேற்கோள் மறுமொழி நன்றி :)

I never read a book before reviewing it; it prejudices a man so. ~Sydney Smith

(தொடர்புடைய புத்தகம்: NPR : How to Talk About Books You Haven't Read)

அருமையாக இருக்கு உங்கள் நச் விமர்சனம்.

திரு பாஸ்டன் பாலா, நேரமெடுத்து, கதைகள் அனைத்தும் படித்து, நச் விமர்சனம் மற்றும் மதிப்பென் கொடுத்தமைக்கு நன்றி,

நச் கதைகளுக்கு நச் விமர்சனம் தந்த , "ந வி" பாஸ்டன் பாலா வாழ்க, வாழ்க..
வீ எம்

பாபா, அனுபவம், நிகழ்வுகளில் "சிறுக்கதையை" சேர்த்தது, நிஜம் என்று நினைத்து நிறைய பேர்கள்
முதலில் ஏமாந்து கடைசியில் எரிச்சலை அடைந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .அதனாலேயே கதை வெற்றி அடைந்ததாய் படைப்பாளி பெருமைப்படுகிறாள் :-)
அப்ப நான் பெயிலா :-))

குசும்பன், வியெம்... __/\__

உஷா
---அனுபவம், நிகழ்வுகளில் "சிறுக்கதையை" சேர்த்தது, நிஜம் என்று நினைத்து நிறைய பேர்கள்
முதலில் ஏமாந்து கடைசியில் எரிச்சலை அடைந்திருக்கிறார்கள் ---


நான் கூட இந்தப் பதிவை 'பதிவர் வட்டம்' என்று வகைப்படுத்தியிருந்தேன். அப்புறம் சரியாக 'சிறுகத/கவிதை' என்று மாறிவிட்டது.

---அதனாலேயே கதை வெற்றி அடைந்ததாய் படைப்பாளி பெருமைப்படுகிறாள்---

'ஏமாறச் சொன்னது நானா
என் மீது கோபம் தானா' என்பது போல் என்னில் அசடு வழியும் ஏமாற்றம் நிச்சயம் நச் :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு