திங்கள், நவம்பர் 19, 2007

அண்ணா பல்கலையின் கேள்விக்கு பதில் கிடைக்குமா?

பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் அண்ணா பல்கலை கேட்கும் கேள்வி இது:

Topic: Innovative Product or process or strategy

India needs all kinds of technologies to eradicate poverty and to accelerate the progress of growth.
"Every one should enjoy the fruit of technology"and it should not be restricted only to privileged.

It is necessary to provide basic amenities like transport,education,medical and better living conditions to every citizen of India. In this context we all agree that innovative methods of product or process or strategy must be developed to save time,energy and to minimize the expenditure.

எப்படி?

தொழில்நுட்பத்தைக் கொண்டு, தற்கால விஞ்ஞான வளர்ச்சியை உபயோகித்து எவ்வாறு அனைத்து மக்களுக்கும் பொருளாதார ஏற்றத்தைக் கொண்டு வரலாம்?

கல்வி, மருத்துவம், தங்குமிடத்திற்கான பாதை போன்ற வாழ்வின் ஆதார வசதிகளை எங்ஙனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அணுக வைக்கலாம்?

குறைந்த செலவில் பல்கி பெருக வைக்கும் திட்டமோ, பொருளோ, வழிகாட்டலையோ கட்டமைத்து விளக்க முடியுமா?

விடைகள் தருவோருக்கு முன்கூட்டிய நன்றிகள். பின்னூட்டமாகவோ பதிவாகவோ உங்கள் எண்ணங்களை, சாத்தியக்கூறுகளை கோடிட்டு காட்டுங்களேன்!

19 கருத்துகள்:

//Topic: Innovative Product or process or strategy//

முதலில் இதை அண்ணாப்பல்கலை கேட்ட கேள்வி என்பதற்கு என்ன சான்று, இந்த கேள்வியைக்கேட்டது யார், யார் அப்படி உங்களிடம் சொன்னது, பத்திரிக்கையில் இப்படி கேட்கிறார்கள் என சொல்லி இருக்கிறதா? இல்லை அங்கு தற்போது படிக்கும் மாணவர்களே சொன்னார்களா?

உங்கள் நேரடி அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை! எனவே எப்படி அவர்கள் கேட்டதாக சொல்கிறீர்கள் என அறிய ஆவல்!

---அங்கு தற்போது படிக்கும் மாணவர்களே சொன்னார்களா?---

ஆமாம்.

அண்ணா பல்கலையின் வலையகம் (Anna University - A large, highly renowned affiliated University in Chennai, India) பரிதாபமாக இருக்கிறது :(

---எப்படி அவர்கள் கேட்டதாக சொல்கிறீர்கள் என அறிய ஆவல்!---

அண்ணா பல்கலை உட்பட அதன் கீழ் வரும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். (Entries should be typed in English not exceeding "6" A-4 size.)

ஸ்கேன் செய்தால்தான் ஒத்துப்பீங்களா :)

இது கட்டுரை எழுதும் போட்டியா? அப்படி எனில் அப்படித்தான் தலைப்பு வைப்பார்கள் அதற்கெல்லாம் உணர்ச்சி வசப்படலாமா? பள்ளிக்கூடத்தில கூட தான் பசு மாடு பற்றிக்கட்டுரை எழுதுகனு சொல்வாங்க அதுக்காக மாணவர்களையே மாடு வளர்க்கப்பழக்கப்படுத்துவதாக சொல்ல முடியுமா?

நான் கூட ஏதோ சமுதாயத்திற்கே ஒரு மனம் திறந்த கேள்வியாக கேட்டுவிட்டார்களோ எனப்பார்த்தேன்!

மாணவர்கள் தான் கட்டுரைய தீட்டணும் அவங்க தீட்டிட்டாலும் :-)), நமக்கு என்ன இருக்கு இதில்!

---அதற்கெல்லாம் உணர்ச்சி வசப்படலாமா?---

:))

'புதிய கீதை' விஜய் மாதிரி முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் ஆராய்ச்சியாளர்+பேராசிரியர் கலாம் கையால் தபால்தலை வெளியிடுவார்களோ என்னும் நப்பாசைதான்.

---நான் கூட ஏதோ சமுதாயத்திற்கே ஒரு மனம் திறந்த கேள்வியாக கேட்டுவிட்டார்களோ எனப்பார்த்தேன்---

ஒரேயொரு விடையாக எதுவும் தரமுடியாவிட்டாலும், எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் எதை சொல்வீர்கள்?

அட்சயபாத்திரம், அம்பானியின் சொத்து பறிமுதல் என்று என்னை மாதிரி சின்னபுள்ளத்தனமா யோசிக்க கூடாது ;)

பாலா, இது மாணவர்களுக்கு மட்டும் இல்லையே?? AU வலைல போயி தேடிக் கண்டுபிடிக்க முடியல!! :(

Do you also know how and where the entries should be sent to?

---இது மாணவர்களுக்கு மட்டும் இல்லையே??---

மாணவர்களுக்கு மட்டுமான போட்டிதான்.

//"Every one should enjoy the fruit of technology"and it should not be restricted only to privileged.//

ஒரு இடத்தில் விதைப்போட்டு ஒரு பழ மரம் வைக்கப்படுகிறது,மரம் பெருசா ஆனதும் பழங்கள் நிறைய காய்க்கிறது, மரம் வைத்தவர்கள் அதே ஊரில் இருக்காங்க, தண்ணீர் ஊற்றுபவர்கள் இருக்காங்க , மரம் அதே ஊரில் இருக்கு , ஆனால் பழம் மட்டும் "விலையாகி" வெளியூருக்கு போய்விடுகிறது. விற்றக்காசும் அந்த "பழத்துக்கே" போய்விடுகிறது!

அப்புறம் எப்படி மரம் வளர்ந்த ஊரில் இருக்கிறவங்க "பழம்" சாப்பிடுவாங்களாம்!

மரம் என்பதற்கும், பிரபல கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் எல்லாம் அயல்நாட்டு சேவைக்கு போவதற்கும் முடிச்சு போட்டுக்கொண்டால் அது உங்கள் கற்பனை.

நான் சொல்லவருவது, எல்லாருக்கும் பழம் வேண்டும் என்றால் "பழம்" இருக்கணும் அது தான் முதல் தேவை. ஏன்னா இருந்தா தானே கொடுக்க முடியும்!

//ஒரு இடத்தில் விதைப்போட்டு ஒரு பழ மரம் வைக்கப்படுகிறது,மரம் பெருசா ஆனதும் பழங்கள் நிறைய காய்க்கிறது, மரம் வைத்தவர்கள் அதே ஊரில் இருக்காங்க, தண்ணீர் ஊற்றுபவர்கள் இருக்காங்க , மரம் அதே ஊரில் இருக்கு , ஆனால் பழம் மட்டும் "விலையாகி" வெளியூருக்கு போய்விடுகிறது. விற்றக்காசும் அந்த "பழத்துக்கே" போய்விடுகிறது!

அப்புறம் எப்படி மரம் வளர்ந்த ஊரில் இருக்கிறவங்க "பழம்" சாப்பிடுவாங்களாம்!
//

வவ்வால்,
இப்போதெல்லாம் பழத்தை வெளியூருக்கு போக வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை. விளைந்த பழம் மொத்தத்தையும் பிழிந்து வெளியூருக்கு ஜூஸை மட்டும் நெட்டிலேயே அனுப்புகிறார்கள். உள்ளூருக்கு மிஞ்சுவது சக்கைதான்!!

Back to your blog after a long time ... Interesting topic as I always find arriving here ... I didnt get the head and tail of it, but I get the content ... (Head - Why in a blog, tail - what competition?!)

Sitting inside a campus with a lot of vibrant young engineers and having taught them for a semester, having seen the world for 10 years, this is a theme thats storming my brain.

Absolute talent. Lots of skill. Plenty of laziness. Irresponsible childishness. Any mature adult can inspire them instantly. Only those instants happen rarely!!! :) ... They are always looking up for a spark to light themselves. Surely.

I am being repeatedly told by my students that they are more than willing to start their own enterprise - incubation on campuses are becoming common... I wonder if things will boom suddenly. The environment is perfect and ready to bloom. Sometimes I feel pessimistic that probably it was so always and nothing happened!

Kalaam and Manmohan Singh have done a lot for them. I cant figure out what to do having a valuable role to play inbetween ...

The Indian dream can definitely happen. Just dont know how and when! It sucks to know that it can but it hasnt!

bala, have you heard about the IBM challenge program in India? More than an essay it actually asks them to complete a project on these lines of thinking! I had too many students coming to me to do them ... Ideas were plenty. Innovation seems easier than implementation! :) ... Actually none of them completed it! Not that they cant. But they haven't. Incentives are there, but priorities are to be clarified. IBM came in and put in a lot of effort to capacitate them too. It was interesting.

//உள்ளூருக்கு மிஞ்சுவது சக்கைதான்!!//

யோசிப்பவரே வாங்க,
அப்போ சக்கைய மட்டும் வச்சுக்கிட்டு சக்கைப்போடு போடுமா இந்தியா? அப்போ அப்படி நினைப்பதெல்லாம் வெறும் பகல் கனவா? அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் திட்டம் இது தானா?

இப்படிலாம் இருந்தா கனவு வறட்சியா தான் இருக்கும்! :-))

அதுக்கு பேசாம நான் மேட்னி ஷோ படம் பார்த்துட்டு ஷ்ரேயா, நயன் தாரா கூட கனவுல டுயட் பாடுவேன் :-))
(அதுவாச்சும் கொஞ்ச நேரம் குதுகலம் தரும்)

unrelated:

why do you think there is not much turnout in voting for the 'Nach' stories?

400+ visits but only 40+ votes.

if you can write-up a deep analysis that will help find answers or make people think and vote or make me think other options for next contests, it will help.

i am asking you this because you didnt participate in the 'Nach' and also because you didn't do any new posts recently ;)


:)

சர்வே,
//பங்களிப்பு அற்புதமா இருந்தது.
வாக்களிப்பும், மோசமில்லாம நடக்குது. 40+ வாக்குகள் ஒரு நாள்ள வரது சகஜமே!//

இப்படி உங்கப்பதிவில இப்படி சொல்லிட்டு , இங்கே வந்து ,

//why do you think there is not much turnout in voting for the 'Nach' stories?

400+ visits but only 40+ votes.//

இப்படிக்கேட்டா எப்படி,

அதுவும் இவர் எழுதினா ஓட்டு அதிகப்படியா விழுமாவா? தாங்கலை சாரே! :-))

என்னங்கடா கொடுமை இது!

எல்லாருமே ஒரு பிம்பத்தை வளர்த்துக்கிறாங்க!

57 கதைங்க வந்து இருக்குனா அதை 3அல்லது 4 ஆல் பெருக்கிகோங்க தோராயமா அவ்வளவு தான் மொத்த ஓட்டு விழும், தனித்தனியா கணக்கு பண்ணக்கூடாது மொத்தமாக ஒரிஜினலா வரதை சொன்னேன்(நான் எனக்கு முதற்கொண்டு எதுக்கும் ஓட்டுப்போட போவதில்லை,என்னைப்போல எத்தனை பேரோ)

இதை விட மொத்தமாக ஓட்டு கம்மியா வந்தா என்னைக்கேட்க கூடாது!

என்னங்க நீங்க போட்டி நடத்தினா மொத்த வலைப்பதிவும் திரண்டு வந்து ஓட்டுப்போடனும், கலந்துக்கணும்னு எதாவது விதி இருக்கா?

related ;)

(விரிவாக/கோர்வையாக) எழுத வேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது...

Second law of thermodynamics, about entropy: (விக்கிப்பீடியா)

The total entropy of any isolated thermodynamic system tends to increase over time, approaching a maximum value.

என் மொழிபெயர்ப்பு: திறமூலமற்ற நிலையில், தானே விட்டுவிட்டால், ஒழுங்கற்ற போக்கு அதிகரிக்கும்.

அப்படியே நமக்கு இதைப் பொருத்தி பார்த்தால், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மனிதகுலம் சிக்கலாக்கி கொள்கிறது.

சட்டம்/நீதி ஆகட்டும்; ஒழுக்க கோட்பாடுகள் ஆகட்டும்; அரசுத்துறை நிர்வாகம் ஆகட்டும்;

விரிவாக்குகிறேன் பேர்வழி என்று சில நடைமுறைகள். காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் என்று சில விதிவிலக்குகள். எல்லாம் சேர்ந்து சிக்கல்களை மேலும் பெருமுடிச்சுக்களாக்கி விடுகிறது.

அரசு வழங்கும் இலவச கல்வியில் நாட்டமடைய வைத்தல்; GHகளின் நம்பகத்தன்மை போன்ற சிம்பிளான விஷயங்கள் போதும். புதிய தொழில்நுட்பம் தேவையில்லை.

---அதுவும் இவர் எழுதினா ஓட்டு அதிகப்படியா விழுமாவா? தாங்கலை சாரே!---

அதானே!!!

நான் என்ன சிம்ரன் மாதிரி ஒரு பாட்டுக்கு 'ஆள் தோட்டா' ஆடிக் கொடுத்தால், அதனால் படம் ஹிட் ஆகும் என்று நினைப்பதற்கு?

இல்ல... 45 வயசானாலும்; ஊக்க மருந்து சாப்பிட்டாலும்; மாசத்துக்கு நாலரை மில்லியன் வாங்க கையெழுத்துப் போட்டால், யாங்க்கீஸ் ரசிக கோடிகளை வரவைக்கும் சொக்குப் பொடி ரோஜர் க்ளெமென்சா?

சர்வேசன் & வவ்வால் முடியல... இந்த அடிக்கிற மாதிரி அடி; தட்டிக் கொடுக்கற மாதிரி தட்டு விளையாட்டு :))

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407



Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)


Anonymous... நன்றி. தங்கள் வருகைக்கு வணக்கங்கள். மீண்டும் நல்வரவு.

---Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407



Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)----


மீண்டும் வந்த விளிப்பிலி ஹம்பக் லாக்... நன்றி. தங்கள் வருகைக்கு வணக்கங்கள். மீண்டும் நல்வரவு.

இந்த வந்தனோபசாரத்துதி போதுமா? இன்னுங்கொஞ்சம் வேணுமா ;)

////
இப்படி உங்கப்பதிவில இப்படி சொல்லிட்டு , இங்கே வந்து ,

//why do you think there is not much turnout in voting for the 'Nach' stories?

400+ visits but only 40+ votes.//

இப்படிக்கேட்டா எப்படி,

அதுவும் இவர் எழுதினா ஓட்டு அதிகப்படியா விழுமாவா? தாங்கலை சாரே! :-))

என்னங்கடா கொடுமை இது!
/////

வவ்வால், நீங்க கடவுளா? எல்லா எடத்தலயும் இருக்கீங்க :)

ஒரு நாளைக்கு 40 வோட்டு வரது சகஜம்தான், என் பழைய சர்வேக்கள் படி.
ஆனா, 400 பேர் வந்து படிக்கும் பெரிய போட்டிக்கும் அதே நிலை கொஞ்சம் இடிக்குதேன்னு சொன்னேன்.

பா.பாலா, சொல்றதால, வாக்குகள் அதிகமாகும்னு நானும் நெனைக்கல. ஆனா, 2rd opinion தெரிஞ்சாதான், நல்ல solution தர முடியும்.
அடுத்தமுறை தவ்றுகளை திருத்திக்க ஒரு வாய்ப்பு தேரது சரிதானே?

இல்ல, அதுவும் கொடுமைதானா? :)

:)
திருச்சிற்றம்பலம்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வீ எம்
அன்புடன்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு