தினமணிக் கதிரில் தமிழ் வலைப்பதிவர்கள் குறித்த அறிமுகம்
நன்றி: தினமணிக் கதிர் (அசலைப் படிக்க இங்கு சுட்டவும்)
சுட்டப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்!
வலைப் பூக்கள்: என்ன ஒரு தெனாவெட்டு?
பத்திரிகைகள், விதவிதமான பெயர்களில் தனியார் தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் என அனைத்து ஊடகங்கள் தோறும் செய்திகள் ஊர்வலம் வந்தாலும், இப்போது நகரத்து இளைஞர்களின் பெரும்பான்மையான விருப்பமாக இருப்பவை- 'பிளாக்'குகள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலைப்பூக்கள்தான்!
ஒவ்வொருவரும் தங்களின் வலைப்பூவில் அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களையும், கவிதை, கட்டுரை என படைப்புகளையும், நாட்டு நடப்பு குறித்த அவர்களின் கண்ணோட்டங்களையும், விமர்சனங்களையும் சுதந்திரமாக வெளியிடுகின்றனர். சில வலைப்பூக்களிலிருந்து சுவையான விஷயங்களை இங்கே தருகிறோம்...
தஞ்சாவூரு குசும்பு!: (நெனக்கிறதெல்லாம் எழுத ஆசதான்... முடியுங்களா? உக்காருங்க. மோர் சாப்புட்டுகிட்டே பேசுவோம்)
"போன வாரம், நம்ம பில்கிளிண்டன் மின்னியாபோலிஸ் வறார்னு நண்பன் சொன்னான். சரி, போய் பார்த்துட்டு, நலம் விசாரிச்சுட்டு அப்பிடியே நம்ம தங்கத் தலைவி ஹிலாரிக்கு (ஓட்டுப் போட நம்மாலே முடியாதுன்னாலும்) ஆதரவு தெரிவிக்க நினைச்சேன். அம்பது ரூவா குடுத்து டிக்கட்ட வாங்கிட்டு வேலையிடத்துலேர்ந்து சீக்கிரம் "எஸ்'ஸாயி போய் சேர்ந்தோம்.
இது என்ன கொடுமைடா சாமி, ஒரு முன்னாள் அதிபர் வராருங்கிற ஒரு இது கூட இல்லாமே, தெருவெல்லாம் அதது, அதது வேலையப் பாத்துகிட்டு இருக்கு. ஒரு தோரணம் இல்லே... கொடி இல்லே. ரோட்ட மறச்சு விதவிதமா வளைவுகள் இல்லே. அட அதாவது பரவாயில்ல, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமே இந்த போலிஸ்காரங்க, போக்குவரத்த நெறுத்தாம, என்ன ஒரு தெனாவெட்டு?
இதைவிட அவமானம் (தமிழர்களுக்கு- குறிப்பா தமிழகத் தலைவர்களுக்கு) என்னன்னா, ஒரு நாயி கூட கிளி கால்ல வுளுந்து ஆசி வாங்கமாட்றாங்க. என்ன ஒரு நெஞ்சழுத்தம்? எனக்கா... ரத்தமல்லாம் கொதிக்குது. தொண்ட கிழிய ஒரு சவுண்டு (தலைவா.. வாழ்கன்னு) வுடலாம்னு பாத்தா, அங்கே அங்கே நிக்கிற பாதுகாவல் அதிகாரிகங்களப் பாத்தாலே கொல நடுங்குது.
ஒரு வாழ்க கோசம் இல்லே, தெருவுக்கு தெரு மெரட்டி புடுங்குன காசுல வாங்குன வாளு, கேடயம், செங்கோலு, தங்க மால, தங்க அரனாகயிருன்னு ஒன்னும் கொடுக்கல. அட, 340-ஆவது வட்டச் செயலாளர் அணிவிக்கிற "பொன்னாடை' (பண்ணாடைங்களுக்கு, இது வேற!) கூட இல்ல.
thanjavuraan.blogspot.com
கடல்புறத்தான் கருத்துக்கள்: நடிகர் திலகத்தின் விருந்தோம்பல்
ஒருமுறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும்(மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர். அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு, நெஞ்சை விரித்து, கண்களில் தீப்பொறி பறக்க, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார்.
cdjm.blogspot.com
குசும்பு: அரபு நாடுகளில் வேலைக்கு வருவதற்கு முன் கவனிக்கவேண்டியவை விசாவும், சம்பளமும்.
விசாவில் வேலைபார்ப்பதின் நன்மைகள்: இரண்டு மாத காலத்தில் கம்பெனியின் நிஜமுகம் தெரிந்துவிடும். சம்பளம் ஒழுங்கா வருமா? வராதா? கம்பெனியின் எதிர்காலம் எப்படி, இல்லை மன்னாரன் கம்பெனியா? என்று கண்டுபிடித்துவிட்டு ஈசியாக வேறு வேலை தேடிக்கலாம்.
தீமை: லேபர் லா படி எந்த பலனையும் அடைய முடியாது. சம்பளம் தரவில்லை என்றால் கூட ஒன்னும் செய்யமுடியாது.
kusumbuonly.blogspot.com
நன்றி
சொன்னது… 11/17/2007 01:10:00 PM
நம்மளையெல்லாம் கவனிக்கறாங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா எழுதணுமா இல்லை எப்பவும்போல் என் வழி தனி வழின்னு இருக்கணுமா?
பதிவர்களுக்கு என் வாழ்த்து(க்)கள்.
சொன்னது… 11/17/2007 05:30:00 PM
தீவு __/\__
சொன்னது… 11/17/2007 08:36:00 PM
துளசி
தனி வழியில் எழுதியதைத்தானே கவனிச்சு இருக்காங்க :)
சொன்னது… 11/17/2007 08:37:00 PM
பதிவுகள் அனைத்துமே நல்ல பதிவுகள் தான். இப்பொழுது தான் ஆ.வி மற்றும் தி.க வில் வருகிறது. மற்ற பத்திரிகைகளும் சீக்கிரமே தொடரும்.
தகவலுக்கு நன்றி
சொன்னது… 11/17/2007 10:20:00 PM
துளசி கோபால் said...
நம்மளையெல்லாம் கவனிக்கறாங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா எழுதணுமா இல்லை எப்பவும்போல் என் வழி தனி வழின்னு இருக்கணுமா?///
எனக்கும் அதே டவுட்???
ரொம்ப மகிழ்ச்சி இருக்கிறது, நன்றி பாலா.
சொன்னது… 11/17/2007 11:19:00 PM
கண்ணு போடாதீங்கப்பா. இப்படி நாலு பேர் எழுதினா 40 பேராச்சும் வருவாங்களே.. வாழ்த்துவோம் நம்ம மக்களை..
பெயரில்லா சொன்னது… 11/18/2007 04:14:00 AM
பாலா, தகவலுக்கு நன்றி. குசும்பனுக்கும், கடற்புரத்தானுக்கும் என் வாழ்த்துக்கள்!
மற்றும், என் பதிவுகளை படித்து, ஈமெயில், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிக்கும் உலகெங்கும் உள்ள கோடானுகோடி தமிழ் நெஞ்சங்களுக்கு என் முதற்கால் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள இந்த இனிமையான நேரத்தில் கடமைப் பட்டுள்ளேன் :)
அரசியலவாதிகள்் பத்தி எழுதிட்டு இப்பிடி நன்றி சொல்லலேன்னா எப்பிடி?
சொன்னது… 11/18/2007 08:02:00 AM
நன்றி பாஸ்டன் பாலா!
சொன்னது… 11/18/2007 06:54:00 PM
தஞ்சாவூரான் மற்றும் குசும்பனுக்கு வாழ்த்துக்கள்!
சொன்னது… 11/18/2007 06:55:00 PM
சீனா,
நான் உங்களுடைய 'அசை போடல்களின்' நீண்ட கால ரசிகன்
சொன்னது… 11/18/2007 08:18:00 PM
குசும்பன்,
பார்த்தவுடன் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. :)
தொடர்ந்து பதிவர்களை கல(ாய்)க்க வாழ்த்துகள்
சொன்னது… 11/18/2007 08:20:00 PM
---உலகெங்கும் உள்ள கோடானுகோடி தமிழ் நெஞ்சங்களுக்கு---
:)))
பிரபஞ்சப் பெருவெளியெங்கும் தமிழ் பரப்பும் தஞ்சாவூரான் என்று உமக்கு 23ஆம் புலிகேசி ஸ்டைலில் பட்டம் வழங்கினோம்
சொன்னது… 11/18/2007 08:22:00 PM
ஜோ __/\__
சொன்னது… 11/18/2007 08:22:00 PM
தினமணிக் கதிரில் இந்தப் பகுதி வாரா வாரம் வரலாம்!?
சொன்னது… 11/18/2007 08:24:00 PM
அருமை.......வலைபதிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பது மேலும் மேலும் எழுத தூண்டுகிறது.
சொன்னது… 11/18/2007 09:14:00 PM
கருத்துரையிடுக