Questions for Idly-Vadai
இட்லி-வடை (IdlyVadai - இட்லிவடை) 1008 பதிவுகளைத் தொடப் போகிறார். அதை முன்னிட்டு பாற்குடம், கரகாட்டம், காது குத்து, நீர்ப்பந்தல், ஆன்மிக சொற்பொழிவு எல்லாம் செய்ய ஆசைப்படுகிறார்.
அந்தக் காலத்தில் சுப்ரமணிய சுவாமி, இராஜீவ் காந்தியை நோக்கி தினசரி இருபது கேள்விகள் கேட்பார். பதில் வரவில்லை என்றாலும், கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி உங்களையும் வினாத் தொடுக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
இவை என்னுடைய சந்தேகங்கள்:
1. யார் நீங்க? 'நீதானா அந்தக் கழுதை' என்று மோகன்தாஸ் முதல் முட்டம் சின்னப்பதாஸ் வரை மடல் விடு தூதுகிறார்கள். சொல்லிடுங்க.
2. சென்சேஷனல் செய்தி எங்கேயிருந்து பிடிக்கறீங்க? 'காசிமேடு ஆதி'யாக ஒரு ரூபாய் சொன்னீங்கன்னா, நாங்களும் முந்தித் தந்து கூகிள் ஆட் சில்லறையில் 'சிவாஜி' கல்லாப்பெட்டி நிரப்புவோம்.
3. உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் வேலை என்று ஏதாவது உண்டா? ஜர்னலிஸ்டாக இல்லை என்றால், முழுநேர செய்தியாளராக ஆகும் எண்ணம் உண்டா?
4. உங்களை இதுவரை எவ்வளவு பேர் கண்டுபிடுச்சிருக்காங்க? அதில் எம்புட்டு கரெக்டு?
5. நீங்க அரசியலுக்கு வருவீங்களா? வந்துட்டீங்களா?
6. ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினார் (அப்படியா?). சுஜாதா நிறுத்த வேண்டும் என்கிறார்கள் (யாரு!?). நீங்கள் வலைப்பதிவை நிறுத்திவிட வேண்டுமா?
7. டைம் மேனேஜ்மெண்ட் எப்படி செய்யறீங்க? கணவன், குழந்தைக்கெல்லாம் அவ்வப்போது ஹலோ சொல்வதுண்டா?
8. காபி/பேஸ்ட் போரடிக்கவில்லையா? சற்றுமுன், மிளகாய், தமிழ் நியுஸ் என்று கிளம்புகிறவர்களை போட்டியாக கருதுகிறீர்களா? வளர்ப்பு மகவுகளாக பார்த்து உச்சி மோந்து மகிழ்வுறுகிறீர்களா?
9. ஜனாதிபதியாக வர கலாம் மறுத்துவிட்டார். உங்க சாய்ஸ் யாரு? எவர் வந்தால் இட்லி-வடை சூடு பறக்கும்?
10. 'எனக்கு அந்த முக்கியஸ்தரை தெரியும்... இவருடன் நேற்று டீ சாப்பிட்டேன்' என்பதெல்லாம் 100% கப்ஸாவா? கனவா? சொப்பன ஆருடங்களா?
11. திரட்டியை விட்டு விலகுவது பயந்து முக்காடு போடுவதற்கு சமானம் அல்லவா? அதற்கு எழுதாமலே ஒதுங்கலாமே? ஏன் தமிழ்மணம் கருவிப்பட்டையை கழற்றினீர்கள்?
12. முன்னாடியெல்லாம் துக்ளக் கார்ட்டூன்கள் ரெகுலராக வருமே? இப்பொழுது ஏன் நின்று போச்சு? பின்னூட்ட பிரண்டிங் மனப்பிராந்தியா?
13. விசயகாந்த்துக்கும் இராமதாசுக்கும் ஆறு ஒற்றுமைகள் சொல்லுங்க.
14. அட்டன்பரோ :: காந்தி; சத்யராஜ் :: பெரியார்; மோகன்லால் :: எம்ஜியார்; (நிரப்புக)
அ) ரஜினி :: - ?
ஆ) விஜய் :: - ?
15. இட்லி-வடைக்கு நிகர் இ-வ.தான் என்றாலும். அமிதாப் இல்லாத அசோகாவுக்கு அஜீத் தேவலாம் என்பது போல் இ-வ அல்லாத பதிவுலகில் யாரை இட்டு நிரப்ப முடியும்:
அ) யோசிப்பவர் / ஆ) உண்மைத் தமிழன் / இ) காஞ்சி ஃபிலிம்ஸ் / ஈ) பாலச்சந்தர் கணேசன்?
16. 1007-இல் எட்டாவது சொந்தமாக எழுதியிருப்பீங்க. (எழுதியிருக்கீங்களா!?) அதில் பிடித்த முத்து?
17. கீழ்க்கண்ட சன் டிவி தொடர்களில் ஒன்றை உங்கள் பதிவோடு ஒப்பிடுக:
அ) அல்லி ராஜ்ஜியம்,
ஆ) அமுத மொழிகள்,
இ) குட்டீஸ் சாய்ஸ்,
ஈ) சென்ற வார உலகம்,
உ) தற்காப்பு கலை
18. சண்டை நமது குணம் என்பதற்கேற்ப இட்லி-வடைக்கு x யார்?
19. TOP 10 Movies போல் இட்லி-வடைக்காக ஸ்பெசல் திரைப்படம் போடுக.
20. தங்களின் அத்யந்த வாசகருக்கு ஒரு கேள்வி வரைக.
நீங்களும் கேட்டு வைக்கலாம். அரசு பதிலாக இல்லாவிட்டாலும், அமீனா வராவிட்டாலும் கூர்மவாவது வந்து சேரலாம்.
நீர்தானே இட்லிவடை உமக்கு நீரே பில்டப் காட்டுறீரா?
பெயரில்லா சொன்னது… 6/30/2007 06:24:00 PM
பாபாஜி
ராஜிவ்காந்திக்கு தினம் 10 கேள்வி கேட்டது சுப்பிரமணியசாமி அல்ல. ராம்ஜெத் மலானி.
1008 தொடவிருக்கும் இட்லிவடையாருக்கும் வாழ்த்துக்கள்
சொன்னது… 6/30/2007 06:25:00 PM
//கணவன், குழந்தைக்கெல்லாம்//
ஙே...?!
பெயரில்லா சொன்னது… 6/30/2007 06:51:00 PM
1008 ஆ! யம்மாடி.. ஆத்தாடி..
நாட்டாமை -- உங்க கேள்வி ஆர்டரை மாத்துங்க!.. முதல் கேள்வி பாத்தவுடனே ஓடிப்போயிடுவாரு.. ரெண்டாவது கேள்வியெல்லாம் படிக்கக்கூட மாட்டாரு!
சொன்னது… 6/30/2007 07:16:00 PM
செல்வன்... சாரி!
கூகிளிச்சிருக்கணும் :)
'விடாமல் விவரமா கேள்வி கேட்டவர்' என்றவுடன் சுவாமி ஞாபகத்துக்கு வந்துவிட்டார் ;)
சொன்னது… 6/30/2007 07:17:00 PM
---முதல் கேள்வி பாத்தவுடனே ஓடிப்போயிடுவாரு.. ---
அவர் ஏற்கனவே இதே கேள்விக்கு விடை சொல்லியிருக்கிற நம்பிக்கைதான் ;)
சொன்னது… 6/30/2007 07:32:00 PM
//டைம் மேனேஜ்மெண்ட் எப்படி செய்யறீங்க? கணவன், குழந்தைக்கெல்லாம் அவ்வப்போது ஹலோ சொல்வதுண்டா?//
????!!!!! இட்லிவடை அப்போ பொண்ணா?!!!
பெயரில்லா சொன்னது… 6/30/2007 10:54:00 PM
என்னை வைச்சு காமெடி, கீமெடி ஏதும் பண்ணலியே..?
சொன்னது… 6/30/2007 11:56:00 PM
Excellent Write UP !!!!!!!!!
பெயரில்லா சொன்னது… 7/01/2007 12:12:00 AM
//கணவன், குழந்தைக்கெல்லாம்//
ஙே...?!
பாபா என்ன இது? நம்ப முடியவில்லை வில்லை வில்லை...
அதே ஙே என்று விழித்தப்படி,
உஷா
சொன்னது… 7/01/2007 04:15:00 AM
இட்லிவடைக்கு கேள்விகள் இருக்கட்டும். இதை படித்தவுடன் எனக்கு சில கேள்விகள்.
1. 1008 பதிவுகளைத் தொடப் போகிறார். - அதெப்படி உங்களுக்கு தெரியும்?
2. கூகிள் ஆட் சில்லறையில் 'சிவாஜி' கல்லாப்பெட்டி நிரப்புவோம்- இப்படி என்றால் என்ன சிறு குறிப்பு வரைக.
3. கணவன், குழந்தைக்கெல்லாம் அவ்வப்போது ஹலோ சொல்வதுண்டா?
- இட்லிவடை பெண் பதிவரா? உங்களுக்கு எப்படி தெரியும்? முதல் கேள்வி அப்பிடின்னா இடிக்குதே.
சொன்னது… 7/01/2007 07:20:00 AM
// கணவன், குழந்தை// - இட்லி வடை பெண் என்று திசைதிருப்பும் விதமா இருக்கு அம்புட்டுத்தான்.. மத்தபடி இட்லியில் உப்புக்குச் சப்பாணியா யாராச்சும் பொண்ணுங்களும் இருக்காங்களா? ;)
சொன்னது… 7/01/2007 09:30:00 AM
//இட்லி-வடை (IdlyVadai - இட்லிவடை) 1008 பதிவுகளைத் தொடப் போகிறார். அதை முன்னிட்டு பாற்குடம், கரகாட்டம், காது குத்து, நீர்ப்பந்தல், ஆன்மிக சொற்பொழிவு எல்லாம் செய்ய ஆசைப்படுகிறார்.//
இந்த விளையாட்டெல்லாம் விளையாண்டால் நான் மோகன்தாஸிடம் சொல்லி ஒரு நாளில் 1008 பதிவு போடச் சொல்லிவிடுவேன்.
ஆல்டர் ஈகோ
மோகன்தாஸ்
பெயரில்லா சொன்னது… 7/01/2007 09:42:00 AM
உண்மைத்தமிழன்
---என்னை வைச்சு காமெடி, கீமெடி ஏதும் பண்ணலியே..?---
இல்ல... இல்ல.. சும்மா ஒரு ஜாலிக்குத்தான் :)
சொன்னது… 7/01/2007 09:58:00 AM
உஷா
---நம்ப முடியவில்லை வில்லை வில்லை...---
'அப்பா, அம்மாவுக்கு வணக்கம் சொல்வதுண்டா?' என்று வினவினால், பெற்றொருடன் வாழ்பவர் என்று நம்பிவிட முடியுமா ;)
சொன்னது… 7/01/2007 09:59:00 AM
சத்யா
--கூகிள் ஆட் சில்லறையில் 'சிவாஜி' கல்லாப்பெட்டி நிரப்புவோம்- இப்படி என்றால் என்ன சிறு குறிப்பு வரைக.---
'சிவாஜி' திரைப்படத்தில் வில்லன் 'ஆதி' ஒரு ரூவாய் சுண்டிவிடுவார். அதை வைத்து கருப்பு பணத்தைக் கொள்ளையிட்டு கோடீஸ்வரன் ஆவார் சிவாஜி.
'இட்லி-வடை' வலைப்பதிவில் செய்தி எங்கேயிருந்து கிடைக்கிறது என்று சொல்லிவிட்டால் --> வெட்டி/ஒட்டுவதை வைத்து கூகிள் விளம்பரங்களினால் ஓசியில் பணம் சம்பாதிக்கலாம்
க்ளியரா? இல்லேன்னா சொல்லுங்க... மயிலை மன்னாரிடம் உதவி கேட்கலாம் :)
---பெண் பதிவரா? முதல் கேள்வி அப்பிடின்னா இடிக்குதே.---
புரியலியே... கழுதை என்பதால் சொல்றீங்களா ;)
-----------------------------------------------
மேலும் சில கேள்விகள்:
21) 1008 பதிவுகளை இட்லி-வடை தொடப் போகிறார். - அதெப்படி பாலாஜிக்கு தெரியும்?
சொன்னது… 7/01/2007 10:07:00 AM
பொன்ஸ்
---இட்லி வடை பெண் என்று திசைதிருப்பும் விதமா இருக்கு அம்புட்டுத்தான்..---
சிவாஜி படம் சூப்பரா இருக்கு என்று மிடையங்கள் திசை திருப்பற மாதிரியா ;)
---------------------------------------------------
மேலும் சில கேள்விகள்:
22) இட்லியில் உப்புக்குச் சப்பாணியா யாராச்சும் பொண்ணுங்களும் இருக்காங்களா?
சொன்னது… 7/01/2007 10:11:00 AM
;-)
சொன்னது… 7/01/2007 04:40:00 PM
//
14. அட்டன்பரோ :: காந்தி; சத்யராஜ் :: பெரியார்; மோகன்லால் :: எம்ஜியார்; //
You mean பென் கிங்ஸ்லி :: காந்தி ?
சொன்னது… 7/01/2007 09:00:00 PM
//
Anonymous said...
நீர்தானே இட்லிவடை உமக்கு நீரே பில்டப் காட்டுறீரா?
//
இது என்ன புது கதையா இருக்குதே !
சொன்னது… 7/01/2007 09:02:00 PM
உண்மை
---You mean பென் கிங்ஸ்லி :: காந்தி ?---
:(( மன்னிக்க & நன்றி! :)
---இது என்ன புது கதையா இருக்குதே---
அது ரொம்ப நாளாக கட்டவிழ்த்துவிடப்பட்ட (வ;) தந்தி
சொன்னது… 7/01/2007 09:05:00 PM
//நீர்தானே இட்லிவடை உமக்கு நீரே பில்டப் காட்டுறீரா?//
அதானே!!!
சொன்னது… 7/02/2007 11:12:00 AM
IdlyVadai - இட்லிவடை: 1008
சொன்னது… 7/04/2007 09:11:00 PM
//முட்டம் சின்னப்பதாஸ்//
இல்லியே.. நான் மடல் அனுப்பலியே..
சொன்னது… 7/05/2007 04:47:00 AM
சீனு சீண்டறீங்களே :P
---அதானே!!!----
U3
சொன்னது… 7/05/2007 11:58:00 AM
சிறில்
---இல்லியே.. நான் மடல் அனுப்பலியே..---
இதன் மூலம் உங்கள் வாக்கு பிரமாணம் தகவல் கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பப்படுகிறது ;)
சொன்னது… 7/05/2007 11:59:00 AM
இட்லியைப் பத்திக் கவலை இல்லை.
வடைக்கு மட்டும் நானிருக்கேன். ......தின்றதுக்குத்தான்:-)
சொன்னது… 7/05/2007 07:28:00 PM
துளசி
இட்லி - ஓரணா
வடை அரையணா
:)
சொன்னது… 7/05/2007 07:45:00 PM
அது ஜெத்மலானி தான்.
கல்லீ கல்லீ மேன் ஷோர் ஹை.
ராஜீவ்காந்தி சோர் ஹை...
(நமது ஊரின் கட் கட் கமர்கட்..கரு$$நிதியை ஒழிச்சுக்கட்டுக்கான ஈக்குவேலண்ட் வாக்கியம்)
இட்டிலியும் யாமே.வடையும் யாமேன்னு திருவிளையாடல் பாணி வசனத்தை எப்போ உதிர்க்கப் போறீங்க பாபாஜீ?
சொன்னது… 7/13/2007 02:39:00 PM
ısoʎ ıɥʇɐɐɯ
சொன்னது… 7/23/2007 11:46:00 AM
//3. உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் வேலை என்று ஏதாவது உண்டா? ஜர்னலிஸ்டாக இல்லை என்றால், முழுநேர செய்தியாளராக ஆகும் எண்ணம் உண்டா?
//
எனக்கும் இந்த டவுட் ரொம்ப நாளா இருக்கு!!
//கணவன், குழந்தைக்கெல்லாம் //
இப்படிக் கூட இருக்குமா?
//100% கப்ஸாவா? கனவா? சொப்பன ஆருடங்களா?
//
இந்த மூனும் வேற வேறைங்களா?
//13. விசயகாந்த்துக்கும் இராமதாசுக்கும் ஆறு ஒற்றுமைகள் சொல்லுங்க.
//
'இவ'வை குமுதம் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க
//15. இட்லி-வடைக்கு நிகர் இ-வ.தான் என்றாலும். அமிதாப் இல்லாத அசோகாவுக்கு அஜீத் தேவலாம் என்பது போல் இ-வ அல்லாத பதிவுலகில் யாரை இட்டு நிரப்ப முடியும்:
அ) யோசிப்பவர் //
என்ன கொடுமை பாலா இது?
//19. TOP 10 Movies போல் இட்லி-வடைக்காக ஸ்பெசல் திரைப்படம் போடுக.//
இதை நான் ஆமோதிக்கிறேன்
எல்லாத்துக்கு பக்கத்துலயும் ஒரு ;-) சேர்த்துக்குங்க!!
நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கனும். உங்க ப்ரோஃபைல்ல எப்ப பார்த்தாலும் வயது : 30 அப்படின்னே காட்டுதே? ஏறவே ஏறாதா?;-)
சொன்னது… 8/09/2007 11:17:00 AM
---கப்ஸாவா? கனவா? சொப்பன ஆருடங்களா?
//
இந்த மூனும் வேற வேறைங்களா?---
கனவில் வந்ததை கப்சா விடவேண்டும்னு அவசியமில்லையே! சொப்பனம் is redundant; ஆரூடம் - பலருக்கு ஜீவநாடி. (உங்க சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கு :P
ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நன்றீங்க
சொன்னது… 8/09/2007 11:24:00 AM
//உங்க சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கு :P
//
சனி பெயர்ந்துருச்சா? அப்படி ஒன்னும் நமக்கு தெரியலையே!!;-)
நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவேயில்லையே?!;-))
சொன்னது… 8/09/2007 12:29:00 PM
கருத்துரையிடுக