திங்கள், ஜனவரி 09, 2006

பயனர் அனுபவங்கள்

(ஸ்விக்கி தேடல் பொறிக்கும், ஐபிஎன் டிவிக்கும் பயனராக,வாசகர் கடிதம் எழுதுகிறேன். விருப்பங்களைப் பட்டியல் போட்டு சில சமயம் அனுப்புகிறேன். குறைகளை அடுக்கி பல சமயங்களில் மடலிடுகிறேன்.

அதே போல், தமிழ் வலைப்பதிவு சூழலில் பரவலாக உபயோகிக்கும் தமிழ்மணம் மற்றும் தேன்கூடு, இரண்டிலும் எனகுப் பிடித்த பயன்கள்; ஆசையான மாற்றங்கள்; இன்ன பிற.)


தேன்கூடு

 • 'தேன்கூடு'-இல் மிகவும் பிடித்த அம்சம்: 'பாபுலாரிட்டி போட்டி'யான தரப்படுத்தல் இல்லாதது. 'அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகள்' இதற்கு மாற்றாக, ரேட்டிங் செய்வதற்கு ஈடானதுதான் என்றாலும், இன்னும் தேன்கூடு அவ்வளவாக புகழ் பெறாததால், abuse-க்கு உள்ளாகவில்லை. இதே போல் மற்ற புள்ளி விவரங்களையும் (தேஸி பண்டிட்டில் வருவது போல்) எத்தனை முறை, என்றைக்கு க்ளிக் செய்தார்கள் போன்றவற்றையும் கொடுக்கலாம். நாளடைவில், இந்த விவரங்களும் நட்சத்திர குறியீட்டுக்கு எழும் விமர்சனம் போல், ஒருவரே பல முறை க்ளிக்கி, பெருக்கினால், மவுசு குறையும். ஆனால், குறிப்பிட்டவரின் பதிவுகள், எவராலும் க்ளிக்கவே படவில்லை போன்ற கணக்குகளைப் பார்த்தால், வலைப்பதிவர் மனச்சோர்வடைந்து, தமிழ்மணம் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களை தேன்கூட்டுக்கும் முன்வைக்கலாம்.

 • உதவிப் பக்கங்களில் நேர்த்தி இல்லை. சாதாரண மக்களுக்கு சென்றடையுமாறு முன்பொருமுறை காசி, 'படம் போட்டு பாகம் பிரித்து' வலைப்பதிவின் கூறுகளை அலசியிருப்பார். அது போல் மாற்றினால், எல்லாருக்கும் எளிதில் புரியும்.

 • 'DISPASSIONATED DJ' அல்லது பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்' போன்ற வலைப்பதிவர்களின் தலைப்புகள், சுட்டிகளாக மாறலாம். இதன் மூலம், ஒரே பதிவர் நாலைந்து புது இடுகைகளைக் கொடுக்கும்போது, டக்கென்று அவரின் இல்லத்துக்கு சென்று அனைத்தையும் ஒரே க்ளிக்கில் படிக்கும் வாய்ப்பு அமையும்.

 • இடத்தை அடைத்துக் கொண்டு இடைஞ்சலாக இருக்கிறது என்று தனிமனிதன் நினைக்கும் பதிவுகளை '-' போட்டு நீக்கிக் கொள்வது வசதியாக இருக்கிறது.

 • அதே போல், சனி/ஞாயிறுகளில் மேலோட்டமாக தலைப்பைப் பார்த்து படிக்க வேண்டும் என்று நினைப்பதை, 'புத்தகக்குறி'யாக சேமித்து வைத்துக் கொண்டு, திங்கள் அன்று அலுவலுக்கு வந்தபிறகு மேய்வதும் வரப்பிரசாதம். அதன் மேல் சென்று del.icio.us-க்கு கூட புக்மார்க் போடும் வசதி பிரமாதம்.

 • தமிழ்மணத்தின் opml போலவே, ஆனால், இன்னும் மற்ற சில பதிவுகளையும் உள்ளடக்கிய ஓபிஎம்எல் வசதி கிடைக்கிறது.

 • புகைப்படங்கள் சரியாகத் தெரியாமல், அனேக நிழற்படங்களுக்கு குசும்பனின் 'பெரியவன்' default-ஆக தெரிகிறது.

 • ஒரே பக்கத்தில் ஐம்பது இடுகைகளை ஒரே ஷாட்டில் பார்த்து அறிய முடிகிறது.


  தமிழ்மணம் / நந்தவனம்

 • பழக்கப்பட்ட இடம்; எது எப்படி எங்கே இருக்கும் என்று கண்களுக்கு எளிதாக விளங்கும். நிறைய whitespace.

 • 'இந்த வார நட்சத்திரம்' என்று வலைப்பதிவர்களுக்கு அரங்கு, மறுமொழிகள் நிலவரம் ஆகிய இரண்டுமே தமிழ்மணத்தை தவறவிடக்கூடாத ஒன்றாக ஆக்குகிறது.

 • 'வாசகர் பரிந்துரை'-யில் எந்த தொழில் நுட்ப மாற்றமும் இல்லாமல், அவ்வண்ணமே புதிய 2.0-விலும் தொடர்வது, அதன் நம்பகத்தன்மையை தொடர்ந்து குறைத்து மதிப்பிட வைக்கிறது.

 • 'Pathivu Toolbar ©2005' மற்றும் தமிழ்மணத்தின் சுட்டி போன்றவற்றை பயனரின் விழைவாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 • தமிழ்மணம் தளமோ, server-ஓ தொய்ந்திருந்தால், வலைப்பதிவரின் தளமும் உலாவியில் தோன்றுவதற்கு நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக ஜாவாஸ்க்ரிப்ட், லோக்கலாக செயல்பட்டால், தமிழ்மணம் தளத்துடன் இருக்கும் இறுக்கம் சற்று குறையும்.

 • பதிவை இட்டவுடன் வகை செய்யாவிட்டால், எவர் வேண்டுமானாலும், வலைப்பதிவரின் இடுகையை தங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்கலாம்.

 • வலைப்பதிவை ஒரு category-இல்தான் சேர்க்க முடிகிறது. சினிமா புத்தகம் குறித்து எழுதினால், சினிமா + புத்தகம் என்று வகைப்படுத்த முடியாது. வலைப்பதிவின் அடுத்த தலைமுறை நுட்பமான 'tags' ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கலாம்.

 • வகைகளின் தலைப்பை சுட்டிகளாக கொடுக்கலாம்.

 • தற்போது பயன்ருக்கு கொடுத்திருக்கும் செக் பாக்ஸ் intuitive-ஆக இல்லை; அல்லது எனக்கு ஒழுங்காக வேலை செய்யவில்லை.

  இன்னொம் கொஞ்சம் திரிசமன் செய்துவிட்டு, அனுபவம் இருந்தால் பகிர்வேன்


  | |

 • 6 கருத்துகள்:

  //''Pathivu Toolbar ©2005' மற்றும் தமிழ்மணத்தின் சுட்டி போன்றவற்றை பயனரின் விழைவாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//
  இதில் எதுவும் கட்டாயமில்லையே ! ஏன் இப்படிக் குழப்பவேண்டும்? கருவிப்பட்டையே கட்டாயமில்லை. விருப்பத்தேர்வே.

  //தமிழ்மணம் தளமோ, server-ஓ தொய்ந்திருந்தால், வலைப்பதிவரின் தளமும் உலாவியில் தோன்றுவதற்கு நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக ஜாவாஸ்க்ரிப்ட், லோக்கலாக செயல்பட்டால், தமிழ்மணம் தளத்துடன் இருக்கும் இறுக்கம் சற்று குறையும்.
  //
  முயற்சிக்கலாம்.


  //பதிவை இட்டவுடன் வகை செய்யாவிட்டால், எவர் வேண்டுமானாலும், வலைப்பதிவரின் இடுகையை தங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்கலாம்.//

  இது கூட செய்யமுடியாவிட்டால் அப்படித்தா ஆகும்:-))
  என்னமோ நீங்க எப்ப கோட்டைவிடுவீங்க, உங்களைத்தூக்கி உருப்படாத (அப்படி ஒண்ணு இருக்கா?) தலைப்பில் போடலாம்னு யாரோ தேவுடு காக்கிறமாதிரி... அடப் போங்க சார் அவனவனுக்கு ஆயிரம் வேலை... இது வரட்டு விமர்சனம்

  //வலைப்பதிவை ஒரு category-இல்தான் சேர்க்க முடிகிறது. சினிமா புத்தகம் குறித்து எழுதினால், சினிமா + புத்தகம் என்று வகைப்படுத்த முடியாது. வலைப்பதிவின் அடுத்த தலைமுறை நுட்பமான 'tags' ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கலாம்.//
  This is by choice. We Believe this way is overall good.

  //வகைகளின் தலைப்பை சுட்டிகளாக கொடுக்கலாம்.// கொடுத்திருக்கு தெரியுமா? பொத்தானை சொடுக்கவும்.

  //தற்போது பயன்ருக்கு கொடுத்திருக்கும் செக் பாக்ஸ் intuitive-ஆக இல்லை; அல்லது எனக்கு ஒழுங்காக வேலை செய்யவில்லை.// நல்லா refresh பண்ணிப் பாருங்க, ஒழுங்கா செய்யும்.

  விரிவான பதிலுக்கு நன்றி.


  அடப் போங்க சார் அவனவனுக்கு ஆயிரம் வேலை

  ;-)

  ---கொடுத்திருக்கு தெரியுமா? பொத்தானை சொடுக்கவும்.---
  What I meant was in the second tab : thamizmaNam : இடுகைகள் like விவாதமேடை, சினிமா/பொழுதுபோக்கு are not currently hot spots/clickeable.

  ---நல்லா refresh பண்ணிப் பாருங்க, ஒழுங்கா செய்யும்---
  I have updated the code. And unchecked the check box under 'stars'. Still, it does show up in my posts. Not sure, where I am misstepping. Probably will install in a different blogspot blog and will try it out.

  Thanks again for the reply.

  --வரட்டு விமர்சனம்--
  The above are just my experiences. They are not meant as a critique work :)

  Hello Bala

  Please give a linnk to IPN please.

  Murali

  http://ibnlive.com/

  நல்லதொரு அலசல்!

  Thx Njaanapidam

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு