இணையத்தின் அடுத்த தலைமுறை நிரலிகளாக செயல்படப்போகும் சில நிரலிகள்:
எஸ்கோபோ: மை யாஹூ, எம்.எஸ்.என். போன்ற போர்ட்டல்களுக்கு சுளுவான மாற்று.
ப்ரோடோபேஜ்: செய்தியோடைகள், நினைவுச்சீட்டுகள், புத்தகக் குறிகள் என்று பல வித உபயோகங்களைக் கொண்டது.
கூவ்வி: ஃப்ளாஷ்ஷில் ஆக்கப்பட்ட மற்றுமொரு கண்ணுக்கு குளிர்ச்சியான பல்துறை ஒடுக்கி.
விண்டோஸ் லைவ்: எல்லாருக்கும் இன்னும் திறக்கப்படவில்லை. பயனராக அழைக்கப்பட்டவர்களுக்கு இலவச வலையக முகவரி உட்பட அனைத்து வசதிகளும் மைக்ரோசாஃப்டினால் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
நெட் வைப்ஸ்: உலாவியின் முதற்பக்கமாக பயன்படும்; எளிமையாக வடிவமைக்கப்பட்டது; ஜிமெயில் கூட இங்கிருந்தே நோட்டம் விடலாம்.
பேக்பேஸ்: மேற்கண்டது போன்ற வலைப்பக்கங்களை வடிவமைக்க உதவும் நிரலி.
நுட்பம் | வெப்2.0 | தமிழ்ப்பதிவுகள்
எஸ்கோபோ, நெட்வைப்ஸ் போன்றவற்றால் என்ன பயன்? மை யாஹூ, கூகிள் பெர்சொனலைஸ்ட் ஹோம் போன்றவையே இந்த வேலைகளை செய்து விடுகின்றனவே.. விண்டோஸ் லைவ் ரொம்ப லேட், ஆனாலும் ஹாட்மெய்ல் பயனர்களுக்கு வசதியாக இருக்கும்..
IMHO, web 2.0 is another stupid bubble
சொன்னது… 1/09/2006 07:52:00 AM
அஜாக்ஸை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது முதல் சாபல்யம் ;-)
இரண்டாவதாக....
ப்ரோடோபேஜும் நெட்வைப்ஸும் ஒரு சில செய்தொயோடைகளை தொகுத்து தருமாறு வைத்திருக்கிறேன். ஒன்றில் இந்தியா தொடர்பான பதிவுகளையும் இன்னொன்றில் பதிவுநுட்பம் சார்ந்த ஆர் எஸ் எஸ்களையும் க்ளான்ஸ் விட உதவுகிறது.
del.ico.us, Skype போன்ற பலவற்றை உள்ளடக்கிய கூவ்வி பார்த்தீர்களா!? groovy indeed...
Windows Live is promising for a common man; they had vowed to give away free domain name registration with hosting :O பார்ப்போம்...
---web 2.0 is another stupid bubble ---
இது மில்லியன் டாலர் கேள்வி ;-)
சொன்னது… 1/09/2006 08:35:00 AM
அஜேக்ஸோட அருமை பெருமை தெரியணும்னா ஜீ-மெயில உன்னிப்பா கவனிச்சாலே போதும். பக்கத்துல இருக்கர குட்டி குட்டி பாகங்கல்லாம் அதுவாவே சர்வரோட பேசி, வேலய முடிச்சுடுதுங்க. உ-ம், ஒரு attachment குடுத்துட்டு நம்ம அஞ்சல் தட்டிக்கிட்டு இருக்கும்போதே, அது சர்வருக்கு போயுடுது. அஞ்சல் தட்டும்போது, நிமிசத்துக்கு ஒரு வாட்டி தானாவே சர்வர்ல சேமிச்சுக்குது. இடையில புது மெயில் வந்தா, சைட் பட்டையில தானாவே Inboxல புது மெயில் வந்திருக்கறதா காட்டுது. இவ்வளவு நாளா, ஒரு வலைப்பக்கத்தில இருந்து சர்வருக்கு ஏதாவது வேண்டுகோள் அனுப்பினா, மொத்தப் பக்கமும் அழிஞ்சிட்டு திரும்ப load ஆயிட்டு இருந்தது (நம்ம நேரத்தையும் விரயமாக்கிக்கிட்டு). இப்போல்லாம் நாம உணராமலே, சர்வரோட பரிமாற்றம் நடத்துது வலைப்பக்கம் (like gmail). காத்திருப்பில்லாத வேகமான பணியாற்றல் சாத்தியமாகுது இதனால. I think AJAX is paving the way for real computing over slow networks like Internet. The positive impact it can have with commerical usage has to be watched keenly. It's too early to pass a verdict that what we are seeing is a stupid bubble.
சுட்டிகளுக்கு நன்றி, பாலா.
சொன்னது… 1/09/2006 09:55:00 AM
பாலா, இத்தனை தளக் கணக்குகளை எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ.. விண்டோW லைவில் இலவச ஹோஸ்டிங் வேறு கொடுக்கிறார்களா.. M$ குடுமி எதற்காக ஆடுகிறதோ..
VoW,
அஜாக்ஸ் அருமையான நுட்பம்தான். நான் குமிழ் என்று குறிப்பிட்டது அஜாக்ஸை அல்ல, அஜாக்ஸை பயன்படுத்துகிறோம் என்று புற்றீசல் போல கிளம்பும் தளங்களை. பாருங்கள், ப்ரோட்டோபேஜ், எஸ்கோபோ, நெட்வைப்ஸ் என்று அத்தனையும் ஒரே மாதிரியான சேவைகள், எப்படி நீடித்து என்னத்தை சமாளிப்பார்கள். இந்த தளங்கள் ஏற்படுத்தும் 'ஹைப்' ரொம்பவே அதிகம்.
சொன்னது… 1/09/2006 12:09:00 PM
----புற்றீசல் போல கிளம்பும் தளங்களை---
இவர்களில் எவராவது அடுத்த கூகிள் ஆகி விடமாட்டோமா என்னும் எண்ணம்தான்?
சொன்னது… 1/09/2006 01:35:00 PM
உங்கள் கணினியின் மேசையில் புழங்கும் ஒரு அப்ளிகேஷனுக்கும், உலாவியில் பார்க்கும் பக்கங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வெப் 2.0 உடைத்தெரிகிறது. இன்னும் வன்பொருள் அனுகலையிம் [accessing hardware] சீராக சாத்தியபடுத்திவிட்டால் வலையே போதும், இயங்குதளம் மற்றும் விலை உயர்ந்த மென்பொருட்களெல்லாம் தனியே தேவையில்லை. அப்புறம் குழாயை திறப்பதுபோல் வேண்டிய மென்பொருட்கள் உடனடி சேவையில் கிடைக்கும்.
இதுதானோ வெப் 2.0?
சொன்னது… 1/09/2006 07:36:00 PM
---கணினியின் மேசையில் புழங்கும் ஒரு அப்ளிகேஷனுக்கும், உலாவியில் பார்க்கும் பக்கங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வெப் 2.0 உடைத்தெரிகிறது---
அப்படித்தான் சொல்கிறார்கள். புதிதாக ஏதாவது நாமகரணம் இட்டால்தான் வால் ஸ்ட்ரீட்டும் நிறுவனங்களை மதிக்கும் என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம்.
வேறு சில வெப் 2.0 குணங்கள்:
1. சமூகத்தை ஒன்றிணைக்கும் வலையகங்கள்; del.icio.us, விக்கிப்பீடியா போன்ற 'இணைந்த கைகள்' கூடி இழுக்கும் முயற்சிகள்.
2. முன்பு எத்தனை பேர் இந்த வலைமனையைப் பார்த்தார்கள் என்பது பங்குச்சந்தையின் கேள்வி; இப்பொழுது ஒருவனை உள்ளே இழுக்க, எவ்வளவு காசு கொடுக்கிறார்கள் (கூகிளுக்கு?!) என்பது மேட்டர்.
3. அந்தக் காலத்தில் (90களின் இறுதிதான்) வகைப்படுத்திய யாஹூ directory, சுட்டிகளின் தொகுப்பு முக்கியம்; இந்தக்காலத்தில் 'tag' - ஒவ்வொன்றுக்கும் மக்களே பங்களிப்பவர்.
கொஞ்சம் புதுமை; நிறைய பயனர்.
சொன்னது… 1/09/2006 10:25:00 PM
கருத்துரையிடுக