செவ்வாய், மார்ச் 13, 2007

How will Balaji select 'Top Group Blogs'

Thursday, March 08, 2007

எந்த குழுப்பதிவு டாப் ?

நம்ம வலைப்பதிவில் எந்த கூட்டுப்பதிவு டாப் ?
1.
2.
3.
4.
5.
என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Posted by பாலாஜி at 3/08/2007 08:56:00 AM

Labels: வாக்கெடுப்புMonday, March 12, 2007

டாப் 5 கூட்டுப்பதிவாளர்கள் - முடிவுகள் !
பொழுதுபோகாதோர் தினம் ஸ்பெஷலாக குழாம் பதிவுகளில் டாப் 5 யார் என்று ஒரு வாக்குபதிவு வைத்திருந்தேன்.

முடிவு ... கிழே..1. விக்கிபசங்க 20% வாக்குகள் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறார். ஓட்டு போட்ட பெரும்பாலோர் விக்கிபசங்களுக்கு ஓட்டு போட்டிருந்தார்கள். மிகவும் பாப்புலர் குழுப்பதிவு.

2. அடுத்த இடத்தில் இருப்பவர் இலக்கணம் கற்றுக் கொடுக்கும் குழு. 14% வாக்குகள் வாங்கியுள்ளார்கள்.

3. மூன்றாம் இடத்தில் மூன்று குழு பதிவாளர்கள் வ.வா.ச., சென்னப்பட்டணம், திராவிட தமிழர்கள் 11% வாக்குகள் வாங்கியுள்ளார்கள்.

4. 9% ஓட்டுகள் வாங்கி நான்காம் இடத்தில் சற்றுமுன் இருக்கிறது.

ஐந்தாம் இடத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் சக்தி, வலைப்பதிவர் உதவிப்பக்கம், சொல் ஒரு சொல், கண்ணன் பாட்டு. 6 % ஓட்டுகள் வாங்கியுள்ளார்கள்.

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பாலாஜியின் வாழ்த்துக்கள்.

Posted by பாலாஜி at 3/12/2007 11:13:00 AM

இந்தப் பதிவுக்கு உதவியதற்கு நன்றி: பொன்ஸ் பக்கங்கள்: கூட்டணி ஆண்டு 2006

17 கருத்துகள்:

பாபா,

வார்ப்புரு சூப்பர். அந்த வலது பட்டி ஏன் கீழே போயிடிச்சு?? நடுப்பக்கத்தின் அகலத்தை குறைத்தால் சரியாயிடும்னு நினைக்கின்றேன்.

முக்கியமான மேட்டர மறந்திட்டேனே..
எல்லா கூட்டுப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. :))

எங்களுக்கு சொல்லாம வாக்கு பதிவு வெச்சிட்டீங்களே!!!

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்.

சரியான விளையாட்டுத்தான் போங்க. என்னிய வெச்சு காமெடி எதுவும் பண்ணலையேன்னு கேட்கக் கூட முடியாதபடி பண்ணிட்டீங்களே.

ஜி,
---வார்ப்புரு சூப்பர்.---

எல்லாம் சிந்தாநதி உபயம் :)


---வலது பட்டி ஏன் கீழே போயிடிச்சு?---

ஓ... எனக்கு அந்த மாதிரி ஆகவில்லையே! பார்க்கிறேன்...

ஜி & வி.பி.,

---எங்களுக்கு சொல்லாம வாக்கு பதிவு--

தலைஸ்... லேபிள் பார்க்கலியா. இது தேர்தல் அதிகாரியாக என்னைப் போட்டால் (இட்லி-வடைக்கு பதில்) என்ன நடக்கும் என்று கற்பனை ;)

இ.கொ.

உங்க காமெண்ட்தான் இன்ஸ்பிரேசன் :D

IdlyVadai - இட்லிவடை: டாப் 5 பெண் பதிவாளர்கள

துளசி...
மெய்யாலுமே கணிப்பு நடத்தினால் யார் அதிக செல்வாக்கு பெற்றவர்கள் என்று தெரியும். அதுவரை, இதை வைத்துக் கொள்ளலாம் :)

நானும் மொதல்ல குழம்பிட்டேன்.. நமக்குத் தெரியாம இது எப்ப நடந்துச்சுன்னு :)

அப்புறம்தான் Satire, Idlyvadai பாத்தேன்.

:)

பாபா, அந்த இருபது பதிமூணு பார்த்தவுடன் புரிஞ்சு போச்சு.. அதிலும் நம்ம பதிவுக்கு நன்றி வேற சொல்லிருந்தீங்களா.. சூப்பர்.. பதிவு நல்லா தெளிவா புரிஞ்சிடுச்சு, ஆனா உள்குத்து புரியலையே! :)

---பதிவு நல்லா தெளிவா புரிஞ்சிடுச்சு, ஆனா உள்குத்து புரியலையே---

ஆஹா... இதிலேயே பல அர்த்தம் இருக்கிறதோ :))

:)

//பொழுதுபோகாதோர் தினம் ஸ்பெஷலாக //

:-)))

:)))) ...

ji ungala anju vilayaatukku kooptrukane pls elduhunga enakaga

உங்களோட விநோதமான செயல்களை,weird சொல்ல சொல்லி இங்க கூப்பிட்டு இருக்கேன், கொஞ்சம் சொல்ல முடியுமா?

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு