விருப்பப் பட்டியல் - 'தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்'
1. 24 மணி நேரத்தோடு மட்டுமல்லாமல், ஒரு ரேடியோ பொத்தான் கொடுத்து கடந்த நாள், இரண்டு நாட்கள், என்று வேறு சில நேரக் கணக்குகளும் கொடுத்தால், வாரயிறுதி, விடுமுறை முடிந்து வருபவர்களுக்கு வசதியாக இருக்கலாம்.
2. வலைப்பதிவின் தலைப்பை வேறு கலரிலோ, தடி எழுத்தின் மூலமோ வேறுபடுத்தி காட்டலாம். இவ்வாறு செய்யப்பட்டால், 'லிருந்து' தவிர்க்கலாம்.
3. வலைப்பதிவாளியின் பெயரை, சிறிய எழுத்துருவில் கொடுக்கலாம். (தற்போது சுட்டியின் மேல் அம்புக்குறியைக் கொண்டுவந்தால், வரும் பெட்டியிலேயே கூட கொடுக்கலாம்?)
4. வாசகருக்கான 'குறிப்புகள்' அவசியம்தான் என்றாலும், நான் (மற்றும் பலர்) அடிக்கடி வலையரங்கம் வருவது 'புதிதாய் எழுதப்பட்டவை' எது என்று அறிந்து கொள்ளத்தான். அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு (description இல்லாமல்) பட்டியலைத் தரலாம்.
5. Table format-இல் வாசிக்கும் வசதியை (மீண்டும் ரேடியோ பொத்தான்!) வாசகருக்கு வழங்கலாம். Column-களாக , ஆசிரியர், தலைப்பு, ஆரம்பச் சுருக்கம், பதிப்பித்த நேரம்/நாள் ஆகியவற்றை கொடுக்கலாம்.
6. 'Older posts >>' போன்ற தலைப்பில் முந்தைய இடுகைகளை பார்க்கும் வசதியைக் கொடுக்கலாம்.
7. 'All excerpts (c) original authors' என்று எங்காவது பின்குறிப்பாக சேர்த்து விடுங்கள். பிற்காலத்தில் பிரச்சினை ஆகிப் போகலாம் :-)
8. எவராவது தங்கள வலைப்பதிவுகள், இந்த 'தமிழ் வலைப்பதிவுகள் அரங்க'த்தில் இடம்பெறக் கூடாது என்று விரும்பினால், அதற்கான 'வ.கே.கே' உதவியையும் கொடுத்துவிடலாம்?
9. பத்து நிமிடம் அவகாசம் கிடைக்கும்போது, கண்களை வேகமாக ஓட்டிச்சென்று படிப்பதற்கு ஏதுவாக, அனைத்து வலைப்பதிவாளிகளிடம் இருந்தும் ஒரு 32 x 32 அடையாளப் படம் கேட்கலாம். இந்த சின்னத்தை (icon) அவர்களின் இடுகைக்கு அருகில் கொடுக்கலாம்.
10. அட்டவணையை தலைப்பு (topic) வாரியாக பார்க்கும் வசதி கொடுக்கலாம்.
இந்தியா என் வீடு - அரசியல், பொருளாதாரம், சமூகம், மதம் பற்றி ஒரு வலைப்பதிவு
சொன்னது… 3/14/2014 06:13:00 AM
இந்தியா என் வீடு - அரசியல், பொருளாதாரம், சமூகம், மதம் பற்றி ஒரு வலைப்பதிவு
சொன்னது… 3/14/2014 06:14:00 AM
கருத்துரையிடுக