திங்கள், ஆகஸ்ட் 23, 2004

பத்துப் பாட்டு

அந்தக்கால பாடல்களின் சரணங்களில் இருந்து ஒரு/சில வரிகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். படத்தின் பெயரின், பாடலையும் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். அனைத்துப் பாடல்களும் சிவாஜி நடித்ததில் டி.எம்.எஸ் & சுசீலா பாடிய டூயட்கள்.

1. சரணம் 1: பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்
சரணம் 2: கவிஞர் சொன்னது கொஞ்சம்... இனிமேல் காணப்போவது மஞ்சம்


2. கரும்போ
கனியோ
கவிதை சுவையோ
விருந்து கொடுத்தான்
விழுந்தாள் மடியில்

3. சரணம் 1: மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா!
சரணம் 2: பால் வண்ணம், பழத்தட்டு, பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா?

4. அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

5. டி.எம்.எஸ்.: ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மான் இனமோ
சுசீலா: நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய் விடுமோ

6. என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா...
...காற்றான அவள் வாழ்வு திரும்பாதைய்யா

7. காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன
கண்பட்டு கலந்துகொண்ட வேகம் என்ன

8. முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச

9. தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா?
மானாதி மானங்களைக் காக்குமா?

10. அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது...
...நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது

9 கருத்துகள்:

ம்... நல்ல சாய்ஸ். எனக்கு உடனே நியாபகம் வந்தது இது தான்.

1. இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன
2. பூமாலையில் ஒரு மல்லிகை
3. ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல்
4. நான் காதெலென்ன்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
9. தாழையாம் பூ முடிச்சு
10. நல்லதோரு குடும்பம்

படம் பேர் ஒன்றும் நினைவில் இல்லை. இது தவிர 5 & 6 சட்டுன்னு வார்த்தை வர மாட்டேங்குது. இன்னும் கொஞ்சம் நேரம் யோசிச்சா நினைவுக்கு வருமுன்னு நினைக்கிறேன்.

7 & 8 சுத்தமா நினைவில் இல்லை.

மொதல்ல சொன்னது தவிர இதெல்லாம் Wild guess.

5. அந்தமானை பாருங்கள்
6. ஆனந்தம் விளையாடும் வீடு.

வேற ஏதாவது நினைவுக்கு வந்தா சொல்றேன். வர்ட்டா..

நவன் பகவதி.

1. இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமணமாலை - எங்கள் தங்க ராஜா
2. பூமாலையில் பூமல்லிகை இனி நான் தான் - ஊட்டிவரை உறவு
3. ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்க்கோலம் போவோமா உள்ளம் அங்கே போகுதம்மா -
4. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே; - பார் மகளே பார்
5. ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டான் - சிவந்தமண்
6. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.
இது அவள் பேரைத் தினம் பாடும் குயிலல்லவா
இந்தப்படம் பாலும் பழமல்லவா? ;-)
7. வாயிலே வருகுது சரியாக விழுகிறதில்லை; சில மணிநேரங்களீலே முடிந்தால்..
8. தூங்காத கண்ணென்றும் உண்டு
துடிக்கின்ற இமையென்றும் உண்டு
தாங்காத மனமென்றும் உண்டு
தந்தாயே நீ என்னைக் கண்டு - குங்குமம்
9. தாழையாம் பூமுடிச்சு பக்குவமாய் நடைநடந்து
- பாகப்பிரிவினை
10. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் - தங்கப்பதக்கம்

பையன் பொறந்த சந்தோஷத்துல தப்புத் தப்பா பாடாதீர் :-)

2. பூமாலையில் 'ஓர்'மல்லிகை 'இங்கு' நான் தான் தேன் என்றது
6. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்'கு'றாய் (டிஎம்ஸ் ஸ்பெஷல் :-) )
'நான்' அவள் பேரைத் தினம் பாடும் குயிலல்லவா
8. தூங்காத கண்ணென்று 'ஒன்று'
துடிக்கின்ற 'சுகமென்று' ஒன்று
9. தாழையாம் பூமுடிச்சு 'தடம் பார்த்து' நடைநடந்து

Hi Bala,

Some what similar to the lines above, a few days ago was hearing the song "Alle Alle" from Boys. There is a similar line in that too - "Vennilavai nee varudiyathum, vinmeenaai naan sitharivitten" :-)

தெரிஞ்சதையெல்லாம் மற்றவையளே எழுதீட்டினம்.

சே! சும்மாவா சொன்னார்கள் பரி உதைக்குமென்று! ;-)
எல்லாம் நீரோடும் வைகையிலே நின்றாடும் மீன் பின்னாலே ஓடிதூக்கமென் கண்களைத் தழுவியதால் வந்த வினை ;-)

/ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்க்கோலம் போவோமா உள்ளம் அங்கே போகுதம்மா/

Film: Ponnoonjal

விட்டுப்போன 7: வெள்ளிக் கிண்ணந்தான் தங்கக் கைகளில் வைரச் சிலைதான் - தங்கச் சுரங்கம்

நன்றி:
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/8991
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/9026

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு