வெள்ளி, ஆகஸ்ட் 20, 2004

இணையப்பொறுக்கன்

1. இலவசமாக இந்தியாவைக் கூப்பிட: அமெரிக்காவில் இருந்து ரிலையன்ஸ் மூலமாக ஆக. 31 வரை இந்தியாவைக் கொஞ்ச நேரம் அழைத்துப் பேசலாம்; முற்றிலும் இலவசம் என்று சொல்கிறார்கள். (சுட்டிக் காட்டியவர்: கோபி)

2. A முதல் Z வரை: இருபத்தியாறே வழிகளில் விண்வெளியை அறிமுகப்படுத்தும் பிபிசியின் இணையத்தளம். (அ முதல் ஆய்த எழுத்து வரை என்று தமிழ்ப் பதிவர்கள் யாராவது எழுதலாம்.)

3. விளையாட்டு நேரம்: ஒலிம்பிக்ஸில்தான் கலந்துகொள்ள முடியவில்லை. கணினியிலாவது விளையாடுவோமே. சிறுவர்களுக்கும் ஏற்றவை.

4. இணைய அரும்பொருளகம்: மிட்டாய் பொட்டலங்களுக்கு நினைவாலயம் எழுப்பியிருக்கிறார். காலையில் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, அவர்களை சமாதானப்படுத்த ஃகாடிவா-வோ, லிண்ட்ஸோ வாங்கிச் சென்று கொடுத்து, பழம்விட்டபிறகு, ஏப்பமும் விட்டு, அந்த சாக்லேட் மடிக்கப்பட்ட லாவகத்தை வியந்து பாராட்டி, சேமித்து குப்பை சேர்க்கவும் முடியாமல், தூரவும் போடாமல், நினைவுச் சின்னமாய் வைத்திருப்பேன். இவர் 'இணையக் கோயிலே' எழுப்பி விட்டார். பேஜர், கைக்கணி, காசோலை என்று வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்களிலும் மிட்டாய் மூடிகள்.

5. ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்: டைம் பத்திரிகையினால் 'நூற்றாண்டு நாயகன்' என சொல்லப்பட்டவர். அவரின் எழுத்துக்கள், அறிவியல் ஆக்கங்கள், புகைப்படங்கள் என one-stop இடமாக இருந்தாலும், சில சுட்டிகள் வேலை செய்யவில்லை.

6. ஜிமெயில்: அவுட்லுக்க்கில், யாஹுவில் மடல் வந்தால், ஓரத்தில் ஒரு நினைவூட்டி வருவது போல் கூகிள் மெயிலையும் சொல்ல வைக்கும் நிரலி ரெடி.

7. சிட்டி-அட்டை விளம்பரங்கள்: நல்ல விளம்பரங்களைப் பார்ப்பது நிகழ்ச்சிகளை விட சுவாரசியமானது. அமெரிக்காவில் அடையாளத் திருட்டு மிகவும் புகழ்பெற்றது. 'போத்தீஸ்.காம்' சென்று புடைவை செலக்ட் செய்து மனைவிக்கு வாங்கி அனுப்பியவுடன் (முன்னர் சொன்னேனே, அதே போல், இது கொஞ்சம் 70 எம்எம் சண்டை), தொலைபேசி சிணுங்கியது. 'நீ இருப்பது அமெரிக்காவில்; இந்தியாவில் உன் கடன்-அட்டையை எவளோ உபயோகித்திருக்கிறாள்' என்று அறிவுறுத்த, நான் அவர்களுக்கு குடும்ப நிலையை விளக்கினேன். அடையாள (மற்றும்) அட்டை திருட்டினால், மென்மையான ஆண் எப்படி முரட்டு ஆண் அகிப் போனாள் என்பதை விளக்கும் விளம்பரங்கள்.

8. சிகப்பு ரோஜாக்கள் : அந்தப் படத்துக்கும், இந்தப் புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அறிந்து கொள்ள சென்று பாருங்கள். (கவலை வேண்டாம்: அனில் கபூர் அண்ணி அல்ல ;-)

9. நெத்தியடி: நோவா ஸ்காடியாவை எட்டிப் பார்த்திருந்தாலும் இந்த வேனை Macromedia Flash MX சோதனைத் தளத்தின் தயவால்தான் கண்டுகொண்டேன். 'உங்களுக்குக் குழாய் ரிப்பேரா? சரி செய்ய எங்களை அழையுங்கள்' என்பதை நன்றாக சொல்லியிருக்கிறார்.

10. Aerogel : வானத்து தூசிகளையும், எரி நட்சத்திரங்களின் எச்சங்களையும் பிடித்து வைக்க உதவும் ஏரோஜெல் சிறுகுறிப்பு கொடுக்கிறது நாஸா. மணலை விடை மெல்லிய உருவைக் கொண்டு, தோட்டாவை விட ஆறு மடங்கு வேகத்தில் (velocity?) வரும் பொருட்களை, சேதமில்லாமல், பலவீனப்படுத்தி, அடக்கி வைப்பதை விளக்குவது எனக்குப் புரியாவிட்டாலும், புகைப்படங்கள் -- வாயைப் பிளந்து பிரமிக்க வைக்கிறது.

2 கருத்துகள்:

Dear Balaji

Reliance allows free call 1866-573-5426 to India for 15 Mins. This morning I spoke. It wont allow you to speak from the same number again. So you can use next cube's number and speak to as many people as you want. This free facility is available upto Aug 31. But most of the time, all lines are busy.

S.T.R

பரவாயில்லையே... முற்றிலும் இலவசமாகத் தந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது நல்ல விஷயம்தான்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு