ஊடகப்போக்கன்
1. Handwriting Theory for Questioned Documents: வழக்குகளில் ஒருவரின் கையெழுத்தை சரிபார்க்கும் விதங்களும் முறைகளும்.
2. அவாமி லீக் கூட்டதில் மூன்றாவது தாக்குதல்: பங்களாதேஷில் ஏன் குண்டு வெடிக்கிறது என்பது குறித்த பிபிசியின் அலசல்.
3. அதிஆபத்தான பத்து வேலைகள்: மரம் வெட்டுவது மரவெட்டிகளுக்கும், இயற்கைக்கும் மிகவும் ஆபத்தானது. (யாஹுவைக் கேளுங்கள்)
4. பங்குச்சந்தையில் இறங்கு/ஏறு முகங்கள்: கரடி, காளை என்று எப்படி பெயர் வந்தது என்று சொல்கிறார்கள். (யாஹுவைக் கேளுங்கள்)
5. அடுத்த அமெரிக்க நாயகரில் யார் மிகவும் பணக்காரர்: ஜான் கெர்ரி மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் சொத்துக் கணக்குகள். (யாஹுவைக் கேளுங்கள்)
6. ஒலிம்பிக்ஸும் இந்தியாவும்: 'பூனை நாயும் கிளிகள் கூட மனிதர் மடியிலே, பெற்ற பிள்ளை போல...' என்னும் பாடல் போல எத்தியோப்பியா, ஜமாய்கா வெல்லும் ஒலிம்பிக்ஸில், ஏன் இந்தியா வெல்வதில்லை என்று அலசுகிறார். கிரிக்கெட் ஒரு காரணம். (கடைசி பென்ச்)
7. நம்பத்தகுந்த வட்டாரங்கள் யார்: ஹேஷ்யத்தின் அடிப்படையில் அல்லாமல், ஆதாரபூர்வமாக லஞ்சம் வாங்கியது முதல், அடுத்த நியமனம் வரை ஊடகங்களுக்கு லீக் செய்வோரை, உலகெல்லாம் அறியுமாறு வெளியில் சொல்ல, நீதிமன்றங்கள் இடித்துரைக்கிறது. ஆதாரம் தந்தவரை காட்டிக் கொடுக்காவிட்டால் ஜெயில். (பாஸ்டன் ஃபீனிக்ஸ்)
8. கெர்ரி? புஷ்?: என்ன நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று பிஸினஸ்வீக் அலசுகிறது.
9. NECESSARY DREAMS - Ambition in Women's Changing Lives, By Anna Fel: பெண்கள் தங்களை தாங்களே அடக்கி வாசித்துத் தாழ்த்திக் கொள்கிறார்கள் என்று எழுதப்பட்ட புத்தகத்தின் விமர்சனம். (பிஸினஸ் வீக்)
10. தாராளகுணம் கொண்ட ஊடகங்கள்: நடுநிலை என்பது அமெரிக்க தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், ரேடியோவிலும் இல்லாமல் போனதை ஆராய்ச்சியின் அடிப்படையில் சொல்லும் கட்டுரை. (பிஸினஸ் வீக்)
11. சர்ச் மறுப்பு: ஓவ்வாமை காரணமாக கோதுமை பிஸ்கட் சாப்பிடாததால் ஞானஸ்நானம் மறுக்கப்பட்டிருக்கிறது. (சி.என்.என்)
12. பளாக் டீ சொஸைட்டி: சுதந்திர கட்சி மாநாட்டின் விமர்சகர்களை -- அடக்கும் சமூகத்தை, கண்டிப்பதற்காக உருவாகி, மாநாட்டை எதிர்த்தபிறகு, முடிந்துபோன இயக்கத்தின் நிகழ்வுகள். (பாஸ்டன் ஃபீனிக்ஸ்)
13. ஐந்து மாத தண்டனை: ஒலிம்பிக்ஸில் பாதுகாப்பை அத்துமீறி நீச்சல்குளத்தில் குதித்ததற்காக வழங்கப்பட்டது. இதே மாதிரி இவரே, ஐரோப்பா கால்பந்து இறுதியாட்டம், அமெரிக்க சூப்பர்பௌல், கோல்ஃப் யு.எஸ் ஓபன் ஆகியவற்றிலும் மைதானத்தில் குதித்திருக்கிறார். (சி.என்.என்)
14. இஸ்ரேலி வீரரோடு போட்டி கிடையாது: ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான பகையினால் ஜூடோ போட்டியில் கலந்துகொள்ள, எடை அதிகமானதாக சொல்லி சால்ஜாப்பு சொன்னார். (ஜெருசலம் போஸ்ட்)
கருத்துரையிடுக