வியாழன், ஆகஸ்ட் 26, 2004

சிஃபி.காம்

நன்றி: பெண்ணே நீ / அமுதசுரபி / மஞ்சரி / கலைமகள் - tamil.sify.com



நந்திக்கலம்பகம் (கலைமகள்) :
பலவகைப் பாக்களால், அகப்பொருள் புறப்பொருளுடன், தெய்வங்களையோ, அல்லது மக்களுள் சிறந்தவர்களையோ புகழ்ந்து பாடும் நூலாக அமைவது ""கலம்பகம்'' என அழைக்கப்படுகிறது. கலம்பக இலக்கணப்படி (பன்னிரு பாட்டியல் கூறும்) அரசர் மீது பாடப் பெறும் கலம்பகம் 100 பாடல்களைக் கொண்டு அமைதல் வேண்டுமென்பது நியதி. ஆனால் நந்திக்கலம்பகத்தில் 44 பாடல்கள் அதிகமாக உள்ளதால், இவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருத்தல் வேண்டுமெனச் சிலர் கூறிவருகின்றனர்.

பலவகைப் பாக்களுடன் அந்தாதி அமைப்பில் காணப்பட வேண்டு மென்பது ஒரு விதி. மேலும், கலம்பகத்தின் செய்யுள் தொகைப்படி, ஈசனுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளர்க்கு 30, எனும் அளவில் கலம்பகம் அமைதல் வேண்டுமென்பது ஒரு முக்கிய அம்சமாகும். மேலும் கலம்பகம் என்னும் சொல்லைப் பிரித்து, கலம் என்றால் 12, பகம் என்றால் அதில் பாதி 6, ஆக இரண்டும் சேர்ந்து 18 உறுப்பு (பிரிவு)களுடன் கூடியதே கலம்பகம் ஆகும் எனச் சிலர் கூறுகின்றனர். நந்திக்கலம்பகம் ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, மருட்பா, விருத்தம் முதலியவற்றுடன், அந்தாதி வடிவில் காணப்படுகிறது. மேலும், இதில் இதர வகையான வஞ்சிப்பா, தாழிசை, துறை, மடக்கும் இடம் பெற்றுள்ளன.

பன்னிரு பாட்டியல்படி, இதன் உறுப்புகள், புயவகுப்பு, தவம், வண்டு, அம்மானை, வாண், மதங்கு, மேகம், கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் முதலியனவாகும். நந்திக்கலம்பகத்தைத் தொடர்ந்து, பின்னர் பல கலம்பகங்கள் தோன்றின. ஆளுடைப் பிள்ளையார் திருக்கலம்பகம், திருவரங்கக்கலம்பகம், திருவாமாத்தூர் கலம்பகம், தில்லைக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், அழகர் கலம்பகம் போன்றவை அவற்றுள் சில.


நூல் அறிமுகம் - விநோதினி (பெண்ணே நீ) :

சிதையும் கூடுகள்: ரேவதி வர்மா
இந்நூலின் அணிந்துரையில் பட்டிசு. செங்குட்டுவன், இத்தொகுப்பை "ரத்தத்தில் தோய்ந்த வரலாறு' என்று குறிப்பிடுகிறார். அத்தனை சிறுகதைகளையும் படித்துப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும். காலகாலமாய் ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாகவே இக்கதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

கிருஷாங்கினி கதைகள்
1982லிருந்து 2003 வரை, கணையாழி, தீபம், சுந்தரசுகன், புதிய பார்வை, அரும்பு, விருட்சம், தாய், சுபமங்களா, ஞானரதம் எனப் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான மற்றும் பிரசுரமாகாத முப்பத்தியோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. பின் அட்டையில் எழுத்தாளர் லா.ச.ராமமிருதமும், வெங்கட் சாமிநாதனும் இக்கதைகளைப் பற்றி சுருக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.


கற்றதனால் ஆய பயன் : மாலன் (அமுதசுரபி) :

தொழில்துறை வல்லரசுகளாகத் திகழும் உலக நாடுகளில் 10 ஆவது இடத்தில் இருக்கும் நாடு. அறிவியல் துறையில் பயிற்றுவிக்கப்பட்ட மனித ஆற்றலைக் கொண்ட நாடுகளில் மூன்றாம் இடம் இந்தியாவிற்கு. உலகிலுள்ள எந்த நாட்டையும் விடப் பெரியதொரு நடுத்தர வர்க்கத்தைக் கொண்ட நாடு. உலகிலுள்ள மிகப் பெரிய கணினி நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் இந்தியர்கள் மிக உயர்ந்த பொறுப்புகளை வகிக்கிறார்லிகள். எழுத்தாற்றலுக்காக அளிக்கப்படும் சர்வதேச விருதுகளை-நோபல், புக்கர், புலிட்சர் உள்பட- வென்றவர்கள் பட்டியலை இந்திய எழுத்தாளர்கள் அலங்கரிக்கிறார்கள். சர்க்கரை, நிலக்கடலை, தேயிலை, கனிவகைகள் இவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியாதான். அரிசி, கோதுமை, பால், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடம்.


கவிக்குயில்கள்: ""இதத்தான் கவுத கவுதங்கறியா?'' - சூரியசந்திரன் (பெண்ணே நீ) :

தமிழ்க்கவிதை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு புதுவீச்சோடு புறப்பட்டிருக்கிறார்கள், சில இளம் பெண் கவிஞர்கள். அவர்களை இந்தப் பகுதியின் மூலமாக முறையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.



சிறு பத்திரிகைக்காரர்கள் என்ன பைத்தியக்காரர்களா? - ரவிசுப்ரமணியன் (அமுதசுரபி) :

தமிழில் "எழுத்து' - செல்லப்பாவையும், "சந்திரோதயம்', "சூறாவளி', "இலக்கியவட்டம்', "ஞானரதம்' போன்ற இதழ்கள் க.நா.சு.வையும் "தேனீ' - எம்.வி. வெங்கட்ராமையும், "முன்றில்' - மா. அரங்கநாதனையும், "கசடதபற'- ஞானக் கூத்தனை, சா.கந்தசாமியை, க்ரியா ராமகிருஷ்ணனை, ஐராவதத்தை, என்.எம். பதி போன்றோரையும். "ழ' -ஆர். ராஜகோபாலனையும் அதிகம் இயங்கவைத்து, அதிகம் எழுதவைத்து, அதன் மூலம் தமிழின் நவீன் கலை இலக்கியத் துறைகளுக்கு வளம் சேர்த்தது.


சென்னை வந்த சதீஷ் ஆலேகர் - வெங்கட் சாமிநாதன் (அமுதசுரபி) :

மற்றவர் மனத்திலிருப்பதை அறிய வேண்டும் என்று வரம் வாங்கி, பின் அதன் விளைவு தெரியத் தொடங்கியதும், இந்த வரத்தின் பலனோடு வாழ முடியாது என்று தெரிகிறது. ""வேண்டாம் அந்த வரம்'' என்று அலறத் தோன்றுகிறது. நம் தலைமைகள் பற்றி, அவர்கள் பிரச்சாரத்தை நம்பி வாழ்வதே நிம்மதி தரும். இப்படி அவதிப்படும் ஓரு ஜீவனை மையமாக வைத்து மராத்தி நாடகாசிரியர் சதீஷ் ஆலெகர், 1974 இல் ""மகா நிர்வாண் '' என்று ஒரு நாடகம் எழுதி, அது, 30 ஆண்டுக்காலமாக சதீஷ் ஆலேகருக்கு, சினிமா ஸ்டார் அந்தஸ்த்தைக் கொடுத்து (அவரே சொன்னது), தனக்கும் பெரும் புகழை ஈட்டிக் கொண்டுள்ளது. மறைந்த நண்பர் கே.வி.ராமசாமி, அதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். தமிழினி இம் மொழி பெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது.


ஹிந்தியில் சிலேடைக் கவிதைகள் - ரா. வீழிநாதன் (மஞ்சரி) :

முதலில் மகாகவி துளசிதாசரது சிலேடைக் கவி ஒன்றைக் கேளுங்கள். சான்றோர்களின் வாழ்க்கை இருக்கிறதே, அது பருத்தியின் வாழ்வைப் போன்றது.

சாதுசரித சுன சரித கயாஸ÷ டூ
நிரஸ விஸத குணமய பல ஜாஸ÷ டூ
ஜோ ஸஹி துக பரசித்ர துரானா டூ
வந்தனீய ஜேஹி ஜக ஜஸ பானா டூ டூ

ராமராஜ்யத்தின் பெருமையை வருணிக்குமிடத்து கேசவதாஸ் என்னும் கவி சிலேடை அணியைப் பயன்படுத்தி மகாகவி கம்பரை நமக்கு எப்படி நினைவூட்டுகிறார், பாருங்கள்:
...
பூஷண் என்னும் கவி ஸ்ரீ ராமரையும் சிவாஜியையும் சிலேடை அணிமூலம் ஒன்றாக்கிக் காட்டுகிறார். விளக்கையும் துஷ்டப் பிள்ளையையும் தமது சிலேடை மூலம் ஒன்றாக்கி விடுகிறார் ரஹீம் என்னும் கவி.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு