Tamil Blogs - 2006
முந்தைய பரிந்துரைகள், பாராட்டுகள்:
ஜூலை 2005 பதிவு: அகப்பாடு பத்து
டிசம்பர் 2005 வலைப்பதிவுகள் - 2005
ஆகஸ்ட் 2006 : What are the Top Tamil Blogs
தொடக்கத்திலேயே இருவருக்கு நன்றியை சொல்லி விடுகிறேன்.
1. சும்மா டைம் பாஸ் மச்சி..... &
2. வெட்டிப்பயல்
ஒருவர் பின்னூட்டமாகவும், மற்றொருவர் தனியாகவும் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதுவதற்கு ஊக்குவித்தார்கள். இந்தப் பதிவுக்கு காரணகர்த்தாவாக இருந்த பாவத்தினால், இவர்களுக்கு, எந்தப் பட்டியலிலும் இடம் கிடையாது :-)
இந்த வருடத்தின் மிகச் சிறந்த பத்து பதிவுகளாக நான் இவற்றை சொல்கிறேன்:
- குரல்வலை : வலைகுரல்
- வரவனையான்
- கைமண் அளவு
- விழியன் பக்கம்
- பொடியனின் மனப்பதிவு
- மகரந்தம்
- நிறங்கள்
- பொட்"டீ" கடை
- kirukkal.com
- கவிதைச் சாலை
இவர்கள் தவிர ஏழு நாள்களுக்கு ஒன்றாக எழுச்சியூட்டும் எழுவர்:
- உலகின் புதிய கடவுள்
- வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்
- எனக்கேற்ற தமிழச்சிகள்
- தண்டோரா - இது கண்டதை சொல்லும்
- அசுரன்
- விக்கி பசங்க
- தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்
கடைசியாகத் தலைப்பை கடன் வாங்கி விருதுகள்:
- Best Humanities தமிழ் பதிவு - என்றால் என்ன - கார்திக்வேலு
- Best Entertainment தமிழ் பதிவு - கார்த்தியின் கனவுலகம்
- Best Science/Technology தமிழ் பதிவு - சுந்தரவடிவேல்
- Best தமிழ் பதிவு directory/service/clique/network - கில்லி - Gilli
- Best Topical தமிழ் பதிவு - ஊசி aka pin
- Best Designed தமிழ் பதிவு - பொன்ஸ் பக்கங்கள்
- Most Humorous தமிழ் பதிவு - பினாத்தல்கள்
- Best Travel தமிழ் பதிவு - தேசிகன் பக்கம்
- Best New தமிழ் பதிவு - rajavanaj
- Best Group/Community Blog - சென்னபட்டிணம்
- தமிழ் பதிவு of the year - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் | எண்ணங்களை எழுதுகிறேன்
நன்றி: The Indibloggies » Indibloggies 2006 ~ The Award Categories
Tamil Blogs | Lists | Thamizhmanam | Thenkoodu | Tamil Bloggers | Awards | Nominations
//இந்தப் பதிவுக்கு காரணகர்த்தாவாக இருந்த பாவத்தினால், இவர்களுக்கு, எந்தப் பட்டியலிலும் இடம் கிடையாது :-)//
கலைஞர் மாதிரி மனசுல இடமிருக்கா??? ;) (Just Kidding)
நாமக்கல் சிபி சொன்னது… 12/18/2006 09:31:00 AM
இதே ஸ்டைலில் நானும் ஒண்ணு போடலாம்னு நினைக்கிறேன் :-)
Jayaprakash Sampath சொன்னது… 12/18/2006 09:37:00 AM
நல்ல பதிவு:-)
மதுமிதா சொன்னது… 12/18/2006 09:43:00 AM
உஹூம், இட ஒதுக்கீடு குறைவா இருக்கு :-)
ramachandranusha(உஷா) சொன்னது… 12/18/2006 09:55:00 AM
உஹூம், இட ஒதுக்கீடு குறைவா இருக்கு :-)
ramachandranusha(உஷா) சொன்னது… 12/18/2006 09:55:00 AM
இந்தப் பதிவு தமிழ் வலைப்பூக்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய மகரந்தத்தையும் இங்கே மணம் பரப்ப விட்டமைக்கு நன்றி.
G.Ragavan சொன்னது… 12/18/2006 10:06:00 AM
@வி.பி.
---மனசுல இடமிருக்கா---
தல... மனதில் இடம் பிடித்த அனைவரும் வலப்பக்கம் இடம்பிடித்து இருக்கிறார்கள் (டெம்பிளேட்டில்)
Boston Bala சொன்னது… 12/18/2006 10:39:00 AM
@பிரகாஷ்
நீங்களா.. ஆர்வமுடன் அனைவரும் (பயத்துடன் சிலரும்) எதிர்பார்க்கிறோம்
Boston Bala சொன்னது… 12/18/2006 10:40:00 AM
@மதுமிதா
நன்றி... இந்த வருடத்தில் தங்களுக்குப் பிடித்ததை தாங்களும் பகிர வேண்டும்.
Boston Bala சொன்னது… 12/18/2006 10:40:00 AM
@உஷா
---ஒதுக்கீடு குறைவா இருக்கு ---
மறுமொழியிலாவது நிறைவாகத் தர வேண்டும். தற்போதைக்கு 3/6 (50% : P)
Boston Bala சொன்னது… 12/18/2006 10:41:00 AM
@ஜிரா
சிறந்த பயணப் பதிவு என்று தங்களை வகை செய்யலாமா என்று யோசிக்க வைக்குமளவு விரிவாகவும் சுவாரசியமாகவும் சொன்னவை.
சும்மா ஒரு குழந்தைக்காக (அதாவது ஜஸ்ட் கிட்டிங்): அதிக வலைப்பதிவுகள் துவக்கியது யார்?? நீங்களா? kannabiran, RAVI SHANKAR (KRS)-ஆ!?
Boston Bala சொன்னது… 12/18/2006 10:46:00 AM
---Anonymous has left a new comment on your post "Tamil Blogs - 2006":
bala!!!
Do you like ASURAN?. Very good.
He works in *****---
விளிப்பிலி... நன்றி!
தகவல் சுவாரசியமாக இருந்தாலு, ஊர்ஜிதப் படுத்த இயலாததாலும், பதிவிற்கு பொருத்தம் இல்லாததாலும் எடுத்து விட்டேன்.
Boston Bala சொன்னது… 12/18/2006 10:56:00 AM
Super.. Apdiye worst post apdiinu oru topic potturuntha namma peravathu edam pudichirukkum :)
பெயரில்லா சொன்னது… 12/18/2006 11:11:00 AM
I have linked this post here here...
oosi சொன்னது… 12/18/2006 12:24:00 PM
உள்ளேன் ஐயா!
வெற்றி சொன்னது… 12/18/2006 12:57:00 PM
நன்றி பாலா.. என்னுடைய வலைப்பக்கத்தை சிறந்த பொழுதுபோக்கு வலைப்பக்கமாக தேர்ந்தெடுத்ததற்கு..
இது எனக்கு மகிழ்சியையும் இன்னும் நிறைய எழுதுவதற்கு ஊக்கமும் கொடுத்துள்ளது..
இதற்கு உதவியாக இருந்த வெட்டிபயலுக்கும் டைம் பாஸ் மச்சிக்கும் எனது நன்றிகள்
மு.கார்த்திகேயன் சொன்னது… 12/18/2006 02:57:00 PM
மகரந்தம் சரிதான்.
ஆனால் அதுனுடன் பொட்டீகடையா?
கீழே உள்ளது பொட்டீகடையில் ஒரு பதிவில் உள்ள அறுவருப்பான எழுத்து. இது சிறந்த பதிவா? கண்ணாடிய கழட்டிட்டு பாருகோ :)
//அவா ஆத்துல அவாளோட தந்தைங்க அதான் ஓய்...அப்பாக்கள் மாமா வேலை பாத்த பழக்க தோஷத்துல அவாளோட தந்தையையே மாமான்னு கூப்பிட்டு பழகியிருக்கா...அதே நெனப்புல தந்தை பெரியாரையும் "மாமா பெரியார்"ன்னிட்டா.
//
பெயரில்லா சொன்னது… 12/18/2006 07:22:00 PM
பாலா,
உங்களால் விரும்பி வாசிக்கப்படும் தளங்கள் என நீங்கள் பரிந்துரைத்தவற்றை மேலோட்டம் பார்த்ததில் எனக்கும் பிடித்தமானதாக இருக்கின்றன. இனி அந்தப் பெயர்களைத் தவறவிடமாட்டேன் என்று நினைக்கிறேன். தேர்ந்த வாசிப்பை இலகுவாக்கியிருக்கிறீர்கள் நன்றி.
நதி
தமிழ்நதி சொன்னது… 12/18/2006 08:36:00 PM
//சும்மா ஒரு குழந்தைக்காக (அதாவது ஜஸ்ட் கிட்டிங்): அதிக வலைப்பதிவுகள் துவக்கியது யார்?? நீங்களா? kannabiran, RAVI SHANKAR (KRS)-ஆ!?//
பாபா, இது என்ன விளையாட்டு?:-))
சும்மா ஒரு குழந்தைக்காக ன்னு போட்டது பார்த்து பயந்து போய் விட்டேன்; எங்கே நாம் இருவர், நமக்கு ஒருவர் ன்னு சொல்ல வரீங்களோன்னு நினைச்சேன் :-)
வலைப்பூ தொடங்குவதில் குடும்பக் கட்டுப்பாடு?:-)
BTW, Just came back from Boston!
நன்றி, வெற்றிகரமான பதிவர் பந்தல்...I mean...பதிவர் மாநாடு!
Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது… 12/18/2006 08:43:00 PM
பாபா, நன்றி :)
நிறைய புள்ளிகளில் ஒத்துப் போகிறோம். கொஞ்சம் கொஞ்சம் சரியான தேர்வுகள் இல்லை என்றும் தோன்றுகிறது :) என்னுடையதும் ஒன்று வரும் இதே போல் (எப்படியோ பதிவெழுத ஒரு ஐடியா கிடைச்சாச்சு :) )
பொன்ஸ்~~Poorna சொன்னது… 12/18/2006 08:45:00 PM
ஒன்னுமே பிரியல...என்னவோ நடக்"குத்து"...மர்மமா "இருக்குத்து"...
Pot"tea" kadai சொன்னது… 12/18/2006 09:10:00 PM
---worst post apdiinu oru topic---
ஜி...
என்னை இப்படித்தான் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி, இன்று நானே அடுத்தவங்களுக்கு விருது வழங்குமளவு ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
இப்பொழுதே தட்டச்சை முடுக்குங்க...
உங்களுக்கு பிடித்த பதிவுகளையும், ஏன் பிடித்தது என்பதையும், எந்த இடுகையெல்லாம் பெரிதினும் பெரிதாகக் கவர்ந்தது என்பதையும் வீட்டுப்பாடமாக செய்து பாருங்களேன் :-)
Boston Bala சொன்னது… 12/18/2006 09:27:00 PM
ஊசி... தங்கள் சேவை நாட்டுக்குத் தேவை.
Boston Bala சொன்னது… 12/18/2006 09:28:00 PM
வெற்றி... இதற்கு மட்டும் உள்ளேன் அய்யா...வா...
வருவீங்க இல்ல... அப்ப வச்சிக்கறேன். :-))
வருகைக்கும், வெற்றி பெற்றவர்களுக்கான வாழ்த்துக்கும் நன்றிகள்.
Boston Bala சொன்னது… 12/18/2006 09:29:00 PM
---வெட்டிபயலுக்கும் டைம் பாஸ் மச்சிக்கும்---
கார்த்தி... எல்லாமே சொந்தத் தேர்வுகளே.
வாழ்த்துகள்.
Boston Bala சொன்னது… 12/18/2006 09:30:00 PM
---பதிவில் உள்ள அறுவருப்பான எழுத்து. ---
வெளிப்படையாக, மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைத்து கோபத்தை பதிவதில் அவருக்கு நிகர் அவரே. அந்த விதத்தில் 'உள்ளொன்று வைத்து புறமொன்று எழுதாத' விதம் மிகவும் பிடிக்கும்.
Boston Bala சொன்னது… 12/18/2006 09:31:00 PM
தமிழ்நதி... உங்கள் ரசனையோடு (மேலோட்டமாகவாவது) ஒத்துப் போவது, இந்தப் பதிவில் இடம் பெற்றவர்களுக்கு அங்கீகாரத்தையும், வலை வாசகர்களுக்கு மகிழ்வையும் தரும்.
நன்றிகள் பல.
Boston Bala சொன்னது… 12/18/2006 09:33:00 PM
---வலைப்பூ தொடங்குவதில் குடும்பக் கட்டுப்பாடு---
கேயாரெஸ்,
வலைப்பதிவென்ன...
வாய்க்காலா?
வற்றாத வைகையாக
உங்கள் உவகையுடனும்
குன்றாத குறிப்புகளாக
உங்கள் எழுத்துக்களுடனும்
பல்கிப் பெருவதைத் தவிர வேறு எவ்வித வேண்டுகோளை வைக்க முடியும்!
---வெற்றிகரமான பதிவர் பந்தல்.---
அடுத்த நியூ ஜெர்சி மாநாடு எப்பொழுது!?
சந்திப்பு குறித்த உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Boston Bala சொன்னது… 12/18/2006 09:37:00 PM
---கொஞ்சம் கொஞ்சம் சரியான தேர்வுகள் இல்லை---
எதெது என்று சொல்லுங்க... எப்படி என்று கொஞ்சம் தன்னிலை விளக்கம் கொடுக்கப் பார்க்கிறேன்.
ஆனால், ரொம்ப மினுக்கிடாமல், காலையில் டக்கென்று நிழலாடியவர்களை அப்படியே பட்டியலிட்டு, தொகுத்த பதிவு.
விடுபட்டவர்கள் நிச்சயம் நிறைய இருப்பார்கள்!
Boston Bala சொன்னது… 12/18/2006 09:40:00 PM
பொட்டீ கட
---நடக்"குத்து"...மர்மமா "இருக்குத்து"..---
குத்தா... கள்ள ஓட்டு பயம் வேண்டாம்.
Boston Bala சொன்னது… 12/18/2006 09:41:00 PM
பாலா,
ஆத்தா !!!, நான் இப்ப எழுச்சி வலைஞன் ஆயிட்டேன்.
கண்டுக்கிட்டதுக்கு தேங்க்ஸ் :)
கொஞ்சம் அதிக வேலை கொடுக்குமென்றாலும் நீங்க பட்டியலிட்டிருக்கும் பதிவுகளெல்லாம் ஏன் பிடிச்சுது, என்ன Improve பண்ணனும்னு ஒரு ரெண்டு வரி description ???
பெயரில்லா சொன்னது… 12/19/2006 12:47:00 AM
ஆஹா.. நன்றி. மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !
பெயரில்லா சொன்னது… 12/19/2006 01:27:00 AM
என்னுடைய பதிவை சேர்த்ததுக்கு நன்றி !!!
ரவி சொன்னது… 12/19/2006 06:12:00 AM
சிறந்த பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...இந்த பதிவுமூலமா நிறைய புதிய பதிவாளர்களின் (எனக்கு) பக்கங்களை அறிமுகம் செய்த பாபாக்கு நன்றி... :-)
Syam சொன்னது… 12/19/2006 06:25:00 AM
வெட்டி, லக்கிலுக் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த பதிவாளர்கள்...ஆனா ரெண்டு பேருக்குமே அல்வா குடுத்திட்டீங்களே :-)
Syam சொன்னது… 12/19/2006 06:26:00 AM
பாஸ்டன் பாலா தேர்வு என்றால் சும்மாவா ? எல்லா அறிமுகங்களையும் 'என் விருப்பங்களில்' சேர்த்து விட்டேன். நன்றி.
மணியன் சொன்னது… 12/19/2006 07:03:00 AM
தாங்ஸ் பாலா அவர்களே,
எல்லா வலைபதிவர்களும் நல்லா எயுதறவங்கன்னாலும் நீங்க இங்க குட்துகீறவங்கோ கன்ஸிஸ்டன்சில உங்க மனச கெலிச்சிக்னு வந்து கீறாங்கோன்னு நினைக்கிறன். :)))))
அரை பிளேடு சொன்னது… 12/19/2006 07:24:00 AM
@விக்கி
---என்ன Improve பண்ணனும்னு ஒரு ரெண்டு வரி---
ஹ்ம்ம்... இது வம்பில் கொண்டு போய் விடுகிற வேலை : P
மேலும், எப்படி எழுத்தை மேம்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கும்போதே, அவர்களை நிர்ப்பந்தத்துகுள்ளாக்கி, என்னுடைய வட்டத்துக்குள் குறுக்கவும் செய்து விடும். அந்தந்தப் பதிவுகளில் ஏதாவது opportunity for improvement தென்பட்டால், அவ்வப்போதே சொல்லிவிடுவது எனக்குப் பிடிக்கும். இந்த மாதிரி 'பாராட்டுகளின்' போது என்னுடைய விருப்பங்களை எழுதினால், நிறைவேற்ற வேண்டுமா, அல்லது விவாதிக்க வேண்டுமா என்று அவர்களைக் குழப்பத்திற்கும் உள்ளாக்குவேன்.
---நீங்க பட்டியலிட்டிருக்கும் பதிவுகளெல்லாம் ஏன் பிடிச்சுது---
கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும், பின்னூட்டமாக, அவசியம் இடுகிறேன்.
Boston Bala சொன்னது… 12/19/2006 09:03:00 AM
@பாதிப் பட்டாக்கத்தி
---எல்லா வலைபதிவர்களும் நல்லா எயுதறவங்கன்னாலும்---
பாதி என்று தன்னடக்கத்தோடு சொல்லிக் கொண்டாலும், முழுமையான நெத்தியடி கணிப்பு
---குட்துகீறவங்கோ கன்ஸிஸ்டன்சில உங்க மனச---
தொடர்ந்து எழுதுகிறார்கள். முரண்களை வெளிப்படுத்த தயங்காதவர்கள். பொலிடிகலி கரெக்ட் என்று மழுப்பாதவர்கள். கவனத்தைக் கோருபவர்கள். என்னைப் போல் காபி/பேஸ்ட் மட்டுமே செய்யாமல் காலத்தை ஓட்டுபவர்கள்.
Boston Bala சொன்னது… 12/19/2006 09:07:00 AM
@மணியன்
---எல்லா அறிமுகங்களையும் 'என் விருப்பங்களில்' சேர்த்து விட்டேன். ---
நன்றி. ஏற்கனவே தங்கள் விருப்பப் பட்டியலில் யாதெல்லாம் இடம் பிடித்திருந்தது : )
Boston Bala சொன்னது… 12/19/2006 09:08:00 AM
@ஷ்யாம்
---வெட்டி, லக்கிலுக் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த---
நானும் அவர்களை விடாமல் தொடர்ந்து படித்து வந்தேன்.
---சிறந்த பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்---
நன்றி.. (நீங்க ஸ்யாமா, ஷ்யாமா, சியாமா ; )
Boston Bala சொன்னது… 12/19/2006 09:11:00 AM
@செந்தழல்
தங்கள் பதிவை மதியும் (தமிழ் வலைப்பதிவு » 2006 - தமிழ் வலைப்பதிவர்கள்) குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Boston Bala சொன்னது… 12/19/2006 09:12:00 AM
@சேவியர்
வோர்ட்பிரஸ்ஸில் இருந்தாலும் தங்களின் பதிவு தமிழ்மணத்தில் தெரிகிறதா? எப்படி என்பதை நேரம் கிடைத்தால் சொல்லவும்.
உங்களுடைய கதைகளை அதிகம் படித்திராவிட்டாலும், நேர்த்தியான விஷய கனமுள்ள கட்டுரைகளும், எளிமையான அதே சமயம் பொதிந்த பார்வைகள் கொண்ட கவிதைகளும் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவுகிறது.
வோர்ட்பிரஸ்ஸின் tags-ஐ தாங்கள் முழுவதுமாக பயன்படுத்தி, வருகையாளர்களை அதிகப்படுத்திக் கொள்வதில்லை என்பது என்னுடைய குறைபாடு ; )
Boston Bala சொன்னது… 12/19/2006 09:19:00 AM
//நீங்க ஸ்யாமா, ஷ்யாமா, சியாமா ; )//
இந்த ஊர் ஸ்டைல்ல சொல்லனும்னா good question...
என்னோட பேரு ஷியாம் னு தமிழ் புக்ல எழுதினேன்...அதுக்கு எங்க தமிழ் சார் ரெண்டு சாத்து சாத்தி சியாம் னு எழுதுன்னு சொன்னார் அதுல இருந்து தமிழ்ல சியாம் னு தான் எழுதறேன்...
english spelling shyam ஆ இருந்தது அப்புறம் numerology பாத்து எங்க அம்மா Syam னு மாத்தினாங்க....இங்க எல்லோரும் சையேம் னு கூப்பிடராங்க :-)
Syam சொன்னது… 12/19/2006 10:17:00 AM
2006-ம் ஆண்டின் தமிழ் வலைப்பூ உலகின் ஹீரோ நண்பர் மாயவரத்தானை விட்டு விட்டீர்களே. நீங்களும் ஒருவேளை பிளாக் மெயிலிங்கில் மாட்டி விட்டீரோ? பட்டியலைப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. ஐயோ பாவம்.
பெயரில்லா சொன்னது… 12/19/2006 10:32:00 AM
---தமிழ் வலைப்பூ உலகின் ஹீரோ நண்பர் மாயவரத்தானை---
நீங்க ஒரு லிஸ்ட் போடுங்க விளிப்பிலி. அதில் உங்கள் ரசனைக்கு உகந்தவர்களையும் சொல்லுங்க : )
---பட்டியலைப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. ஐயோ பாவம்.---
பெயரில்லாமல் எழுதுவதைப் பார்த்தால், பயந்து போன மதிரி இருக்கிறது. உங்களை யாரு என்ன பண்ணப் போறாங்க... பேர் சொல்லியே எழுதுங்க.
Boston Bala சொன்னது… 12/19/2006 11:06:00 AM
@சையேம்
---இங்க எல்லோரும் சையேம் னு கூப்பிடராங்க ---
நாங்களும் இனிமே அப்படியே அழைச்சிட்டா ப் போச்சு : D)
Boston Bala சொன்னது… 12/19/2006 11:07:00 AM
///கொஞ்சம் கொஞ்சம் சரியான தேர்வுகள் இல்லை என்றும் தோன்றுகிறது :)///
நீங்கபாட்டுக்கு நிறங்களையெல்லாம் சேர்த்திட்டீங்க. பாருங்க சரியான விமர்சனம் சொல்லீருக்காங்க பொன்ஸ்:))
என்றாலும் நன்றி பாலா. எனக்கென்னவோ இப்படிப் பதிவுகள் என்று போடுவதைவிட சிறந்த 10 இடுகைகள் என்று எடுத்துப்போடுவது நம்மை மீண்டும் ஒரு மீள்வாசிப்புக்கு அழைத்துச்செல்லுமோ என்று தோன்றுகிறது. அதையும் நீங்கள் ஏன் ஆரம்பித்துவைக்கக்கூடாது:))
செல்வநாயகி சொன்னது… 12/19/2006 11:36:00 AM
@செல்வநாயகி
---எனக்கென்னவோ இப்படிப் பதிவுகள் என்று போடுவதைவிட சிறந்த 10 இடுகைகள்---
நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது!!! என்னுடைய கணினியை யாரோ ஆட்கொண்டு விட்டார்கள் ; )
பத்தே பத்துக்குள் அடக்குவதுதான் கடும் பிரயத்தனமாக இருக்கிறது...
Boston Bala சொன்னது… 12/19/2006 11:54:00 AM
ஐம்பதாவது நானா???
நாமக்கல் சிபி சொன்னது… 12/19/2006 12:07:00 PM
//Boston Bala said...
@ஷ்யாம்
---வெட்டி, லக்கிலுக் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த---
நானும் அவர்களை விடாமல் தொடர்ந்து படித்து வந்தேன்.//
வந்தேனா? வருகிறேனா? :-/
நாமக்கல் சிபி சொன்னது… 12/19/2006 12:08:00 PM
தேர்வு செய்யப்பட்டவர்கள் எல்லாருமே எனக்குப் பிடித்த பதிவர்கள்தாம்... ஒவ்வொரு வகையில்.
சுவையான பதிவு!
VSK சொன்னது… 12/19/2006 12:16:00 PM
@வி.பி.
---நானும் அவர்களை விடாமல் தொடர்ந்து படித்து வந்தேன்.---
இந்த பதில்கள் பழசு:
1. நீங்க பின்னூட்டமெல்லாம் ஒழுங்காப் படிக்கறீங்களான்னு செக் செஞ்சேன்.
2. இப்பொழுதெல்லாம் விடாமல் தொடர்ந்து படிக்க முடிவதில்லை. வார்த்தைக்கும் பத்திக்கும் நடுவில் கிடைக்கும் இடைவெளிகளை விட்டு விட்டு, ஆழமான பதிவுகளை ஆற அமர படிக்கிறேன் ; )
3. எலிக்கும் அடி சறுக்கும்.
சீரியசா... வி.பி... நட்சத்திர வாரத்தில் ஒண்டே மேட்சில் களமிறங்கும் இந்திய மட்டை வீரர்களாக, இவ்வளவு ஸ்பீடா, பதிவுகளை இறக்கிக் கொண்டிருப்பதால், மூச்சு வாங்கிக் கொண்டே படிக்கிறோம்ல ; )
Boston Bala சொன்னது… 12/19/2006 12:25:00 PM
@வி.பி.
---ஐம்பதாவது நானா?---
வருடத்தின் கடைசி வாரமான அம்பத்து மூணு நான்தான்.
Boston Bala சொன்னது… 12/19/2006 12:26:00 PM
//சீரியசா... வி.பி... நட்சத்திர வாரத்தில் ஒண்டே மேட்சில் களமிறங்கும் இந்திய மட்டை வீரர்களாக, இவ்வளவு ஸ்பீடா, பதிவுகளை இறக்கிக் கொண்டிருப்பதால், மூச்சு வாங்கிக் கொண்டே படிக்கிறோம்ல ; )//
தலைவா,
ஒண்ணும் ஸ்கோர் பண்ணலைனு சொல்றீங்களா???
நாமக்கல் சிபி சொன்னது… 12/19/2006 12:28:00 PM
@விபி
---ஒண்ணும் ஸ்கோர் பண்ணலைனு சொல்றீங்களா---
அட... நீங்க நின்னு நிதானிச்சு ஆடுற ஐந்து நாள் ஆட்டம் மாதிரி ஆடுறீங்க... அமெரிக்க பேஸ்பால் மாதிரி all bases are loaded and home runs galore : )
Boston Bala சொன்னது… 12/19/2006 01:06:00 PM
---எனக்குப் பிடித்த பதிவர்கள்தாம்... ஒவ்வொரு வகையில்.---
நன்றி எஸ்கே
Boston Bala சொன்னது… 12/19/2006 01:07:00 PM
Thanks a lot Bala! :)
Definitely feels wonderful!
பெயரில்லா சொன்னது… 12/19/2006 08:20:00 PM
மதுரா __/\__
Boston Bala சொன்னது… 12/19/2006 09:15:00 PM
// நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது!!! என்னுடைய கணினியை யாரோ ஆட்கொண்டு விட்டார்கள் ; )
அதே :(
2006 நினைவுகள் எழுதறதா announce பண்ணிட்டோமே, வலைப்பதிவுகள்ல மிச்சமிருக்கிறது, சிறந்த இடுகைகள் மட்டும்தான், அதையாவது எழுதலாம்னு நினைச்சா ;).
Just kidding . வழக்கம்போல் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் பாலா
பெயரில்லா சொன்னது… 12/19/2006 09:28:00 PM
Thanks Bala! Thanks for the recognition.
MSV Muthu சொன்னது… 12/19/2006 11:20:00 PM
அட! நம்மளைக்கூட கண்டுகினு கீறாங்கோ!
டாங்க்ஸ்பா.. பாபா! (எக்கோ இல்ல, பேரு;-)
பினாத்தல் சுரேஷ் சொன்னது… 12/20/2006 06:53:00 AM
விக்கி...
மாதத்திற்கு ஒன்று என்று வைத்தால் கூட 12 ஆகி விடுகிறது. தங்கள் விருப்பங்களையும் அறிய ஆவல் : )
Boston Bala சொன்னது… 12/21/2006 03:08:00 AM
சுரேஷ்...
'என்னைப் போய் 'காமெடியன்' என்று சொல்லி விட்டீரே? நான் ரொம்ப சீரியஸ் பதிவர்' என்று ஒதுக்கி விடுவீரோ என்னும் அச்சம் ஓரத்தில் இருந்தது.
அக்செப்டன்ஸ் ஸ்பீச்சுக்கு நன்றி ; )
Boston Bala சொன்னது… 12/21/2006 03:10:00 AM
முத்து...
அவ்வப்போது எழுதினாலும், கதையாகட்டும், அனுபவங்களாட்டும் - முத்திரையோடு, தவறவிடக் கூடாததாக அமைந்திருக்கிறது. நன்றி.
Boston Bala சொன்னது… 12/21/2006 03:11:00 AM
ஒரு அட்வர்டைஸ்மெண்ட் போட்டுகிறேன் அண்ணாத்த...
படிக்கத்தவறாதீர்கள் ::
2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு
முகமூடி சொன்னது… 12/22/2006 02:37:00 AM
// Boston Bala said...
@ஜிரா
சிறந்த பயணப் பதிவு என்று தங்களை வகை செய்யலாமா என்று யோசிக்க வைக்குமளவு விரிவாகவும் சுவாரசியமாகவும் சொன்னவை. //
ஹி ஹி..நீங்க சொல்ல வர்ரது புரியுது.
// சும்மா ஒரு குழந்தைக்காக (அதாவது ஜஸ்ட் கிட்டிங்): அதிக வலைப்பதிவுகள் துவக்கியது யார்?? நீங்களா? kannabiran, RAVI SHANKAR (KRS)-ஆ!? //
நாங்க ரெண்டு பேருமே இல்லை. அந்தப் பெருமை குமரனுக்குத்தான். :-)
G.Ragavan சொன்னது… 12/22/2006 08:44:00 AM
நன்றி பாலா,
அன்புடன்,
மா சிவகுமார்
பெயரில்லா சொன்னது… 12/23/2006 07:03:00 PM
சிவகுமார், தங்கள் பாணி & கள்ளங்கபடமற்ற எளிமையான விவரிப்பு கூடிய எண்ணங்களையும் சொந்த நிகழ்வுகளையும் தொடரவும்.
எட்டிப் பார்த்தற்கு நன்றி.
Boston Bala சொன்னது… 12/23/2006 07:13:00 PM
முகமூடி... தங்கள் பதிவு பார்த்தேன். தடதடவென்று அவசரமாக மேய்ந்ததாலோ அல்லது உள்பொதிந்த அர்த்தம் விளங்காததாலோ, என்ன சொல்ல எத்தனிக்கிறீர்கள் என்பது 100% புரியவில்லை.
கோனார் உரை அல்லது சுருக் பார்வை கொடுத்தால் மகிழ்ச்சியே.
Boston Bala சொன்னது… 12/23/2006 07:14:00 PM
---அந்தப் பெருமை குமரனுக்குத்தான்.---
ஓ... அவர்தான் கிங்!
Boston Bala சொன்னது… 12/23/2006 07:15:00 PM
பொஸ்டன் பாலாவுக்கு
எங்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
பெயரில்லா சொன்னது… 12/23/2006 07:59:00 PM
//முகமூடி... தங்கள் பதிவு பார்த்தேன். தடதடவென்று அவசரமாக மேய்ந்ததாலோ அல்லது உள்பொதிந்த அர்த்தம் விளங்காததாலோ, என்ன சொல்ல எத்தனிக்கிறீர்கள் என்பது 100% புரியவில்லை.'//
தோடா :-)))))))))))))
ramachandranusha(உஷா) சொன்னது… 12/23/2006 08:37:00 PM
Thank you Balaji because it's me! But not good for Tamil that it's just this guy!!
சுந்தரவடிவேல் சொன்னது… 12/24/2006 06:36:00 AM
@சுந்த்ரி
முன்கூட்டிய பொங்கல் வாழ்த்து : )
Boston Bala சொன்னது… 1/03/2007 12:21:00 PM
@உஷா
---தோடா---
'ட்' விடுபட்ட தோட்டாவாக சிரிப்பு வருமளவு கருத்து சொல்லியிருக்கிறேன் போல ; )
Boston Bala சொன்னது… 1/03/2007 12:22:00 PM
@சுந்தரவடிவேல்
அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் கவனிப்பவர்களாக
* ஆராய்ச்சியாளர்களையும்,
* அந்தத் துறையில் மேற்படிப்பு (முதுகலை பட்டம்) படித்தவர்களையும்,
* பொழுதுபோக்காக அலசுபவர்க்ளையும்,
* தொழிலாகக் கொண்டவர்களையும்,
* மாணவர்களையும் (இளங்கலை)
சொல்லலாம்.
அரசு ஊக்குவிப்பு, பல்கலைக்கழகங்களின் தூண்டுதல், தமிழ் சஞ்சிகைகளில் எழுதுபவர்களின் பங்களிப்பு போன்றவை மேம்படும் என்று நம்புகிறேன்.
Boston Bala சொன்னது… 1/03/2007 12:28:00 PM
ரசனையான தேர்வு பாபா.
புத்தாண்டு வாழ்த்துகள்
முத்துகுமரன் சொன்னது… 1/03/2007 11:28:00 PM
@முத்துக்குமரன் நன்றி.
Boston Bala சொன்னது… 1/05/2007 08:49:00 AM
நான் சும்மா டமாசுக்குச் சொன்னேன் :)
பெயரில்லா சொன்னது… 1/05/2007 11:51:00 AM
கருத்துரையிடுக