திங்கள், ஜூலை 21, 2008

ரவி ஸ்ரீனிவாசிற்கு மனம் திறந்த மடல்

ரவி ஸ்ரீனிவாஸ் கேட்கக் கூடாத கேள்விகள் -:) கேட்டிருக்கிறார்.

பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா?
அரசியல்வாதி போல் இதற்கு பதில் சொல்வது நடைமுறை. சிம்புவின் தொல்லைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நயனின் கலைச்சேவை பாதிக்கப்பட்டது என்றால் அது சினிமா சந்தைமுறை. ரவி போன்றவர்கள் ட்விட்டரில் இருந்துகொண்டே இது போன்ற சதிகளை உருவாக்கினர் என்று கட்டுடைத்தல் இணைய எதிர் மரியாதை முறை. இது போன்ற குட்டிகளாகப் போட்டுத்தாக்கும் டைனோக்களை கண்டுகொள்ளாத ரவிக்கு கண்டனம் முறையாகும்.

2. இணைய மற்றும் கணினி addictionனுக்கு பாஸ்டனில் நல்ல சிகிச்சை கிடைக்கிறதா ?
நாங்க எல்லாம் அமெரிக்கா மாதிரி. ஆரம்பத்தில் டாட் காம் பங்குகளாக ராயர்காபி க்ளப்பில் பழியாய்க் கிடப்போம். ஈ-பேயும் அமேசானும் விழ ஆரம்பித்தால் வீடு மார்க்கெட் என்னும் ப்ளாகர், வோர்ட்பிரெஸ், ப்ளாக்ஸ்பாட் பின்னாடி பேயாய் திரிவோம். கொஞ்ச நாள் கழித்து அந்த மோகமும் போய் எண்ணெய் பித்து தலைக்கேறினால், ட்விட்டர் கணக்கை கூட்டுவோம்.



முதல்ல அமெரிக்கா திருந்தறதுக்கே இன்னும் நீங்க உங்க பதிவில் வழிசொல்லியபாடில்லை. அப்புறம்தானே என்னோட பித்துக்கு வைத்தியம் சித்திக்கும்.



நானூறு பதிவுகள். பெரும்பாலானவை அச்செடுத்து படிக்க கோரியவை. வாழ்த்துகள்.

என் எழுத்து, வலைப்பதிவின் உள்ளடக்கம், வடிவம் இன்ன பிற தொடர்புடையவை குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள்?
எழுத்து: கருத்து சொல்லுமளவு எனக்கு விஷயஞானம் போதாது. தாங்கள் தரும் சுட்டிகளைப் படித்து பயன்பெறுகிறேன்.



வலைப்பதிவின் உள்ளடக்கம்: 'மேய்ச்சலில்' தருவது போல் வெறுமனே உரல்களை மட்டும் இட்டு செல்லவேண்டாம். கென் வில்பர் குறித்த பழைய கட்டுரையிலும் கூட மிரட்டாத அறிமுகம் தருவது போன்ற நடை என்னைக் கவர்கிறது. இலகுவாக வாசிக்க வைக்கிறது.



குறிச்சொற்கள்: தற்போதைக்கு ஓரளவே பயன்படுத்துகிறீர்கள். இன்னும் தாராளமாக உபயோகிக்கவும். ஆங்கில வார்த்தைகளும் இடவும்.



வார்ப்புரு: பயனுள்ள widgetகள் சிலவற்றை சேர்க்கலாம்:

  1. Google Search (Search Box)

  2. Labels (Show all the labels of posts in your blog)

  3. Subscription Links (Let your readers easily subscribe to your blog with popular feed readers)

  4. உங்களின் ட்விட்டர் குறிப்புகள் (add Twitter to your site)

இவற்றை இணைப்பதற்கு http://draft.blogger.com/home என்னும் முகவரியில் உள்நுழையவும்.



நன்றி.



படம்My Satirical Self - New York Times

3 கருத்துகள்:

GOOD WORK...KEEP GOING...

http://fav33.blogspot.com/

அன்பு பாலா,

2007 பிப்ரவரிக்கு பிறகு நீங்கள் ஈதமிழில் மிகுந்து எழுதுவதில்லையே. 2/3 என்ற விழுக்காட்டு கணக்கில் உங்கள் பதிவுகள் பலராலும் படிக்கப்பட்டு வந்தது. தற்போது நீங்கள் இடும் பதிவுகளின் எண்ணிக்கை குறைவு என்போன்ற வாசிப்பாளர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். அடிக்கடி கார்டூன்ஸ் போட்டு கலக்குவிங்க. இப்போது அவையெல்லாம் வருவதே இல்லை. வேலை பளுவா ? அல்லது நெடுநாளாக எழுதுவதால் ஏற்பட்ட அயற்சியா ?

For unrestricted blogging, I hv switched to Snap Judgment

Thanks Govi for remembering and the kind inquiries.

OTOH, you shd try twitter (my newest addiction): Twitter

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு