A Concise Introduction to Twitter.com and Why you should join there?
அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா?
இந்தியாவில் சற்றேறக்குறைய பத்து மில்லியன் வலை இணைப்புகள் இருக்கின்றன.
செல்பேசி சந்தாதாரர்கள் எவ்வளவு? நிறைய என்பது உங்களை சுற்றிப் பார்த்தாலே தெரியும். எண்ணிக்கை எம்புட்டு என்று எண்ணிப் பார்த்தால் 250 மில்லியனைத் தாண்டி ஏவுகணைப் பாய்ச்சலில் ஏறுகிறது.
மாதந்தோறும் கிட்டத்தட்ட பத்து மில்லியன் புதிய இணைப்புகளை செல்பேசிகள் சேர்த்துக் கொள்கின்றன.
வலைப்பதிவுகள் என்பது பத்து மில்லியன் வாசகர்களை எதிர்நோக்குகிறது. குறுந்தகவல் என்பது மாசாமாசம் ஆஸ்திரேலியாவை தோற்றுவிக்கும் இந்திய மக்கள்தொகையை ஒத்து செல்பேசிகளை குறிவைக்கிறது.
'மன்னன்' ரஜினி மாதிரி கேள்வி கேட்டால்... 10 மில்லி போதுமா? 250 மில்லியன் வேண்டுமா?!
வலைப்பதிவுகளுக்கு ப்ளாகர்.காம், வோர்ட்பிரெஸ்.காம் இருக்கிறது. குறுஞ்செய்திகளை எப்படி அனுப்புவது?
டிவிட்டர்.காம் உபயோகிக்கலாம்.
(ட்விட்டருக்கு மாற்றாக ஃப்ரெண்ட் ஃபீட் வலையகத்தை சிலர் பரிந்துரைக்கிறார்கள். அது தற்போதைக்கு பயனில்லை என்னும் என் கருத்தை பிரதிபலிக்கும் கட்டுரைகளுள் ஒன்று: FriendFeed explodes onto the scene, but it is still an information fire hose)
முக்காலியாக வலைப்பதிவுகள், அரட்டை, மின்னஞ்சல் கொண்டு பயணித்த இணையம் குறுந்தகவல் மூலம் நான்காவது தூணை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
செல்பேசி கொன்டு குறுந்தகவல் அனுப்பினால் நிறைய பணம் விரயமாகுமே? அதுதான் இல்லை.
வழக்கமாக இணையத்தில் மேய்வது போன்றே ட்விட்டர்.காம் சென்று பலருக்கும் செய்தி அனுப்பலாம்.
வாசகரின் செல்பேசிக்கே செய்திகள் சென்றடவைதால், தொலைபேசி போன்ற உடனடித்தன்மை இங்கே கிடைக்கிறது. அலுவலில் மும்முரமாக மூழ்கி இருந்தாலும், அரை விநாடியே செலவழித்து குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, வேலையைத் தொடரலாம். மீட்டிங்கில் இருந்தால் கூட பதில் அனுப்பலாம்.
இதெல்லாம் நான் இப்பொழுதே நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கின்றேனே! அப்புறம் எதற்கு தனியாக ட்விட்டர்?
- 'கலைஞருக்கு நோபல் ஏன் கிடைக்க வேண்டும்?' என்று பிரச்சாரத்தை ஓசையின்றி முடுக்கி விடலாம்.
- மாணவர்களுடன் உரையாட, தற்கால தலைமுறையின் பாஷையில் ஆசிரியர் உறவாடலாம்.
- பத்து நண்பர்களுக்கு 'விஸ்டா நிறுவ உதவி தேவை' என்று மின்மடலிடுவதை விட, ட்விட்டரில் கோரினால், கை மேல் பலன் நிச்சயம்.
- 'சுப்பிரமணியபுரம்' குறித்து விஷயமே இல்லாமல் பதினேழு வரி எழுதுவதற்கு பதில், நச்சென்று விமர்சனம் கொடுக்கலாம்.
சுருக்கமாக, தெரிந்த நண்பர்களுடன் உரையாடுவதை பொதுவில் தெரிவிக்கவும், தெரியாத உறவுகளுடன் தொடர்புகளை உருவாக்கவும், தொடர்பில்லாத விஷயங்களில் தெளிவான கருத்துக்களைப் பெறவும் பயன்படுகிறது.
ஏன் ட்விட்டர் என்பதை விளங்கிக் கொண்டாடியாச்சு. இதெல்லாம் எப்படி செய்வது: ட்விட்டர் குறித்த எளிய அறிமுகம்.
மேலே உள்ள சுட்டியை க்ளிக்காதவர்களுக்கான அறிமுகம்:
- ட்விட்டர்.காம் சென்று புதிய கணக்கைத் தொடங்கவும்
- நணபர்களை அழைக்கவும். (என்னைப் போன்றோரின் சோத்தங்கை பக்கத்தில் பல புகழ் பெற்ற பதிவர்கள், ட்விட்டரர்கள் இருப்பார்கள்; அவர்களையும் இணைக்கலாம்.)
- 140 எழுத்துக்களுள் நீங்கள் செய்து கொண்டிருப்பதை முழங்கவும்
அவ்வளவுதான்.
ட்விட்டரினால் ஆய பயன் பற்பல.
- சாதாரணமாக நீங்கள் பேசத் தயங்கும் பெருசுகளுடனும் சரி; நீண்ட காலமாக தொடர்பு விட்டுப்போன பால்யகால சிநேகிதிக்கும் சரி; பேச்சைத் துவக்க நெருக்கமான அன்னியோன்யம் கொடுக்கும் சூழல்.
- வணிக நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கின்றன (Hurry up, the customer has a complaint - The Boston Globe)
- ஃபெட்னா விழா நடக்கிறது. பலராலும் மேடை நிகழ்வை கவனிக்கத்தான் நேரம் சரியாக இருக்கும். கிடைக்கும் ஓரிரு இடைவேளையில் பதிவாக அல்லாமல், குறுந்தகவலாகப் பகிரலாம்.
- 'கத்தாழக் கண்ணால' பாடலுக்கு நடனமாடியவர் யார் போன்ற கேள்விகளுக்கு கூகிள் தேடி தாவு தீராமல் விடையறியலாம்.
- 'தினம் ஒரு திருக்குறள்' என்று சங்க இலக்கியம் தொடங்கி அன்றாட இலக்கிய சர்ச்சை என்று வகைவகையாக தினசரி தொகுக்கலாம்
- இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பக்கம் முதல் விக்கிப்பீடியா பக்கத்தை தொகுக்கும் பணி வரை எதற்கு வேண்டுமானாலும் செல்லமாக திட்டி, தட்டி கொட்டி வேலை வாங்க, ஊக்குவிக்கலாம்.
திரட்டி என்றாலே ஏதாவது சட்ட திட்டம் இருக்குமே? இங்கு உள்ள நடைமுறை என்ன? Twitter Etiquette | Global Geek News Blog
இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் சுயமாகவே நிர்ப்பந்தித்துக் கொள்வதேயன்றி, இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்று ட்விட்டர் வலியுறுத்துவதில்லை. ட்விட்டரில் இருப்பவர்களும் 'ஃபாலோ' பட்டனை அமுக்கி, தங்கள் கோபத்தை/விருப்பத்தை தெரிவித்து சென்றுவிடுவார்கள்.
இவ்வளவு தூரம் படித்திருந்து, வலையில் எதெது எதற்கு என்று குழம்பிப் போயிருந்தால்...
பதிவு: விவரமானவை; வித்து; கோர்வையான உள்ளடக்கம். (உங்கள் இடுகையை சுட்டிக் காட்ட வைக்க வேண்டும்.)
குரல் பதிவு: தமிழ் படிக்கத் தெரியாதோரையும் சென்றடையும்; வேறு வேலை செய்துகொண்டே கூட கேட்கலாம். (நேர்காணல், எழுதத் தெரியாதவரின் குரல், இசையோடு கூடியது)
கூட்டுப்பதிவு: ஒத்த லட்சியம் கொண்டவர்களின் பதிவுப் பயணம். (விழா, நிறுவனம், கட்சி, நுட்பம்)
வலைத்திரட்டி: புதிய பதிவர்களுக்கு அடையாள அட்டை; தமிழ்மணம் போன்ற இடங்களில் விளம்பரம்.
தெரிவுத்திரட்டி: விடுபட்டதற்கான அறிமுக அட்டை; கில்லி போன்ற வலையகங்களில் வாசிக்க மறந்ததற்கான புத்தகக்குறி.
மனிதத்திரட்டி: நம்பகமான குறிச்சொல் கொண்டது; மாற்று போன்ற சேவைகளினால் வலையில் இருந்து பகிர்பவை.
விக்கி: புத்துருவாக்கம்; சகாக்களின் திருத்தத்துடன் நம்பகத்தன்மை.
மனித விக்கி: தேடல்களுக்கு எளிமையான முன்னுரை விடை; மஹாலோ போன்ற இடங்களில் பெரும்பான்மையினரால் கோரப்படும் தலைப்புகளுக்கு புகழ்பெற்றவர்களால் புகட்டப்படும் முடிவுகள்.
அரட்டை: சோர்வு மறக்கடிக்கும்; விவாத களத்துக்குரிய லட்சணங்களுடன், வெற்றி/தோல்வி சாரமற்ற காரம்.
மின்னஞ்சல்: பத்து வரிக்கு மிகுந்தால் கவனமின்மை தரும்; எரிதமாகிப் போகும் அபாயம் உண்டு; தன்னந்தனியே பேச வேண்டியது.
கோப்பு: அச்சிடுவதற்கு வசதி; ஸ்க்ரிப்ட் போன்ற தளங்களில் ஏற்கனவே உள்ளூர் கணினியில் உறங்குவதை உலகுக்கு வெளிப்படுத்தலாம்.
குறுஞ்செய்தி/குறுந்தகவல்: உரையாடல் துவக்கம்; பதிவில் தனித்துவம் மிளிரும் என்றால், ட்விட்டரில் பொதுக்குணம் தூக்கல்; சுட்டிகள் புழக்கம் குறைச்சல்; முக்கியமாக 'யார் வந்தார்கள்? எத்தனை வருகையாளர்? எப்படி வந்து சேர்ந்தார்கள்?' என்று அலசும் புள்ளிவிவர ஸ்டாடிஸ்டிக்ஸ் லேது.
நினைப்பதை, விரும்புவதை, வெறுப்பதை, நம்புவதை, விழைவதை எண்ணியவாறே பதிந்து வைக்க, பதிந்ததை பலகோடி மக்களுக்கும் பரப்ப ட்விட்டருக்கு வாங்க!
மேலும் ட்விட்டர் குறித்து அறிய: எளிய அறிமுகம்.
கருத்துப்படம்: gapingvoid: "cartoons drawn on the back of business cards": why i deleted my twitter account
வந்துட்டோம்ல ;-)
நல்ல விரிவானதொரு அறிமுகம், தவறுதலாக என் ஜீமெயில் இணைப்பை ட்விட்டரில் இருந்து அழித்துவிட்டேன், மீண்டும் சேர்க்க முடியவில்லை, உங்களுக்கு ஏதாச்சும் தோணுதா?
சொன்னது… 7/08/2008 03:45:00 PM
Thanks for details Bala.
சொன்னது… 7/08/2008 05:03:00 PM
விரிவான தகவலுக்கு நன்றி பாபா ஸர் :))
சொன்னது… 7/08/2008 07:24:00 PM
---தவறுதலாக என் ஜீமெயில் இணைப்பை ட்விட்டரில் இருந்து அழித்துவிட்டேன், மீண்டும் சேர்க்க முடியவில்லை, உங்களுக்கு ஏதாச்சும் தோணுதா---
கடவுச்சொல் மறந்துவிட்டதா? அல்லது பாஸ்வோர்ட் அனுப்பப்படும் (Twitter - Put in your email address below and we’ll reset it for you: "Forgot?") மின்னஞ்சல் தொலைந்து விட்டதா?
எப்படியாக இருந்தாலும் 13 குட்டிப்பதிவுகள்தானே (Twitter / kanapraba)! புதிய கணக்கைக் கூட துவங்கிவிடலாம் ;)
சொன்னது… 7/08/2008 07:35:00 PM
ஸ்ரீதர் நாராயணன், __/\__
சொன்னது… 7/08/2008 07:36:00 PM
ட்விட்டரை நம்பினோர் கைவிடப்படார்: Twitter Saves Man From Egyptian Justice
சொன்னது… 7/08/2008 07:37:00 PM
கடவுச்சீட்டு மறக்கவில்லை, இல் device il Phone உம் gmail லும் இருந்தது, ஜீமெயிலை அதில் இருந்து அழித்துவிட்டேன். ஜீமெயிலை எப்படி restore பண்ணலாம்?
சொன்னது… 7/08/2008 08:11:00 PM
கானா,
Twitter - இங்கு சென்றால் மாற்ற முடிகிறதா?
ஜிடாக் போன்ற அரட்டைப் பெட்டி வசதிகள் தற்போது முடங்கிய நிலையில் இருக்கின்றன: Twitter Instant Message FAQ
அல்லது
How do I set up my IM address with my Twitter account?
சொன்னது… 7/08/2008 08:22:00 PM
ரம்யா ரமணி,
கணக்கைத் துவங்கியாச்சா?
சொன்னது… 7/08/2008 08:23:00 PM
கணக்கைத் துவக்கியாச்சு.. முழு வீச்சுல இன்னும் உபயோகபடுத்த ஆரம்பிக்கவில்லை.
சொன்னது… 7/08/2008 09:27:00 PM
அட்மினில் அதைக் காணவேயில்லை, நீங்க சொன்னமாதிரி மெஜெஞ்சரில் ஏதோ ஏதோ கோளாறு போலிருக்கு. சரி விட்டுத் தள்ளுவோம் ;)
சொன்னது… 7/09/2008 03:52:00 AM
Twitterholics
சொன்னது… 7/09/2008 01:33:00 PM
ட்விட்டருக்கு பி.ஆர்.ஓ-வாகவே மாறிட்டீங்க போல :)
சொன்னது… 7/09/2008 07:59:00 PM
தகவலுக்கு நன்றி
சொன்னது… 11/10/2008 02:36:00 AM
என்னய்யா , தல சுத்துது,
சொன்னது… 11/10/2008 05:01:00 PM
கருத்துரையிடுக