புதன், மே 24, 2006

Bacchanalia

இந்தப் பதிவினால் உங்களுக்குப் பயன் இல்லாவிட்டாலும் வழமை போல் தலைப்பு சுட்டி பயன்படலாம் :-D)


வலைப்பதிவர் பெயர்: பாலாஜி

வலைப்பூ பெயர்: ஈ-தமிழ் (கண்டதைச் சொல்கிறேன்)

சுட்டி (url) : http://etamil.blogspot.com

ஊர்: பாஸ்டன்

நாடு: அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: டேவ் பாரி

முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம் : ஜூலை 22, 2003

இது எத்தனையாவது பதிவு: 1264

இப்பதிவின் சுட்டி (url): http://etamil.blogspot.com/2006/05/Bacchanalia.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: http://etamil.blogspot.com/2004/08/blog-post_109207326898647992.html
மேலும், எல்லாரும் ஆரம்பித்தார்கள். நானும் ஒன்று தொடங்கி எப்படி என்று அறிந்து கொள்ளலாமே என்றுதான்.

சந்தித்த அனுபவங்கள்:

 • இந்தியா நியு இங்கிலாந்து, லிட்டில் இந்தியா போன்ற பத்திரிகைகளில் இருந்து அவ்வப்போது செய்திகளை சேகரிக்க அழைத்தது

 • காப்புரிமை பெற்ற வெகுஜன ஊடக எழுத்தை வெளியிடுவதால், வழக்குத் தொடுக்க நேரிடலாம் என்னும் தனிமடல் எச்சரித்தது

 • போட்ட இடுகையை எடுத்தால்தான் ஆச்சு என்று இருவர் அணி படை திரண்டு வந்து, டயரிக் குறிப்பை நீக்கும் வரை தர்ணா நடத்தியது

 • சென்னை வருகை போதெல்லாம் பதிவர் வட்ட நட்புகளை சந்திப்பது

 • மகளிடம் 'எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டரிலேயே இருக்கிறே' என்று குற்றஞ்சாட்ட வைத்தது

 • விமான நிலையத்தில் நடிகர் வடிவேலுவை சந்தித்தவுடன் செல்பேசியின் ஒலிப்பதிவானை முடுக்கி பேட்டி கேட்க வைத்தது

 • அதிகாலையில் சேவலை தூக்கம் செய்து, தினம் கூவ செய்யாத அளவு விழித்திருக்க வைத்தது

  பெற்ற நண்பர்கள்:
  தனி மடலிடக் கூடிய, தொலைபேசக் கூடிய, சந்திக்க கூடிய என்று பட்டியலிட்டதில் சில... (நான் இவர்களின் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில், அவர்களுக்கும் பிரச்சினை இல்லாதவரை சரி :-)

  ஸ்ரீகாந்த் மீனாக்ஷி | சிறில் அலெக்ஸ் | திருஞானசம்பந்தம் | நிர்மலா | திலகபாமா | ரவி ஸ்ரீனிவாஸ் | காசி | ரமணி | மெய்யப்பன் | சுந்தரவடிவேல் | ராஜேஷ் சந்திரா | கார்த்திக் ராமஸ் | ராம் பிரசாத் | ரோசாவசந்த் | சசி | பிரேமலதா | கணேஷ் | நாராயண் | பவித்ரா | பத்மா அரவிந்த் | கேப்ஸ் | பிரபு

  கற்றவை:

 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_108066127019443659.html

 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_25.html

 • http://etamil.blogspot.com/2004/02/blog-post_12.html

 • http://etamil.blogspot.com/2004/01/blog-post_107538961932423572.html

 • http://etamil.blogspot.com/2004/01/blog-post_26.html

 • http://etamil.blogspot.com/2004/05/blog-post_108563190638910592.html

 • http://etamil.blogspot.com/2004/05/vs.html

 • http://etamil.blogspot.com/2004/05/blog-post_19.html

 • http://etamil.blogspot.com/2004/06/belief-without-facts.html

 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_07.html


  எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

 • இந்தியாவிற்கு 1947-இலும், அமெரிக்காவிற்கு 1776-இலும் கிடைத்ததை விட அதிகம்

 • தண்ணீர் தண்ணீர் கதாபாத்திரம் போல் வளர்ச்சி கம்மிதான்

 • உறவினர்கள் படிக்க ஆரம்பிக்கும் வரை கிடைக்கும்

 • அர்ஜுன் நடித்த படம் போல் அடிதடி கிடைக்க உதவியிருக்கிறது

 • வெளியில் கிடைக்காததற்கு வடிகாலாக இருந்திருக்கிறது

 • பொருளாதார சுதந்திரமாக மாறவில்லை


  இனி செய்ய நினைப்பவை:

 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_107996806683069343.html

 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_27.html

 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_16.html

 • http://etamil.blogspot.com/2004/06/no-judgments-only-bull.html

 • http://etamil.blogspot.com/2004/07/blog-post_109027408037286603.html

 • http://etamil.blogspot.com/2004/11/blog-post_08.html

 • இப்படியே பொழுதை ஓட்டுவது


  உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
 • http://etamil.blogspot.com/2006/04/me-myself-balaji.html

 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_108032073042674387.html

 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_24.html

 • http://etamil.blogspot.com/2004/04/blog-post_108248451965241070.html

 • http://etamil.blogspot.com/2004/05/fight-club-what-movie-do-you-belong-in.html

 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_108863526079336330.html

 • http://etamil.blogspot.com/2005/01/blog-post_21.html


  இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
  புனிதப்பசுக்களை கூறுபோட்டு barbecue உண்ண விரும்புபவர்களுக்கு ஏற்ற பதிவாக எழுத நினைத்தேன். எலிக்கறியை சமைப்பதுதான் கைவந்த கலையாக ஆகியிருக்கிறது.

  எல்லா சுட்டிகளையும் க்ளிக்கியவருக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்ட பலனும், 108 சக்தி பீடங்கள்/திவ்ய தேசங்கள், ஐந்து சபைகள், பஞ்ச பூதத்தலங்கள், பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் சென்ற புண்ணியமும், பதினாறு பேறுகளும், அறுபத்தி மூன்று கலைத் தேர்ச்சியும், ஆஃபிஸில் சீட்டு கிழியும் ப்ராப்திரஸ்து!

  |

 • 15 கருத்துகள்:

  எல்லா சுட்டிகளையும் க்ளிக்கியவருக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்ட பலனும், 108 சக்தி பீடங்கள்/திவ்ய தேசங்கள், ஐந்து சபைகள், பஞ்ச பூதத்தலங்கள், பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் சென்ற புண்ணியமும், பதினாறு பேறுகளும், அறுபத்தி மூன்று கலைத் தேர்ச்சியும், ஆஃபிஸில் சீட்டு கிழியும் ப்ராப்திரஸ்து!////


  அம்மை அப்பனை சுற்றி வந்து ஷார்ட்கட்டில் பிள்ளையார் பழம் பெற்றதுபோல் உங்கள் இந்த பதிவை படித்தாலே அத்தனை பதிவுகளையும் படித்த புண்ணீயம் சித்திக்க அருள் புரியவேண்டுகிறேன்

  1264 pathivaaaaaaa...
  thlaiya suththu saami...

  பதிவு இன்ட்ரெஸ்டிங்கா இருக்குங்க! ;-)

  சோழநாடன்... ஆரம்பத்தில் ரெண்டு வரி (அல்லது வார்த்தை) எழுதினவுடனேயே பதிவு என்று சொல்லி போட்டு பா.பா. கவுண்ட்டிங் ஏற்றிக் கொண்டிருந்தேன். இப்ப மட்டும் என்ன வாழுது என்று கேட்டு மானத்தை வாங்கிடாதீங்க :-)

  கார்த்திக்... அஜீவனின் பட்டறையில் கலந்து கொள்கிறீர்களா???

  செல்வன்... கலக்கல் யோசனை+மறுமொழி !

  //எல்லா சுட்டிகளையும் க்ளிக்கியவருக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்ட பலனும், 108 சக்தி பீடங்கள்/திவ்ய தேசங்கள், ஐந்து சபைகள், பஞ்ச பூதத்தலங்கள், பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் சென்ற புண்ணியமும், பதினாறு பேறுகளும், அறுபத்தி மூன்று கலைத் தேர்ச்சியும், ஆஃபிஸில் சீட்டு கிழியும் ப்ராப்திரஸ்து!//

  வேளாங்கண்ணி சென்று மொட்டை போடுவதன் புண்ணியம் மறந்துவிட்டீர்கள் போல. கூடவே முழங்காலில் கோவிலை சுற்றுவதெல்லம்...

  Media Bits: E - Tamil க்கு பிறகு வந்த (சரி தானே?)

  * English News Blog: Lost in Media
  * Pictures of all Kind: Bioscope
  * Snap Judgement: Boston Balaji

  இவைகளின் பூர்வீகம் வளர்ச்சி பற்றி எங்கு எப்போது சொல்வீர்கள் ?

  ஐய்யா நான் முதலில் கேமெராவில் படமெடுக்க கத்துக்கொள்ள வேண்டும். அஜீவனா? அவரி எதுக்கு அசிங்கப்படுத்தனும் :-)

  ம்ம்..இவ்வளவு சாதனையா? நிஜமாத்தான் சொல்கிறேன் நோ உள்குத்து ப்ளீஸ்...
  உங்களின் பக்க வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அதிலும் அந்த Men's RestRoom படம்

  மனமார்ந்த நன்றி பாலாஜி
  நிறைவா கொடுத்திருக்கிறீங்க.
  நிறைவான சந்தோஷமா இருக்குங்க

  ஆனாலும் போங்க உங்க நண்பர்கள் லிஸ்ட்-டில் பேரைப்போடாது விட்டுட்டீங்களே:(
  புகைப்படம் போட வேணானுன்னு சொன்னதாலேயா

  சரி புகைப்படத்த தனிமடலில் அனுப்பி வையுங்க.


  எல்லோருடைய ஐடியும் போயிடுச்சு,
  மெஸேஞ்சருக்கும் போக முடியல.

  நண்பர்கள் அனைவருக்கும் இந்த சுட்டியினை குடுத்து மனவருத்தத்த போக்கிடுங்க.

  ஆனாலும் பாருங்க கோபப்படக்கூடத் தெரியாத அளவில் அப்பாவியா இருக்கிறேன்.

  சிறில்... ஹஜ் போல், காசி போல், கிறித்துவத்தில் ஒன்றே ஒன்றுக்கு அவசியம் சென்றே ஆக வேண்டிய திருத்தலம் என்று ஏதாவது இருக்கிறதா?

  பச்சோந்தி... வேலைக்குத் தயார் செய்வதற்காக ஆங்கிலப் பதிவை துவக்கினேன். வேலையில் சேர்ந்த பிறகு, தினசரி படிப்பதில் முக்கியமானதை அங்கு தொடுப்பு கொடுத்து சேமித்து வைக்கிறேன்.

  ஆரம்பத்தில் ப்ளாகரில் நேரடியாக பொம்மை போட முடியவில்லை. எனவே, புகைப்படங்களை இடுவதற்காக ஃபோட்டோபக்கெட் போன்ற தளங்கள் உதவியது. அப்போது, துவங்கியதுதான் பயாஸ்கோப். இப்போது, நேரடியாக ப்ளாகரின் வழியாகவே வலையேற்றும் வசதி, மேம்பட்ட ஃப்ளிக்கர், ஆகியவற்றுக்கு மாறியாச்சு.

  அன்றாடம் படிக்கும் பதிவுகளில் கவர்ந்த இடுகைகளை ஸ்னாப் ஜட்ஜில் சேமிக்கிறேன்.

  கா.ரா... இவ்வளவு தன்னடக்கமா ;-)) உங்ககிட்ட இருந்துதானப்பா எனக்கு கொஞ்சமாவது ஒட்டிக்கணும் :-D)

  கல்வெட்டு __/\__

  மது... உங்களை மாதிரி நிறைய பேரை விட்டிருக்கிறேன். ஜெயந்தி சங்கர், பிரகாஷ், என்று நீளும் 'துரோணர்' பட்டியலில், சுபாஷிதம் எழுதிய உங்களையும் வைத்திருக்கிறேன். சாதிக்கும் உங்களைப் போன்றோரிடம் இருந்து கற்றுக் கொள்வதால், நண்பர் என்று சொல்லி விட்டுப் போய் விட முடியுமா :-)

  அப்படி எதுவும் இல்லை...ஞாயிறு கோவில் போனால் போதும்.

  //கிறித்துவத்தில் ஒன்றே ஒன்றுக்கு அவசியம் சென்றே ஆக வேண்டிய திருத்தலம் //

  isrel jeruselam?

  காசி போகணுமா என்ன? ரிஷிகேஷ், ஹரித்வார்லாம் போயிட்டேன் (உவ்வே.), காசி போகல.

  ஒர்ர்ரே ஃபீலிங் ஆக்கிட்டீங்க, நண்பர்கள் லிசஸ்ட்ல போட்டு.
  :)

  பாலா,
  என்னாச்சு பதிவுகளே காணோம்?
  திசைகள் பாஸ்டன் பதிவு பார்த்தேன்..
  அமெரிக்கா வந்த புதுசில் வந்திருந்தேன் ஒரு வார இறுதி..
  நல்ல அனுபவம்.

  சிறில்... கோடை காலத் தள்ளுபடி, விடுமுறை :-D அம்புட்டுதான் :-))

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு