புதன், ஜூன் 09, 2004

Belief without Facts: பத்துப் பாட்டு

1. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

2. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

3. செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.


நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

4. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.


சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

5. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.


தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

6. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

7. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

8. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்.


அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

9. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

10. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.


இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

நன்றி: திருக்குறள் - கலைஞர் உரை

6 கருத்துகள்:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடைத்தற் பொருட்டு

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்க்காக அல்ல; நண்பர்கள்
நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத்
திருத்துவதற்காகும்.

00

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மை
கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும் கூட நல்ல
நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்

00

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு
உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு
நடக்காமலிருந்தால் அவர்களைவிட பேதைகள் யாரும் இருக்க முடியாது.

00

Adapaavikalaa :-) Thirukural rangeku poiduchu pola :-) Epadiyo ellarum ithan moolamaavathu nalla Thirukuralkalai thedi padichaa sari thaan. Valluvar santhosa paduvaar :-) Had nice time reading the post and comments though. Thanks. Baba, Enna solla vareenga nu thaan purila :-) By PK Sivakumar

nalla = nallaa i.e., nanraaka

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

வள்ளுவர் மட்டும் ப்ளாக் (:P) செய்திருந்தால் 'என் எழுத்துப் புரியவில்லையா' என்று கோபித்துக் கொண்டிருப்பார் பிகேஎஸ் ;)

திருக்குறளை விரித்து வைத்துக் கொண்டு மொத்தமாகப் படிப்பதை விட இப்படி ஒவ்வொருவர் உள்ளம் கவர்ந்த பாடல்களைப் படிப்பதும் கேட்பதும் நன்றாக இருக்கிறது. நினைவு படுத்திக் கொள்ளவும் தோன்றுகிறது. நன்றி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு