செவ்வாய், மார்ச் 30, 2004

ஈஷிக்கொள்ளுதல் - மாது



"அம்மா, ஸ்கூல்ல இன்னிக்கு பரத்துன்னு ஒரு ·ப்ரெண்ட் கிடைச்சாம்மா.ரொம்ப நல்ல பையம்மா"
"அம்மா, இன்னிக்கு பரத் வீட்ல போய் ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கப் போறோம்மா"
"அம்மா, நாளைக்கு எனக்கும் சேர்த்து பரத்தே லன்ச் கொண்டு வராம்மா"
"அம்மா, இன்னிக்கு எனக்காக ராகேஷ போட்டு மொத்தி எடுத்துட்டாம்மா பரத்"
- - - - - - - - - - - - - - - -- - -
- -- - - - - - - - - - - - - -- -- -
- - - - - - - - - - - - - - -- - - -
- - - - - -- - - - - - - -- -- - -
"என்னடா கொஞ்ச நாளா பரத் பேச்சய கானோம்"
"ஒன்னுமில்லம்மா"
"ஏதோ மறைக்கிற சொல்லு...ஏன் கண்ணுல தண்ணி"
"பரத் ரொம்ப மோசம்மா, அவன் என்ன செஞ்சான் தெரியுமா....................."
"தெரியும் நீ அப்படி போய் ஈஷிண்ட போதே தெரியும். அளவா வெச்சுக்கோன்னு அப்பவே சொன்னேன் கேட்டயா"



நாம் வளர்ந்தும் சிறுவர்களாகவே இருக்கிறோம். யாராவது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, பழக்கம் நெறுக்கமாகும் போது போய் ஈஷிக்கொள்கிறோம். மற்றவர்களின் குறைகளை மறந்து விடுகிறோம். நிறைகளின் மொத்த உருவமாக மற்றவரைக் காண்கிறோம். மற்றவரும் மனிதர் என்பதை மறந்து விடுகிறோம். நமது கற்பனைகளைக் கொண்டு மற்றவரின் நிழலை உருவாக்கிக் கொள்கிறோம். நிழலுடன் உறவாடுகிறோம். வெளிச்சம் பட்டு நிழல் மறையும் போது வேதனையுறுகிறோம். இந்த விளையாட்டு நடந்து கொண்டேதான் இருக்கிறது. பாடங்கள் கற்றுக் கொண்டோமா என்று தெரியவில்லை.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு