புதன், மே 19, 2004

வலைப்பதிவுகளின் தலை பத்து தலைவலி பட்டியல்

Jeremy Zawodny's blog:
1. மறுமொழி தருவதற்கு வசதி செய்து தராமல் விட்டு விடுவது.

2. சொந்தமாக எதுவும் எழுதாமல், ஏற்கனவே படித்த பதிவுகளின் சுட்டிகளைத் தந்தே காலத்தை ஓட்டுவது.

3. வலைப்பதிவுகளில் வலைப்பதிவதின் அருமை பெருமைகளை குறித்து மட்டுமே எழுதுவது.

4. ஆங்கிலப் பதிவுகளுக்கே பெரும்பாலும் பொறுத்தமென்றாலும், எழுத்துருவை தக்கினியூண்டு சைஸில் வைத்துக் கொள்வது; இயங்கு எழுத்துரு பயன்படுத்தாவிட்டால், எவ்வாறு தமிழைக் காண்பது என்பதற்கு உதவி பக்கங்களின் சுட்டி தராமல் இருப்பது.

5. 'என்னைப் பற்றி' என்று எந்த குறிப்பும் இல்லாமல் மொட்டையாய் வைத்திருப்பது.

6. (Blogroll குறித்து சொல்லியிருக்கிறார்; அதில் எனக்கு உடன்பாடில்லை; ஆதலால் பில் [#15] சொல்வதை வழிமொழிகிறேன்:) மற்றவர்கள் எப்படி வலைப்பதிய வேண்டும் என்று சதா அறிவுறுத்துவது.

7. என்னால் இன்று வலைப்பதியவே முடியவில்லை; நான் ரொம்ப பிஸியாக்கும் என்று வழிசலாக தினசரி வலைப்பதிவது.

8. மேய்ந்த வலைப்பதிவுகளின் தாக்கமாகவே தன்னுடைய பதிவுகளை வைத்திருப்பது. பின்னூட்டங்கள் மட்டுமே வலைப்பதிவாகாது.

9. ஆர்எஸ்எஸ் செய்தியோடை (RSS) கொடுக்காமல் இருப்பது.

10. பின் தொடரும் வசதியை (TrackBack) சரியாக உபயோகம் செய்யாதது.

எரிக் இவற்றை தலை பத்து கருத்துகணிப்பின் மூலம் வரிசைப் படுத்தியுள்ளார். தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று தனியாக ஒரு தலை பத்து கொடுக்கலாம். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியலாமா :)

2 கருத்துகள்:

நீங்கள் சொன்ன ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஒவ்வொரு உதாரணம் சட்டென்று நினைவுக்கு வருகிறது :-) . சொன்னால் நீங்கள் அப்பீட் :-). சொல்லட்டுமா? :-):-):-)

எதற்கெல்லாம் என்னுடைய வலைப்பதிவு நினைவுக்கு வந்தது :P

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு