தமிழகத்தை முன்னேற்றுவாரா முதல்வர்?
ஜெயலலிதா இரண்டாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்குவதுதான் தனது லட்சியம் என்றார். அதற்காக இதுவரை என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.
1. சென்னையை தொழில் முதலீட்டைக் கவரும் நகரமாக மாற்ற ரூ. 1,800 கோடியில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
2. கிராமப்புற கட்டமைப்புக்கு ரூ. 2,000 கோடி.
3. மூன்று இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலம்.
4. இரண்டு இடஙளில் ஆயத்த ஆடை தயாரிப்பு மையம்.
5. இரண்டு இடஙளில் தோட்டக்கலை மையம்.
6. மாநிலத்தில் 62% மக்களின் விவசாயம் சார்ந்த நிலையை மாற்றுவதற்காக, தொழிற்துறையில் புதிய திட்டங்கள்.
சமீபத்திய இந்தியா டுடே- தமிழில் அவரது ஆட்சியின் பற்றி எரியும் தலை பத்து பிரசினைகளாக சொல்லப்படுபவை:
1. விவசாயம்:
- காவிரி டெல்டா பகுதியில் நெல்கொள்முதலை நிறுத்தியது.
- இலவச மின்சாரத்தை ரத்து செய்வது.
2. தண்ணீர்:
- கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பம்.
- ஏரி/குளங்களை சீர் செய்தல்.
3. தொழில் துறை
- நேரடியாக சந்திக்கமுடியாமை.
- BPO போன்ற திட்டங்களுக்கு சலுகை தரவில்லை.
4. மெகா திட்டங்கள்:
- தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
- சேது சமுத்திரம் மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.
- கூடன்குளம் முடியவில்லை.
- நாங்குநேரி (திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது) தொழில் பூங்கா கிடப்பில் இருக்கிறது.
- பம்பா-அச்சன்கோவில் நதிநீர் இணைப்பில் முன்னேற்றம் இல்லை.
- சென்னை பறக்கும் ரயில் திட்டம் இன்னும் முடியவில்லை.
5. உள் கட்டமைப்பு:
- 51.18% கிராமங்களே (சாலைகளால்) நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
- போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மயமாக்குவது
6. ஆரம்பக் கல்வி
- 75% குழந்தைகள் 18 வயதிற்குள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்.
- தனியார் பள்ளிகளின் தரம் மற்றும் பணம் பிடுங்கும் போக்கு.
7. சுற்றுச் சூழல்:
- மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் அதிகம்.
- பாலாற்றுப் படுகை மொத்தமாகப் பாழாகி விட்டது.
- 25,000 ஹெக்டேர் காடுகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுகிறது.
8. சுற்றுலா:
- தமிழகம் என்றால் ஜெ-கலைஞர் சண்டைதான் நினைவுக்கு வருவதாக சொல்கிறார்கள்
9. நெசவாளர் பிரச்னை:
- கஞ்சித்தொட்டியில் ஒரு வேளைக் கஞ்சிக்காக நிற்கிறார்கள்.
- இலவச வேட்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டது.
- பஞ்சு விலையேற்றம்.
- அதீத மின் கட்டணம்.
- நவீன முறைகளுக்கு மாறவில்லை.
- கோவையில் 15/20 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.
10. பெண்கள் பிரச்னை:
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே முண்ணனி வகிக்கிறது.
- தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தொடர்பு கொள்ள உரிய வசதிகள் இல்லை.
- பெண் போலீசார் சென்சிட்டிவாக இல்லை.
இந்தப் பட்டியலையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பு நோக்க வேண்டும். வளரும் நாடுகளின் குறியீடுகள் (economic indicators) கூட ஒப்பிட்டு அலசலாம்.
ஆதாரம்: இந்தியா டுடே, ரீடிஃப்.காம், கல்கி.
கருத்துரையிடுக