ரசிக்கும் எழுத்துக்கள்
- பூக்கடை காவல் நிலையம் துவங்கி, துறைமுகம் வரையிலான முதலாளி மீனாட்சி சுந்தரத்தின் சமஸ்தானத்தில் வீசும் காற்று, அடிக்கும் வெயிலில் நேரும் மாறுதல்கள் கூட அவர் கவனத்திலிருந்து பிசகாது.
- கஸ்டம்ஸ்காரனை சமாளிச்சிடலாம்; கட்டினவ பிராண்டி எடுத்துருவா. பேரின்பம் வேணும்னா பெண்ணாசையை விடுன்னு சொல்வாங்க இல்ல? நா சொல்றேன், சிற்றின்பம் வேணும்னாலும் பெண்ணாசை கூடாது.
- கடவுளை வணங்கலாமே தவிர, புரிஞ்சிக்க முயற்சி பண்ணக் கூடாதுடா!
- கசாப்புக் கடை பக்கம் ஐயமாரு வூடு கட்னாலும் காலு எது, ஈரல் எதுன்னு கவுச்சு திங்கறவனுக்குத்தானேடா தெரியும்!
- சுவாரசியமாடா முக்கியம்? சில்லறைதான் முக்கியம்! சில்லறைதான் சுவாரசியம் தர்ற விஷயம். சில்லறை கிடைக்கிற எல்லா தொழிலும் சுவாரசியமானதுதான்.
- யார் நிஜ முதலாளிகள் என்று யாருக்குமே தெரியாது.
- பசி, தாகம், புரட்சி. இது மூணும் இல்லாத மனுஷனே கிடையாது.
- எப்பவுமே கீழ்மட்டத் தொடர்புகளை விட்றாம வெச்சிருக்கணும்; அதே சமயம், மேல்மட்டக் காரியங்களையும் கவனமா முடிக்கணும்!
- பணக்காரர்களின் காசையெல்லாம் ஹார்ட் அட்டாக் வடிவத்தில் கறந்து விடுவது என்று கலி புருஷன் முடிவு செய்து விட்டானோ?
- செய்வதெல்லாம் குற்றம்தான். எனினும், அதைக்கூட ஒரு கலை உணர்வுடன் ரசிக்கிற லாகவம். தன்னை மாதிரி எத்தனை குற்ற நாட்டுகளை நட்டு, நீரூற்றி வளர்த்து வாழ வைக்கிறார்.
- ஃபுல் டைம் பொறுக்கியானாலும் பாசம் மறந்துடுமாடா?
- பெற்றவர்கள் எதிர்பார்ப்பது காசை மட்டும் அல்ல என்பது அவன் அறியாததல்ல. ஆனாலும், அதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்து விட முடியாது என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது.
- எவனோ ஒருத்தன் நமக்கு வேலை தரான். நமக்குத் தெரிஞ்ச வேலை. நம்ம திறமைக்கேத்த கூலி அதுல கிடைக்கப் போகுது. அவ்ளோதானே? அது அமைச்சரா இருந்தா என்ன? எம்.எல்.ஏ.,வா இருந்தா என்னா? அட, பாகிஸ்தான்காரனாவே இருந்தாத்தான் என்ன?
- தொழில் சற்று வளர்ந்தால் இன்னும் ஆள் எடுத்துக் கொள்ளலாம். பர்மா பஜாரில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற விஷயம் அது ஒன்றுதான்.
- குரு ப்ரம்மா, குரு விஷ்ணு... அப்புறம் என்ன? என்னமோ இழவு... சினிமாவில் பார்த்தது, மறந்து விட்டது.
- இந்த விஷயம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் ஓர் ஆறுதலும் நிம்மதியும் கிடைக்கக்கூடும். கோப வெறிக்கு ஒரு குறுக்கு வடிகால், குரூரத்தின் இயற்கை வெளிப்பாடு.
- சே! ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்!
தூணிலும் இருப்பான் - பா. ராகவன்
சபரி / ரு. 55
கருத்துரையிடுக